வான் சிறப்பு
நான்காவது பாடல். மிகவும் முக்கியமான
பாடல் அது. இது உழவர்களை பற்றி சொல்கிற பாடல்.
உழவர்களுக்கும் மழைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு
என்று நாம் பார்க்கிறோம். ஏனென்றால் உழவுத்
தொழில் செய்கிறவர்கள் மழையினை நம்பி அவர்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். முதல்
மூன்று பாடல்கள் உலக உயிர்களுக்கு பொதுவான பாடல். எல்லோருக்கும் பொதுவான பாடல். நான்காவது
பாடலில் மனித சமூகத்திற்கு
வள்ளுவர் வந்து விடுகிறார். மழை வரத்து குறையுமென்றால் உழவர்கள் ஏர் பிடிப்பதற்கு
வாய்ப்பில்லை. இதுதான் நான்காவது பாடலில் உள்ள வரி.
மழை பெய்ய வேண்டும். உழவர்களுக்கு நிச்சயமாக
மழை பெய்ய வேண்டும். ஏர் பிடிக்க வேண்டும் என்றால் உணவு உற்பத்தி செய்ய வேண்டும்
என்றால் மனித சமூகம் வரப்பு கட்டி
காய்கறிகளையும் தானியங்களையும் விளைவிக்க வேண்டும் என்றால் அதற்கு மழை வேண்டும். மனித சமூகத்தினுடைய
உற்பத்தி முறைக்கு,
உணவு உற்பத்தி முறைக்கு மழை வேண்டும் என்கிற பொருளில் பார்க்கிறபோதும் கூட
வள்ளுவர் மழையினை உழவர்களுக்கு நெருக்கமாக, உணவு உற்பத்திக்கு நெருக்கமான ஒன்றாக
சொல்கிறார். ஆக,
முதல் மூன்று பாடல்கள் உலக உயிர்களினுடைய பொதுத் தன்மையோடு நேரடியாக பொருள் கொள்ள
முடிகிறது.
உணவை
மையமாகக் கொண்டு மூன்று குறளில்
உலக உயிர்களினுடைய உணவை மையமாகக் கொண்டு பேசுகிற மேன்மையோடு இருக்கிறது.
அடுத்த குறட்பாட்கள் உற்பத்தி உணவு
சார்ந்த உற்பத்தி முறையை பேசுவதாக இருக்கிறது. மழை வரத்து குறைகிற போது மழை வரத்து
இல்லாத போது உழவர்கள் உழுவதற்கு ஏர் பிடிக்க முடியாது. உழவர்களினுடைய உணவு
உற்பத்திக்கு மழை மிக முக்கியமான காரணமாக
இருக்கிறது.
மழை இருந்தால் மட்டுமே உணவு உற்பத்தி சாத்தியம் என்று நான்காவது குறளை சொல்கிறார்.
இந்தக் குறளுக்கு அடுத்த குறளில் சொல்கிற பாடல் இதைப்
போலவே உழவர்களினுடைய வாழ்க்கையை மழை எவ்வாறு உறுதி செய்கிறது "கெடுப்பதூஉம்
கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே”
- மழை என்பது கெடுக்கவும் செய்யும். மழை பெய்யாமல் நின்று
கெடுக்கும் என்று ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்.
மனிதனை முதன்மைப்படுத்தி பேசுகிற போது, உழவர்களை
முதன்மைப்படுத்தி பேசுகிற போது மழையை குறிப்பிடுகிற போது மழை சில நேரங்களில்
பெய்யாமல் கெடுத்து விடும்.
அப்படி கெடுத்த பின்பு அந்த மழையே உழவனுக்கு துணை நின்று பெரும் விளைச்சலை
கொடுக்கும் வல்லமையுடையது என்று மழையை மழையினுடைய இரண்டு வேறு தன்மைகள் வழியாக
இந்த உழவு உற்பத்தியை வள்ளுவர் போற்றி அந்த குறளை வைத்திருக்கிறார். ஆக இந்த உற்பத்தி
முறையில் வள்ளுவர் அடுக்கி வைத்திருக்கிற குறட்பாக்களை நாம் பார்க்கிறபோது இந்த
இரண்டு குறட்பாக்களும் உழவன் - உணவு உற்பத்தி என்கிற
வகைமையில் பார்க்க முடிகிறது நண்பர்களே.
No comments:
Post a Comment