Showing posts with label Acupuncture. Show all posts
Showing posts with label Acupuncture. Show all posts

Wednesday, October 20, 2021

ENERGY / ஆற்றல்

 

ஆற்றல்

www.swasthammadurai.com


நாம் அக்குபங்சரினுடைய முதன்மையான பகுதியில் உரையாடிக் கொண்டு இருக்கிறோம். ஒரு மனிதனுக்குள் அக்குபங்சர் எவ்வாறு வேலை செய்கிறது? அக்குபங்சரில் இருக்கிற எத்தன்மை ஒரு மனிதனை குணப்படுத்துகிறது? என்கிற ஒரு தளத்தில் நாம் பாடங்களை கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

ஒரு மனிதனுக்கு நோய் ஏற்படுகிறது. அந்த மனிதனுக்கு ஏற்பட்டிருக்கிற நோயை ஒரு மருத்துவம் எப்படி பார்க்கக்கூடும் என்றால் அந்த மனிதனுக்கு எந்த நோய் ஏற்பட்டிருக்கிறது? எந்த வகையான நோயில் அவர் பீடித்து இருக்கிறார்? எந்த வகையான நோய் அவருக்குள் வந்திருக்கிறது? அந்த நோயைத் தீர்ப்பதற்கு வழி என்ன? என்று பார்க்கிற வழக்கம் சமகாலத்தில் இருக்கிற மருத்துவத்தில் காணக்கிடைக்கின்றன.

அக்குபங்சர் அந்த நோயை அப்படிப் பார்ப்பதில்லை. அந்த நோய்க்கு காரணமாக இருக்கிற ஆற்றல் பற்றாக்குறையை அக்குபங்சர் பார்க்கிறது.

ACUPUNCTURE CLASSES / அக்குபங்சர் - காத்திருப்பு

 

அக்குபங்சர் - காத்திருப்பு

www.swasthammadurai.com


 இன்றைய வகுப்பில் நாம் பார்க்கவிருப்பது அக்குபங்சர் மருத்துவம் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம்.

அக்குபங்சர் மருத்துவம் ஒரு கலை. அக்குபங்சர் மருத்துவம் ஒரு மருத்துவம் என்கிற நிலைக்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிற ஒரு கலை.

இது முழுக்க ஆற்றல் சார்ந்தது. ஆற்றலை புரிந்து கொள்வதற்கும் ஆற்றலை கற்றுக் கொள்வதற்கும் ஒரு புதிய மாணவனின் அக்கறையும் துடிப்பும் இந்த அக்குபங்சரை பார்ப்பதற்குரிய மருத்துவமாக மாற்றுவதற்கு வழிசெய்கிறது. நீங்கள் ஆற்றல் குறித்து ஏதாவது உங்களுக்கு தெரிந்திருந்தால் உங்களால் எளிமையாக அக்குபங்சரை. கற்றுக்கொள்ள முடியும்.

ACUPUNCTURE CLASSES / முன்முடிவில்லாமல் கற்பது

 

முன்முடிவில்லாமல் கற்பது

www.swasthammadurai.com


முடிவுகள் இல்லாமல் அக்குபங்சர் உள்ளிட்ட எல்லா மருத்துவங்களையும் நீங்கள் கற்க வேண்டுமென்று நான் சென்ற வகுப்பில் உங்களோடு பகிர்ந்து கொண்டேன். நீங்கள் அத்தகைய மனநிலையோடு, தயாரிப்போடு வந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

ஒரு மருத்துவத்தை குறிப்பாக அக்குபங்சர் போன்ற ஒரு மரபான மருத்துவத்தை நீங்கள் கற்கிற போது இந்த மருத்துவங்கள் எவ்வாறு வேலை செய்யும்? என்று கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி கேள்விகள் எழுவது தான் சரியானதும் கூட என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கு அப்படியான கேள்விகள் எழுவதற்கு காரணமாக இருக்கிற எல்லா வாய்ப்புகளையும் நீங்கள் எந்த யோசனையும் இல்லாமல் வெளிப்படுத்த வேண்டும். கேள்விகளை உங்களுக்குள் நிறைய உருவாக்க வேண்டும், கேள்விகளை கேட்க வேண்டும் என்று நான் உங்களுக்கு வரவேற்பு கொடுக்கிறேன்.  

ACUPUNCTURE CLASSES / அக்குபங்சரினுடைய தனித்தன்மை

 

அக்குபங்சரினுடைய தனித்தன்மை

www.swasthammadurai.com


அக்குபங்சர் மருத்துவம் பற்றிய ஒரு விரிவான பார்வையை, அக்குபங்சர் மருத்துவம் குறித்த ஒரு தொடர் உரையாடலை நடத்தும் முகமாக இந்த வகுப்பு துவங்குகிறது.

இதுவரை நீங்கள் வெவ்வேறு வகைப்பட்ட, அக்குபஞ்சரை விரிவாகப் பேசுகிற, அக்குபங்சர் பள்ளிகளை பார்த்திருக்கக்கூடும். ஒரு முறையான கல்வியும் முறையான அணுகுமுறையும் கொண்ட ஏராளமான அக்குபங்சர் பள்ளிகள் சமகாலத்தில் இருக்கத்தான் செய்கின்றன.

பொறுத்தல் எனும் சீர்நிலைச் சாரம் - பகுதி 1 - சிவ கதிரவன்

பொறுத்தல் எனும் சீர்நிலைச் சாரம்             நா ம் இன்றைக்கு சீர்குலைவான ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சீர்குலைவு என்பது பரவிக் கொ...