Pages

Monday, January 29, 2024

திருக்குறள் வாழ்வியல் // கடவுள் – கடவுள் தன்மை // பகுதி 4 // சிவ.கதிரவன்

                                 கடவுள் – கடவுள் தன்மை 

www.swasthammadurai.com


வேண்டுதல் வேண்டாமை இலான் - வேண்டுதலும் இலான்; வேண்டாமையும் இலான். இது யாரை குறிப்பிடுவது. அப்படி ஒரு நபரை நீங்கள் சந்தித்திருக்கவே மாட்டீர்கள். அது அனேகமாக உங்கள் கற்பனையில், நீங்கள் கற்பனையினுடைய எல்லையை விரிப்பீர்கள் என்று சொன்னால் இது பிரபஞ்சத்தில் ஆதியை நோக்கி நகர்ந்து விடுவது. வேண்டுதல் இலான்; வேண்டாமை இலான்.அப்படி எப்படி ஒரு மனிதன் இருக்க முடியும்? இருக்க முடியும் என்கிறார் வள்ளுவர்.

அவரை இறைவன் என்று நீங்கள் கருதி கொள்ளலாம் அல்லது இருத்தல் என்று கருதிக் கொள்ளலாம் இயற்கை என்று கருதிக் கொள்ளலாம்.  அந்த கருதுகோல் இப்போது நம் கவனத்திற்கு ஒரு செய்திதான். ஆனால் வாழ்வை துன்பமில்லாமல் வாழ்வதற்கு என்ன செய்வது என்றால் வேண்டுதல் இல்லாமலும் வேண்டாமை இல்லாமலும் இருக்கிற ஒருவனுடைய பாதத்தை நீங்கள் சேர்வீர்கள் என்று சொன்னால், அடியை நீங்கள் சேர்வீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் துன்பமில்லை. இது உங்கள் பட்டியலில் இருக்கக்கூடிய இரண்டாவது டிக். ஆக முதல் டிக் நீண்ட காலம் வாழ்வதற்கு என்ன செய்வது? மலர்மிசை ஏகினானினுடைய அடி சேர்வது. சரி நீண்ட காலம் வாழ்வதற்கு வழி சொன்னீர்கள். இரண்டாவது துன்பமில்லாமல் வாழ்வதற்கு என்ன செய்வது? துன்பமில்லாமல் வாழ்வதற்கு வேண்டுதாலும் இல்லாமல் வேண்டாமையும் இல்லாமல் இருக்கிற நிதானமான ஒரு நபர். அப்படி ஒரு நபரை தேடி கண்டுபிடிக்க வேண்டும். அப்படி தேடி கண்டுபிடிப்பீர்கள் என்று சொன்னால் அவரது பாதத்தை நீங்கள் வணங்குகிற போது உங்கள் வாழ்நாள் முழுவதும் துன்பமில்லை. இது இரண்டாவது பாயிண்ட். சரி ரெண்டும் ஓகே. ரெண்டுக்கும் நான் நீங்கள் சொன்ன மாதிரி செஞ்சிட்டேன். இப்போது நான் புகழோடு வாழனும் சாமி. நான் என்ன செய்றது? இதெல்லாம்  வாழ்க்கையில் நக்கு பட்டியலில் இருக்கும். நான் ஏன் இவ்வளவு பெரிய வீடு கட்டி இருக்கேன். ஊர்ல உள்ளவங்க எல்லாம் என்னை பார்த்து சிறப்பா சொல்லணும். ஏன் எல்லாருக்கும் நான் நல்ல நாள், பெருநாளுக்கு துணிமணி எடுத்து கொடுக்கிறேன். ஐயாவை பத்தி பெருமையா சொல்லணும். அப்படிங்கிற எண்ணமெல்லாம் நமக்கு இருக்கும். இதுல என்ன காரணம்னா புகழ் சேரணுங்கறதுக்காக. புகழுங்கறதுக்கு தனியா ஒரு இடத்துல திருவள்ளுவர் நமக்கு வேறொரு பாடத்தை நடத்துறாங்க. ஆனா அடிப்படையா ஒரு மனிதனினுடைய உள்ளத்துல ஒரு மனிதனினுடைய மன ஓட்டம்  வாழ்க்கையில வந்தவுடனே என்ன எல்லாம் நமக்கு மனசுக்குள்ள எழும்புது  அப்படிங்கிறத திருவள்ளுவர் நமக்கு சொல்றாங்க.

திருவள்ளுவரினுடைய சிந்தனைகள் வழியாக நாம் பார்க்கிறபோது வாழ்க்கை வாழனும்னா உடனடியாக நான் நீண்ட காலம் வாழனும்னு சொல்றது மாதிரி ஒரு பட்டியல்ல புகழோடு வாழனும் அப்படின்னு மூணாவது ஒரு பாய்ண்ட் நம்ம குறிச்சிருக்கோம். அப்படி புகழோடு வாழ்வதற்கு நாம் என்ன செய்யறது? அப்படி ஒரு குறள்.  ருள்சேர்   இருவினையும்  சேராஇறைவன் பொருள்சேர்

புகழ் புரிந்தார் மாட்டு அப்படி ஒரு குறள். அப்போ இதுல இறைவன் அப்படிங்கற  சொல் வரதுனால நமக்கு இந்த குறளுக்குள்ள போறதுக்கு யோசனையா போயிரும்.  புகழுக்கு நெருக்கமாக இருப்பது தான் உங்களுக்கு புகழுக்குரிய செல்வம். இந்த பாட்டுக்குள்ள அப்படி ஒரு நுட்பத்தை புகழுக்குரிய ஒன்றாக இந்த பாடல் நமக்கு இருக்கிறது. புகழ் வேணும்னா இறைவனுடைய புகழுக்கு பக்கத்துல உங்களுக்கு எந்த விதமான சங்கடமும் வராமல் உங்கள் புகழுக்கு எந்தவிதமான கலக்கமும் வராமல் இருக்கிறதுக்குரிய வழிமுறையா இந்த பாடல் இருக்கு.

சரி இதெல்லாம் நீங்க சொன்னபடி  நம்ம வாழ்ந்தாச்சு, கேட்டுக்கிட்டாச்சு, இந்த பாயிண்ட் எல்லாம் எடுத்தாச்சு, டிக் பண்ணியாச்சு. அப்ப இதுபடி செய்யறதுக்கு ஏதாவது தடை வருமா சாமி அப்படின்னா அதுக்கு அடுத்த பாடல். இந்த நெறிமுறைகள் படி இந்த நெறிமுறைகள்  ஒரு நாலு பாய்ண்ட் சொன்ன உடனே, இந்த நாலு குறிப்புகளை சொன்ன உடனே நமக்கு நெறிமுறை எல்லாம் செய்யலாமா செய்யக்கூடாதன்னு  மனசுல ஒரு குழப்பம் வரும். இந்த குழப்பத்தை யார் ஏற்படுத்துறா அப்படின்னா முதல்ல நான் இந்த வகுப்பு தொடங்குற போது உங்களுக்கு சொன்னேன். தர்க்க நெறிமுறைகள்ல காட்சிப்பிரமாம்  வழியாக, திரிபுகள் வழியாக, யூகங்கள் வழியா நமக்கு ஒரு குழப்பமும் சாத்தியமும் இருக்கிற மாதிரி - இது மீண்டும் தலை தூக்கும்.

ஆக இது எல்லாத்தையும் நம்ம கடந்து, ஐம்புலன்களையும் அது சொல்கிற வழிகளில் திசை மாறி போகாம நெறி முறையோடு இருக்கிறோம் அப்படின்னு சொன்னா ஏன்னா ஐம்புலன்களும் வந்து தர்க்கம் பண்ணும். அதை எப்படி நிலமிசை நீடு வாழ்வது     சாத்தியமா. புகழோடு வாழ்வது சாத்தியமா அப்படின்னு நமக்கு தர்க்கம் ஏற்படும். அப்படி தர்க்கம் ஏற்படுகின்றது என்பதை கணக்குல வச்சிக்கிட்டு, இன்னும் நம்ம நீடூடி வாழ்வதற்கு நாம் வேற என்ன செய்யலாம் அப்படின்னு சிந்திக்கிற போது வள்ளுவர் அடுத்த குறள்ல சொல்றாரு. நீங்கள் ஐம்புலன்களினுடைய ஐம்புலன்கள் கொடுக்கிற விஷயங்களை கடந்து நிஜமாகவே ஒரு மெய்யியல் கோட்பாடுகளை மெய்யான ஒன்றை நீங்க கடைப்பிடிக்கிறீங்க அப்படின்னா நீங்க நீடூடி வாழ முடியும். சொல்லக்கூடிய கருத்துக்களை ஒரு ஆசான், ஒரு சிந்தனையாளர்  உங்களுக்கு வழங்குகிறார் என்றால் அந்த கருத்துக்களை தடை செய்வதற்கு உங்க மனம் ஏற்றுக் கொள்வதற்கு ஒரு தயக்கம் ஏற்படும். அப்படி தயக்கம் ஏற்படுகிற போது இந்த தயக்கத்தை கடந்து செல்ல வேண்டும். அந்த தயக்கத்திலிருந்து விடுபட வேண்டும். அந்த தயக்கம் கடந்து நீங்கள் நகருகிற போது நீங்கள் நீடூடி வாழ்வீர்கள். இதுல கடவுள் எல்லாம் இல்ல.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடுவாழ் வார் என்பது குறள். ஐந்து புலன்களை அழித்தவானது மெய் நெறியை  கடைப்பிடிப்பவர். இந்த  மெய்நெறி என்பது என்ன அப்படின்னா நம்ம தர்க்க நெறிமுறைகள்ல  சொல்றது மாதிரி உங்களுக்குள்ள இருக்க தர்க்க அறிவுகளை நீங்க ஒரு பக்கம் தள்ளி வைக்கிறதுக்கு உதாரணமாக இருப்பது யாரு அப்படின்னா ஐம்பொறிகளின் வழியாக தர்க்கங்களின் வழியாக  குழப்பங்கள் ஏதும் இல்லாமல் இருக்கிற ஒருவனை நீங்கள் பின்பற்றுகிற  போது உங்கள் ஆசானை பின்பற்றுகிற போது, உங்கள் சிந்தனையாளரை பின்பற்றுகிற போது அவர்கள் ஏற்கனவே இவற்றைக் கடந்து நிற்கிறார்கள் என்கிற புரிதலோடு நீங்கள் அவரை பின்பற்றுகிற போது நீங்கள் நீடூடி வாழ்வீர்கள்.

வாழ்வது என்பது பின்பற்றுதலின் வழியாக நிகழும் என்று இந்த பாடலை குறிப்பாக  கொடுக்கிறார். ஆக நாம் பட்டியலில் இருக்கிற ஒரு ஆறு ஏழு குறிப்புகளை நாம் வைத்துக் கொள்வோம் அல்லது அந்த பட்டியலில் இருக்கிற நாம் குறித்து வைத்திருக்கிற ஏழு குறிப்புகளுக்குள் இருந்து ஒரு மூன்று நான்கு குறிப்புகளை நான் உங்களோடு இப்போது விளக்கி சொல்லிருக்கிறேன். அந்த வகையில் திருக்குறளினுடைய  பின்பற்றும் முறை என்பது வாழ்வதற்கு என்னவெல்லாம் அவசியம் என்று உங்கள் மனம் கருதுகிறதோ அந்த வகையில் எவற்றை பின்பற்றி வாழ்வது, யாரை பின்பற்றி வாழ்வது, எவ்வாறு பின்பற்றி வாழ்வது. அப்படி பின்பற்றி வாழ்வதன் வழியாக உங்களுக்கு கிடைக்கிற பயன் என்ன என்று இந்த 10 குறட்பாக்களில் வள்ளுவர் விரிவாக கூறுகிறார்.

தனித்தனியாக குறளினுடைய பொருளை நான் வேறொரு வகுப்பில் உரையாட வேண்டும். காலம் கருதி சுக்காமாக வாழ்த்துச் செய்யுளுக்குள், வாழ்த்து அதிகாரத்திற்குள் வாழ்வை வள்ளுவர் எவ்வாறு வகுத்து வைத்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் இவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். வாழ்வு என்றவுடன் நம் மனம் என்னவெல்லாம்  நினைக்கிறது. வாழ்வு என்பதற்கு நாம் என்னவெல்லாம் மனதிற்குள் கட்டுமானங்களை கட்டி வைத்திருக்கிறோம். நன்றாக வாழ்வது, நீடூடி வாழ்வது, துன்பமில்லாமல் வாழ்வது, புகழோடு வாழ்வது, பாவங்கள் ஏதும் இல்லாமல் வாழ்வது என்று ஒரு பட்டியல் வைத்திருக்கிறோம். இந்த பட்டியலை பொருத்தமாக நிறைவேற்றிக் கொள்வதற்கு வழிமுறைகள் என்ன என்று வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் சொல்கிறார்.

கடவுள் வாழ்த்து கடவுளை வணங்குவது மட்டும் அல்ல. கடவுளை வணங்குவதற்கு  என்னவெல்லாம் பயன் கிடைக்கிறது என்று சொல்கிற ஒரு பகுதி. கடவுள் என்பது என்ன என்று சொல்கிற இன்னொரு பகுதி. கடவுளை அறிமுகம் செய்வதோடு, கடவுளின் தன்மைகளை அறிமுகம் செய்வதோடு கடவுளினுடைய தன்மைகளை அறிமுகம் செய்வது என்று நான் துல்லியமாக நுணுக்கமாக குறிப்பிட விரும்புகிறேன். நவீன காலங்களில் கடவுள் இல்லை. கடவுளின்னுடைய தன்மை இருக்கிறது என்றெல்லாம் கூட மெய்யியலாளர்கள் கருத்துக்களை உரையாட துவங்கிருக்கிறார்கள். குறிப்பாக வள்ளுவம் தோன்றிய இரண்டாயிரம், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இப்போது நடக்கிற மெய்யியல் உரையாடல்களில் கடவுள் என்ற கருத்து ஒதுக்கி வைக்கப்பட்டு கடவுள் தன்மை என்கிற மெய்யியல் கருத்து உத் துவங்கியிருக்கிறது.

கடவுள் தன்மை என்கிற கருத்தை புத்தர் துவங்கி வைத்திருக்கிறார் என்கிற வாதமும் இருக்கிறது. ஆக, திருவள்ளுவர் கடவுளை உருவமாகவோ கடவுளை அருவமாகவோம் கடவுளை அருவுருவமாகவோ என்று எவ்வாறும் வரையறுக்கவில்லை. முழுக்க முழுக்க கடவுள் என்பது எவ்வறாக இருக்கிறது. கடவுளை நாம் எந்த தன்மையின் வழியாக நெருங்கிக்கொள்ள முடியும். கடவுளின் தன்மையில் இருந்து நாம் பெற்றுக்கொள்கிற பயன்கள் என்ன என்கிற அம்சங்களோடு கடவுள் வாழ்த்தை வைத்திருக்கிறார் என்பது ஒரு கூடுதல் செய்தி. இந்த குறிப்புகளின் வழியாக நாம் பேசுகிற இந்த வழிமுறைகள் வழியாக கடவுளிடம் இருந்து என்னவெல்லாம் பெற்றுக்கொள்ள முடியும் என்பது ஒன்று. கடவுளினுடைய தன்மைகள் என்னவெல்லம் இருக்கிறது என்பது இரண்டாவது. கடவுளினுடைய தன்மை இருப்பதால்  கடவுள் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் என்பது அவரவர் சிந்தனையின் எல்லையை பொருத்தது. ஆக கடவுள் தன்மை இருக்கிறது. கடவுள் தன்மை என்பதற்கான குறிப்புகளை வள்ளுவர் கூறுகிறார். வேண்டுதலும் இல்லாமல், வேண்டாமையும் இல்லாமல் இருப்பவர். இது ஒரு கடவுள் தன்மை. மலர்மிசை – இது ஒரு கடவுள் தன்மை. தனக்கு உவமை இல்லாத கடவுள் தன்மை. இவையெல்லாம் கடவுளின் தன்மைகளாக நாம் குறளின் வழியாக பார்க்க முடியும். இது கடவுளின் தன்மையை நீங்கள் உணர்கிறபோது, பின்பற்றுகிற போது உங்கள் வாழ்க்கைக்குறிய உங்கள் ஆயுளும் உங்கள் துன்பம் கரைந்து செல்வதும் உங்கள் புகழ் மேலோங்குவதும்  உங்கள் பாவங்கள் கரைவதும் நீங்கள் ஏழேழு பிறப்புகளுக்கு சென்று உங்கள் பிறவிப் பெருங்கடலை நீந்தி செல்வதுமான மனிதன் விரும்புகிற எல்லா வாழ்வில் அம்சங்களும் இதற்குள் வினாவும் விடையுமாக இருக்கிறது. இவற்றைப் பின்பற்றுகிற போது, படிக்கிற போது நாம் கடவுளை பார்க்கலாம். கடவுளின் தன்மையை பார்க்கலாம். அதன் வழி கிடைக்கிற பலன்களை பார்க்கலாம். இதைக் கடந்து வள்ளுவர் சொல்கிற கடவுள் என்கிற மெய்ப்பொருளுக்கு மேலான பொருள்களையும் மேலான அர்த்தங்களையும் கூட நாம் இதற்குள் விரிவாக  மெய்யியல் கண்ணோட்டத்தோடு பார்க்கிற போது செய்ய முடியும்.

இப்போது இந்த  வகுப்பினுடைய நோக்கமாக நான் கருதிக் கொள்வது, வைத்துக் கொள்வது - மனிதன் வளமையாக வாழ வேண்டும் என்று மனித சமூகத்தில் ஒரு பட்டியலை தயார் செய்தோம் என்றால் அந்த பட்டியலில் மனிதன் வளமையாக வாழ்வதற்கு என்னவெல்லாம் சொல்கிறார். என்னவெல்லாம் குறிப்புகளை கொடுக்கிறார் என்று அடுக்கி அந்த குறிப்புகளுக்கு ஒவ்வொன்றிற்கும் நாம் குறியிட்டுக் கொண்டே போக முடியும். எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொண்டே போக முடியும். நிறைவேற்றிக் கொள்வதற்குரிய வழிமுறைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்குரிய ஆலோசனைகளையும் எவ்வாறு நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்கிற அணுகுமுறைகளையும் வாழ்த்து செய்யுளில்  வள்ளுவர் நமக்கு வழங்கி இருக்கிறார்.

தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment