Saturday, September 17, 2022

குளியல் நலம் - உரையாடல் 1 - பகுதி - 3 - சிவ.கதிரவன்

                                                         குளியல் நலம்

www.swasthammadurai.com


இன்னும் உடலுக்குள் தெரியாத பகுதிகள் மீது சுத்தத்தை ஏற்படுத்துகிற மனித இன முயற்சியும் நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் சான்றாக பார்க்கவேண்டும் என்று சொன்னால் பல் தேய்த்து முடித்தவுடன் உங்கள் நாக்குகளை இரும்பு கம்பிகள் கொண்டு வழித்து எடுக்கிற நடைமுறை இன்றும் மனிதர்கள் மத்தியில் இருக்கின்றன. பல்தேய்த்து முடித்தவுடன் ஒரு வளைந்த இரும்புத் தகடை கையில் வைத்துக்கொண்டு நாக்கில் இருக்கிற சுவை மொட்டுக்களை சுரண்டி எறிகிற ஒரு வேலையை சுத்தத்தின் பெயராலேயே செய்துகொண்டு இருக்கிறோம்.

அதன் வழியாக என்ன படித்து கொண்டு இருக்கிறோம்? என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? என்கிற பார்வை நமக்கு இல்லை. பார்வை நிஜமாகவே இல்லை. இன்னும் சிலரை நீங்கள் பார்த்தீர்கள் என்று சொன்னால் உடல் முழுவதையும் குளித்துவிட்டு உடல் முழுவதும் நனைத்துவிட்டு உடல் முழுவதும் குளிப்பாட்டி விட்ட பின்பு கூட ஒரு மென்மையான பஞ்சு சுருளை காதுக்குள் வைத்து சுழற்றி எடுக்கிற சுத்தப்படுத்தும் முறையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். காதிற்குள் அவ்வளவு ஆழமாக சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? காது அழுக்காக இருந்தால் என்ன? என்கிற எந்த பிரக்ஞையும் இல்லாமல் எந்த சிந்தனையும் இல்லாமல் ஒரு நீளமான குச்சியில் பஞ்சு மொட்டுக்களை சுற்றிக்கொண்டு காதுக்குள் விட்டு அவற்றை சுழற்றி எடுக்கிற சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் நாம் சிக்கி இருக்கிறோம். உலண்டு கொண்டு இருக்கிறோம் என்பதையும் நான் பார்க்கிறேன். நாம் பார்க்கிறோம்.

காது சுத்தமாக இருப்பதன் வழியாக என்ன செய்யப்போகிறோம்? காது வழியாக சாப்பிட போகிறோமா? காது சாப்பிடுகிற பாதை. அதன் வழியாக சுத்தமான பாதையாக இருக்கிற போது அதன் வழியாக சாப்பிடுகிற உணவு சத்தான உணவாக, முழு சத்தான உணவாக எனக்கு கிடைக்கும் என்று ஏதாவது மருத்துவ குறிப்புகள் இருக்கிறதா? எல்லாமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்கிற மன பதற்றத்திலிருந்து இந்த சுத்தங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. சுத்தங்களின் கருத்தாக்கங்கள் நம்மை இயக்கிக் கொண்டு இருக்கின்றன. நம்மை இயக்கிக் கொண்டு இருக்கிற சுத்த கருத்தாக்கங்கள் நம்மில் இருந்து விடுதலை பெறுவதற்கு உரிய எல்லா சாத்தியங்களையும் நாம் நம் முன் முடிவிலிருந்து விடுதலை பெறுவதற்கான எல்லா சாத்தியங்களையும் தடை செய்து கொண்டிருக்கிற மிக முக்கியமான முன்முடிவு சுத்தம் பற்றிய கருத்தாக்கம்.

நாம் சுத்தமாக இருக்க வேண்டும். நாம் சுத்தமாக செய்ய வேண்டும். சுத்தமாக செய்வதும் சுத்தமாக இருப்பதும் புறவயப்பட்டது அல்ல. அக வயமாக உருவாகி இருக்கிற சமூகம் திரும்பத் திரும்ப சொல்லி வைத்திருக்கிற, குழப்பி வைத்திருக்கிற சிக்கலாக்கி வைத்திருக்கிற மிக எளிய கருத்தாக்கம். எளிய கருத்து. எளியே சொல்லாடல்.

ஒரு மனிதன் சுத்தமாக இல்லாதபோது என்ன ஆகிவிடப் போகிறது? என்று ஒரு தர்க்கமாக பேசிப் பார்த்தோம் என்று சொன்னால் நமது உரையாடலில் ஒரு தர்க்கமாக சுத்தமாக இருந்த மனிதன் இந்த உலகில் வாழ்வில் மரணத்தையே சந்திக்க மாட்டார் என்று ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? சுத்தமாகவே சாப்பிடுவார், சுத்தமாகவே உறங்குவார், சுத்தமாகவே குளிப்பார், சுத்தமாகவே பேசுவார், சுத்தமாகவே எல்லாம் செய்வார். அவர் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? ஏதாவது நபர்கள் இருக்கிறார்களா? அசுத்தமாகவே இந்த குழந்தை இருக்கிறது. பிறந்த உடன் செத்தே பிறந்தது என்று ஏதும் இருக்கிறதா? அப்படி எதுவும் கிடையாது. சுத்தத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் சம்பந்தம் கிடையாது. சுத்தத்திற்கும் நலத்திற்கும் சம்பந்தம் கிடையாது ஏனென்றால் சுத்தம் என்பது மனம் வைத்திருக்கிற மகத்தான போதைகளில் ஒன்று.

போதைக்கும் வாழ்விற்கும் சம்பந்தம் கிடையாது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் சுத்தம் என்கிற போதைக்கும் சுத்தம் என்கிற கருத்தியலில் இருக்கிற போதைத் தன்மைக்கும் வாழ்வில் வாழ்வதற்குரிய நிஜத்திற்கும் சம்பந்தம் கிடையாது. போதைகள் பற்றிய கருத்தாக்கமும் போதைகள் பற்றிய அனுபவமும் நடைமுறையில் இருந்து நாம் வேறொரு உலகில் வாழ்வதற்கான கற்பனைகளை தந்துகொண்டே இருக்கும். அப்படியான போதைவஸ்துகளில் சுத்தம் பற்றிய முன் முடிவும் மிக முக்கியமானது.

இயல்பாக குளிப்பதற்கு என்ன செய்வது? என்று நாம் செல்வதற்கு முன் சுத்தமாக குளிப்பதற்கு உரிய சிக்கலைத் தீர்த்துக் கொண்டால் மட்டும் தான் இயல்பாக குளிப்பதை பற்றி நாம் உரையாடுவதற்கு சாத்தியம் இருக்கிறது என்று நாம் தீர்க்கமாக நம்புகிறேன்.

இந்த சமூகம் இயல்பாக குளிப்பதை அனுமதிப்பதே இல்லை. மீன்கள் இயல்பாக குளிக்கின்றன. எருமை மாடுகள் இயல்பாக குளிக்கின்றன. சகதியில் குளிக்கின்றன. மனிதன் முழுவதும் புறக்கணித்த மனிதன் தொடவே தொடாத மனிதன் நெருங்கியே செல்ல முடியாத கருப்பும் அடர்த்தியும் அழுக்கும் நிறைந்த சகதியில் மாடுகள் குளித்துக் கரையேறுவதை நீங்கள் இன்றும் கிராமங்களில் பார்க்க முடியும். இந்திய கிராமங்களில். ஆட்டுக்குட்டிகள் குளிக்கின்றன. நாய்க் குட்டிகள் குளிக்கின்றன. எல்லா விலங்குகளும் குளிக்கின்றன. மழை நேரங்களில் எல்லா தாவரங்களும் குளிக்கின்றன. எல்லாத் தாவரங்களுக்கும் ஒன்றாக பெய்கிற மழையில் எல்லா விலங்குகளுக்கும் ஒன்றாக பெய்கிற மழையில் தமது வாழ்வை தமது உடலை முழுமையாக குளிப்பதன் வழியாக சுத்தப் படுத்திக் கொள்ள முடியும் என்று எந்த விலங்கும் மல்லுக்கட்டிக் கொண்டு எந்த தாவரமும் முண்டியடித்துக் கொண்டு தன்னை சுத்தப்படுத்திக் கொள்வது இல்லை.

சுத்தமாக இருப்பதற்கும் வாழ்வதற்கும் நலமாக வாழ்வதற்கும் முழுவதும் சம்மந்தம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுத்தம் என்பது வேறு. வாழ்வதென்பது வேறு. சுத்தம் என்பது உங்கள் மனவியல் கருத்தாக்கம். சுத்தம் என்பது உங்களது மனம் குறித்த மனம் வைத்திருக்கிற கருத்து என்கிற நிலையிலிருந்து நாம் இவற்றை புரிந்து கொள்ள வேண்டும். மனம் குறித்த உரையாடலை பார்த்தால் மட்டுமே சுத்தம் குறித்து நாம் ஏதாவது பேச முடியும். சுத்தத்திற்கு மிகுந்த சிக்கலான பகுதிகள் இருக்கின்றன. நலம் குறித்து சுத்தத்திற்கு எதுவும் தெரியாது. சுத்தமாய் இருப்பதற்கும் நலமாய் இருப்பதற்கும் தொடர்பே கிடையாது.

நோயாளிகள் எவ்வாறு குளிக்கவேண்டும் என்று மருத்துவம் பரிந்துரைக்கிறது. அது வாழ்வியல் சார்ந்த மருத்துவம். அது வாழ்வியலை வைத்திருக்கிறது. வாழ்வியலுக்குள் ஒரு மருத்துவம் இருக்கிறது அந்த மருத்துவத்தில் நோய் வாய்ப்பட்ட காலங்களில் எவ்வாறு ஒரு மனிதன் குளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதன் வழியாக அவன் குளித்தால் தொடர்ந்து நோய் வராமல் இருப்பதற்கான சாத்தியம் இருக்கிறது என்பது பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு மரபு மருத்துவங்களில் குளியல் முறை பரிந்துரைகளாக அடுக்கப்பட்டிருக்கின்றன இவ்வாறான குளியல் முறை மரபு மருத்துவங்களில் அடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்வதற்கு மருத்துவம் என்பதை தூக்கி வைத்து விட்டு மருத்துவம் என்பதை கடந்து வாழ்வியலின் வழியாக நாம் குளியலை பார்க்க வேண்டும்.

தமிழில்சனி நீராடு’ என்று ஒரு அவ்வை தனிப்பாடல் இருக்கிறது  முது கவிஞர் அவ்வை பிராட்டி எழுதிய சொல் அது. சனி நீராடு என்பதை பின்னாளில் மொழிபெயர்த்தவட்கள் பிழையாக மொழி பெயர்த்திருக்கிறார்கள் என்று எனக்கு ஒரு பார்வை உண்டு. சனிக்கிழமை எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும் என்று. கிருத்தவர்கள் எவ்வாறு குளிப்பார்கள்? யூதர்கள் எவ்வாறு குளிப்பார்கள்? சனி நீராடு என்பது தமிழ்ச்சொல். உலகம் முழுவதும் ஒரு மனிதன் உன்னதமாக இருப்பதற்கு அக்கறைப்பட்ட ஒரு சமூக தமிழ் சமூகத்தில் வந்த ஒரு தமிழ்ச் சொல். அது ஒரு பரிந்துரை. சனி நீராடினால் என்ன? சனி நீராடினால் மகிழ்வாக இருக்கலாம். நன்கு உடல் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று எளிமையான உதாரணங்களை வைத்துக் கொண்டாலும்கூட சனி நீராடு என்று ஒரு தமிழ் கவிஞர் பாடியிருக்கிறார். அவர் உலகம் முழுமைக்குமான பாடியவர். உலகம் முழுமைக்கும் பாடிய ஒரு கவிஞர் சனி நீராடு என்று பாடினால் சனிக்கிழமை தோறும் என்னை தேய்த்து குளிக்க வேண்டும் என்று நாம் பொருள் கொண்டால் அதன் வழியாக நாம் கற்றுக் கொள்வது என்ன?

கனடாவில் இருக்கிற ஒரு மனிதன் சனி நீராடுவது எவ்வாறு? யூத இனத்தைச் சார்ந்த ஒரு மனிதன் சனி நீராடுவது எவ்வாறு? சைனாவில் இருப்பவர்களுக்கு சனியும் எண்ணையும் தொடர்பு இருக்கிறது என்பது தெரியவே செய்யாது. அவர்கள் வாழவே முடியாதா? இப்படி பல கேள்விகள் நமது மொழிபெயர்ப்பு பிழையின் காரணமாக வந்து விழுகின்றன. இவ்வாறுதான் இலக்கியங்களையும் மருத்துவத்தையும் இந்த மனித சமூகம் பிழையாகப் புரிந்து வைத்துக் கொண்டு பரிந்துரையாக மாற்றித் திணிக்கிற கேடு நடக்கிறது.

எனக்கு என ஆசிரியர் நடத்தியது, சொல்லிக் கொடுத்தது நான் சிறுவயதாக இருந்தபோது சனி என்பது குளிர்ச்சி. இரண்டு விதமாக இந்த பாடலை புரிந்து கொள்ள வேண்டுமென என் ஆசிரியர் எனக்கு கற்றுக் கொடுத்தார். சனி என்பது குளிர்ச்சி. குளிர்ச்சிக்காக நீராடு என்கிற பொருளில் அந்தப்பாடல் இயற்றப்பட்டிருக்கும். குளிர்ந்த நீரில் நீராடு என்ற பொருளில் அந்தப்பாடல் இயற்றப்பட்டிருக்கும். இது உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். உடல் குளிர்ச்சிக்காக நீராடு என்பது குளியலின் அவசியம். என் உடல் சூடாக இருக்கிறது. எனக்கு குளிர்ச்சி தேவைப்படுகிறது என்று ஒரு மனிதனோ மிருகமோ தாவரமோ இன்னபிற ஜீவராசியோ கருதும் என்றால் தன் உடலை குளிர்ச்சியாக்கி கொள்வதற்கு தன் சூடை தனித்துக் கொள்வதற்கு ஒரு குளிர்ந்த தேடலை அந்த உயிர் விரும்பும் என்கிற பார்வையோடு இந்த பாடலை அந்த கவிஞர் இயற்றியிருக்கிறார் என என் ஆசிரியர் எனக்கு சொல்லி கொடுத்தது. இது உலகம் முழுவதும் இன்றும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது என்பதை நீங்களும் பார்க்க முடியும்.

பிழையான பொருளில் இருப்பவற்றை புறந்தள்ளிவிட்டு மெய்யானப் பொருளில் ஒன்றைப் புரிந்து கொள்வதன் வழியாக நாம் இன்னும் ஆழமான விரிவான வளமான மகிழ்வான வாழ்வை வாழ முடியும் என்று நான் நம்புகிறவன்.

ஆக, குளியல் என்பது தமிழ் மூதாட்டி சொன்னதுபோல குளிர்ந்த தேவைக்காக குளிப்பது அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பது. இரண்டும் பொருந்தும். சீனாவில் உள்ளவர்களுக்கு சாத்தியம். யூதர்களுக்கு சாத்தியம். மின்சாரமும் விளக்கும் இல்லாத மலைக்காடுகளில் வாழ்கிற இனக்குழுக்களுக்கு சாத்தியம். இந்தவகையில் நாம் செய்வது என்ன? செய்யப்போவது என்ன? குளியல் குறித்து நாம் பார்ப்பது என்ன? என்கிற வேறு தளத்தில் வேறு புரிதலில் குளியல் குறித்து நாம் ஏதாவது செய்ய வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் புரிதல் உங்களை குளிர்விப்பதற்காக நாம் குளியலை மேற்கொள்கிறோம் என்று இருக்கும் என்றால் அது சரியானது.

உங்கள் பகுதி வெப்பமாக இருக்கும். உங்களைச் சுற்றி வெப்பம் நிலவுகிறது. இந்த வெப்பத்தை சமன் செய்து கொள்வதற்காக உங்கள் உடல் தேவையில் இருந்து உடல் அனுபவத்திலிருந்து உள்ளுணர்வில் இருந்து குளிர்ந்த நீரை நான் தேர்வு செய்து குளிக்கிறேன் என்றால் உங்கள் குளியல் சரியானது. குளியல் நலம் தரக்கூடியது. எப்போது என்றால் வாழ்வியலில் இருந்து நீங்கள் குளியலை துவங்க வேண்டும். மருத்துவ பரிந்துரையில் இருந்து துவங்குகிற போது குளியல் நலத்திற்குரியதாக இருப்பதில்லை. அது முடிவாக மாறி இலக்கணமாக மாறி, பெரும் சுமையாக மாறி குளிக்க வில்லை என்றால் குற்ற உணர்வு என்கிற அளவிற்கு உங்களுக்கு குளியல் தொந்தரவு செய்யக்கூடிய வேறொரு தளத்திற்கு வேறொரு மனநிலைக்கு, வேறொரு சிக்கலுக்கு நகர்த்திக் கொண்டிருக்கிறது என்பதை பார்த்த அடிப்படையில் இந்த வகுப்பில் குளியல் என்பது உங்கள் தேவையிலிருந்து அமைய வேண்டும். உங்கள் தேவைக்காக அமைய வேண்டும். உங்கள் தேவையும் உங்கள் தேவைக்கான செயல்பாடும் மகிழ்வான வாழ்வியலாக இருக்கவேண்டுமென்று இந்த செய்தியை புரிந்துகொள்ள வேண்டும்.

தொடர்ந்து குளியல் குறித்து பேசுவோம்

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...