Showing posts with label philosophy. Show all posts
Showing posts with label philosophy. Show all posts

Sunday, April 26, 2026

பொறுத்தல் எனும் சீர்நிலைச் சாரம் - பகுதி 1 - சிவ கதிரவன்

பொறுத்தல் எனும் சீர்நிலைச் சாரம்

swasthammadurai

            நாம் இன்றைக்கு சீர்குலைவான ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சீர்குலைவு என்பது பரவிக் கொண்டிருப்பது மட்டுமில்லாமல் நிலை கொள்ளத் துவங்கியிருக்கிறது. சீர்குலைவே நிலையானது என்பது போன்ற மாயையான காட்சிகளை நாம் பார்க்கிறோம். சீர்குலைவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு உரிய சாரமான கருத்துகளை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சீர்குலைவியிலிருந்து  நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு அடிப்படையான சாரங்களில் ஒன்று பொறுமை கடைப்பிடிப்பது. பொறுமை கடைபிடிப்பது இன்று அறியப்பட்ட அளவில் ஒரு வன்மத்தை சுமந்து கொள்வது என்கிற பொருளில் நடைமுறையில் இருக்கிறது. உங்கள் முன் ஒரு காட்சி நடக்கிறது என்றால் அந்த காட்சியை நீங்கள் உள்வாங்கிக் கொண்டு அது குறித்த எந்த கருத்தையும் வெளிப்படுத்தாமல் உங்களுக்கான வாய்ப்பு வரும் வரை அந்த காட்சி குறித்த எதிர் கருத்துகளையும் விமர்சனங்களையும் உங்கள் நினைவில் சுமந்து கொண்டு உங்கள் வாய்ப்பு வருகிற போது சிதைவான வகையில் அறுவறுக்கத்தக்க வகையில் வெளிப்படுத்திக் கொள்வதும் நான் இதுவரை பொறுமையாக இருந்தேன் என்று விளக்கிச் சொல்வதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சீர்குலைவான காலத்தில் பொறுமை குறித்த கருத்துகளும் இப்படித்தான் வெளிப்படும். ஆனால் சீர்குலைவை நீங்கள் எதிர்கொள்வதற்கும் சீர்குலைவில் உங்களை காத்துக் கொள்வதற்கும் மெய்யாகவே பொறுமை உங்களுக்கு அறன் போல இருக்கும்.

நடப்பில் நீங்கள் அறிந்து வைத்திருக்கிற பொறுமை குறித்த கருத்துகளை தவிர்த்து விட்டு பொறுமை என்கிற மெய்யான, சாரமான, காப்பாக இருக்கிற கருத்தினை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்.. நடைமுறையில் இருக்கிற அடிப்படையில் நீங்கள் பொறுமை காப்பீர்கள் என்றால் அது பொறுமையே இல்லை என்பதுதான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது. ஆனால் நீங்கள் குழப்பமான, சீர்குலைவான சமூகப் போக்கில் இருந்து உங்களை காத்துக் கொள்வதற்கு மெய்யாகவே உங்களுக்கு காப்பரணாக இருப்பது பொறுமை என்கிற கருத்து தான்.

பொறுமையினுடைய சாரமான உள்ளடக்கம் என்னவென்றால் ‘அடங்குவதே பொறுமை’ என்று  நினைவில் கொள்ளுங்கள். அடங்குவதே பொறுமை என்றால் எதில் அடங்குவது என்ற கேள்வி உங்களுக்குள் எழும். உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற வரம்புகளில் நீங்கள் அடங்குவது. சான்றாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு மனிதத் தோற்றமாக நாம் இருக்கிறோம். மனிதத் தோற்றமாக இருக்கிறபோது இந்தத் தோற்றத்திற்கு சில  வரம்புகள் இருக்கின்றன. அவை என்னவென்றால் அது உடலாக இருக்கிறது. உடலிற்கு தோற்ற வரம்புகள் உண்டு. உடல் இயங்கு முறைக்கு இயங்கு முறை வரம்புகள் உண்டு. உடலின் சிந்தனை முறைக்கு வரம்புகள் உண்டு. இவ்வாறாக இருக்கிற வரம்புகளை நீங்கள் சான்றாக வைத்துக் கொள்ளலாம். இவ்வாறாக உங்களுக்கு அறிந்திருக்கிற அளவில், புரிந்து இருக்கிற அளவில், ஏற்றுக் கொண்டிருக்கிற அளவில், உணர்ந்து இருக்கிற அளவில் உள்ள வரம்புகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்கள் என்றால் அது அடங்குவதாகும். உங்கள் வரம்புகளுக்குள் நீங்கள் அடங்குவீர்கள் என்றால் அது பொறுமை என கொள்ளப்படும். உங்கள் வரம்புகளுக்குள் அடங்குவது தான் பொறுமை எனக் கொள்ளப்படுகிறது.

உங்கள் உடல் தோற்றத்திற்கு சில வரம்புகள் இருக்கின்றன. உங்களால் எவ்வளவு தூரம் ஓட முடியும். உங்களால் எவ்வளவு உறக்கப் பேச முடியும்? உங்களால் எவ்வளவு ஒலியினை கேட்க முடியும். உங்களால் எவ்வளவு வெளிச்சத்தை பார்க்க முடியும் என்றெல்லாம் உங்களால் எளிமையாகக் காண முடியும். ஒப்பிட முடியும். உள்ளபடி உங்களால் இந்த வரம்புகளுக்குள் பொருந்துவது தான் பொறுமை எனப்படுகிறது. இந்த வரம்புகளில் நீங்கள் இப்பொழுது எவ்வாறு பொருந்துகிறீர்கள் என்பதுதான் நாம் உரையாடிக் கொண்டிருக்கிற கருத்து. ஒளி மற்றும் வெளிச்சம் என்கிற அளவில் உங்கள் கண்களுக்கு எவ்வளவு பார்க்க முடிகிறதோ அதை விடவும் பன்மடங்கு கூடுதலான ஒளியினையும்  வெளிச்சத்தினையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இது ஒரு வரம்பு மீறல். இது ஒரு விளைவை ஏற்படுத்தும். உங்கள் செவிகளால் எவ்வளவு ஒலியினை செவி மடுக்க முடியும்  என்கிற எல்லை கடந்து தாறுமாறான இரைச்சல்களை ஒலியினை செவிமடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இவ்வகையில் ஒலி வரம்பினை, கேட்கும் வரம்பினை எவ்வாறு மீறுகிறீர்கள் என்பதை நீங்கள் ஒப்பிட்டு பார்க்க முடியும். இவை வரம்பு மீறல் ஆகிறது. இவ்வாறாக உடலில் இன்னும் பிற இயங்கு முறைகளை நீங்கள் ஒப்பிட்டு பார்க்க முடியும். உங்கள் உணவு எவ்வாறு இருக்கிறது என்றால் அது இன்னும் சிக்கலானதாக இருக்கிறது. உங்கள் உடலிற்கு எது பொருந்துகிறது என்று பார்ப்பதே இல்லை. யாவற்றையும் சமைத்துக் கொடுத்தால் உண்ணலாம் என்கிற சிந்தனை வளர்ந்து இருக்கிறது.

மனித உயிருக்கு வாழ்வியல் போக்கில் பேரண்டம் முழுவதும் உணவு பொதிந்திருக்கிறது என்றாலும் பேரண்டம் முழுவதும் இருக்கிற உணவை நான் ஒருவனே உண்ண முடியும் என்கிற மயக்கத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த மயக்கம் அப்பட்டமான வரம்பு மீறல். உங்கள் உணவிற்கு இலக்கணம் - உங்கள் உடலில் அது பொருந்த வேண்டும் என்பதுதான். இன்று நீங்கள் உட்கொள்கிற உணவு வகைகளில் எவ்வளவு உங்கள் உடலிற்கு பொருந்துகிறது என்பதை நீங்கள் பார்ப்பதே இல்லை. இவ்வாறாக பாராமுகமாக நீங்கள் உட்கொள்கிற  உணவுப் பழக்கம் என்பது உங்கள் வரம்பு மீறலின் வெளிப்பாடாகத்தான் உள்ளது. இன்று கிடைக்கிற உணவுகளும் பானங்களும் உங்கள் வரம்பு மீறலை காட்சிப்படுத்துகின்றன. அதுவே எவ்வளவு வரம்பு மீறி இருக்கிறீர்கள் என்பதை சான்று பகிர்கின்றன. இத்தகைய வரம்பு மீறல்கள் என்ன செய்கிறது என்பது இத்தகைய சீர்குலைவான சூழலில் உரையாடப்பட வேண்டிய கருத்தாக இருக்கிறது. அவ்வாறு சமூக உறவாடலில் ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையே இருக்கிற உறவாடலில் வரம்பு மீறலாக இருக்கிறபோது அதிகாரத்தை ஊக்குவிக்கிறது. இயலாமையை ஊக்குவிக்கிறது, தோல்வியை வரவழைக்கிறது.

அவரவர் தம் வரம்பில் உறவு பாராட்டுவார் என்றால் ஒருவருக்கும் இன்னொருவருக்கும் இடையே இருக்கிற உறவு நிலை மேம்பட்ட உறவாக மலரும். அது நிலைபெறும். அது ஒரு நல் வாழ்விற்குரிய வழிப்போக்கை அமைத்து அருளும். இன்று வரம்பு மீறப்பட்ட உறவாகவே எல்லா உறவுகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். யார் மீதும் எவற்றையும் தூக்கி வீசலாம் எந்தக் கருத்தையும் அள்ளிப் பூசலாம் என்கிற போக்கும் நடைமுறையில் இருக்கிறது. சீர்குலைவான இந்த காலத்தில் அதிகாரமாக வாழ்வதுதான் வாழ்வின் இலக்கணம் என்று மீண்டும் மீண்டும் கற்பிக்கப்படுகிறது. அதிகாரத்தோடு இரு.  அதிகாரத்தை பயன்படுத்து. எவர் மீதும் அத்துமீறலாம் என்கிற கருத்துகளை வைத்துக்கொண்டு வரம்பு மீறுகிற நடைமுறையை கடைபிடிக்கும் போது உறவிற்குள் இருக்கிற எல்லா உன்னதங்களும் சிதைகின்றன.

அதிகாரம் செய்கிற மனிதன் மீது அத்துமீறல் கடைபிடிக்கிற மனிதன் மீது எரிச்சலும் அவமரியாதையும் மதிப்பிழப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்பதை நீங்கள் உங்கள் வாழ்வில் பார்ப்பீர்கள். இவையெல்லாம் எங்கிருந்து வருகின்றன என்றால் உணர்வு நிலையில் உணர்ச்சி நிலையில் வரம்பு அறியாத பிறழ்வுபட்ட  காரணத்தினால் வருகின்றன. இத்தகைய வரம்பு கடைபிடித்தல் இல்லாதபோது உறவுகளும் உடல்நலமும் இன்ன பிற வாழ்வியல் கூறுகளும் சிதைவிற்கு உள்ளாகின்றன என்பதை நாம் கண்டு கொண்டே இருக்கிறோம். கண்முன் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

                                                                                     ....பகுதி 1....


Monday, December 18, 2023

மகிழ்ச்சி எனும் பொருளில்… சிவ.கதிரவன்

 

மகிழ்ச்சி எனும் பொருளில்…


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இன்றைக்கு நல்ல வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளக்கூடிய நாளாக, நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிற நாளாக அமைந்திருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை நாம் எல்லா நாட்களையும் நல்ல நாட்களாகவே பார்க்கிறோம். எல்லோருக்கும் எல்லா நாட்களும் நல்ல நாட்களாக அமைய வேண்டும் என்று விரும்புகிறோம். அந்த வகையில் இன்றைய நாள் மிகுந்த மதிப்பிற்குரிய, நன்மைக்குரிய நாள் என்பதில் எவ்விதத்திலும் மாற்று கருத்து இல்லை.

ஒரு நல்ல உரையாடலை நாம் அமர்ந்து இருந்து உரையாட வேண்டும் என்கிற நோக்கத்தில் மகிழ்ச்சி என்கிற பொருளில் உரையாட பணிக்கப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியாக இருப்பது, மகிழ்ச்சியாக இருப்பது என்பது என்ன? எவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பது? என்று நிறைய பேசியிருப்போம். நீங்களும் பேசியிருப்பீர்கள். எல்லோருமே கடந்து வராத தலைப்போ, கருத்தோ இல்லை. மகிழ்ச்சி குறித்து எல்லோருக்கும் விருப்பமும் நம்பிக்கையும் உரையாடலில் பங்கேற்ற, உரையாடிய அனுபவமும் இருக்கத்தான் செய்கிறது. இருக்கும். இருக்க வேண்டும்.

நாம் இன்று மகிழ்ச்சி குறித்து தெளிவுபடுத்த நினைக்கிற ஒரு வரிக் கருத்து நான் முதலிலேயே சொல்லி விடுகிறேன். ஏனென்றால் பொதுவாக நமது உரையாடலில் பேசி முடிக்கிற போது கூடுதலாக செய்திகளை தவிர்த்து ஒரு வரி செய்தியாக நீங்கள் சொன்னால் போதும் என்கிற விளையாட்டுத்தனங்கள் நான் பார்த்திருக்கிறேன். அந்த வகையில் முதலிலேயே மகிழ்ச்சி குறித்து நமது கருத்தை ஒரு வரியில் சொல்லி விட விரும்புகிறேன்.

மகிழ்ச்சி என்பது இன்று நீங்கள் பார்க்கிற கேளிக்கை அல்ல. கேளிக்கை என்பதற்கும் மகிழ்ச்சி என்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. மகிழ்ச்சி என்பது மகிழ்ச்சியாக இருப்பது என்று நினைத்துக் கொண்டு நாம் பெரும்பாலும் கேளிக்கைகளில் மகிழ்ச்சியை தேடுகிறோம். மகிழ்ச்சிக்குரிய நல்ல தருணங்களை கேளிக்கைகளில்  செலவிடுகிறோம். இது செலவிடுகிறோம் என்பதை விடவும் மகிழ்ச்சிக்குரிய நல்ல தருணங்களை  கேளிக்கைகளில் நாம் தொலைத்து விடுகிறோம் என்று எனக்கு தோன்றுகிறது. எனவே நாம் இந்த தலைப்பில் பேசுவதற்கு பணிக்கப்பட்டவுடன் நாம் சொல்ல வேண்டும் என்று கருதிய கருத்து இதுதான்.

Monday, December 4, 2023

மன அழுத்தம் பற்றிய புரிதல் - பகுதி 2 - சிவ.கதிரவன்

                                         மன அழுத்தம் பற்றிய புரிதல்

www.swasthammadurai.com


நீங்கள் தூங்குகிற போது உங்கள் மனம், நீங்கள் விழித்திருக்கிற போது உங்கள் மனம் என்று ஒப்பிட்டுப் பார்த்தீர்கள் என்று சொன்னால் நீங்கள் வழக்கமாக இருக்கிற எல்லாவற்றிற்குள்ளும் பொருத்தமாக இருப்பீர்கள் என்று சொன்னால் மனம் உங்களை ஒன்றுமே செய்யாது. நீங்கள் வழக்கத்தை மீறி இருக்கிற ஒரு பகுதிக்குள் பயணிக்க  முயற்சிப்பீர்கள் என்று சொன்னால் உங்கள் மனம் கேள்விகளை எழுப்பும். இது சரிதானா என்று கேட்கத் தோன்றும் உங்களுக்கு. உண்மையிலேயே இது பயன்படுமா என்று கேள்வி கேட்பீர்கள். இவையெல்லாமும் மனம் உங்களை வழிநடத்துகிற அல்லது மனதின் பின் நீங்கள் செல்லுகிற வழக்கமான பாதை. இந்த வழக்கமான பாதையில் நீங்கள் வழிநடத்தப்படுகிறீர்கள். வழக்கமான பாதையின் பாற்பட்டே நீங்கள் செல்லுகிறீர்கள். இவற்றை உருவாக்குவதும் இவற்றின் படி உங்களை நகர்த்துவதும் நீங்கள் விலகிச் செல்கிற போது உங்களை நெறிப்படுத்துவதும் உங்கள் மனம் தான் என்று நீங்கள் கண்டு கொள்கிற போது மனம் எழுப்புகிற, மனம் வழிகாட்டுகிற எல்லாவற்றிலுமிருந்து நீங்கள் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

மனம் சொல்வதை நீங்கள் கேட்பது என்பது மிக நெருக்கமாக உங்கள் காதுக்கும் உள்ளே வந்து நடத்தப்படுகிற ரகசியமான உரையாடல். வெளியிலிருந்து மனம் சொல்வதைக் கேட்பது என்பதும் மனம் சொல்வதை இனி நான் கேட்கப் போவதில்லை என்பதும் சாத்தியம் இல்லாத ஒன்று. மனம் தான் உங்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. செயல்படுத்த உந்துகிறது என்று நான் சொல்வதற்கான ஆதாரம் நீங்கள் வழக்கத்தை விட்டு மாறுவீர்கள் என்று சொன்னால் பதட்டத்திற்கு உள்ளாவீர்கள். உங்களில் யார் ஒருவர் உங்கள் வழக்கம் மாறுகிறபோது பதட்டம் இல்லாமல் இருக்கிறீர்களோ அவர் மட்டுமே மனம் சொல்வதை கேட்பதில்லை என்று பொருள். இதைக் கேட்டுக் கொண்ட பலரும் எப்போதுமே மனம் சொல்வதை கேட்பதில்லை என்கிற புதிய வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதும் உண்டு.  அது அப்படியான பொருத்தப்பட்டிற்கு வராது. ஒன்று மனம் சொல்வதை தொடர்ந்து கேட்பது அல்லது மனம் சொல்வதை தொடர்ந்து கேட்பதில்லை என்று முடிவு செய்து கொண்டு மனம் சொல்வதைக் கேட்பதில்லை என்ற புதிய வழக்கத்தை உண்டாக்குவது. இதுவும் மனம் செய்கிற விளையாட்டு.

மனம் என்பது வழக்கங்களை சேகரித்து வைத்து உங்களை வழி நடத்துகிற  நெறிப்படுத்தும் ஒரு கருவி. இந்தப் புரிதலில் இருந்து பார்க்கிறபோது மட்டுமே மனம் எப்போது அழுத்தப்படுகிறது. உங்கள் மனம் எப்போது பதட்டத்திற்குள்ளாகிறது. உங்கள் மனம் எப்போது சிதறடிக்கப்படுகிறது. உங்கள் மனம் எப்பொழுது  சிதைவிற்குள்ளாகிறது என்கிற உரையாடலை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய பார்வையோடு ஒரு உரையாடல் அவசியமாகிறது. நவீன கால மனிதர்களுக்கு மனதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான நேரமும் நிதானமும் குறைவாகவே இருப்பதாக தெரிகிறது. சமூகம் முழுவதும் மிகுந்த பரபரப்பான வழக்கம் இருப்பதால் மனம் எவ்வாறு இயங்குகிறது என்பதை கவனிப்பதற்கு ஒரு பெரிய தயக்கமும் தாமதமும் உருவாகிறது. இது பரபரப்பு உருவாக்குகிற உப விளைவு. இந்த பரபரப்பும் வேகமும் புதிய நவீன யுத்திகளும் கருவிகளும் நம்மில் உருவாக்கி இருக்கிற மிக முக்கியமான உபவிளைவு நாம் நிதானம் குறைந்தவர்களாக, நம்மை கவனிக்கிற நிதானம் குறைந்தவர்களாக மாறிப் போயிருக்கிறோம் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். தத்துவம் பேசுகிறவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். மறை நூல்கள் பேசுகிறவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். விஞ்ஞானம் பேசுகிறவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். கல்வியாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இப்படி எல்லா தரப்பு மனிதர்களும் முரண்பட்ட நேரெதிரான மனிதர்களும் ஏற்றுக் கொள்கிற ஒரு ஒற்றை கூற்று - நவீனம் வளர்கிற போது நவீனம் நம்முள் இருக்கிற நிதானத் தன்மையை குறைத்து இருக்கிறது என்கிற கூற்றை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த கூற்று நிஜமும் கூட. அவர்கள் ஏற்றுக் கொள்வது என்பது கற்பனையாக ஏற்றுக் கொள்வதல்ல. நிதானம் குறைந்த ஒரு சமூகத்தை நவீனம் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்கிற கூற்று நிஜமும் கூட. இந்தக் கூற்றின் அடிப்படையில் வாழ்கிற ஒரு சமூகம் நிதானமாக இல்லாத போது, நிதானமாக இல்லாத நிலையில் மனம் குறித்து ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கு பெரிய மெனக்கெடல் தேவைப்படுகிறது. இது தனி உரையாடல்.

மன அழுத்தம் பற்றிய புரிதல் - பகுதி 1 - சிவ.கதிரவன்

 

மன அழுத்தம் பற்றிய புரிதல்

www.swasthammadurai.com


வேலை செய்கிற இடங்களில், குடும்பங்களில், நாம் உறவு பாராட்டுகிற இடங்களில் நமக்கு ஏற்படுகிற மன அழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது?

மன அழுத்தம் குறித்த ஒரு விரிவான சிந்தனையை நாம் தெரிந்து கொள்வது என்கிற அடிப்படையில் இந்த வார உரையாடல்.

மன அழுத்தம் என்பது சமீபகாலத்தில், சமகாலத்தில் எல்லோருக்குமாக இருக்கிற ஒரு பொதுவான சொல்லாகவும் நவீன மனிதர்களுக்குரிய உளவியல் வெளிப்பாடாகவும் ஒரு குறியீடாகவும் வந்து கொண்டே இருக்கிறது.

மன அழுத்தம் என்பது அழுத்தப்படுகிற மனம் என்கிற அம்சத்தில் நாம் பேசுவது ஒருபுறம். ஆனால் மன அழுத்தம் என்று பயன்படுத்தப்படுகிற சொல்லின் பொருள் -  தொடர்ந்து ஒரு மனிதனுக்கு ஏற்படுகிற உளவியல் சிக்கலாக நாம் பார்க்கிறோம். தற்போது வேலை இடங்களில், உயர் பதவிகளில் இருக்கிற நபர்கள் கூட மன அழுத்தம் காரணமாக தன்னையும் தன் உடலையும் தன் வேலையையும் சிதைத்துக் கொள்வது என்று முடிவெடுக்கிற அளவிற்கு  மன அழுத்தம் என்பது பரவலாகி கொண்டிருக்கிற வேளையில் மன அழுத்தம் குறித்து நாம் சிந்திப்பதும் மன அழுத்தம் குறித்த ஒரு உரையாடலை செய்வதும் மிகுந்த முதன்மைக்குரிய ஒன்றாக இருக்கிறது.

மன அழுத்தம் என்று ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் ஒன்றை புரிந்து வைத்திருக்கின்றோம். உண்மையிலேயே மனம் என்பது என்னவாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதன் வழியாக மனம் என்ன சொல்கிறது, அதன் வெளிப்பாடு என்ன என்கிற புரிதல் பெற்றுக் கொள்வதன் வழியாக மன அழுத்தம் குறித்து, மன அழுத்தத்திலிருந்து நாம் விடுதலை அடைவதற்கு சாத்தியம் இருக்கிறது. சமகாலத்தில், மன அழுத்தத்திற்கு விடையாக இருக்கிற, விடையாக சொல்லப்படுகிற சமன்பாடுகளும் உரையாடல்களும் மன அழுத்தத்தை போக்குவதற்கு பதிலாக சில நேரங்களில் மன அழுத்தத்தின் அடர்த்தியை அதிகமாக்கி விடுவதும் நிகழ்ந்து வருகிற சூழலில், மன அழுத்தத்தை மிகத் துல்லியமாக கடந்து போவதற்கு மன அழுத்தத்திலிருந்து முழுவதுமாக விடுதலை அடைவதற்கு மெய்யாகவே நாம் செய்ய வேண்டியது மனம் என்பது என்ன, மனம் எவ்வாறு அழுத்தப்படுகிறது என்கிற பார்வையில் ஒன்றை கற்றுக் கொள்வதன் வழியாக நாம் மன அழுத்தத்திலிருந்து விடுதலையாவதற்கு சாத்தியம் இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

Thursday, December 8, 2022

மரியாதை

                                                மரியாதை

 

 ஒருவருக்கு மரியாதை கொடுப்பது என்றால் என்ன?

 எவ்வாறு ஒருவரை மரியாதையோடு நடத்துவது? ஒருவரிடம் எவ்வாறு மரியாதையோடு   நடந்து கொள்வது?  இதைப் பற்றி உங்கள் கருத்து, விளக்குங்கள் ஐயா.

www.swasthammadurai.com


அன்பர்களே,

 மரியாதை என்பது முழுக்க சமூகம் சார்ந்தது.  நீங்கள் சமூகத்தில் உங்களை தொடர்புபடுத்துகிற, தொடர்புபடுத்திக் கொள்கிற நிலையிலேயே சமூகத்திற்கான சில வரையறைகளை ஏற்றுக் கொண்டவர்களாக ஆகிறீர்கள். 

சமூகத்தில் நீங்கள் ஒரு நபரோடு உறவாடுகிற போது அந்த உரையாடல், அந்த உறவாடல் சமூகம் வைத்திருக்கிற ஏதாவது ஒரு வகைப்பட்ட உறவு நிலையிலேயே உருவாக்கப்படுகிறது. நீங்கள் சமூகத்திற்குள் எந்த வகையான உறவாடலை மேற்கொண்டாலும் அந்த உறவிற்குரிய பொருத்தமான, அந்த உறவிற்குரிய அவசியப்பட்ட கருத்தாகங்களாக சில பாவனைகளை சமூகம் முன்வைக்கும்.

ஒரு கணவன் மனைவியோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை பெற்றோரோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். ஒரு தலைவன் தொண்டர்களோடு எவ்வாறு இருக்க வேண்டும். ஒரு வாடிக்கையாளர் ஒரு வணிகம் செய்பவரோடு எவ்வாறு இருக்க வேண்டும் என்று எல்லா இடங்களிலும் ஒரு உறவு நிகழ்கிற எல்லா இடங்களிலும் சமூகம் அதற்கே உரிய நிர்மாணிக்கப்பட்ட ஒரு கருத்தாக்கத்தை வரையறுத்து வைத்திருக்கிறது. நெறிப்படுத்தப்பட்ட தன்மையிலேயே இந்த சமூகத்தினுடைய உறவாடல் இயக்கம் இருக்கிறது. அடிப்படையில் இதற்கு மிக முக்கியமான காரணமாக நான் கருதுவது சமூகத்திற்கு தனி மனிதன் குறித்த ஒரு நோக்கம் இருக்கிறது. ஒரு மனிதன் எவ்வாறு இயங்க வேண்டும், ஒரு மனிதன் சமூகத்திற்கு ஆபத்து இல்லாமல், சமூகத்திற்கு முரண் இல்லாமல், சமூகத்திற்கு கழகம் இல்லாமல் எவ்வாறு நெறிப்படுத்தப்பட வேண்டும் என்று சமூகம் தன் அனுபவத்தில் பாற்பட்டு சில நெறிமுறைகளை முறைப்படுத்தி வைத்திருக்கிறது. அந்த வகையிலேயே ஒரு உறவோடு நீங்கள் துவங்குகிற போது அந்த உறவிற்கான அடையாளங்களும் அனுமதிக்கப்பட்ட வடிவங்களுமாக சில கருத்தாக்கங்கள் இருக்கின்றன. அவற்றில் உங்களது உரிமைகள், உங்களது கடமைகள், உங்களது பாராட்டுக்கள், உங்களது எதிர் வினைகள் எல்லாமும் வரையறுக்கப்பட்டிருக்கும்.

Friday, December 2, 2022

ஞானம் என்பது என்ன? யார் ஞானம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளவர்கள்?

 

          ஞானம் என்பது என்ன? யார் ஞானம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளவர்கள்?


          அன்புள்ளவர்களே! உண்மையிலேயே ஞானம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

ஞானம் என்பது என்ன என்பது பற்றிய எந்த அறிவும் எனக்கு கிடையாது. ஞானம் என்பது என்னவாக இருக்கிறது, இருக்கும் என்று எந்த அனுபவமும் கிடையாது.

ஒரு மனிதன் தன் வாழ்வில் நாள்தோறும் தனக்கு ஏற்படுகிற வாழ்வியல் அனுபவத்தை கற்றுக்கொண்டு அனுபவத்தை பெற்றுக் கொள்வதன் வழியாக தன்னை புத்தி கூர்மை உள்ள மனிதனாக மாற்றிக் கொள்கிற அடிப்படை கற்றல் அவனை வளர்த்தெடுக்கும் என்று கருதுகிறவன் நான். என் பார்வை அவ்வளவுதான்.

ஒரு மனிதன் அன்றாடம் பெறுகிற அனுபவங்களை அவன் வாழ்வில் நகர்கிற நகர்விற்கு பொருத்திப் பார்க்கிற விழிப்புணர்வு இரண்டாவது அம்சம்.

ஒரு மனிதன் பெறுகிற அனுபவமும் அனுபவத்தை பொருத்திப் பார்க்கிற விழிப்புணர்வும் ஒரு மனிதனுக்கு நல்வாழ்வை மகிழ்வாக வாழ்வதற்கு போதுமானது என்று நான் பார்க்கிறேன். இலட்சியங்களும் இலக்குகளும் ஒரு மனிதனின் வாழ்வை என்ன செய்கின்றன என்று பார்ப்பதற்குரிய பார்வை ஒரு மனிதனுக்கு அவசியம் என்று நான் கருதுகிறேன்.

ஞானம் என்பது எவ்வாறாக இருப்பது, எவ்வாறு இருக்கிறது என்பதை விடவும் இன்று ஒவ்வொரு தனி மனிதனும் தன் வாழ்வில் நிகழ்கிற ஒன்றைப் பார்ப்பதற்குரிய பார்வை திறன் அற்றவர்களாக, பலகீனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதும் அவ்வாறு இருப்பவர்களுடைய எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் கவலைக்குரியதாக இருக்கிறது.

Tuesday, February 8, 2022

கீழை உளவியல் ll சரணாகதி lll Surrendering Happens PART 1

 

ஆணவம் அழிய வேண்டும் என்ற விருப்பத்துடன் குருவிடம் செல்கிறேன். சரணாகதியுடன் இருக்க முடியவில்லை. என்ன செய்ய வேண்டும் ஐயா?

இது ஒரு புதிய மனிதனின் பழைய மனநிலையில் இருந்து வெளிப்படுகிற கேள்வி. இன்று ஆணவம், அதன் அழிவு, சரணாகதி, குரு என்கிற கருத்தாக்கங்கள் மலிந்துவிட்டன.

உளவியல் பார்வையில் பேசுகிறபோது, இவை கற்பனையாக உருவாக்கப்பட்ட கருத்துருவாக்கங்களாக இருக்கின்றன. என் ஆணவம் அழிய வேண்டும் என்று ஒருவர் கேட்கிறபோது, ஒரு குருவிடம் செல்ல வேண்டுமென்று ஒருவர் விரும்புவது, சரணாகதியுடன் இருக்க வேண்டும் என்று ஒருவர் கருதுவது எல்லாமும் கற்பனையான தளத்திலேயே உரையாடப்படுகிற உரையாடல்.

கற்பனை என்பது அவர் அந்தக் கேள்வியை உருவாக்குகிற மனநிலைக்கு பலியாகிறார் என்று நான் பார்க்கிறேன். இந்த கேள்விக்குள் இருக்கிற நோக்கம், செய்யப்படுகிற பணிவான முயற்சி என்பது குறிப்பிட்டு பேசப்பட வேண்டியது.

ஆணவத்தை அழிக்க வேண்டுகிற ஒருவர், ஆணவத்தை அழிக்க வேண்டும் என்று விரும்புகிற ஒருவர் சரணாகதியை மேற்கொள்கிறார் என்றால் இதில் இருக்கிற முரண் விருப்பம் இருக்கிறபோது சரணாகதி சாத்தியமில்லை.

Saturday, February 5, 2022

கீழை உளவியல் ll கீழ்ப்படிதலும் சரணடைதலும் lll Obedience - Surrendering PART 2

                                             கீழ்ப்படிதலும்  சரணடைதலும்

www.swasthammadurai.com


கீழ்ப்படிதலுக்கும் சரணடைவதற்கும் இடையே உள்ள வேறுபாடு

புதிய ஒன்றை கற்றுக் கொள்கிற ஒருவர் தன் மனதிற்குகு தன் உளவியல் பகுதிக்கு பலகீனமான பகுதியை நீக்க வேண்டுமென்று கற்றுக் கொள்கிற ஒருவர் ஒரு சிறிய சமரசத்தோடு கீழ்படிதல் என்பதை செயல்படுத்த முடியும். கீழ்படிதல் என்பதை பின்பற்ற முடியும். இது ஒருவகையில் ஆணவத்திற்கு எதிரானது என்றாலும் கூட ஆணவத்தோடு இணைந்து பயணிக்கிற ஒரு சிறு பாதை இதற்குள் இருக்கிறது.

கீழ்படிதல் ஆணவம் அல்லாதது. ஆனால் ஆணவத்தோடு கீழ்படிதல் நிகழ்கிறது. ஒரு மனிதனுக்கு அவர் உளவியல் சார்ந்த எல்லா அலங்காரங்களும் இருக்கிறபோது அவர் புதிய அலங்காரத்தை பூசிக் கொள்வதற்கு கீழ்ப்படிதல் என்பதை கைக்கொள்ள முடியும்.

கீழ்படிதல் என்பது எந்த அளவில் இருக்கிறது. ஆணவத்திலிருந்து விடுபட்ட ஒன்றாக கீழ்படிதல் என்கிற மன மாற்றம் நிகழ்கிறது. இது மிகவும் தர அளவில் போதுமானதல்ல.

கீழை உளவியல் - கீழ்ப்படிதலும் சரணடைதலும் ll Obedience - Surrendering PART 1

 

கீழ்ப்படிதலும்  சரணடைதலும்

www.swasthammadurai.com


கீழ்ப்படிதலுக்கும் சரணடைவதற்கும் இடையே உள்ள வேறுபாடு

கீழ்படிதல்(Obedience) - சரணடைதல்(Surrendering) இந்த இரண்டு செயல்பாட்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? என்ற கேள்வியை நம் அன்றாட வாழ்வியல் தன்மையோடு பேசுகிறபோது, ஒரு பெரிய முக்கியத்துவம் பெற்றதாக இருப்பதில்லை.

அன்றாட வாழ்வியல் ஈடுபாடுகளில், செயல்பாடுகளில் கீழ்ப்படிதலும் சரணடைதலும் ஒரு பேசுபொருளாக இருப்பதில்லை. இந்தக் கேள்வியை ஒரு மனிதனின் உளவியல் சார்ந்த, அக மாற்றம் சார்ந்த தளத்தில் கேட்கப்படுகிற போது சற்று முக்கிய இடம் வைப்பதாக மாறி விடுகிறது.

Wednesday, October 13, 2021

சும்மா இருப்பது - பகுதி 4

                            சும்மா இருப்பது என்பது என்ன? 

www.swasthammadurai.com



சும்மா இருப்பது என்பது என்ன? என்று பார்ப்பதற்கு முன் இந்தக் கேள்வி எழும்புகிற நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை புரிந்து கொள்வது இன்னும் வசதியானது.

தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு மனதின் கேள்வியாக இது இருக்கக்கூடும். சும்மா இருப்பதை இரண்டு விதமாக நீங்கள் எதிர்கொள்ளலாம். சும்மா இருப்பதற்குள் அந்த இரண்டு விதத்தை ஒட்டி உங்களது கேள்விகளை எழுப்பி பார்க்கலாம்.

அதில் ஒன்று, சும்மா இருப்பது என்பது என்ன? அல்லது சும்மா இருப்பது எவ்வாறு செய்வது? என்ற வகையில் வெவ்வேறு கேள்விகளை சும்மா இல்லாத மனம் எழுப்பிக் கொண்டே இருக்கும்.

Wednesday, October 6, 2021

சும்மா இருப்பது - Being Idle - Part -3

                                                      சும்மா இருப்பது

www.swasthammadurai.com




தொடர்ந்து சும்மா இருப்பது குறித்து ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தெளிவு தேவைப்படுவதாக இருக்கிறது. இங்கு இருக்கிற எந்த நிறுவனத்திற்கும் எந்த ஆன்மீக கோட்பாடுகளுக்கும் கூட அதை நிறுவனமயமாக்கப்பட்ட பிறகு, அது அமைப்பு முறையாக மாறிய பிறகு இயற்கையாக இருக்கிற, இறைவன் போல் இருக்கிற ஒரு பரிசுத்தத்தின் சும்மா இருக்கும் நிலை பற்றி தெரிவதில்லை. சும்மா இருக்கிறோம் என்று பேசுகிற, யோசிக்கிற யாவரும் அப்படியானவர்களாக இல்லை. எந்த இலக்கும் இல்லாமல் இருப்பது மட்டுமே சும்மா இருப்பதற்கான அடையாளம்.

Tuesday, October 5, 2021

சும்மா இருப்பது - Being Idle - Part -2

                                                                சும்மா இருப்பது




மனிதர்கள் எப்போதும் சும்மா இருப்பதில்லை. சும்மா இருப்பது என்ன? என்பது மனிதர்களுக்கு தெரியவில்லை என்பது என்னுடைய பார்வை. எல்லா மனிதர்களும் ஏதாவதொரு வகையில் தனக்குள் வேறொன்றை பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறான் என்பது நவீன உளவியலின் முக்கியமான கோட்பாடு. சமகாலத்தில் குறிப்பாக 1900களில், 990களில், 2000 ஆண்டுகளில் நிறைய ஆய்வுகள் உளவியல் சார்ந்து நிகழ்த்தப்படுகின்றன.

Monday, October 4, 2021

சும்மா இருப்பது - Being Idle - Part -1

 

www.swasthammadurai.com




    சும்மா இருப்பது பற்றி ஏதாவது பேசவேண்டும் என்று ஒரு உரையாடலை நிகழ்த்தி பார்க்க வேண்டுமென்று அன்பர்கள் கேட்டுக் கொள்கின்றனர். பெரும்பாலும் எல்லா சிக்கல்களுக்கும் தீர்வாக பரிந்துரைக்கிற ஒரு ஆலோசனை “சும்மா இருப்பது” என்பதைத்தான். சும்மா இருப்பது என்றால் என்ன? என்று புரிந்து கொள்ள வேண்டும். “சும்மா இருப்பது” எவ்வாறு உங்களுக்கு உதவி செய்யும்? என்பதை நீங்கள் அனுபவித்து பார்க்க வேண்டும் என்ற தேவையும் வாய்ப்பும் ஒருசேர அமையும் என்றால் என்னைப்போலவே நீங்களும் சும்மா இருப்பது சிறந்தது என்று உணர்ந்து கொள்ள முடியும். இரண்டு நண்பர்கள் சந்திக்கிற போது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நலம் விசாரித்துப் பிரிந்து செல்கின்றனர். இருவரும் அவர்கள் அளவில் மன கனத்தோடு இருந்தாலும்கூட நலமாக இருப்பதாக பகிர்ந்து கொள்கின்றனர் மன கனத்தோடு இருக்கிறபோது நீங்கள் எவ்வாறு நலமாக இருப்பதாக பகிர்ந்து கொள்ள முடிகிறது என்று அவர்களோடு பேசும்போது மன கனத்தை நாம் ஏன் சொல்ல வேண்டும்? “சும்மா சொல்லி வைக்கலாம். நல்லா இருக்கேனு” என்று சும்மா என்கிற வார்த்தையை பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. இப்படி ஒரு பயன்பாடு சும்மா குறித்து நம்மிடம் இருக்கிறது. இந்த பயன்பாடு சும்மா குறித்து, சும்மா இருப்பது என்பது குறித்து நமக்குள் இருக்கிற தவறான புரிதலாக எனக்குத் தோன்றுகிறது.

Wednesday, June 16, 2021

WHAT IS HEALTH - PART -8 நலம் எனப்படுவது - பகுதி - 8

 

                                        நலம் எனப்படுவது 


www.swasthammadurai.com
நலத்தினுடைய மிக முக்கியமான வரையறைகள் என்று நிறைய காணக் கிடைக்கின்றன. நலத்தைப் பொருத்தவரை பேசப்படுகிற, சொல்லப்படுகிற, வரையறுத்து வைத்திருக்கிற எந்த ஒன்றும் முக்கியமானது தான். பரவலான முக்கியத்துவம் அல்லது பொதுவான முக்கியத்துவம் கடந்து நலத்தை ஒருவர் எவ்வாறு தேடுகிறாரோ? அவருக்கு அந்தக் குறிப்பு பரிந்துரைக்கப்படும் போது உரிய பலனை அவர் பெற முடியும்.

ALSO READ:GET RID OF MISERY - துயரங்களிலிருந்து விடுபட

Thursday, June 3, 2021

WHAT IS HEALTH - PART - 7 நலம் எனப்படுவது - பகுதி - 7

 

                            நலம் எனப்படுவது ...

www.swasthammadurai.com


நலம் குறித்து பேசப்படுகிற எல்லா உரையாடல்களும் மேம்போக்கான, தற்காலிகமான நிலையில் மட்டும் பரிந்துரைக்கிற தன்மையில் இருக்கிறது. நோய் என்பது எங்கிருந்து துவங்குகிறது? என்கிற ஒரு ஆழமான விவாதத்திலிருந்து நலம் என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஒரு மனிதனுக்கு நோய் தும்மல் என்கிற அளவிலேயே மதிப்பீடு செய்யப்படும் என்றால் அதற்கு பரிந்துரைக்கப்படுகிற நலம் குறித்தான பரிந்துரை தும்மலுக்கு உரிய மருந்துகளையும் மாத்திரைகளையும் முன்வைக்கிறது. இதே வேளையில் ஒரு மனிதனுக்கு தும்மலுக்கான மையம் என்கிற அளவில் நோயின் தன்மை விவாதிக்கப்படும் என்றால், ஆராயப்படும் என்றால் அதற்கான நலம் குறித்த பரிந்துரையும் சற்று ஆழமாக இருக்கிறது.

ALSO READ:நரிகள் வடை சாப்பிடுவதில்லை

Wednesday, June 2, 2021

WHAT IS HEALTH? - PART - 6 நலம் எனப்படுவது - பகுதி 6

 

                          நலம் எனப்படுவது - பகுதி 6

www.swasthammadurai.com


ஒவ்வொரு தனிமனிதனும் தனித்தனியான நலம் பற்றிய விருப்பம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஹோமியோபதி மருத்துவம் குறிப்பிடுகிற நலம்சார்ந்த வரையறை மருத்துவ வரையறைகளில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லா மனிதர்களுக்கும் பொதுவான நலம் என்று ஒன்று இருக்க முடியாது. இந்த கருத்தை சற்று நுட்பமாக நாம் பார்க்க வேண்டும். நலம் பற்றி கேள்வியை எழுப்பி பார்க்கிறவர்கள், நலம் பற்றி ஒரு தேடலை துவங்குகிறவர்கள், நிச்சயமாக வெவ்வேறு நலம் குறித்தான விளக்கங்களில் நிறைவடையாமல் இருக்கக்கூடும்.

ALSO READ:சொர்க்கம் - ஸ்வஸ்தம் நூல் அகம்

Sunday, May 23, 2021

WHAT IS HEALTH? நலம் எனப்படுவது - பகுதி 5

 

                 நலம் எனப்படுவது 

www.swasthammadurai.com


நலம் எனப்படுவது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற உன்னதத்தை நோக்கி எடுக்கபடக்கூடிய முயற்சிகளின் இறுதி இலக்கு. எல்லா மனிதர்களும் உன்னதமாக, சவுகரியமாக, நலமாக, வாழ்வதற்காகவே தமது வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்கின்றனர். நலம் என்ற சொல்லுக்கு பயன்பாடுகளுக்கு தகுந்தாற்போல் வேறு வேறு பொருட்கள் இருந்தாலும் எல்லா இடங்களிலும் இணக்கமாகவும் இசைவாகவும் முரண்பாடுகள் இல்லாமலும் இருக்கிற ஒரு நிலைக்கு நலம் என்று பொருள் கொள்ளப்படுகிறது.

ALSO READ:சொர்க்கம் - ஸ்வஸ்தம் நூல் அகம்

Wednesday, May 12, 2021

WHAT IS HEALTH? நலம் எனப்படுவது - பகுதி 3

 

நலம் எனப்படுவது - பகுதி 3

www.swasthammadurai.com


 ஒவ்வொரு மனிதனும் உன்னதம் என்று தான் எதைக் கருதுகிறோமோ அவற்றிலிருந்தே பயணத்தை மேற்கொள்கிறார். அவர் வாழ்நாள் முழுவதும் அவர் உன்னதம் என்று எதைக் கருதுகிறாரோ? எதை நம்புகிறாரோ? அவற்றின் வழியாக அவர் பயணிக்கிறார். வாழ்வின் இறுதி நாளில் அவர் வாழ்ந்து முடிக்க வேண்டிய கடைசி நிமிடத்தில் நாம் உன்னதம் நோக்கிய பயணத்தில் வெற்றி பெற்றிருக்கிறோமா? என்று அவரோடு பேசிப் பார்ப்பதற்கும் அவர் சொல்வதைக் கேட்பதற்கும் ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில் அவர் வாழ்வு நிறைவு பெறுகிற போது மலர்ந்த முகத்தோடு வாழ்வின் இறுதி நாட்களை அல்லது இறுதி நிமிடத்தை அவர் கடப்பதில்லை. இந்த மொத்த சமூகமும் மரணம் குறித்து, இறுதி நாள் குறித்து பெரும் பயத்தோடு தம் வாழ்வை நகர்த்துகின்றன.

ALSO READ:HEALTH PART -1 நலம் எனப்படுவது...

Thursday, April 22, 2021

HEALTH - PART 2 நலம் எனப்படுவது - பகுதி 2

 

நலம் எனப்படுவது

www.swasthammadurai.com


நலம் என்பது குறித்து ஒரு புரிதலை இந்தச் சமூகம் பெற்றுக் கொள்ள வேண்டும், எல்லா மனிதர்களும் நலமுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எல்லா மனிதரும் நலமுடன் இருக்க வேண்டும் என்று எனக்குள் இருக்கிற என் விருப்பமானது எல்லா மனிதர்களுக்குள்ளும் நலத்திற்கான கூறு இருக்கிறது என்கிற புரிதலில் இருந்து நான் பெற்றுக் கொண்டது. ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் நலமாகவும் நிறைவாகவும் இருப்பதற்கு எல்லா சாத்தியங்களையும் இயற்கை வழங்கி இருக்கிறது என்பதை என்னால் பார்க்க முடிகிறது.

ALSO READ:HEALTH PART -1 நலம் எனப்படுவது...

Saturday, March 20, 2021

HEALTH PART -1 நலம் எனப்படுவது...

 

நலம் எனப்படுவது

www.swasthammadurai.com


நலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் நிறைவாக இருக்கிறோம் என்கிற உணர்வும் தான் நிறைவாக இருக்க வேண்டும் என்கிற விருப்பமும் சேர்ந்து இருக்கிற மன ஓட்டமாக புரிந்து கொள்ள முடியும். இன்றைய காலகட்டத்தில் நலம் பெற்றவர்கள் என்று யாரைக் குறிப்பிட முடியும் என்றால் தனக்கு நேர்ந்திருக்கிற உடல் அசௌகரியத்திலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக, தற்காலிகமான முறையில் ஒரு மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டு உடல்ரீதியான அசௌகரியக்குறைபாடை நீக்கிக் கொள்பவர்கள் தம்மை நலம் பெற்றவர்களாக கருதிக் கொள்கின்றனர். மருத்துவத் துறையைப் பொருத்தவரை நலத்திற்கு ஒரு விரிவான விளக்கமும் பொருள் கொள்ளுதலும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. நான் நலமாக இருக்கிறேன் என்று கருதுகிற யார் ஒருவரும் தன் தேவைக்காக வெளியில் இருக்கிற ஏதோ ஒன்றுடன் உறவு பாராட்ட முடியாது என்பது எனது பார்வை.

ALSO READ:Traditional Medicine - Introduction மரபு மருத்துவம் - அறிமுகம்

பொறுத்தல் எனும் சீர்நிலைச் சாரம் - பகுதி 1 - சிவ கதிரவன்

பொறுத்தல் எனும் சீர்நிலைச் சாரம்             நா ம் இன்றைக்கு சீர்குலைவான ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சீர்குலைவு என்பது பரவிக் கொ...