Wednesday, May 12, 2021

WHAT IS HEALTH? நலம் எனப்படுவது - பகுதி 3

 

நலம் எனப்படுவது - பகுதி 3

www.swasthammadurai.com


 ஒவ்வொரு மனிதனும் உன்னதம் என்று தான் எதைக் கருதுகிறோமோ அவற்றிலிருந்தே பயணத்தை மேற்கொள்கிறார். அவர் வாழ்நாள் முழுவதும் அவர் உன்னதம் என்று எதைக் கருதுகிறாரோ? எதை நம்புகிறாரோ? அவற்றின் வழியாக அவர் பயணிக்கிறார். வாழ்வின் இறுதி நாளில் அவர் வாழ்ந்து முடிக்க வேண்டிய கடைசி நிமிடத்தில் நாம் உன்னதம் நோக்கிய பயணத்தில் வெற்றி பெற்றிருக்கிறோமா? என்று அவரோடு பேசிப் பார்ப்பதற்கும் அவர் சொல்வதைக் கேட்பதற்கும் ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில் அவர் வாழ்வு நிறைவு பெறுகிற போது மலர்ந்த முகத்தோடு வாழ்வின் இறுதி நாட்களை அல்லது இறுதி நிமிடத்தை அவர் கடப்பதில்லை. இந்த மொத்த சமூகமும் மரணம் குறித்து, இறுதி நாள் குறித்து பெரும் பயத்தோடு தம் வாழ்வை நகர்த்துகின்றன.

ALSO READ:HEALTH PART -1 நலம் எனப்படுவது...

நவீன மருத்துவம் மரணத்தைத் தள்ளிப் போடுவதற்காக சிகிச்சை முறைகளை கண்டுபிடித்து வைத்திருப்பதாக அறிவிக்கிறது. உயிர்காப்பு நடவடிக்கைகள் மருந்துகளின் வழியாக செய்ய முடியுமென்று பிரகடனப்படுத்துகிறது. ஒரு மருத்துவம் ஒரு மனித கூட்டத்திற்கு ஒரு காலகட்டத்தில் உயிர் காக்கும் வேலையை செய்யும் என்று அறிவிக்கிறது என்றால் அந்த காலகட்டத்தில் வாழ்கிற மனித கூட்டத்திற்கு உயிர் குறித்தான, உயிர்வாழ்வது குறித்தான பெரும் தயக்கமும் பயமும் இருக்கிறது என்று பொருள். அந்தவகையில் சமகாலத்தில் இருக்கிற அறிவியலும் ஆழமான வளர்ச்சியும் விரிவான பார்வையும் இருக்கிற மனிதனுக்கு அச்சத்திலிருந்து மரணம் குறித்து போதுமான புரிதலை, பயத்திலிருந்து ஏற்படுகிற கவலைகளை, தயக்கங்களை உடைத்துக் கொள்வதற்கான மருத்துவங்கள் இல்லை.

ALSO READ:HEALTH - PART 2 நலம் எனப்படுவது - பகுதி 2

ஒரு பெரும்பகுதியை பயன்பாட்டில் இருக்கிற மருத்துவம், உயிருக்கான உயிர்காக்கும் மருத்துவம் என்று தம்மை அறிவித்துக் கொள்கிற போது அதற்கு இணையாக மாற்று மருத்துவங்களும் கூட உயிர் காப்பது முதன்மையான நடவடிக்கை என்று தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த மருத்துவத்திற்கு இருக்கிற சிக்கலை நாம் நேர்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. மருத்துவங்கள் உயிர்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்றால் உயிர்காப்பு குறித்து மருத்துவங்கள் உதவி செய்கின்றன என்றால் இந்த மனித சமூகத்திற்கு கண்முன் இருக்கின்ற மருத்துவ தேவை மரணத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற தவிப்பு. மரணம் குறித்து தமக்குள் இருக்கிற அச்சம். இந்த மரணத்தில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து போராடுகிற ஒரு மனப்புரிதல் எப்போதும் மனிதர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வாய்ப்பில்லை.

ALSO READ:சொர்க்கம் - ஸ்வஸ்தம் நூல் அகம்

நாம் எப்போது வேண்டுமென்றாலும் இந்த உடலைவிட்டு, இந்த உலகத்தை விட்டு பிரிந்து போக முடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஒருவரால் நலமாக இருக்க முடியாது. மரணம் இன்று தள்ளிப் போடப்படுகிறது, நாளையும் தள்ளிப்போட முடியும், அதற்கு அடுத்த ஆண்டும் அதற்கு அடுத்த ஆண்டும் கூட மரணத்தை தள்ளிப்போட முடியும் என்று நம்புகிற ஒரு மனிதனுக்கு முகத்தில் நலம் பெற்ற உணர்வும் மகிழ்ச்சியும் தெரிவதைப் பார்க்க முடிகிறது. இந்த காட்சிகளுக்குள் இருக்கிற பொருந்தாமை, இந்த காட்சிகளுக்குள் இருக்கிற முரண், நலத்திற்கும் மனிதனுக்கும் இடையே உள்ள இடைவெளியை நாம் புரிந்துகொள்ள தடையாக இருக்கிறது.  அச்சம் கொள்கிற ஒரு மனிதன் மரணத்தை தள்ளிப்போட முடியும் என்று நம்புகிற ஒரு மனிதன் நலமாக இருப்பதற்கு நலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அதிக வாய்ப்பின்மை தான் இருக்கிறது. ஒரு மனிதன் தொடர்ந்து பயத்திற்குள் பயணிக்கும்போது ஒரு மனிதன் தொடர்ந்து அச்சத்தோடு தன் வாழ்வை நகர்த்துகிற போது மகிழ்ச்சியாக இருக்கிற எல்லா சம நிலைகளையும் தவற விடுகிற ஆபத்து இருக்கிறது. அந்த வகையில் பயத்தோடு இருப்பது என்பது நலத்திற்கு நேர் எதிரானது. நலத்தோடு இருக்கிற எவர் ஒருவரும் பயப்படுவதற்கு அவசியமில்லை. இன்னும் எளிமையாக சொல்ல முடியுமென்றால் பயம் இல்லாதவர்கள் நலத்தோடு இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

தொடரும்…

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...