Pages

Monday, November 27, 2023

மிர்தாதின் புத்தகம் - மனித இறை - பகுதி 1 - சிவ. கதிரவன்

 

மனித இறை

 மைக்கேல் நைமி சொல்வது போல, மிர்தாத் புத்தகத்தில் குறிப்பிட்டது போல கடவுளும் மனிதனும் வேறு வேறு அல்ல.

மிர்தாதின் புத்தகத்தை அறிமுகப்படுத்தி பேசுகிற போது அந்த உரையாடலை கேட்ட பலரும் என்னோடு பகிர்ந்து கொண்டது, கேட்டுக்கொண்டது இந்த புத்தகத்தினுடைய உள்ளடக்கத்தை கதை போல் விளக்கிச் சொல்ல வேண்டும் என்று. மிர்தாதின் புத்தகத்தை விரும்பிப் படிக்கிற நபர்கள் இன்னும் நிறைய நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருப்பது புரிகிறது. ஆனால் மிர்தாதின் புத்தகத்தை ஒரு இலக்கிய புத்தகம் போல அறிமுகம் செய்வது என்பது போதுமானது அல்ல. இன்னும் சற்று பொறுப்புள்ள, இன்னும் சற்று நேர்த்தியான, இன்னும் சற்று இலக்கிய தரம், இலக்கிய சுவை கூடுதலாக உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிற தன்மையிலேயே அதன் விளைவாகவே இந்த மிர்தாதின் புத்தக அறிமுகம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

பொதுவாக பரப்புரைகள், மறையுரைகள் நிகழ்த்தப்படுகிற போது சின்னஞ்சிறிய துணுக்குகள் வழியாகவும் கதைகள் வழியாகவும் நிகழ்வுகள் வழியாகவும் மறைபொருளை தத்துவங்களை, நற்கருத்துகளை சமூகத்திற்கு சொல்வது அந்த மறை உறை செய்பவரினுடைய வழக்கமான மரபு. பெரும்பாலும் மறைவுரைகள் அப்படியான மரபிலேயே அமைந்திருப்பதை நாம் பார்க்க முடியும்.

இராமகிருஷ்ண பரஹம்சர்  சின்னஞ்சிறு கதைகள் சொல்லி மறைவுரைகளை பிறருக்கு அறிமுகம் செய்வார். விவேகானந்தர் அவ்வாறு செய்வதுண்டு. இன்னும் மறையுறை பேசுகிற மறை ஞானிகள் பலரும்  கதை வழியாக, துணுக்குகள் வழியாக, நிகழ்வுகள் வழியாக மறைஞானத்தை மறை ஞானத்தினுடைய   உட்குறிப்புகளை  தம்மை நாடி வருகிற சன்னியாசிகளுக்கும் பின்பற்றுபவர்களுக்கும் உபதேசம் போல் சொல்வதுண்டு. ஆனால் மிர்தாதின் புத்தகம் தத்துவத்தை உள்ளடக்கமாக வைத்து கதையை சொல்கிறது.

வழக்கமான சொற்பொழிவுகளில், மறையுறைகளில் கதைகள் வழியாக தத்துவங்கள் சொல்லப்படுவது மரபு. இந்த மரபு மாற்றாக, மரபு மீறலாக மரபின் பொருட்படுத்துதல் நிகழாமல் தத்துவம் உள்ளடக்கமாக இருந்து கதை வெளிப்படுகிறது. இது ஒரு அழகான மரபு மீறல். நம் சமூகத்திற்கு மறைஞானம் போதிக்கப்படுகிற போது தத்துவங்களும் தேவை ஏற்பட்டால் சிறுகதைகளோடு நகைச்சுவையோடு சொல்ல முடியும் என்று பிற்காலத்தில் வந்த மறைஞானிகள் தம் உரையாடலை செம்மைப்படுத்திக் கொண்டதுண்டு.

மறைஞானி ஓஷோவினுடைய உரையாடல்களில், சொற்பொழிவுகளில் அவரது மறை கருத்துகளை அழுத்தமாக சொல்வதற்கு நகைச்சுவை துணுக்குகளை தொடர்ந்து பயன்படுத்தி வருவார். இப்படி கேட்டு பழகிய நமக்கு கதைகள் வழியாக மறை செய்தியை புரிந்து கொள்கிற வழக்கம் உருவாகி இருக்கும் என்று நான் கருதுகிறேன். என்றாலும் இந்த வழக்கம் மனதிற்கு ஒரு தொடர் இயல்பை ஏற்படுத்தி இருக்கிறது என்கிற உப விளைவும் நிகழ்ந்திருக்கிறது.

மறை ஞானம் பற்றி நாம் பேச வேண்டுமென்றால் கதைகள் வழியாக மறை ஞானம் சொல்ல முடியும் என்று சமூகம் கருதுகிறது. மிகெய்ல் நைமி இந்த சமூகத்தினுடைய மனப்போக்கை பொருட்படுத்தவில்லை. மிகெய்ல் நைமி தத்துவத்தின் வழியாக கதை சொல்கிறார். தத்துவத்தின் வழியாக மிர்தாத்தை அறிமுகப்படுத்துகிறார். மிர்தாத் என்கிற மறை செய்தி, மிர்தாதின் புத்தகம் என்கிற மறை ஆவணம் தத்துவம் நிரம்பி வழிகிற ஒன்றாக இருக்கிறது. இதனை இலக்கியத்தின் வழியாக, கதையின் வழியாக, நிகழ்வுகளின் வழியாக அறிமுகம் செய்கிறார் என்கிற அடிப்படையில் மிர்தாதின் புத்தகத்தை ஒரு கதை போல, ஒரு இலக்கியம் போல வழக்கத்தில் இருக்கிற மறைஞானிகள் சொல்கிற நிகழ்வுகள் வழியாகவும் துணுக்குகள் வழியாகவும் சொல்வதில் அதிக கடினம் இருக்கிறது. அந்த வகையில் மிர்தாதின் புத்தகத்தை நீங்கள் வாசிக்கிறபோது மிர்தாதின் புத்தகத்தை நீங்கள் பரிசளிக்கிற போது மிர்தாதின் புத்தகத்தை நீங்கள் பகிர்ந்து கொள்கிற போது இது மறை செய்தி உருவாக்கி இருக்கிற கதை என்கிற புரிதலில் பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வாறு செய்வீர்கள் என்று நம்பிக்கையும் இருக்கிறது.

மனிதர்கள் பொதிந்த கட்டுகளாக இறைவனுக்கும் மனிதனுக்கும் வேறுபாடுகள் ஏதும் இல்லாதவனாக இருக்கிறான் என்பதை மிர்தாத் உணர்த்துகிறார். இது ஒரு பேருண்மை. தமிழ் இலக்கியங்களில் இரண்டாகச் சொல்வார்கள். அண்டத்தில் உள்ளது பிண்டம். பிண்டத்தில் உள்ளது அண்டம். அண்டமும் பிண்டமும் என்று குறிப்பிடுவது உடலையும் பிரபஞ்சத்தையும். அண்டத்தில் உள்ளதே இந்த பிண்டமாகிய உடலில் இருக்கிறது. இந்தப் பிண்டமாகிய உடலில் இருக்கின்ற ஒவ்வொன்றும் இந்த பிரபஞ்சத்திலும் இருக்கின்றது. உண்மையிலேயே இவை இரண்டும் வேறு வேறானவை அல்ல. அண்டத்தில் உள்ள எல்லாமும் பிரபஞ்சத்தில் இருக்கிறது. பிரபஞ்சத்தில் இருக்கிற எல்லாமும் பிண்டத்திலும் இருக்கிறது. இவ்வாறு அண்டமும் பிண்டமும் வேறாக இல்லை என்பதை மனித மனம் அறிவாக ஏற்றுக் கொள்கிறது. மனித மனம் வியாக்கியானப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறது என்றாலும் இதில் ஏற்படுகிற முரண் என்ன என்பது நாம் நமது விவாதத்திற்குரிய பொருளாக மிர்தாத் விளக்குகிறார். நாம் எப்போதும் அவற்றை விவாதித்துக் கொண்டே இருக்கிறோம்.

கடவுளும் மனிதனும் வெவ்வேறானவை என்று கருதுகிற மனிதர்கள் இல்லை எனும் அளவிற்கு மிர்தாத் குறிப்பிடுகிறார். கடவுளும் மனிதனும் ஒன்றுதான். மிர்தாத் குறிப்பிடுவது போல எல்லாவிதமான மறை ஞானங்களும் அவற்றை குறிப்பிடுகின்றன. முன்வைக்கின்றன. பரிந்துரைக்கின்றன. அவற்றைப் பின்பற்றும்படி அழுத்திச் சொல்கின்றன.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment