Tuesday, September 20, 2022

சிறார் நலம் - கலீல் ஜிப்ரானின் கவிதை நூலிலிருந்து...உரையாடல் - 1 / பகுதி - 2

 சிறார் நலம் - கலீல் ஜிப்ரானின் கவிதை நூலிலிருந்து...

மிக அழகாக கவிதை துவங்குகிறது. அப்போது மறைஞானி சொல்கிறார், உன் குழந்தைகள் உன் குழந்தைகள் அல்ல. உன் குழந்தைகள் உன் குழந்தைகள் அல்ல. வாழ்வு தன் நீட்சியின் பொருட்டு தம் மகன்களையும் மகள்களையும் பெற்றுக்கொள்கிறது அதற்காகவே. வாழ்வு அதற்கென்று தனியே ஒரு நோக்கம் வைத்திருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

வாழ்வு ஒரு மனிதனை வாழ்விப்பதற்கும் ஒரு மனிதனை அனுபவத்தின் பாற்பட்டு வளர்த்தெடுப்பத்ற்கும் ஒரு மனிதனுக்கு ஒன்றை கற்றுக் கொடுப்பதற்கும் மனிதன் அல்லாத எல்லா பிற உயிர்களுக்கும் உயிர் வளர்ப்பதற்கும் உணவுச் சங்கிலி பின்னுவதற்கும் வாழ்வு ஒரு நோக்கம் வைத்திருக்கிறது. வாழ்விற்கு நோக்கம் வைத்திருக்கிறது என்கிற மெய்ப்பொருளை நாம் பார்க்க வேண்டும்.

வாழ்விற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்தின் பாற்பட்டே வாழ்வின் அடர்த்தியான மெய்யான நோக்கத்தின் பாற்பட்டே உலகம் இயங்குகிறது என்று உயர்தத்துவ வரையறைகள் கூறுகின்றன.

வாழ்வின் நோக்கம் ஒரு மனிதனின் பிறப்பறுக்கும் நிலை. வாழ்வின் நோக்கம் ஒரு மனிதனின் நிறைவு நிலை. வாழ்வின் நோக்கம் ஒரு மனிதனின் மகிழ்வு நிலை என்று மனிதனைச் சுற்றி வாழ்வின் நோக்கம் பின்னப்பட்டிருக்கிற தத்துவங்களும் வாழ்வின் நோக்கம் இயற்கை. வாழ்வின் நோக்கம் இருத்தல் என்று மனிதனுக்கு அப்பாற்பட்டு பேசப்படுகிற வாழ்வின் நோக்கங்களும் எவ்வகைப்பபட்டதாக இருந்தாலும் கூட வாழ்வு அதற்கே உரிய நோக்கத்தோடு இருக்கிறது. வாழ்வு அதற்கே உரிய நோக்கத்தோடு இருக்கிறது என்கிற பேருண்மையிலிருந்து இந்த கவிதையை நாம் பார்க்கவேண்டும். வாழ்வு அதற்கே உரிய நோக்கத்தோடு தம் பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறது. வாழ்விற்கு எல்லாமும் பிள்ளைகள்தான். உலகின் மையமகிழ்ச்சியை கொண்டாடுகிற கொண்டாட செய்கிற கொண்டாட வேண்டும் என்கிற வாழ்விற்கு எல்லாமும் பிள்ளைகள்தான்.

புற்களும் பிள்ளைகள்தான். பூக்களும் பிள்ளைகள்தான். மரங்களும் பறவைகளும் விலங்குகளும் காடுகளும் கனி வர்கங்களும் பிள்ளைகள் தான். குழந்தைகளும் பிள்ளைகள்தான்.வாழ்வு தம் பிள்ளைகளை தம் மகன்களை மகள்களை தன் நோக்கத்திற்காக, தன் தொடர்ந்த பயணத்திற்காக தன் தொடர்ந்த நீட்சிக்காக பெற்றுக் கொள்கிறது. வாழ்வு அப்படித்தான் பெற்றுக் கொள்கிறது. தன் நோக்கத்தின் பொருட்டு தன் மகன்களைப் பெற்றுக் கொள்கிறது. தம் பூக்களைப் பெற்றுக் கொள்கிறது. தம் விலங்குகளைப் பெற்றுக் கொள்கிறது. புதுது புதிதாக உற்பத்தி செய்து கொள்கிறது. நேற்று தன் நோக்கத்திற்காக ஒரு ரோஜாப் பூவை மலரச் செய்த வாழ்வு இன்று தம் நோக்கத்திற்காக வேறொரு ரோஜாப் பூவை ஒரே செடியில் வேறொரு தன்மையோடு வேறொரு மனத்தோடு மலரச் செய்கிறது.

வாழ்வு புதிது புதிதாக தன் நோக்கத்தின் பாற்பட்டு மலர்ச்சியை உற்பத்தியை செய்து கொண்டே இருக்கிறது. அதன் நோக்கத்தின் பாற்பட்டே, அது நீட்சியின் பாற்பட்டு அதன் தொடர்ச்சியின் பாற்பட்டு, அது அதன் இயங்கு தன்மையின் பாற்பட்டு வாழ்வு தம் மகன்களையும் மகள்களையும் பெற்றுக் கொள்கிறது. இங்கே இந்த பூமியில் பிறக்கிற எல்லா மகன்களும் எல்லா மகள்களும் வாழ்வு தன் நோக்கத்தின் பாற்பட்டு பெற்றுக் கொள்ள விளைந்தவை. எல்லா குழந்தைகளும் வாழ்வு தன் நோக்கத்தின் பாற்பட்டு பிறந்தவை. இந்த வாழ்வு தம் நோக்கத்தின் பாற்பட்டு பெற்ற குழந்தைகள் உன் குழந்தைகள் அல்ல என்று அந்த மறைஞானி அந்த தாய்க்கு சொல்கிறார்.

இந்த பூமியில் இருக்கிற குழந்தைகள் யாவரும் வாழ்வும் தம் நோக்கத்திற்காக பெற்றுக் கொண்ட பிள்ளைகள். வாழ்வு தன் நோக்கத்திற்காக உற்பத்தி செய்து கொண்ட பூக்கள். வாழ்வு தம் நோக்கத்திற்காக சிறகடிக்கச் செய்கிற பறவைகள். இவை எல்லாமும் வாழ்வின் நோக்கத்திற்காக இந்த பூமிக்கு வந்திருக்கின்றன. அப்படியே குழந்தைகளும் உன் குழந்தைகள் அல்ல. அவை வாழ்வின் நோக்கத்திற்காக வாழ்வு பெற்றுக் கொண்ட குழந்தைகள்.

                                                                                            ...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...