Showing posts with label குளியல் நலம். Show all posts
Showing posts with label குளியல் நலம். Show all posts

Saturday, September 17, 2022

குளியல் நலம் - உரையாடல் - 3 - சிவ.கதிரவன்

 

                        குளியல் நலம் 

சோப்பு பயன்படுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஏன்?

இந்தக் கேள்வியை அதிக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக நான் பார்க்கிறேன். இதில் சோப்பு பயன்படுத்தினால் உடலில் என்ன மாற்றங்கள் வரும். வருகிற மாற்றங்கள் என்ன? என்பது முதன்மையானது அல்ல.

ஒரு மனிதனின் குளியலில் மட்டுமல்ல. அவன் மொத்த வாழ்க்கை முறையிலும் ஒன்றை பயன்படுத்துவதன் வழியாக அவன் என்ன நிலையை அடைகிறான்? என்ன நிலையில் தேக்கமுறுகிறான்? என்பது மிக முக்கியமான தேடல் மிகுந்த கேள்வி.

பயன்பாடு என்பது ஒரு மனிதனுக்கு மன அளவில் பெரும் சிக்கலை உருவாக்குகிற வடிவம். ஒன்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் வழியாக, தொடர்ந்து ஒன்றை பயன்படுத்தி தன் பணிகளை முடிக்கும் பழக்கம் இருக்கிற ஒருவருக்கு, அந்தப் பழக்கம் அவரை இயக்குவதாக மாறிவிடுகிறது. எந்த விதத்திலும் ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட வகையான திசையில் அமர்ந்து கொண்டு படிப்பது, உண்பது, உறங்குவது என்றெல்லாம் கூட தீர்மானித்து வைத்திருந்தால் அவர் உறங்குவதற்கும் உண்பதற்கும் அடிப்படையான சில வேலைகளை செய்வதற்கும் கூட அந்த திசையில் அமர வேண்டும் என்கிற மன வடிவம் முதன்மையாக வருகிறது. அதற்கு வாய்ப்பில்லை என்றால் அது கிட்டவில்லை என்றால் அதன்படி அவரால் செய்ய முடியவில்லை என்றால் அவர் குளிப்பதில், அவர் குடிப்பதில், அவர் உண்பதில், அவர் உறங்குவதில் கூட சிக்கல் மிகுந்தவராக மாறி போகிறார்.

குளியல் நலம் - உரையாடல் - 2 - சிவ.கதிரவன்

                                                 குளியல் நலம்

உடல் குளிர்ச்சி அடைய குளிக்கிறோம். மருத்துவரீதியாக சில நேரங்களில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க பரிந்துரை செய்கிறார்கள். இதைப் பற்றி கூறவும்.

குளியலைப் பொறுத்தவரை உடல் குளிர்ச்சியாவதற்காக குளிக்கிறோம் என்பது முதன்மையானது.

உடல் குளிர்ச்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு உரிய ஒன்றை நாம் புறத்திலிருந்து செய்வதாக இருக்கிற பரிந்துரை. உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். உடல் நலமாக இருக்க வேண்டும் என்கிற கோணத்தில் நீங்கள் எப்போது குளிர்ந்த நிலையில், இதமான நிலையில் இருக்க வேண்டும் என்று ஒரு தனி மனிதர் கருதுகிறாரோ அப்போது அவர் குளியல் மேற்கொள்ளலாம்.

குளியல் நலம் - உரையாடல் 1 - பகுதி - 3 - சிவ.கதிரவன்

                                                         குளியல் நலம்

www.swasthammadurai.com


இன்னும் உடலுக்குள் தெரியாத பகுதிகள் மீது சுத்தத்தை ஏற்படுத்துகிற மனித இன முயற்சியும் நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் சான்றாக பார்க்கவேண்டும் என்று சொன்னால் பல் தேய்த்து முடித்தவுடன் உங்கள் நாக்குகளை இரும்பு கம்பிகள் கொண்டு வழித்து எடுக்கிற நடைமுறை இன்றும் மனிதர்கள் மத்தியில் இருக்கின்றன. பல்தேய்த்து முடித்தவுடன் ஒரு வளைந்த இரும்புத் தகடை கையில் வைத்துக்கொண்டு நாக்கில் இருக்கிற சுவை மொட்டுக்களை சுரண்டி எறிகிற ஒரு வேலையை சுத்தத்தின் பெயராலேயே செய்துகொண்டு இருக்கிறோம்.

அதன் வழியாக என்ன படித்து கொண்டு இருக்கிறோம்? என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? என்கிற பார்வை நமக்கு இல்லை. பார்வை நிஜமாகவே இல்லை. இன்னும் சிலரை நீங்கள் பார்த்தீர்கள் என்று சொன்னால் உடல் முழுவதையும் குளித்துவிட்டு உடல் முழுவதும் நனைத்துவிட்டு உடல் முழுவதும் குளிப்பாட்டி விட்ட பின்பு கூட ஒரு மென்மையான பஞ்சு சுருளை காதுக்குள் வைத்து சுழற்றி எடுக்கிற சுத்தப்படுத்தும் முறையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். காதிற்குள் அவ்வளவு ஆழமாக சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? காது அழுக்காக இருந்தால் என்ன? என்கிற எந்த பிரக்ஞையும் இல்லாமல் எந்த சிந்தனையும் இல்லாமல் ஒரு நீளமான குச்சியில் பஞ்சு மொட்டுக்களை சுற்றிக்கொண்டு காதுக்குள் விட்டு அவற்றை சுழற்றி எடுக்கிற சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் நாம் சிக்கி இருக்கிறோம். உலண்டு கொண்டு இருக்கிறோம் என்பதையும் நான் பார்க்கிறேன். நாம் பார்க்கிறோம்.

Friday, September 16, 2022

குளியல் நலம் - உரையாடல் 1 - பகுதி - 2

                                      குளியல் நலம்

www.swasthammadurai.com


வாழ்வியல் எல்லா மருத்துவ சாத்தியங்களையும் நலத்திற்குரிய நுட்பங்களையும் குறியீடுகளையும் வைத்துக் கொண்டே இருக்கிறது. ஒரு மிகுந்த மகிழ்வான வாழ்வியல்.

ஒரு மனிதனின் அக வாழ்வை புற வாழ்வை இணைத்து பயணிக்கக்கூடிய மகிழ்வான வாழ்வியலில் இதுவரை கண்ட மருத்துவங்களின் நுட்பங்களும் இனி வரப்போகும் போகிற காலத்தில் உள்ளடக்கமாய் இருக்கிற மருத்துவ நுட்பங்கள் கூட அடங்கியிருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும்.

ஏனெனில் முழுமையான வாழ்வியல் நோக்கிய பயணமே ஒரு மனிதனுக்குரிய நலத்தை கொடுப்பதற்கு வாய்ப்புள்ள பகுதியாக இருக்கிறது. முழுமையான வாழ்வியலை நோக்கிய பயணத்திற்கு நீங்கள் மருத்துவத்திலிருந்து மருத்துவத்தை வாழ்வியலாக துவங்கினீர்கள் என்றால் எந்த மருத்துவத்தை நீங்கள் பற்றிக்கொண்டு இருக்கிறீர்களோ அந்த மருத்துவத்தின் விசாலத்தன்மையிலேயே உங்கள் வாழ்வியல் குறித்தான கருத்தாக்கங்கள் நிறைவு பெற்றுவிடும். அவை முழுமையானவை அல்ல.

குளியல் நலம் உரையாடல் ஒன்று - பகுதி 1

 

குளியல் நலம்

உரையாடல் ஒன்று

www.swasthammadurai.com


குளியல் நலம் என்கிற பொருள் குறித்து இன்றைய வகுப்பு நடைபெற இருக்கிறது.

மிக முக்கியமான உடல்நலம் குறித்த செயல்பாடுகளில் குளியல் என்பது உரையாடப்படுவதற்கு, பேசிப் பார்ப்பதற்கு அவசியம் இல்லாத நிலையில் இருக்கிற ஒன்றாக பார்க்கப்படுகிறது என்றாலும்கூட உடல் நலம் என்பது குளியல் நலத்தோடு மிக நெருங்கிய தொடர்புடையது என்று மருத்துவ பார்வையில் நாம் இந்த வகுப்பை செய்கிறோம்.

ஒவ்வொரு மனிதனும் அவனுக்குரிய உடல் நலத்தை எவ்வாறு பேணிக் கொள்வது என்பதற்கான விரிந்துபட்ட செயல்களும் செயல்பாடு குறித்தான விவரங்களும் செயல்பட்ட அனுபவங்களும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

அந்தவகையில் ஒரு தனி மனிதனின் நலம் குறித்த பார்வையில் குளியல் என்பது என்ன? குளியலுக்கு பின்னால் இருக்கிற வெவ்வேறு பார்வைகள் என்ன? நாம் என்று புரிந்து கொள்வதற்கு பேசிப் பார்ப்பதற்கு இந்த வகுப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நான் நினைக்கிறேன்.

பொறுத்தல் எனும் சீர்நிலைச் சாரம் - பகுதி 1 - சிவ கதிரவன்

பொறுத்தல் எனும் சீர்நிலைச் சாரம்             நா ம் இன்றைக்கு சீர்குலைவான ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சீர்குலைவு என்பது பரவிக் கொ...