யோகா
யோகா என்பது
ஒரு முழுமையான அறிவியல்.
யோகா மருத்துவத்துறையை சார்ந்ததா? இல்லையா? என்பதான
விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும் மனிதகுலத்திற்கு பதஞ்சலி அளித்த ஒரு மாபெரும் பரிசு
யோகா அறிவியல்.
யோகா அறிவியல் பொதுவாக தற்கால சமூகத்தில் வெறும் ஆசனமாகவே அறியப்பட்டு வருகிறது. இந்தந்த ஆசனங்கள் இந்தந்த நோய்களை தீர்க்க வல்லவை என்று தன்னளவில் ஒவ்வொரு யோகா ஆசிரியர்கள் தன் அனுபவப் பகிர்கதலாக இருக்கின்றன. அதனைத் தாண்டி இன்னும் ஆழமான பகுதியாகவே யோகா அறிவியல் இருக்கிறது. அப்படியானால் இது மருத்துவம் சார்ந்தது அல்ல என்றால் யோகா என்றால் என்ன? இது யாருக்கானது?
