Pages

Monday, January 29, 2024

திருக்குறள் வாழ்வியல் // கடவுள் – கடவுள் தன்மை // பகுதி 3 // சிவ.கதிரவன்

                                 கடவுள் – கடவுள் தன்மை

www.swasthammadurai.com


திருக்குறளுக்குள் பின்பற்றுகிறவர்கள் பலரும் பல்விதமான அனுபவங்களை, வாழ்வியல் கருத்துக்களை கண்டிருப்பார்கள். கண்டிருப்பீர்கள். கடவுள் வாழ்த்து என்பது கடவுளை நாம் ஏன் தொழுகிறோம். கடவுளை இப்போது நாம் ஏன் தொழுகிறோம்  என்கிற கேள்வியோடு இந்த வகுப்பிற்குள், உரையாடலுக்குள் செல்லலாம் என்று நான் நினைக்கிறேன். இப்போது கடவுளை ஏன் தொழுகிறோம் என்று நாம் சிந்தித்தோம் என்றால் நிறைய பணம் வேண்டும். எனக்கு நிறைய செல்வம் வேண்டும். அதற்காக கடவுளை தொழுகிறேன் என்று நீங்கள் பட்டியலில் முதல் குறிப்பு எழுத முடியும். நான் நீண்ட காலம் ஆயுளோடு வாழ வேண்டும்.எனவே கடவுளை தொழுகிறேன்  என்று அடுத்த குறிப்பு எழுத முடியும். எனக்கு வாழ்க்கை முழுவதும் துன்பங்கள் ஏதும் ஏற்படா வண்ணம் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நீங்கள் பட்டியலில் சேர்க்க முடியும். நீண்ட புகழோடு நான் வாழ வேண்டும் என்று பட்டியலில் சேர்க்க முடியும். எனக்கு ஏதும் மனக்கவலைகள், சங்கடங்கள் எப்போதும் வாழ்நாள் முழுதும் வரக்கூடாது என்று பட்டியலில் சேர்க்க முடியும். இப்படி நீங்கள் கடவுளை தொழுவதற்கான காரணங்களை பகுத்து நீங்கள் ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள். எல்லோரும் ஒரு பட்டியலை மனக்கண்ணில் ஓட்டி பாருங்கள். நான் ஏன் கடவுளை தொழுகிறேன்.  தேர்வுக்கு செல்கிற மாணவன் நான் தேர்ச்சியடைய வேண்டும் என்று கடவுளை தொழுகிறான். ஒரு வியாபாரத்தில், வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறவர் நல்ல முறையில் வியாபாரத்தை, வணிகத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று கடவுளை தொழுகிறார். கணவன் மனைவியாக வாழ்கிற, குடும்பமாக வாழ்கிற நபர்கள் கடவுளை தொழுவதற்கு காரணம் நம் குடும்பம் செழிக்க வேண்டும் என்று கடவுளைத் தொழுகிறார்கள். இன்னும் ஆன்மீகம் பேசுகிறவர்கள் ஏன் கடவுளைத் தொழுகிறார்கள் என்று கேட்டீர்கள் என்றால் நான் இறைவனை அடைய வேண்டும். அதனால் கடவுளை தொழுகிறேன். நான் இந்தப் பிறவியை அறுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கடவுளைத் தொழுகிறேன். நான் ஞானம் அடைய வேண்டும். அதனால் கடவுளை தொழுகிறேன் என்று கடவுளை தொழுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. செயல்திட்டம் இருக்கிறது. எல்லோருக்கும் அப்படித்தான்.

நீங்கள் கடவுளை தொழுவதற்குரிய வியப்பேதும் இல்லாமல் கடவுளை மறுப்பவர்கள் இதில் மாறுபட்டிருக்கக்கூடும். முதலில் கடவுள் ஏன் தேவைப்படுகிறார் என்று மேற்கத்திய உளவியலில், மேற்கத்திய மெய்யியல் கோட்பாடுகளில் நேரடியாக கேட்பார்கள். கடவுள் ஏன் தேவைப்படுகிறார் என்று. கடவுளின் தேவை இருக்கத்தான் செய்கிறது. கடவுள் இந்த சமூகத்திற்கு தேவைப்படுகிற ஒருவராக இருப்பதாலே கடவுளை இந்த சமூகம் படைத்திருக்கிறது என்று மார்க்ஸ்ய அறிஞர்கள் சொல்லுவார்கள். அந்த வகையில் கடவுள் தேவைப்படுகிறாரா என்ற வினாவிற்குள் போக விரும்பவில்லை.

 சமூகத்தில் வாழ்கிற மனிதன் சிறியவரோ, பெரியவரோ, செல்வந்தரோ, ஏழையோ யார் ஒருவரும் கடவுளை ஏன் தொழுகிறார் என்று நமக்கு ஒரு பட்டியல் தயார் செய்தோம் என்றால், (மெய்யியல்  கோட்பாடுகளும் புரிதல்களும் தத்துவ சிந்தனைகளும் அப்புறம்.)  நேரடியாக நாம் கடவுளை தொழுவதற்கு என்ன காரணம் என்று ஒருவரை நிறுத்தி கேட்டால் என்னெல்லாம் காரணம் சொல்லுவார்.  நான் நல்லா வாழனும், எனக்கு நிறைய செல்வம் சேரனும், எனக்கு புகழ் வரணும், துன்பம் ஏதும் வரக்கூடாது, என் பாவங்கள் எல்லாம்  கழிஞ்சிரனும், எனக்கு இந்த பிறவி கடைசி பிறவியா இருக்கணும். இப்படியான காரணங்களை மையக் காரணங்களாக வைத்துக்கொண்டு கிளைக் காரணங்கள் இருக்கும். இந்த மையக் காரணங்களை வைத்துக்கொண்டு கிளை காரணங்கள் இருக்கும் என்பதை நீங்கள் அவரோடு உரையாடும் போது, பட்டியல் தயார் செய்கிறபோது அல்லது நீங்களே ஒரு பட்டியலை உருவாக்குகிற போது இப்படித்தான் அது வரையறுக்கப்பட்டிருக்கும். அப்படி இந்தந்த வரையறைக்குள் ஒப்பிட்டு பார்க்கிறபோது கடவுளை தொழுவதற்கான வழிமுறைகளை என்ன காரணத்திற்காக தொழுகிறோம் என்கிற கேள்வியோடு பார்த்தோம் என்றால் இந்த பட்டியலுக்கு பொருத்தமான வழிகாட்டுதலை திருவள்ளுவர் செய்கிறார்.

நீடூடி வாழ்வதற்கு ஒரு மனிதனுக்கு என்ன செய்வது என்று வள்ளுவரிடம் கேட்கிற போது நீடூடி யார் வாழ்வது? எப்படி நான் நீடூடி வாழ்வது? என்று உங்களுக்கு பதட்டம் வருகிறது என்றால் “மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தால் நீங்கள் நிலத்தின் மீது நீடூடி வாழ முடியும்” என்று ஒரு குறளில் சொல்கிறார்.

நீங்கள் நீடூடி வாழ்வதற்கு என்ன செய்வது என்று உங்களுக்கு ஒரு கேள்வி வரும் என்றால் நீங்கள் நோய் இல்லாமல் பார்த்துக் கொள்வது, நான் நோயிலிருந்து விடுபடுவது, நான் நீண்ட காலம் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டுக் கொள்வது இதெல்லாம் கணக்கே கிடையாது. இதெல்லாம் ஒரு சிறுசிறு பகுதிகள். உங்கள்  தலைவலியை குணப்படுத்திக் கொள்வதற்கு நீங்கள் சிறிய அளவில் குளிகையோ அல்லது கசாயமோ அல்லது நவீன மருத்துவ பரிந்துரையோ எடுத்துக் கொள்வது ஒரு சிறிய கிளைப் பகுதி. ஆனால் உண்மையிலேயே நீங்கள் நீடூடி வாழ வேண்டும். உங்கள் கிளை தர்மங்களை கடந்து கடந்து, உங்கள் கிளை ஆசைகளை கடந்து கடந்து, உங்கள் கிளையாக இருக்கிற விருப்பங்களை கடந்து நீங்கள் இறுதியாக நீடூடி வாழ வேண்டும் என்று  நினைப்பீர்கள் என்று சொன்னால் நீங்கள் செய்வதற்கு ஒன்று இருக்கிறது. என்ன?

“மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்” அதற்கு விளக்கங்கள் பலவாறு  சிந்தனையாளர்கள், அறிஞர்கள் பேசுகிறார்கள். நெஞ்சம் எனும் மலரில் என்று மலர்மிசைக்கு விளக்கம் சொல்பவர்கள் உண்டு. நெஞ்சம் என்ற மலர் அல்லது மலரின் மீது என எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்வோம். ஆனால் நீங்கள் நீடூடி வாழ்வதற்கு, நீங்கள் சிறப்பாக ஒன்றை, உங்கள் வாழ்க்கையை , வாழ்வது என்பது உங்கள் ஆயுளோடு, நீடூடி வாழ்கிற கருத்தோடு சம்பந்தப்பட்டது என்பது மிக முக்கியமான ஒன்று.

வாழ்க்கை என்பது நீண்ட காலம் வாழ்கிற அம்சத்தோடு அது குவாலிட்டி என்பது தனி. குவாண்டிட்டி என்கிற தன்மையில் நீடூடி என்பது நீண்ட காலம். நீண்ட காலம் வாழ்வது, நெடுங்காலம் வாழ்வது, அதற்கு என்ன செய்வது என்று உங்களுக்கு கேள்வி எழுகிற போது திருவள்ளுவர் விடை சொல்கிறார்.

மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார், யார் மலர்மிசையை ஏகினார், மானடி  சேர்ந்தாரோ அவர் நிலத்தின் மீது நெடுங்காலம் வாழ்வதற்கு வல்லமை உள்ளவர் என்று சொல்கிறார். நான் இந்த திருக்குறள் உரையாடலை மெய்யியலின் வகைப்பட்டு பின்னால் பேசலாம் என்று நினைக்கிறேன். முதலில் வாழ்வை வளமாக வாழ்வதற்குறிய  அம்சங்களில் திருக்குறள் ஒரு நல்ல நெறி நூலாக, மறைநூலாக  நாம் பின்பற்றயே ஆக வேண்டும் என்று நான் கருதுகிறேன். அந்த அறிமுகத்திற்காக வாழ்வியலுக்கு நெருக்கமாக, வாழ்வியலை செம்மைப்படுத்துவதற்கு துவக்கமாக இருக்கிற ஒரு நூலாக திருக்குறள் அறியப்படுவதால், உணரப்படுவதால் நான் உங்களோடு அந்த அம்சங்களில் பேசுகிறேன். அந்த அம்சங்களில் நான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அறிஞர் பெருமக்கள் பலரும் திருக்குறளை பலவாறு பேசியிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரிந்ததுதான்.

ஆக, வாழ்க்கை  வளமையாக வாழ்வது என்பதுதான் திருக்குறளை நாம் கற்றுக் கொள்வதற்குரிய நோக்கம். திருக்குறளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் கருதுவதற்குரிய நோக்கம் அதுதான். வாழ்வை நீங்கள் வளமாக வாழ வேண்டும். நீங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை முறை வைத்திருந்தாலும் கூட வாழ்வு என்று வருகிற போது வாழ்விற்குரிய வயது, நெடுங்காலம் என்றெல்லாம் வந்து விடுகிறது. அதற்கு வள்ளுவர் சொல்கிற வழிமுறை மலர்மிசை ஏகினான் மானடி சேருங்கள். அப்படி சேர்வீர்கள் என்று சொன்னால் நிலமிசை நீண்டு வாழ்வீர்கள் என்று என்று முதல் பட்டியலில் ஒரு டிக். பட்டியலின் முதல் அடியில் ஒரு குறியீடு.  

இரண்டாவது எனக்கு துன்பமே இருக்க கூடாது. வாழ்நாள் முழுவதும் எனக்கு துன்பமே இருக்கக் கூடாது. என்ன செய்வது என்று வாழ்க்கையை வாழ்கிற போது அடுத்த கேள்வி வரும். நான் துன்பமே இல்லாமல் வாழ்வதற்கு என்ன செய்வது ஐயா என்று திருவள்ளுவரிடம் கேட்பீர்கள் என்றால், ஏனென்றால் அவரை நாம் பின்பற்ற வேண்டும் என்று நினைத்து விட்டோம். அவர் நமக்கு முன்னால் இருக்கிற பேரறிஞர், பெரும் சிந்தனையாளர், நிறைய குறிப்புகளை நமக்கு வைத்திருக்கிறார். இந்த வகையில் அவர் சொல்வதெல்லாம் சரியாக இருக்கும் என்று நமக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆக பட்டியலில் இருக்கிற இரண்டாவது செய்தி மிக முக்கியமானது. எனக்கு எங்கு சென்றாலும் துன்பம். எங்கு சென்றாலும் சங்கடம். என் துன்பங்கள் எல்லாம் நீங்குவதற்கு நான் என்ன செய்வது. நீக்கி கொள்வதற்கு என்ன செய்வது என்று நீங்கள் திருவள்ளுவரை கேட்கிற போது உங்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்துவதற்கு திருவள்ளுவர் ஒரு குறளைச் சொல்கிறார்.

“வேண்டுதல் வேண்டாமை இலானடி  சேர்ந்தாருக்கு

யாண்டும் இடும்பை இல” யார் ஒருவர் எனக்கு இது வேண்டும், இது வேண்டாம் என்று வேண்டுவதும் வேண்டாமல் இருப்பதும் இல்லாமல் இருப்பது. இது ஒரு சுவாரசியமான ஒரு கலகலப்பான குறள் என்று நான் நினைப்பேன். எனக்கு மிகவும் பிடித்த குறள் இது. வேண்டுவது நமக்கு தெரியும். வேண்டாமல் இருப்பது இரண்டும் நேர் எதிரான கோட்பாடுகள். நீங்கள் வேண்டலாம் அல்லது மறுக்கலாம். வேண்டாம் இருக்கலாம். இவை இரண்டும் நேர் எதிரானவை. இப்போது திருவள்ளுவர் வேண்டுவது வேண்டாமை இருப்பது, இரண்டும் இல்லாமல் இருப்பதும் ஒன்றாக குறிப்பிடுகிறார். 

வேண்டுதல் வேண்டாமை இலான் - வேண்டுதலும் இலான்; வேண்டாமையும் இலான். இது யாரை குறிப்பிடுவது. அப்படி ஒரு நபரை நீங்கள் சந்தித்திருக்கவே மாட்டீர்கள். அது அனேகமாக உங்கள் கற்பனையில், நீங்கள் கற்பனையினுடைய எல்லையை விரிப்பீர்கள் என்று சொன்னால் இது பிரபஞ்சத்தில் ஆதியை நோக்கி நகர்ந்து விடுவது. வேண்டுதல் இலான்; வேண்டாமை இலான்.அப்படி எப்படி ஒரு மனிதன் இருக்க முடியும்? இருக்க முடியும் என்கிறார் வள்ளுவர்.

தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment