குளியல் நலம்
வாழ்வியல் எல்லா மருத்துவ சாத்தியங்களையும் நலத்திற்குரிய நுட்பங்களையும் குறியீடுகளையும் வைத்துக் கொண்டே இருக்கிறது. ஒரு மிகுந்த மகிழ்வான வாழ்வியல்.
ஒரு மனிதனின் அக வாழ்வை புற
வாழ்வை இணைத்து பயணிக்கக்கூடிய மகிழ்வான வாழ்வியலில் இதுவரை கண்ட மருத்துவங்களின் நுட்பங்களும் இனி வரப்போகும் போகிற காலத்தில் உள்ளடக்கமாய் இருக்கிற மருத்துவ நுட்பங்கள் கூட அடங்கியிருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும்.
ஏனெனில் முழுமையான வாழ்வியல் நோக்கிய பயணமே ஒரு மனிதனுக்குரிய நலத்தை கொடுப்பதற்கு வாய்ப்புள்ள பகுதியாக இருக்கிறது. முழுமையான வாழ்வியலை நோக்கிய பயணத்திற்கு நீங்கள் மருத்துவத்திலிருந்து மருத்துவத்தை வாழ்வியலாக துவங்கினீர்கள் என்றால் எந்த மருத்துவத்தை நீங்கள் பற்றிக்கொண்டு இருக்கிறீர்களோ அந்த மருத்துவத்தின் விசாலத்தன்மையிலேயே உங்கள் வாழ்வியல் குறித்தான கருத்தாக்கங்கள் நிறைவு பெற்றுவிடும். அவை முழுமையானவை அல்ல.
பின்பற்றுகிற மருத்துவம் அதற்கு இணையான வேறு பரந்துபட்ட மருத்துவப் பார்வை எல்லாமும் சேர்ந்து ஒரு மனிதனை செம்மையாக்கும் வாழ்வியல் நோக்கத்திற்குள் ஒளிந்திருக்கிறது.
ஆக, ஒரு மனிதனின் நலம் குறித்து ஒரு மனிதன் குளிக்க வேண்டும் என்று முடிவு செய்தால் தன் குளியலை முடிவு செய்தால் தான் குளிப்பதற்கும் நலத்திற்கும்
தொடர்பு இருக்கிறது என்பதை ஆலோசித்தால் அவர் குளியலை மருத்துவ பரிந்துரையின்படி செய்யவேண்டும் என்கிற நிலையிலிருந்து வாழ்வியலின் அவசியத்தில் இருந்து வாழ்வியலின் புரிதலிலிருந்து செய்வதே சாலச்சிறந்தது.
குளியலை இன்று நாம் மருத்துவ பரிந்துரையாகவே பார்க்கிறோம் என்பதை நான் பார்க்கிறேன். அதற்குள் ஒரு ஆரோக்கியம், உடல்நலம் என்கிற மிகக்குறுகிய இலக்கே பரவலாக தெரிகிறது.
உண்மையிலேயே குளியல் என்பது என்ன? என்பது குறித்து ஒரு மனிதனின் மகிழ்ச்சி குறித்தான பார்வை என்பது உரையாடப்படாமலேயே இருக்கிறது என்பதையும் நான் பார்க்கிறேன்.
அடிப்படையில் நாம் ஏன் குளிக்கவேண்டும் என்று கேட்டு பார்க்கிறபோது முதல் செயல்பாடு பதிலுரையாக வருவது நாம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான். சுத்தமாக இருப்பது என்பது என்ன? என்று அந்த பதிலில் இருந்து வேறு ஒரு கேள்வியை நாம் எழுப்பினோம் என்றால் நான் எழுப்புகிறேன். சுத்தமாக இருப்பது என்பது என்ன? சுத்தமாக இருப்பது என்பது அழுக்கு இல்லாமல் இருப்பது. அழுக்கு இல்லாமல் இருப்பது என்பது என்ன? என்றால் மீண்டும் சுத்தமாக இருப்பது. இந்த சுத்தமாக இருப்பதும் அழுக்கு இல்லாமல் இருப்பதும் என்கிற இரண்டு வேறு எதிர்நிலை பதில்களாக நினைத்துக் கொள்கிற பதில்களைத் தவிர சுத்தத்திற்கும் அசுத்தத்திற்கும் வேறு வரையறைகளை நாம் பார்க்க முடியவில்லை.
ஆனாலும் மனம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே குளிக்கிறது. மனம் சுத்தமாக இருக்க வேண்டும் என்கிற கற்பனையிலேயே குளிக்கிறது. குளியலை சுத்தத்தின் பாற்பட்டே தேர்வு செய்கிறோம். சுத்தம் என்பது என்ன? என்று நாம் யோசிக்கிற போது சுத்தம் என்று
நாம் உரையாடலை தொடங்குகிற போதே நாம் மற்றொரு புறத்தில் அசுத்தம் என்பதை பிரித்துப் பார்க்கிறோம் என்கிற இருமை வந்துவிடுகிறது. நம் உடலில் வலது கை சுத்தமானது. இடதுகை
அசுத்தமானது. உலகம் முழுவதும் இப்படித்தான் இருக்கிறது. வலதுபுறம் சுத்தமானது. இடதுபுறம் அசுத்தமானது என்கிற கருத்தாக்கங்கள் இருக்கின்றன. இந்த கருத்தாக்கங்கள் எதார்த்தத்தில் இருக்கிற நம்முன் இருக்கிற நம் கூடவே இருக்கிற ஒன்றை, மாற்ற முடியாத ஒன்றை, பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றை புரிந்து கொள்வதற்கு பதிலாக முரண்பாட்டை உருவாக்குவதும் அந்த முரண்பாடின் மீது வேறுவேறு சிக்கலை தோற்றுவிப்பதுமான முயற்சியாகவே இருக்கிறது.
என் வலது கை சுத்தமாக இருக்கிறது.
எனவே நான் வலது கையால் உணவு உண்கிறேன் என்று நாம் மிக வழக்கமாக பேசிக்கொள்வோம். இடது கையில் உணவு உண்பவரை அவ்வளவு சுத்தமான நபராக நாம் பார்ப்பதில்லை. ஏனென்றால் இடது கை உணவு உண்பதற்கான
கை அல்ல. உடலை சுத்தப்படுத்துவதற்,கு பராமரித்து கொள்வதற்கான வேலையை செய்வதற்கு என்று நாம் பொருத்திப் பார்த்து பழகி வைத்திருக்கிறோம். வழக்கத்தில் வைத்திருக்கிறோம்.
அந்த வகையில் சுத்தம் என்பது நம் இரண்டு கைகளிலும் இரண்டும் ஒன்றுதான். ஒரு மனிதனினுடைய சுத்தம் குறித்து புரிந்து கொள்வதற்கு மிக நுட்பமான பார்வையோடு, விரிவான சிந்தனையோடு இவற்றை பேச வேண்டியிருக்கிறது. நீங்கள் சுத்தத்தை புரிந்து கொள்வதன் வழியாக மட்டுமே குளியலை புரிந்து கொள்ள முடியும். சுத்தம் என்பது பற்றி பிழையான பார்வையோடு இருப்போம் என்றால் குளியல் என்பது பிழையாகவே இருக்கும். மருத்துவத்தின் பெயராலேயே குளித்து ஏமாந்து போகிற செயல்பாட்டை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம்.
எனவே சுத்தத்தை புரிந்து கொள்வது என்பது மிக முக்கியமானது. ஒரு மனிதனுக்கு பிறக்கிற போது இரண்டு கைகளும் ஒரே வகையான தன்மையோடு தரத்தோடு செயல்படும் ஆற்றலோடே இருக்கிறது. ஒரு தாயின் கருவறையில் இருந்து ஒரு குழந்தை பிறக்கிற போது அந்த குழந்தையினுடைய இரண்டு கைகளும் சம முக்கியத்துவத்தோடே இருக்கின்றன. இரண்டு
கைகளுக்கும் ஒரே வகையான செயல்பாட்டு திறனே இருக்கின்றன. இரண்டு கைகளும் ஒரு வகைப்பட்ட தன்மையோடும் தரத்தோடுமே இருக்கின்றன. அந்த இரண்டு வேறு கைகளும் வேறுபட்ட கருத்தாக்கங்களோடு இல்லை. அந்த குழந்தை வளர்கிறது. அந்தக் குழந்தைக்கு உணவு உட்கொள்ள முடியும் என்கிற சுய முயற்சியும் ஆர்வமும் மேலெழுகிற போது இந்த சமூகம் அந்த குழந்தைக்கு ஒரு கையை சுத்தமானது என்றும் மற்றொரு கையை அசுத்தமானது என்றும் பரிந்துரைக்கிற வலியுறுத்துகிற ஒன்றின் வழியாகவே சுத்தம் பிறக்கிறது. இந்த பரிந்துரைக்கிற, வலியுறுத்துகிற சமூக கருத்தாக்கத்தில் இருந்தே சுத்தமும் அசுத்தமும் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் மட்டும் தான் உங்கள் உடலை நீங்கள் சுத்தத்திற்கு சுத்தத்திற்காக குளிக்கிறீர்கள் என்கிற பலகீனமான நலத்தில் இருந்து வெளியேற முடியும்.
நீங்கள் குளிப்பதால் சுத்தம் ஆகிவிடாது. நீங்கள் குளிப்பதால் அசுத்தம் நீங்கி விடாது. நீங்கள் உடலை தண்ணீர் கொண்டோ, எண்ணெய் கொண்டோ, உப்பு கொண்டோ, மண் கொண்டோ, நீராவி கொண்டோ பராமரித்துக் கொள்வதன் வழியாக உங்கள் உடல் சுத்தம் ஆகாது. உங்கள் வலது கையும் இடது கையும் சான்றாக வைத்துக் கொண்டு உங்கள் வலது கைக்கு மண்குளியல் செய்து, நீராவி குளியல் செய்து, வாழை இலை குளியல் செய்து, நல்லெண்ணெய் குளியல் செய்து இதே வேலையை இடது கைக்கும் செய்து இரண்டு கைகளையும் முழுமையான நீங்கள் விரும்புகிற மருத்துவ பரிந்துரையிலுள்ள எல்லா அம்சங்களிலும் தயார் செய்துகொண்டு நீங்கள் இரண்டு கைகளையும் பூரணமாக சுத்தம் செய்து விட்டேன் என்கிற நம்பிக்கையும் பலமும் வந்தபிறகு உங்கள் இடது கையால் சாப்பிட முடியுமா என்றால் உங்களால் இடது
கையால் சாப்பிட முடியாது. ஏனென்றால் இடது கையிலன் சுத்தம் என்பது உங்கள் கையின் புற வடிவம் பற்றிய, புறநிலை பற்றிய அபிப்பிராயம் அல்ல. இடது
கையில் அசுத்தம் என்பதும் வலது கையில் சுத்தம் என்பதும் உங்கள் புறவழி செயல்பாடின் புறவழி தோற்றத்தின் காரணமாக வந்தவை அல்ல.
உங்கள் சுத்தம் என்பது உங்கள் மன அளவில் தேங்கி
இருக்கிற வேறு ஒரு பகுதி. மன அளவில் எவையெல்லாம்
சுத்தம் என்றும் எவையெல்லாம் அசுத்தம் என்றும் தீர்மானித்து வைத்திருக்கிற முன்முடிவுகளே உங்கள் சுத்தம் என்பதை தீர்மானிக்கின்றன என்கிற பரிந்துரையில் இருந்து, என்கிற உண்மையிலிருந்து அதன் மீதான அனுபவத்திலிருந்து நீங்கள் சுத்தம் குறித்து புதிய முடிவை புதிய புரிதலை பெற்றுக்கொள்வீர்கள் என்று சொன்னால் உங்கள் குளியலின் தரம் இன்னும் செம்மையாக மாறிப்போகும் என்று நான் திருத்தமாக சொல்லமுடியும்.
வலது கை என்பது இடது
கை என்பது நான் ஒரு சுத்த குறியீட்டை விளக்குவதற்காக உங்களோடு பகிர்ந்துகொண்ட சான்று. நீங்கள் சுத்தம் என்பது குறித்து கையில் தொடங்கி ஆடை, பற்கள், கண், மூக்கு என்று உடலில் இருக்கிற எல்லா உடல் அவயங்களும் சுத்தத்திற்கு பாடாய்பட்டுக் கொண்டு இருக்கின்றன உங்களிடத்தில்.
...தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment