Tuesday, January 30, 2024

திருக்குறள் வாழ்வியல் - வான் சிறப்பு - பகுதி 2 // சிவ.கதிரவன்

                                                 வான் சிறப்பு

www.swasthammadurai.com


இரண்டாவது அதிகாரம் வான் சிறப்பு என்று பெயர் வைத்திருக்கிறார். வான் சிறப்பு என்றால் அது ஒரு செய்தி போல நாம் எடுத்துக் கொள்ளலாம். வானம் சிறப்பானது என்று புரிந்து கொள்ளலாம். வானம் தான் சிறப்பானது என்று புரிந்து கொள்ளலாம் அல்லது வானத்தின் சிறப்புகள் என்று புரிந்து கொள்ளலாம். என்றாலும் வானம் சிறப்பாக இருப்பதோ வானம் சிறப்பில்லாமல் இருப்பதோ எப்படிப்பட்டது என்று நமக்கு முக்கியமானது இல்லை. னென்றால் நாம் கருதுகிற அடிப்படையில் வானம் தன் சிறப்பை வைத்துக்கொள்ளப் போவதில்லை அல்லது நாம் கருதுகிற அடிப்படிடையில் வானத்தின் சிறப்புகளை பற்றி வானத்திற்கு கவலை ஒன்றும் இல்லை.

ஆனால் வள்ளுவர் வான் சிறப்பு என்று வைத்திருப்பதற்கு என்ன அடிப்படை காரணம் என்று நாம் சிந்திக்கிற போது வானம் உணவை வழங்குகிற சிறப்போடு இருக்கிறது. வானம் தொடர்ந்து உணவை வழங்குகிற சிறப்போடு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் நாம் இந்த அதிகாரத்தை ஒருமுறை வசித்து பார்க்க வேண்டிருக்கிறது.

ஆக, வானம் சிறப்பாக இருப்பதற்கு என்ன காரணம்  என்று நாம் பேசுகிற போது வானம் உணவு வழங்குகிறது என்று அதிகாரம் முழுவதும் சொல்கிறார். அந்த அதிகாரத்தில் உள்ள பாடல்களை நீங்கள் வாசித்து பார்க்கிற போது அதிகாரத்திற்குள் இருக்கிற குறட்பாக்களை நாம் பொருள் தேடுகிற போது அது உணவிற்கு மிக நெருக்கமா குறிப்புகளை வைத்திருக்கிறது என்று நீங்கள் பார்க்க முடியும்.

ஆக முதல் அதிகாரத்தில் ஒரு மனிதன் வாழ்வதற்குரிய, மன அமைதியோடு வாழ்வதற்குரிய, மனத் தெளிவு நிலையோடு  வாழ்வதற்குரிய குறிப்புகளை வைத்தது போல இரண்டாவது அதிகாரத்தில் வாழ்விற்கு என்ன தேவை என்று தேடுகிற போது, பார்க்கிறபோது வாழ்விற்கு தேவையான மன அமைதிக்குரிய பகுதிகளை முதல் அதிகாரத்தில் வைத்தது போல வாழ்விற்கு மிகவும் தேவையான மனிதன் மகிழ்வாக வாழ்வதற்கு மிகவும் தேவையான உணவை இரண்டாவது அதிகாரத்தில் வைத்திருக்கிறார். தமிழ் சமூகத்தில் மிக உயர்ந்த உணவாக எது கருதப்படுகிறது என்று நான் பார்த்தோம் என்றால் அமிழ்து என்று சொல்வார்கள். அமிழ்து என்பது தான் மிக உயர்ந்த உணவு என்று தமிழ் வாழ்க்கை முறையில், இலக்கியங்களில் பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. படித்திருப்பீர்கள். தமிழுக்கும் அமிழ்து என்று பெயர் என்று தமிழ் மொழியை போற்றி புகழ்கிற இலக்கிய வரிகள் எல்லாம் இருக்கின்றன. தமிழ் எங்கள் உயிருக்கு சமமானது என்று  தமிழைப் பற்றி பேசுகிற இலக்கிய வரிகள் இருக்கின்றன. இப்படி இலக்கியங்களுக்குள் தேடுகிற போது மொழியை அமிழ்தமாக  கொண்ட  அமிழ்தமாக பார்க்கிற ஒரு சமூகம் இந்த உலகில் தமிழ் சமூகமாகத்தான் இருக்க முடியும் என்பது ஒரு துறைச்சன்று.

நாம் பேசுகிற இந்த உரையாடலுக்குள் இந்த மொழி இலக்கியங்களுக்குள் உணவில் உயர்ந்த உணவாக அமிழ்தத்தை வைத்திருக்கிறார்கள் என்று நாம் பார்க்க முடிகிறது. சைவ மரபில் பாற்கடலை கடைய விஷமும் பின்பு அமிழ்தமும் வந்ததாக சிவபுராணங்கள் பேசுகிற கல்விமான்கள் சொல்வதுண்டு. அமிழ்தம் மிக உயர்ந்த உணவாக வந்து அப்போது இருக்கிற வான தேவர்களுக்கு வழங்குவதற்குரிய ஏற்பாட்டிற்காக அப்படி செய்யப்பட்டது. அமிழ்தம் உண்டால் நீண்ட ஆயுளோடு வாழலாம்.  சாகாவரம் பெற்றுக் கொள்ளலாம். அது வெறும் உணவாக மட்டுமல்ல. அது வாழ்நாளுக்குரிய, வாழ்நாளை நீட்டிப்பதற்குரிய எல்லா அம்சங்களையும் உள்ளடக்கமாக  இருக்கிற  ஒரு பதார்த்தம் என்கிற புரிதலோடு நாம் உணவினுடைய உயர்ந்த ஒன்றாக அமிழ்தத்தை இந்த சமூகம் போற்றுகிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த சமூகம் போற்றுகிறது என்பதை உங்கள் வாழ்நாளில் பார்க்கிறபோது நல்ல உணவை உண் போது அமிழ்தம் போல் இருந்தது என்று நீங்கள்  சொல்லி இருக்கிற அனுபவம் உங்களுக்கு வந்திருக்கும். அமிழ்தமான உணவு  என்று எல்லோரும் பேசி இருப்போம்.  நீண்ட பசியோடு இருக்கிறபோது நீண்ட நேரம் உணவுக்காக காத்திருந்து மீண்டும் சாப்பிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிற போது நாம் சாப்பிடுகிற எந்த உணவாக இருந்தாலும் அந்த உணவின் ருசி அமிழ்தத்தை போல் இருந்தது என்று நாம் சொல்லக்கூடிய வாய்ப்போடு, அனுபவத்தோடு கடந்து வந்திருப்போம்.

ஆக, தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை அல்லது மனித சமூகத்தைப் பொறுத்தவரை மனித சமூகத்திற்கு நல்ல உயர்ந்த உணவு அமிழ்தம்  தான் என்ற ஒரு புரிதல் இருக்கிறது. அத்தகைய உணவினுடைய அமிழ்த நிலையை விளக்கும்படி பாடலை துவங்குகிறார். மழையால் உலகம் நிலை பெற்று வருவதால் மழையே அமிழ்தம் என்று முதல் பாடலை வள்ளுவர் சொல்கிறார். வான் சிறப்பினுடைய முதல் பாடல் அப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது.

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்  தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று என்று முதல் குரள் இருக்கிறது. இந்த குறல்  மழை நீரை அமிழ்தமாக  சொல்கிறது. நுட்பமான ஒரு செய்தி நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புவது என்னவென்றால் அது மழை நீர் என்பது உயர்ந்த உணர்வு என்கிற பொருளில் வழங்கப்படுகிறது. இதற்கு நீங்கள் இலக்கியச் சான்றாக, மெய்யியல் சான்றாக வேறுவேறு சிறந்த உதாரணங்களை முன்வைத்து பேச முடியும் என்றாலும் ஒரு மனிதன் நன்றாக வாழ்வதற்கு எப்படி மன நிம்மதி அடிப்படையாக இருப்பதால் முதல் அதிகாரத்தில் மன நிம்மதியோடு அதிகாரத்தை துவங்கிய வள்ளுவர், மனிதன் நலமாக வாழ்வதற்கு உணவு மிக முக்கியம் என்ற பார்வையில் நல்ல வாழ்க்கைக்குரிய நல்ல உணவை யார் கொடுக்கிறார்கள்? எது கொடுக்கிறது? என்கிற அடிப்படையில் இரண்டாவது அதிகாரத்தை  வடித்திருக்கிறார் என்பது என்னுடைய அபிப்பிராயம். அந்த வகையில் மழைநீர் அமிழ்தமாக இருக்கிறது என்பது  முதல் செய்யுள். இரண்டாவது செய்யுள் மழை நீரே குடிநீராகவும் அதுவே உணவாகவும் அமைந்திருக்கிறது என்பது.

நான் முதலில் உணவிற்கும் குறளுக்கும் இடையே இருக்கிற நெருக்கமான வரையறையை, தொடர்பை உங்களுக்கு விளக்கிச் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் வான்சிறப்பு பற்றி பேசுகிற ஆன்றோர் பெருமக்கள், சான்றோர் பெருமக்கள் அல்லது இலக்கிய தரத்தில் இன்னும் புதிய நுட்பமான  செய்திகளை பேசியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். படித்திருப்பீர்கள். பெரும் பெரும் தமிழறிஞர்கள் வள்ளுவரைப் பேசுகிறபோது வான் சிறப்பு குறித்து அவ்வளவு நேர்த்தியான உதாரணங்களோடு, சிறந்த தன்மைகளோடு பேசுவதை கேட்கிற போது நமக்கு  இன்றும் கூட அவ்வளவு உள மகிழ்ச்சியாக இருக்கிறது. நாம் வள்ளுவரினுடைய வார்த்தைகளை மனித சமூகத்தினுடைய, தனிமனிதனினுடைய உடல் நலத்தோடு  வாழ்வியலை  பின்பற்றுவதற்குரிய  தன்மையோடு நாம் அடுக்கிப் பார்க்கிற, அணுகிப் பார்க்கிற ஒரு முயற்சியை மேற்கொள்கிறோம்.

அந்த வகையில் நாம் முதலில் வான் சிறப்பிற்குள் இருக்கிற உணவிற்கு நெருக்கமான நல்ல வாழ்வை வாழ்வதற்குரிய ஒரு மனிதனினுடைய உணவிற்கு நெருக்கமான அம்சங்களை நான் பாடல் வரிசையாக சொல்ல வேண்டும் என்று பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் முதல் பாடல் மழையால் உலகம் நிலைபெற்று இருக்கிறது. மழையே அமிழ்தம் என்று நாம் உணர வேண்டும் என்பதை முதல் பாடல் பொருளாக வைத்திருக்கிறது.

இரண்டாவது பாடல் துப்பார்க்குத் துப்பாய என்கிற பாடல். விளையாட்டாக பலரும் கேள்விப்பட்டிருக்கிற பாடல்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூவும் மழை - இது ஒரு சொல் விளையாட்டாக இருக்கிற பாடல். இதுவும் உணவிற்கு நெருக்கமான ஒரு செய்தி. மழை நீர் நல்ல உணவுகளை உண்டாக்குவதற்குரிய வல்லமையோடு இருக்கிறது. இது முதல் குறிப்பு இந்த பாடலுக்குள்.  

 தானும் நல்ல உணவாக, குடிநீராக மாறிக் கொள்கிறது என்று இரண்டாவது பாடலுக்குள்ளும் உணவினுடைய மேன்மையை மழை நீர் உணவாக, மழைக்கும் வானிற்கும் உணவிற்கும் இடையே இருக்கிற செய்திகளை வள்ளுவர் வடித்திருக்கிறார்.

...தொடர்ந்து பேசுவோம்...

                                                         

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...