திருக்குறள் ஏன் ஒருவர் வாசிக்க வேண்டும்?
இலக்கியங்களைப் போலவே வரலாற்று நூல்களும் அத்தகைய
முக்கியத்துவத்தை தன்னுள்ளே வைத்திருக்கின்றன. வரலாற்று நூல்களைப் போலவே இலக்கிய நூல்களைப்
போலவே ஆய்வு நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் இன்று மனிதனை வாசிப்பதன் வழியாக மகிழ்ச்சியாக
வைத்திருக்கின்றன என்பதை நாம் மறுப்பதற்கு இல்லை. இரண்டு வேறுபட்ட ஒப்பீடுகள். மறை
நூல்களினுடைய ஒப்பு ஆய்வுகள் என்று எடுத்துக்
கொண்டோம் என்றால் கீழே நாடுகளில் இருக்கக்கூடிய ஒரு தத்துவத்தை எடுத்துக் கொண்டு மேலை
நாடுகளின் இன்னொரு தத்துவத்தை எடுத்துக் கொண்டு இரண்டு தத்துவங்களும் எவ்வாறு மனித
சமூகத்திற்கு பயன்பட்டிருக்கின்றன என்று ஒப்பாய்வு
செய்கிற ஆய்வு முறை வந்திருக்கின்றன. வாசிப்பதற்கு கிடைக்கின்றன. உதாரணமாக புத்தர்
எவ்வாறு சாக்ரடீஸோடு இணைந்து போகிறார். புத்தரினுடைய
மனித வளமை குறித்த சிந்தனையும் சாக்ரடீஸினுடைய மனித வளமை குறித்த சிந்தனையும் எங்கெல்லாம்
ஒத்து போகிறது, அவர்கள் எவ்வாறு மனித குலத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்று
நாம் ஆய்வு நூல்களை வாசிப்பதன் வழியாக, ஆய்வுக் கட்டுரைகளை வாசிப்பதன் வழியாக கண்டுகொள்ள
முடியும்.
கிறிஸ்தவ மறை நூல்கள் இயேசு கிறிஸ்துவினுடைய
தத்துவ செரிவு, கிருஷ்ண பரமாத்மாவினுடைய மறை
வழிகாட்டுதல் இவை இரண்டையும் ஒப்பாய்வு செய்து நாம் பார்க்கிறபோது இருவரும் எவ்வாறு
மனித குலத்திற்கு பங்காற்றி இருக்கிறார்கள். இரண்டு வகையான தத்துவ கருத்தாக்கங்களும்
மறைநூல் சார்ந்த நுட்பங்களும் மனித சமூகத்திற்கு இவ்வாறு பங்காற்றுக் கொண்டிருக்கின்றன
என்பதை ஒப்பாய்வு நூல்களின் வழியே, அவற்றை வாசிப்பதன் வழியே ஒரு மனிதன் மிகச் சிறப்பாக
புரிந்து கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. இன்னும் இலக்கியத்திற்குள் ஒப்பாய்வு செய்வதற்கு
வாய்ப்பிருப்பதை நாம் பார்க்கிறோம். இலக்கியத்திற்குள் ஒப்பாய்வு செய்யப்படுகின்றன.
சமகாலத்தில் இருக்கிற இலக்கியங்களும் சங்க காலத்தில் இருக்கிற இலக்கியங்களும் ஒப்பாய்விற்கு
உள்ளாகின்றன. சமகாலத்தில் இருக்கிற இலக்கியங்களையும் சங்ககாலத்தில் இருக்கிற இலக்கியங்களையும்
ஒப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரைகள், ஆவணங்கள் வாசிப்பிற்கு கிடைக்கிற போது அவற்றை வாசிக்கிறபோது
இன்னும் ஒரு புதிய தரிசனத்தை வாசிப்பவர் பெற்றுக்கொள்கிறார். மறை நூல்களை ஒப்பாய்வு
செய்து பெற்றுக் கொள்கிறார். இலக்கியங்களை, வரலாற்று நூல்களை இன்னும் இத்தகைய பலவகைப்பட்ட
வாசிப்பு அடுக்குகளின் வழியாக வாசிப்பு முறைமைகளின் வழியாக ஒருவருக்கு வாசிப்பு மகிழ்வை
தருகிறது. நாளைய குறித்த, இன்னொரு நாளை குறித்த, எதிர்காலத்தை குறித்த ஒரு உற்சாகத்தை,
கவனத்தை வாசிப்பு கொடுக்கிறது என்பதை நாம் மறுப்பதற்கு இல்லை. கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
ஆய்வாளர்களும் அறிஞர்களும் வாசிப்பை போற்றுவதற்கு
மிக முக்கியமான முதன்மையான காரணம் வாசிப்பு ஒரு மனிதனுக்கு எதிர்காலம் குறித்த புதிய
தரிசனத்தையும் புதிய கவனத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது என்பதனால் தான். அப்படிப்பட்ட
நூல்களை வாசிப்பதற்கும் திருக்குறள் போன்றதொரு நூலை வாசிப்பதற்கும் மகிழ்ச்சி என்பது
ஒன்றுதானா என்பது தான் இன்று நாம் பேசுவதற்குரிய தலைப்பின் அடிப்படை.
ஒரு மனிதர் ஒரு வரலாற்று நூலை வாசிப்பது போல வாசிப்பதின் வழியாக அவர் பெறுகிற மகிழ்ச்சியும் தரிசனமும் புதிய கவனமும் உற்சாகமும் திருக்குறளை படிக்கிற போது கிடைக்குமா என்றால் கிடைக்கும். ஒரு வரியில் சொல்லி விடலாம். எந்த ஒரு நூலை மனிதன் படிக்கிற போது அவருக்கு கிடைக்கிற பலன் திருக்குறளை படிக்கிற போதும் நிச்சயமாக கிடைக்கும். இது தலைப்பை இந்த வகையில் முடித்துக் கொள்வது எளிமையானது. ஆனால் திருக்குறளை படிக்கிற போது மற்ற நூல்களைப் படிப்பதை விடவும் ஆவணங்களை புரட்டி பார்ப்பதை விடவும் புதிய ஒன்றாக வேறு பகுதிகள் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று அலசி பார்ப்பது உங்கள் முன் தலைப்பின் வழியாக எனக்கு கிடைக்கப்பெற்று இருக்கிற கடமையாக நான் கருதுகிறேன்.
வேறொரு நூலை வாசிக்கிற போது நீங்கள் நிச்சயமாக
உற்சாகமடைவீர்கள். மகிழ்ச்சியடைவீர்கள். கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கான ஒன்றை
நிச்சயமாக கற்றுக் கொள்வீர்கள் என்பதில் எல்லா மெய்யறிவாளர்களும் அறிஞர்களும் சொல்வதைப்
போல நானும் அதே கூற்றை வழிமொழிகிறேன். எல்லா நூல்களுக்கும் ஒரு வல்லமை இருக்கிறது.
வாசிக்கிற போது அவை உங்களுக்கு ஒரு புதிய வழிகாட்டுதலை கொடுக்கிறது என்பதில் எனக்கு
முழு உடன்பாடு. ஆனால் திருக்குறள் அத்தகைய வல்லமையோடு இருக்கிறதா, இன்னும் நுட்பமான
வேறு பகுதிகளை அல்லது அத்தகைய வல்லமையினுடைய விசாலமான உள்ளடக்கத்தை திருக்குறள்
வைத்திருக்கிறதா என்கிற ஒரு ஆய்வு நோக்கில், ஒரு உரையாடல் நோக்கில் திருக்குறளை வாசிப்பதன்
வழியாக ஒரு மனிதன் என்ன கற்றுக் கொள்கிறான்? என்ன பெற்றுக் கொள்கிறான்? திருக்குறள்
எந்த வகையில் அந்த மனிதனை வழிப்படுத்துகிறது, வழி நடத்துகிறது என்று நாம் பார்ப்பதற்கான
முனைப்பில் இந்த தலைப்பை நாம் உரையாடுகிறோம்.
திருக்குறள் என்பது நிறைய பேரறிஞர்கள், பெரியவர்கள்
பேசி முடித்து இருக்கிறார்கள். திருக்குறளை அறியப்பட்ட எல்லா பேரறிஞர்களும் சொல்லி
இருக்கிறார்கள், பேசி இருக்கிறார்கள். தமிழ் கூறும் நல்லுலகில் திருக்குறள் எல்லா அறிஞர்களாலும்
விவரிக்கப்பட்டு இருக்கிறது. விரிவாக பேசப்பட்டிருக்கிறது.
அது இலக்கியம் என்கிற தளத்தில் பேசப்பட்டிருக்கிறது. அந்த இலக்கண நுட்பங்கள் குறித்து
பேசப்பட்டிருக்கிறது. தொல்காப்பியம் என்கிற இலக்கண நூல் தொகுத்து வைத்திருக்கிற இலக்கண
விதிகளில் திருக்குறள் எவ்வாறெல்லாம் பொருந்தி நிற்கிறது என்கிற அடிப்படையில் திருக்குறள்
பேசப்பட்டிருக்கிறது. வாசிக்கப்பட்டு இருக்கிறது.
திருக்குறளினுடைய வெண்பா வகை எப்படியாக இருக்கிறது.
எப்படி சுவை கொண்ட நூலாக இருக்கிறது என்று பேசப்பட்டிருக்கிறது. இன்னும் தமிழ் சமூகத்தில்
திருக்குறள் குறித்து விளக்கி உரையாடுவதற்கான மன்றங்கள், வழக்காடும் மன்றங்களாக இலக்கியப்
பேரறிஞர்களால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. பட்டிமன்றங்களாக விவாதங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.
திருக்குறளுக்குள் இருக்கிற அறம் குறித்து பேசியிருக்கிறார்கள். திருக்குறளுக்குள்
இருக்கிற பொருள் குறித்து பேசியிருக்கிறார்கள். காமத்துப்பால் குறித்து பேசி இருக்கிறார்கள்.
இப்படி பல அறிஞர்கள் திருக்குறள் குறித்து விரிவாகப் பேசி இருந்தாலும் கூட அந்த அறிஞர்களினுடைய
வழிப் பாதையில் திருக்குறளில் நாம் பெற்றுக்கொண்ட படித்துக் கொண்ட மிகச்சிறிய பகுதியை
உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு
பேராவலில் இந்த தலைப்பை உங்களோடு உரையாட விளைகிறேன்.
திருக்குறள் அப்படியான ஒரு வாய்ப்பை வழங்கி
இருக்கிறது. எனக்கு தந்திருக்கிறது என்பது அறிஞர்களின் வழியில் இவற்றை பேசுவதற்கு எனக்கும்
ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பது பெரும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் எனக்கு
இருக்கிறது. மனிதர்களுக்காக எழுதப்பட்ட நூல்களாகவே உலகம் முழுவதும் நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
இலக்கியப் பரப்பில் நூல்கள் எதற்காக எழுதப்படுகின்றன என்ற விவாதம் கூட நடந்திருக்கிறது.
இலக்கியங்கள் இலக்கியங்களுக்காக படைக்கப்பட்ட ஒன்று என்று விவாதித்தவர்கள் உண்டு. இலக்கியங்கள்
இலக்கணங்களுக்காக படைக்கப்படுகிறது என்று விவாதித்த அறிஞர்கள் உண்டு. இலக்கியங்கள் சமூகத்திற்காக படைக்கப்படுகின்றன என்று
விவாதித்த விவாதங்கள் அறிஞர்களால் செய்யப்பட்டிருக்கின்றன. இலக்கியங்களோ, கலைகளோ எல்லாமும்
எதற்காக என்று விவாதித்த நிறைய விவாதங்கள் சமூகத்தில் நடந்திருக்கின்றன. திருக்குறள்
இந்த விவாதங்களின் வரிசையில் எதற்காக என்று நாம் பார்த்தோம் எனில் இலக்கியத்திற்காகவே
திருக்குறள் படைக்கப்பட்டிருக்கிறதா என்றால் அது இலக்கியத்திற்குரிய எல்லாவற்றையும்
உள்ளடக்கமாக வைத்திருக்கிறது. எந்த இலக்கிய ஆய்வாளர்களுக்கும் இலக்கிய அறிஞர்களுக்கும்
இலக்கியத்தில் தேடுபவர்களுக்கும் திருக்குறள் மிகுந்த மகிழ்ச்சியோடு வாசிப்பதற்குரிய இலக்கிய இலக்கண நுட்பங்களை உள்ளே
வைத்திருக்கிறது.
...தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment