Pages

Saturday, January 30, 2021

HAPPY l PART - 2 l மகிழ்ச்சி பகுதி - 2

 

                    மகிழ்ச்சி பகுதி - 2

        எப்போதெல்லாம் நமக்கு மகிழ்ச்சி குறைபாடு ஏற்படுகிறது?

www.swasthammadurai.com


     மகிழ்ச்சி குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். குறிப்பாக எப்போதெல்லாம் நமக்கு மகிழ்ச்சி குறைபாடு ஏற்படுகிறது? என்று ஒரு தனி உரையாடல் செய்ய வேண்டி இருக்கிறது. உங்களுக்கு நினைத்த வேலை, நினைத்தபடி நிறைவேறாத போது மகிழ்ச்சி குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எல்லா மகிழ்ச்சிக் குறைகளும் எல்லாவிதமான தடுமாற்றங்களும் மன உளைச்சலும் நீங்கள் நினைத்தது போல் காரியங்கள் நிகழவில்லை என்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்பதை அனுபவத்தில் பார்த்திருப்பீர்கள். உளவியல் மருத்துவங்கள், உளவியல் பேசும் ஆவணக் குறிப்புகள், ஆதாரங்கள்,  மனிதனினுடைய உளவியல் தன்மையை விதவிதமாக பகுத்துச் சொல்கிறது. மேற்கத்திய உளவியலைச் சார்ந்து ஒருவரை வகைப்படுத்தினோம் என்றால் அவரது உள்ளுணர்வு, மேல் உணர்வு, சமூக உணர்வு என்று வகைப்படுத்தக் கூடும்.

     மருத்துவ உளவியலைச் சார்ந்து சமகாலத்தில் இருக்கிற நவீன மருத்துவங்களின் ஆய்வுகளின் அடிப்படையில் ஒருவரை வகைப்படுத்தினால் அவரது மூளைச் செயல்பாடு, நரம்பு மண்டலங்களினுடைய தூண்டுதல், அதற்குள் பரவுகிற மின்காந்த சக்தி, இதில் ஏற்படுகிற மாற்றம் என்கிற வகையில் அவரது உளவியலை பகுத்துச் சொல்லலாம். உளவியலின் அடிப்படையில் சிகிச்சை கொடுக்கிற ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளில்  ஒரு தனி மனிதனின் உளவியல் என்பது தாவர இனமாக, விலங்கினமாக, கனிம இனமாக, வெளிப்படுகிறது என்றும் சொல்லலாம்.

     எத்தகைய உளவியல் அம்சத்தில் ஒரு மனிதனின் இயக்கம் தீர்மானிக்கப்பட்டு இருந்தாலும்கூட, அடிப்படையில் ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம், அவன் நினைத்த நேரத்தில் நினைத்தபடி அவன் விரும்பிய காரியங்கள் நிகழும் என்றால் அவன் மகிழ்ச்சியாக இருப்பான். நினைத்த நேரத்தில், நினைத்த காரியமானது விரும்பியபடி நிகழவில்லை என்றால் அவன் தொந்தரவு உள்ளவனாக மாறிப் போகிறான். ஆக, மகிழ்ச்சிக்கான ஒற்றைப் பொருள், விரும்புகிற செயல்களும் விரும்புகிற காட்சிகளும் விரும்பிய நேரத்தில், விரும்பியது போல் நிகழ வேண்டும். இது எப்போதெல்லாம் உங்களுக்கு தடைபடுகிறதோ? எப்போதெல்லாம் இதில் மாற்றம் வருகிறதோ? அப்போதெல்லாம் நீங்கள் மகிழ்ச்சியை தொலைத்தவர்களாக, மகிழ்ச்சியை தவறவிட்டவர்களாக ,மகிழ்ச்சியை பெற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர் என்பதை அனுபவத்தில் பார்த்திருப்பீர்கள். அப்படித்தான் அது அமைந்துவிடுகிறது.

                                                                                                        தொடரும்...

No comments:

Post a Comment