கலீல் ஜிப்ரானின் கவிதை நூலிலிருந்து..
கன்னி
மரியாளின் கர்ப்பப்பையில் பிறந்ததாலேயே இயேசு கிறிஸ்துவின் மீது கன்னி மரியாள் எந்தவிதமான
ஆளுமையும் செய்ய முடியாது என்பதற்கான வரலாற்று சாட்சி இயேசுவின் வாழ்க்கை. எதுவும்
தெரியாத மிக கிராமத்திய அறிவியல் வளர்ச்சி இல்லாத
பின்னணியில் பிறந்த கன்னி மரியாள் ஒரு
உயிரை, ஒரு உடலை தன் கர்ப்பப்பையில் குடியிருப்பதற்கு வாய்ப்பு அளிக்கிறாள். அந்த உடலும் உயிரும் அந்த கர்ப்பப்பையில் குடி இருக்கிறது;
வளர்கிறது; வெளி வருகிறது. அந்த உடலை கர்ப்பப்பையில் வளர்த்துக் கொண்ட அந்த உடல், அந்த
உயிர் தன் ஆன்ம ஒளியால் இந்த உலகின் வரலாற்றை இரண்டாகப் பிரிக்கிறது கிறிஸ்து பிறப்பதற்கு
முன், கிறிஸ்து பிறப்பதற்கு பின் என்று.
இந்த
உலக வரலாற்றின் பெரும் பகுதியை தன் பிறப்பிற்கு முன் தன் பிறப்பிற்கு பின் என்று சொல்லும் அளவிற்கு பிரித்துப் பார்க்கிற,
பிரிக்க வைக்கிற ஒரு பேரொளி இயேசு கிறிஸ்துவின் பேரொளி. இயேசு கிறிஸ்துவின் வருகையை
வைத்தே இந்த உலகம் பிரிக்கப்படுகிறது. இயேசு
கிறிஸ்துவிற்கு முன்பு இயேசு கிறிஸ்துவிற்கு பின்பு என்று பிரிக்கும் வல்லமையை பெற்ற
ஒரு தாயின் கருவறை மிக எளிமையானது. அந்தக் கருவறையில் வளர்ந்ததற்காக வேண்டுமென்றே இயேசு
கிறிஸ்துவை அந்த கருவறையை வைத்திருந்தவள் கொண்டாட முடியாது என்கிற பேருண்மையை கலீல்
ஜிப்ரான் உடைக்கிறார். வெளிப்படுத்துகிறார்.
நீ ஒரு வேளை அவர்களின் உடலுக்கு வீடாகலாம். கன்னி மரியாளாக இருந்து இயேசு கிறிஸ்துவிற்கு வீடாகலாம். ஆனாலும் கூட கன்னி மரியாளால் இயேசு கிறிஸ்துவின் உள் ஒளியை ஒன்றும் செய்ய முடியாது என்கிற பேருண்மையை நீ ஒருவேளை அவர்களின் உடலுக்கு வீடாகலாம். அது அவர்களின் உள் ஒளிக்கு பொருந்தாது என்று பேருண்மையை மறை ஞானி கூறுகிறார். அவர்களின் உள் ஒளி குடியிருப்பது நாளைக்கான வீட்டில். நாளைக்கான வீடு என்பது இயேசு கிறிஸ்து சொல்கிற பரலோக ராஜ்ஜியம். புத்தரின் நிர்வாண நிலை. பரலோக ராஜ்ஜியம், நிர்வான நிலை என்கிற ஒரு பெரும் பேரான நிலத்தை கவிஞர் குறிப்பிடுகிறார். மறை ஞானி குறிப்பிடுகிறார்.