குளியல் நலம்
உடல் குளிர்ச்சி அடைய குளிக்கிறோம். மருத்துவரீதியாக சில நேரங்களில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க பரிந்துரை செய்கிறார்கள். இதைப் பற்றி கூறவும்.
குளியலைப் பொறுத்தவரை உடல் குளிர்ச்சியாவதற்காக குளிக்கிறோம் என்பது முதன்மையானது.
உடல் குளிர்ச்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு உரிய ஒன்றை நாம் புறத்திலிருந்து செய்வதாக இருக்கிற பரிந்துரை. உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். உடல் நலமாக இருக்க வேண்டும் என்கிற கோணத்தில் நீங்கள் எப்போது குளிர்ந்த நிலையில், இதமான நிலையில் இருக்க வேண்டும் என்று ஒரு தனி மனிதர் கருதுகிறாரோ அப்போது அவர் குளியல் மேற்கொள்ளலாம்.
மருத்துவ ரீதியாக சில நேரங்களில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க பரிந்துரைக்கிறார்கள் என்று இதற்குள் வேறு ஒரு கேள்வியை நாம் கேட்கிற போது மரபார்ந்த மருத்துவங்களில் ஒத்தடம், தைலங்கள் பயன்பாடு, ரசாயன மற்றும் மூலிகை முடிச்சுகளின் பயன்பாடு இவை முடிந்த பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் உடலை நனைக்க வேண்டும் என்று பரிந்துரை சொல்வதுண்டு. இதற்கான அடிப்படை காரணம் என்பது மருத்துவ ரீதியான காரணம் மட்டுமே. அந்த உடல் அசவுகரியமாக இருக்கிற நேரத்தில் அந்த உடலுக்கு வெளிப்புறமாக தடவல் முறையிலேயோ அழுத்தம் தரும் முறையிலேயோ இன்னபிற மரபார்ந்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயோ அவருக்கு பற்று இடுதல், ஒத்தடம் இடுதல்,
மூலிகைப் பூச்சி பூசுதல் என்கிற வெவ்வேறு வகைப்பட்ட சிகிச்சை முறைகள் நிறைவு பெற்ற பின்பு அந்த சிகிச்சை முறையினுடைய தொடர் செயல்பாடாக வெதுவெதுப்பான தண்ணீரை பரிந்துரைப்பது மருத்துவரீதியான பரிந்துரை.
மருத்துவரீதியான காரணங்கள் என்று வருகிறபோது அந்த தனிநபர் எவ்வகையான நோய்க்கு அவர் அந்த மருத்துவரீதியான பரிந்துரையை தனக்குள் மேற்கொள்கிறார் என்பது முதன்மையானது. எல்லா வகையான ஒத்தடங்களுக்கும் பற்று போடுதலுக்கும் வெளி பூச்சுகளுக்கும் வெதுவெதுப்பான தண்ணீரை குளிப்பதற்கு பரிந்துரை செய்வதில்லை. ஒரு குறிப்பிட்ட நோய்க்கு, குறிப்பிட்ட கால நேரத்தில், குறிப்பிட்ட அளவு எண்ணையோ, தைலமோ, மூலிகை ஒத்தடமோ தரப்படுகிற போது அதன் தொடர் நிகழ்வாக குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரை பரிந்துரை செய்கிறார்கள்.
குளியல் என்பது மருத்துவம் என்பதற்கு முன்பே மருத்துவத்தை நாம் மேற்கொள்ளும் முன்பே குளியலை எவ்வாறு பார்க்கவேண்டும் என்று நான் உங்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன்.
குளியல் என்பது மருத்துவத்தோடு தொடர்புடையது அல்ல. மருத்துவத்தோடு தொடர்பு கொள்வது நலம் ஒருவருக்கு விளைய வேண்டும் என்கிற தளத்தில் மட்டுமே அவ்வாறான பார்வையோடு நாம் பார்க்கமுடியும். மருத்துவத்தோடு தொடர்பு கொள்வதற்கு நீங்கள் மருந்து உண்பதுபோல, நீங்கள் ஒத்தடம் மேற்கொள்வது போல, தைலங்களை பூசிக்கொள்வது போல, இரசாயன அல்லது மூலிகை சாறுகள் குறித்தான உள் மருந்துகளை எடுத்துக் கொள்வது போல மருத்துவ பரிந்துரையின் பெயரில் குளிப்பது என்பது ஒரு உடலுக்கான ஓய்வு நடவடிக்கை.
ஆனால் ஒரு மனிதன் குளிக்க வேண்டும் என்கிற அம்மனிதனின் விருப்பமும் அம்மனிதனுக்கு முன்னால் இருக்கிற சாத்தியமும் வாய்ப்புகளும் குளியலை மருத்துவ தளத்திலிருந்து
வேறொரு கோணத்தில் பார்க்க வேண்டுமென்று வலியுறுத்துவதாக நான் பார்க்கிறேன்.
குளியல் என்பது நலம் தொடர்பான மிக முக்கியமான செயல்பாடு. ஒரு மனிதன் தான் நலமாக இருக்க வேண்டும் என்று கருதுகிற நேரத்தில், தான் நலமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிற நேரத்தில் அவனுக்கான குளியல் முறையை அவன் தேர்வு செய்து கொள்ள முடியும். தான் நலமாக இருக்க வேண்டும் என்பதற்கு அவர் மரத்தடி ஓய்வை விரும்பலாம். இளம் காலை, இளம் மாலை நேரத்து வெப்பத்தை விரும்பலாம். அதைப்போல குளியலையும் விரும்பலாம்.
ஆனால் மருத்துவரீதியான பரிந்துரைக்கு உட்படாத குளியல் முறை இது. மருத்துவத்திற்குள் நீரைக் கொதிக்க வைத்து மூலிகையை கொதிக்கவைத்து எண்ணய், நெய்களை கொதிக்க வைத்து, ரசாயனங்களை கொதிக்க வைத்து அவற்றை கொதிநிலையில் வைத்துக்கொண்டே அவற்றோடு தண்ணீரை இணைத்து நோயுற்றவர்களுக்கு உடலை கழுவும் மருத்துவ சிகிச்சை முறைகள் இருக்கின்றன. இவ்வகையான குளியல் முறை என்பது முழுக்க மனிதனின் குளியல் முறைக்கு மாற்றானது. தனி
மனிதனின் தேவையினுடைய
குளியல் கண்ணோட்டத்திற்கு மாற்றானது.
குளியல் என்பது வெறுமனே மனிதன் தான் நலமாக இருக்க வேண்டும் என்று எந்த ஒன்றையும் தேர்வு செய்ய முடியும். அவ்வாறு குளியலையும் தேர்வு செய்ய முடியும்.
…தொடர்ந்து பேசுவோம்…
No comments:
Post a Comment