நலம் எனப்படுவது
நலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் நிறைவாக இருக்கிறோம் என்கிற உணர்வும் தான் நிறைவாக இருக்க வேண்டும் என்கிற விருப்பமும் சேர்ந்து இருக்கிற மன ஓட்டமாக புரிந்து கொள்ள முடியும். இன்றைய காலகட்டத்தில் நலம் பெற்றவர்கள் என்று யாரைக் குறிப்பிட முடியும் என்றால் தனக்கு நேர்ந்திருக்கிற உடல் அசௌகரியத்திலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக, தற்காலிகமான முறையில் ஒரு மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டு உடல்ரீதியான அசௌகரியக்குறைபாடை நீக்கிக் கொள்பவர்கள் தம்மை நலம் பெற்றவர்களாக கருதிக் கொள்கின்றனர். மருத்துவத் துறையைப் பொருத்தவரை நலத்திற்கு ஒரு விரிவான விளக்கமும் பொருள் கொள்ளுதலும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. நான் நலமாக இருக்கிறேன் என்று கருதுகிற யார் ஒருவரும் தன் தேவைக்காக வெளியில் இருக்கிற ஏதோ ஒன்றுடன் உறவு பாராட்ட முடியாது என்பது எனது பார்வை.
ALSO READ:Traditional Medicine - Introduction மரபு மருத்துவம் - அறிமுகம்
ஏனென்றால்
உங்களுக்கு ஒரு இரண்டு மணி நேரம் திரைப்படம் தேவைப்படுகிறது. அந்தத் திரைப்படத்தை பார்த்த
உடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக உங்களை பாவித்துக் கொள்கிறீர்கள் என்றால் திரைப்படத்தை
பார்ப்பதற்கு முன்பு நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று பொருள். திரைப்படத்திற்குப்
பிறகு உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. நலம் ஏற்பட்டிருக்கிறது என்று பொருள்.
இந்த இரண்டரை மணி நேர இடைவெளியில் நீங்கள் நலம் பெற்றுக் கொள்ளவும் தொடர்ந்து இந்த
நலத்தை தக்க வைத்துக் கொள்ளவும் மீண்டும் ஒரு இரண்டரை மணி நேரம் செலவு செய்கிற தொடர்
முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் உங்கள் அனுபவத்தில் இதுமாதிரியான இரண்டு மணிநேர
இடைவெளி ஒரு கொண்டாட்டம் உங்களுக்கு நலத்தைக் கொண்டுவந்து தந்ததில்லை. ஆனால் இந்த இரண்டு
மணி நேர நிகழ்விற்கு உங்களை உந்தித் தள்ளுகிற ஒரு அசௌகரியம் நீங்கள் காணமுடியும். ஒவ்வொரு
மனிதனுக்குள்ளும் இரண்டு மணி நேர திரைப்படமாக அது இருக்கக்கூடும். அல்லது பாடல் இசை
கேட்பதாக இருக்கக்கூடும். அல்லது புத்தகம் வாசிப்பதாக இருக்கக்கூடும். அல்லது உங்கள்
நண்பர்களோடு உறவாடுவதாக இருக்கக் கூடும்.
ALSO READ:Traditional Medicine - Introduction மரபு மருத்துவம் - அறிமுகம்
நீங்கள்
உங்களை ஏதோ ஒரு வகையில் பலப்படுத்திக்கொள்ள, நலப்படுத்திக்கொள்ள புதிய ஒன்றோடு சார்ந்திருக்கிற
ஏதாவது ஒரு வேலையை செய்யக்கூடும். இப்படிச் செய்வது உங்களுக்கு நலம் தரும் என்று நீங்கள்
நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் பார்க்கிறேன். உங்களது விருப்பப்படியே இந்த
செயல்பாடுகளும் இந்த சார்பு நிலைகளும் உங்களுக்கு தற்காலிகமாக நலத்தைக் கண்டு கொள்வதற்கு
உதவி செய்கின்றன என்பதையும் நீங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். உண்மையிலேயே நான் உங்களுக்குச்
சொல்ல விரும்புவது நலம் என்பது நீங்கள் சார்ந்திருக்க வேண்டும் என்று உங்களை உந்தித்
தள்ளுகிற ஒரு சிக்கலும் படபடப்பும் உடைகிற ஒன்றுக்குள் ஒளிந்திருப்பதாக நான் உங்களுக்கு
பரிந்துரைக்க விரும்புகிறேன். நீங்கள் அதைக் கண்டுகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.
ALSO READ:Traditional Medicine - Introduction மரபு மருத்துவம் - அறிமுகம்
நலம் என்பது
உங்களை சார்ந்திருக்கத் தூண்டுவது அல்ல. உங்கள் வெவ்வேறுவிதமான அனுபவங்களில் நீங்கள்
சார்ந்திருப்பதன் வழியாக, ஒரு திரைப்படத்தை கண்டுகளித்ததன் வழியாக, ஒரு முழு புத்தகத்தையும்
வாசித்து முடித்ததன் வழியாக, ஒரு கொண்டாட்டத்தில் பங்கேற்றதன் வழியாக எந்த ஒரு பேரின்பத்தையும்
முழுமையாக சுவைத்துப் பார்த்த அனுபவத்தை பெற்றிருக்க முடியாது. அப்படி என்றால் அந்தக்
குறிப்பிட்ட சார்பு நிகழ்வு உங்களை என்ன செய்தது? அது மீண்டும் ஒரு சார்பு நிலையை நோக்கி
உங்களைத் தூண்டி இருக்கக்கூடும். இசை கேட்டுக் கொண்டிருப்பவர் தொடர்ந்து இசை கேட்டுக்
கொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது. புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பவர் தொடர்ந்து
புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பதும் அதன் மீது தன் கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருப்பதும்
நடந்து கொண்டே இருக்கிறது. உறவு பாராட்டுபவர் உறவு பாராட்டிக் கொண்டு இருப்பதையும்
பார்க்க முடிகிறது. நீங்கள் சார்ந்திருக்கிற நிகழ்வு, புதிய சார்பு நிலையை உங்களுக்குள்
ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. மீண்டும் மீண்டும் அது நலமாக உங்களுக்கு உதவி செய்து
இருக்கிறதா? ஒரு நிறைவைத் தந்திருக்கிறதா? என்பது உங்கள் முன் இருக்கிற நிறைவில்லாத,
பதில் இல்லாத வினா. ஏனென்றால் நீங்கள் செய்கிற சார்பு நிலையில் நலம் எப்போதும் இருப்பதில்லை.
நலம் என்பது சார்புநிலை கடந்து வேறு ஒரு தளத்தில் பயணிப்பது.
தொடரும்…
No comments:
Post a Comment