Thursday, April 22, 2021

HEALTH - PART 2 நலம் எனப்படுவது - பகுதி 2

 

நலம் எனப்படுவது

www.swasthammadurai.com


நலம் என்பது குறித்து ஒரு புரிதலை இந்தச் சமூகம் பெற்றுக் கொள்ள வேண்டும், எல்லா மனிதர்களும் நலமுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எல்லா மனிதரும் நலமுடன் இருக்க வேண்டும் என்று எனக்குள் இருக்கிற என் விருப்பமானது எல்லா மனிதர்களுக்குள்ளும் நலத்திற்கான கூறு இருக்கிறது என்கிற புரிதலில் இருந்து நான் பெற்றுக் கொண்டது. ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் நலமாகவும் நிறைவாகவும் இருப்பதற்கு எல்லா சாத்தியங்களையும் இயற்கை வழங்கி இருக்கிறது என்பதை என்னால் பார்க்க முடிகிறது.

ALSO READ:HEALTH PART -1 நலம் எனப்படுவது...

அந்தவகையில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நலம் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதினால் எல்லா மனிதர்களும் நலமாக இருப்பதற்கு உரிய உரையாடலைச் செய்து பார்க்க வேண்டும் என்று என்னுள் அழுத்தம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவர் நலமாக வாழ்வதற்கான, உன்னதமாக வாழ்வதற்கான உந்துவிசை இருப்பதாக உளவியல் மாமேதை சிக்மன்ட் ப்ராய்ட் தனது ஆய்வுகளில் பதிவு செய்கிறார். சிக்மன் ப்ராய்டின் இந்த வாசகம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அடிப்படையான இயக்கம் அவனது உன்னதம் நோக்கிய செயல்பாடுதான் என்று சிக்மன்ட் ப்ராய்டு கூறுகிறார்.

ALSO READ:நலம்(health)

இந்த வாசகம் இன்றைய மனித சூழலுக்கு மிகுந்த பொருத்தமானது. இன்று எல்லோரும் உன்னதத்தைத் தேடி தமது வாழ்வை வடிவமைத்துக் கொள்கிற அறிவோடு இயங்கிக் கொண்டிருக்கிற சூழல். உன்னதத்திற்காக எவற்றையும் செய்து பார்க்கிற மனிதர்களை நாம் பார்க்க முடிகிறது. அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணிக்கிற இளைஞர்களும் யுவதிகளும் இந்த வாழ்க்கைக்குள் உன்னதத்தையும் பரவசத்தையும் தேடி இந்த வேகமான பயணத்தை மேற்கொள்கின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. வேகமாக வேலை பார்ப்பதும் பரபரப்பான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதும் கூட மேன்மையை நோக்கி, உன்னதத்தை நோக்கி என்று அந்த வேளையில் பங்கேற்பவர்கள் சொல்கிறார்கள்.

ALSO READ:உடலோடு பரிவாக இருங்கள்

மேன்மையும் உன்னதமும் மட்டுமே இந்த மனிதகுலத்திற்கு முதன்மையானதாக அவசியமானதாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு எல்லோரும் அதை நோக்கி இயங்குகிற ஒரு இயக்க முறையில் தமது வாழ்வை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்கிற காட்சிகளை நாம் பார்க்க முடிகிறது. இந்த இணைப்புகள் இந்த முயற்சிகள் இயல்பாகவே மெய்யாகவே உன்னதத்தை நோக்கி அவர்களுக்கு வழி காட்டுகிறதா? உன்னதத்திற்கு நெருக்கமாக அவர்களை உயர்த்துகிறதா? என்பது அவர்களது அனுபவத்தில் பார்க்க முடியவில்லை. வேகமான பயணங்களும் பரபரப்பான வேலை முறைகளும் மீண்டும் வேகத்தையும் மீண்டும் பரபரப்பையும் அவர்களுக்குள் விதைக்கிறது. உடலளவிலோ உளவியல் அடிப்படையிலோ அவர்களை அசவுகரியம் நிறைந்தவர்களாக, கவனக்குறைவு பெற்றவர்களாக, நோய்க் கூறுகள் அதிகம் உடையவர்களாக மாற்றிக் கொள்கிற தன்மையில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

நிஜமான உன்னதம் என்பது, நிஜமான மேன்மை என்பது ஒரு மனிதனுக்குள் எது? என்பதை ஆய்வு செய்ய வேண்டியது ஒருபுறம். மேலும் நிஜமான உன்னதத்தையும் நிஜமான மேன்மையையும் பெற்றுக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிற அறிவு சார்ந்த கடந்தகால அனுபவம் சார்ந்த ஒன்றைக் குறித்து பேசுவதும் அவசியமாகிறது. உன்னதத்தை நோக்கிய பயணமும் உன்னதம் குறித்தான செயல்பாடுகளும் நலம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. நலம், மேன்மை, உன்னதம் இவை எல்லாமும் மனிதகுலத்திற்கு இன்னும் சொல்லப் போனால் மனித குலத்திற்கு மட்டுமே இலகுவாக கிடைக்கக்கூடியது. மனிதர்கள் ஒவ்வொருவரும் அதனைப் புரிந்து கொள்ளவும் ருசித்துக் கொள்ளவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

                                                                                              தொடரும்…

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...