புதிய குழந்தை - ஓஷோ
நல்ல பெற்றோராக இருப்பதற்குரிய
மிக எளிய வழி, துவங்குகிற வழி இதுதான். தன் குழந்தையை ஒரு பெற்றோர் தன் குழந்தையினுடைய
இயற்கையின் இயல்பிலேயே வளர்ப்பதற்கு முயற்சிப்பார் என்றால் அவர் சந்திக்கிற தடைகளையும்
அனுபவங்களையும் தன் குழந்தையோடு பகிர்ந்து கொள்வதற்குரிய தன்மையோடு அது நகரும் என்றால்
அந்த நகர்வு ஒரு நல்ல பெற்றோருக்குகுரிய நகர்வாக நாம் எடுத்துக் கொள்ள முடியும். இங்கு
இருக்கிற இந்த உரையாடலில் பங்கேற்கிற பெற்றோர்களுக்கு அப்படியான வாய்ப்பு அமையப் பெற
வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நேற்று இதே புத்தகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிற
போது அந்த உரையாடலில் பங்கேற்ற பெற்றோர்களில் சிலருக்கு இப்படியான வாய்ப்போடு அவர்கள்
இருப்பதை நான் காண முடிந்தது. பின்னால் நிகழ்வு நிறைவு பெற்ற பின்பும் கூட அந்த நிகழ்வை
ஒருங்கிணைப்பு செய்த நண்பர் அது குறித்து பகிர்ந்து கொண்டார் என்னோடு.
பெற்றோர்கடைய பங்கு என்பது
சமூகத்தில், குழந்தை வளர்ப்பை பொறுத்த வரை தன் குழந்தையினுடைய இயல்பில் ஏற்படுகிற வளர்ச்சி
போக்கிற்குறிய காத்திருப்பும் அப்படி காத்திருக்கிறபோது
குழந்தை வளர்ப்புக்கு எதிராக சமூகம் விசுகிற அந்த சமூக வெளிப்பாடுகளுக்கு இவர்கள் கொடுக்கிற எதிர்வினையும்
ஒரு நல்ல வரலாற்று ஆவணமாக மாறிப்போகும். அந்த வரலாற்று அவனுக்கு குறிப்புகளை குழந்தைகளுக்கு
பகிர்ந்து கொள்வதன் வழியாக ஒரு நல்ல பெற்றோர் அந்த குழந்தைக்கு புதிய வழிகாட்டலை கொடுக்க
முடியும். ஒரு நண்பரை போல இருந்து அவர்களுக்கு வழி காட்ட முடியும் என்று
நான் பார்க்கிறேன். இப்படி ஒரு நல்ல நண்பராக நீங்கள் பயணிப்பீர்கள் என்று சொன்னால்
நீங்கள் வளர்க்கிற உங்கள் குழந்தை உங்களை நன்றாக பார்ப்பது மட்டுமின்றி இரண்டு, மூன்று
குழந்தைகள் உங்களுக்கு இருப்பார்கள் என்று சொன்னால் மூன்று குழந்தைகள், நீங்கள், உங்கள் குடும்பம் உள்ளடக்கிய இந்தக்
குழு ஒரு சிறந்த குடும்பமாக மாறிப்போகும்.
குடும்பம் இன்று சிதைவுற்று கொண்டிருக்கிற சமூகத்தில் ஒரு நல்ல குழந்தை வளர்ப்பின் வழியாக ஒரு நல்ல குடும்பத்தை நாம் உருவாக்க முடியும். குறிப்பாக 1990 - க்கு பிறகு தகவல் தொழில்நுட்ப அறிவு உலகம் முழுவதும் வியாபிக்கிற சூழலில் சந்தை பொருளாதாரம் ஒரு பொருளாதார பெரும் மாற்றத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்தி இருக்கிற சூழலில் இந்தியா போன்றதொரு குடும்பம் மீது மிகுந்த நம்பிக்கையும் பற்றும் வைத்திருக்கிற ஒரு நிலத்தில் குடும்பம் இன்று பல்வேறு சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது.நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நூறு ஆண்டுகளில் இந்திய சமூகத்தில் கூட குடும்பம் என்கிற அமைப்பு முறை தொடர்ந்து இருக்குமா என்பதே கூட கேள்வியாக மாறிப் போகிற அளவிற்கு குடும்ப உறவுகள் இன்று சிக்கலுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கின்றன என்பதை நாம் பார்க்கிறோம். இந்த குடும்ப அமைப்புகள் சிக்கலில் இருந்து தப்பிப்பதற்கு மிக எளிய வழியாக நான் பார்ப்பது சிறந்த முறையில் நீங்கள் ஒருவேளை குழந்தைகளை வளர்ப்பதற்கு முயற்சிப்பீர்கள் என்று சொன்னால் நல்ல முறையில் குழந்தைகளை இயற்கையின் இயக்கப் போக்கில் உங்கள் குழந்தையினுடைய வளர்ச்சி போக்கில் காத்திருந்து காத்திருந்து நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்ப்பீர்கள் என்று சொன்னால் உங்கள் குடும்பம் உடனடியாக நல்ல குடும்பமாக மாறிப் போகும். ஒரு நூற்றாண்டு பிறகு உங்கள் சமூகத்தில் உங்களைப் போன்ற குடும்பங்கள் நிரம்பி இருக்கும் என்றால் இந்த சமூகம் குடும்பத்தை தொடர்ந்து தக்க வைத்திருக்கிற சமூகமாக மாறிப்போகும் என்று நான் கருதுகிறேன். நிச்சயமாக வாய்ப்பு இருக்கிறது.
ஒரு நல்ல குழந்தை வளர்ப்பு
நல்ல குடும்பத்தை உருவாக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஓஷோ கூட இன்னும் வேறொரு
தளத்தில் குறிப்பிடுகிறார். அவரது குறிப்புகளை என்னால் புரிந்து கொள்வதற்கு முடியவில்லை. ஏனென்றால் ஓஷோ குடும்பம் குறித்து
ஒரு வரியில் ஒரு மிதமான தன்மையை பேசினாலும் கூட குடும்ப அமைப்பு
தனி மனிதனினுடைய வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறது என்கிற ஒரு பெரும் குற்றச்சாட்டை குடும்பத்திற்கு
எதிராக ஓஷோ வைத்து கடந்து போகிறார்.
அவரது விசாலமான பார்வையை
என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதினால் நான் புரிந்து கொள்வது நீங்கள் நல்ல
முறையில் உங்கள் குழந்தையை இன்று வழக்கத் துவங்குவீர்கள் என்று சொன்னால் உங்கள் வீட்டில்
இருக்கிற இரண்டு குழந்தைகள், மூன்று குழந்தைகள் உங்கள் குடும்பத்தை
மேன்மையான குடும்பமாக மாற்றும். இந்த மேன்மையான குடும்பம் என்கிற முன்னுதாரணம் உங்கள்
சமூகத்திற்குரிய மேன்மையான குடும்பங்களை உண்டாக்கும். இந்த சமூகம் வைத்திருக்கிற மேன்மையான
குடும்ப அமைப்பு தொடர்ந்து நீடிக்கும் என்றால் இன்று பொருளாதாரத்திற்கு பின்பு ஏற்படுகிற குடும்ப சிதைவு என்பது முற்றிலுமாக தவிர்க்கப்படும்
என்பதில் எனக்கு பூரணமாக நம்பிக்கை இருக்கிறது.
குடும்ப உறவுகள் குழந்தை
வளர்ப்பில் முழுமையாக கட்டமைக்கப்படுகின்றன என்பதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கையோடு
இருக்கிறேன். புதிய குழந்தை பற்றி பேசுகிறபோது புதிய குழந்தைக்குள் ஓஷோவினுடைய வார்த்தையை
புரிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ள முடியாமல் நான் மிகுந்த பணிவோடு என்னுடைய சொந்த
செய்தியை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் முழுமையாக குழந்தை வளப்பில்
பூரணமாக ஈடுபடுவீர்கள் என்று சொன்னால் ஒரு
புதிய குழந்தையை புரிந்து கொண்டு உள்வாங்கிக் கொண்டு நீங்கள் நகர்வீர்கள் என்று சொன்னால்
அது வெறுமனே குழந்தை வளர்ப்பாக மட்டுமல்லாமல் அது
ஒரு சமூக நலம் சார்ந்த, சமூக வளமை சார்ந்த, சமூகத்தினுடைய எதிர்காலம் சார்ந்த வேறொரு விளைவை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு சிறிதும் ஐயப்பாடு இல்லை. இப்படி
இந்த புத்தகம் முழுவதும் குழந்தைகளை மையப்படுத்தி சிந்திப்பவர்களுக்குரிய புத்தகமாக ஓஷோ ஒரு நீண்ட உரையாடல்
நம்மோடு செய்து கொண்டிருக்கிறார்.
நண்பர்களே இந்த உரையாடலின் வழியாக மீண்டும் மீண்டும் நாம் பார்ப்பதற்குரிய ஒற்றை புள்ளி
என்னவென்றால் இந்த குழந்தைகள் மீது இவ்வளவு மென்மையான பகுதிகளை நாம் எவ்வாறு உருவாக்கிக்
கொண்டிருக்கிறோம் என்பதுதான். நாம் குழந்தைகள் மீது இருக்கிற இத்தகைய நிழல்களையும் இத்தகைய சாயல்களையும் எங்கிருந்து கட்டமைத்தோம் என்றால் முழுக்க சமூகத்தில்
இருந்து கட்டமைத்திருக்கிறோம். சமூகமே குழந்தைகள் மீது இப்படியான கட்டமைப்பை உருவாக்கி
இருக்கிறது. குழந்தையை பள்ளிக்கூடத்தோடு இணைப்பது, குழந்தைகளை
சமூகத்தோடு இணைப்பது, நாம் சார்ந்திருக்கிற சமூக அமைப்போடு, மத அமைப்போடு, இன்னும் பிற கோட்பாடுகளோடு
இணைப்பது என்பது நம்மை அறியாமையே நமக்குள்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வகைப்பாட்டை கவனித்து, சீர் செய்கிற உரையாடலை விரும்புகிற பெற்றோர்களுக்கு புதிய குழந்தை
என்கிற ஓஷோவினுடைய உரையாடல் நிச்சயமாக உதவும்.
சமூகம் நன்றாக இருக்கிறது. என் குழந்தையை நான் நன்றாக வளர்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் விரும்புவீர்கள், நீங்கள்
நம்புவீர்கள் என்று சொன்னால் புதிய குழந்தை பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. இந்த சமூகத்தினுடைய
சாயல் ஏதும் என் குழந்தை மீது இருக்க வேண்டாம். என் குழந்தை புதிய ஒன்றை
கண்டுபிடிக்கிற விஞ்ஞானியாக, புதிய ஒன்றை பார்க்கிற
தீர்க்கதரிசியாக மாறுவதற்கு உரிய வாய்ப்பை நான்
ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகிற பெற்றோராக நீங்கள் இருப்பீர்கள் என்றால்
புதிய குழந்தை உங்களுக்கு ஒரு புதிய பார்வையை கொடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நீங்கள்
இந்த வாய்ப்பு சாத்தியமாக வேண்டும் என்றால் அது உங்களுடைய அக உரையாடல் சம்பந்தப்பட்டது
என்று நான் பார்க்கிறேன். நீங்கள் அக உரையாடலோடு இம்மாதிரியான குழுக்களில்
நீங்கள் பங்கேற்கிறபோது உங்களை சுயபரிசீலினையோடு
விமர்சனங்களோடு உங்களை நீங்கள் மீண்டும் மீண்டும் உயர்த்திக் கொள்வதற்கு தயாராக இருப்பீர்கள் என்று சொன்னால் ஒரு உன்னதமான குழந்தை வளர்ப்பு
வாழ்வியலை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். அப்படியான ஒரு வாழ்வியல் நுட்பங்களை நாம்
தொடர்ந்து பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஓஷோ போன்றதொரு ஒரு மேன்மையான
அறிவாளியை நாம் பேசுவது என்பது என்னுடைய அறிவை
மீண்டும் ஒரு படி உயர்த்திக் கொள்வதற்கான உயர் பண்பாக, நற்பண்பாக, நல்வாய்ப்பாக நான்
பார்க்கிறேன். நான் செய்கிற நற்செயலாக நான் பார்க்கிறேன். இப்படியான ஒரு ஆளுமையைப்
பற்றி பேசுவது நான் செய்கிற ஒரு பெரும் முயற்சியாக
மட்டுமின்றி நான் செய்கிற வேலைகளினுடைய தரத்தை இன்னும் உயர்த்தும் என்ற நம்பிக்கையோடு
இந்த புத்தகத்தை என் அளவில் எனது பணிவான பார்வையில் உங்களோடு உரையாடி இருக்கிறேன். தொடர்ந்து இந்த புத்தகம் குறித்த விவரங்களும் விசாரணைகளும்
விமர்சனங்களும் வரவேண்டும். ஓஷோவினுடைய எல்லா கருத்துக்களும் உண்மையிலேயே மிக உயர்ந்த கருத்துக்கள்
என்கிற வாதத்தை நான் ஏற்பதற்கில்லை. நிச்சயமாக ஓஷோவும்
அப்படி ஏற்றுக்கொள்ளக் கூடியவர் அல்ல. ஓஷோ எப்போதும் நம் விமர்சனங்களை வரவேற்பதற்கு
இரண்டு கைகளை விரித்து நிற்கிறார். அவர் நமது தடுமாற்றங்களையும் தடுமாற்றங்களின் வழியாக
நாம் எழுப்புகிற கேள்விகளையும் வரவேற்று நமக்கு வழிகாட்டுவதற்குரிய தன்மையோடு இருக்கிறார்
என்பதை அவர் எழுத்துக்கள் வழியாக நான் புரிந்து கொள்கிறேன். அத்தகைய பெரும் அறிவாளியினுடைய புத்தகத்தை உங்களோடு
பகிர்ந்து கொண்டதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இந்த
புத்தகம் குறித்த உரையாடலை, புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்த
உரையாடலை தொடர்ந்து உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். வாய்ப்பு கிடைக்கும் என்கிற பட்சத்தில் இந்த புத்தகம் குறித்து
தொடர்ந்து பேசுவோம்.
…நன்றி…
No comments:
Post a Comment