இன்றைய மருத்துவம் பற்றி மக்களின் மனநிலை என்ன?
மக்கள் எந்த வகையான மருத்துவத்தை
விரும்புகிறார்கள்? எந்த வகையான மருத்துவத்தை தேடிச் செல்கிறார்கள்? மருத்துவம் என்பது
மக்களுக்கு இசைவானதாக இணக்கமானதாக எவ்வாறு அமைந்திருக்கிறது? என்று கேட்கப்படுகிற கேள்விகளின்
தொகுப்பாக இந்தக் கேள்வி இருக்கிறது.
மக்கள் எந்த வகையான மருத்துவத்தை
விரும்புகிறார்கள் அல்லது மருத்துவம் பற்றி மக்களினுடைய மனநிலை என்ன என்பது மிக முக்கியமான
பகுதி. ஒவ்வொரு மருத்துவம் குறித்தும் ஒவ்வொரு மருத்துவ ஆய்வுகள் குறித்தும் ஆய்வாளர்கள்,
அறிவியல் அறிஞர்கள், ஆவணம் சேகரிக்கும் ஆவணப்படுத்துகிற நபர்கள் என்று ஒவ்வொருவரும்
மருத்துவம் குறித்து ஆக்கபூர்வமான, விமர்சனப்பூர்வமான கருத்துக்களைத் தொகுத்து வைத்திருந்தாலும்
எல்லா மருத்துவமும் பயன்பாடு என்கிற அளவில் வேறுபட்ட நிலையை நடைமுறையில் வைத்திருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட வகையான மருத்துவ
பார்வை என்பது குறிப்பிட்ட வகையான அணுகுமுறை என்பது பொதுவாக சொல்லப்பட்டாலும் மருத்துவம்
இதற்காகத் தான் பயன்படுகிறது. மருத்துவத்தின் ஆழமான நோக்கம் மனித உயிரின், மனித உடலின்,
மனித மனநிலையின் நலத்தை மேம்படுத்துவதற்காக இருக்கிறது என்று சொல்லப்பட்டாலும் நிரூபிக்கப்பட்டாலும்
பயன்பாட்டில் இருந்தாலும் கூட ஒரு மருத்துவத்தை தேர்வு செய்கிற மனம் எத்தகைய தன்மையோடு
இருக்கிறது என்பது நாம் காண வேண்டிய மிக முக்கியமான பகுதி. எந்த வகையான மருத்துவத்தை
மனம் விரும்புகிறது. ஏன் அவ்வாறு விரும்புகிறது என்பது மிக முக்கியமான பதிலாக மருத்துவம்
குறித்த பதிலாக அமையும்.
வாழ்வில் மருத்துவம் வாழ்வியல் தேவைக்காக உடல் நலம் சார்ந்த அறிவிலிருந்து, உடல் நலம் சார்ந்த தேடலில் இருந்து உருவாகியிருக்கக் கூடும். மருத்துவம் என்ற செயல்முறை கூட இல்லாமலேயே மருத்துவ ஆய்வுகளின் துவக்கம் ஆதிமனிதர்களிடையே இருந்திருக்கக் கூடும். இவையெல்லாம் யூகங்கள் தான் என்றாலும் பின்னால் மனித உடல் நலத் தேடலின் ஆய்வு, உடல் நலத் தேடலின் விளைவு இவை மருத்துவமாக மாறி இருக்கும் என்ற வரலாற்று செயல்பாடு நிகழ்ந்தாலும் மருத்துவம் என்பது ஒரு மனிதன் தன் உடலுக்குள் இருக்கிற உடலுக்கு தேவையான ஒன்றைப் பெற்றுக்கொள்கிற, நலம் கொண்டு இயங்குவதற்கு தேவையான ஒன்றை பெற்றுக்கொள்கிற ஒரு முயற்சி என்று மருத்துவம் துவங்கி இருக்கும். இந்த முயற்சியில் எனக்கு நலம் தேவைப்படுகிறது. எனக்கு நலக்கேடு நீங்க வேண்டும். எனக்கு வளமை பெற வேண்டுமென்று நான் விரும்புகிற என் சுயமான நியாயத்திலிருந்து சுயமான தேவையிலிருந்து ஒன்றை பூர்த்தி செய்வது என்கிற அளவிலேயே மருத்துவம் இருந்திருக்கும்.







