Monday, September 19, 2022

சிறார் நலம் - கலீல் ஜிப்ரானின் கவிதை நூலிலிருந்து... உரையாடல் - 1 / பகுதி -1

 


                 சிறார் நலம் - கலீல் ஜிப்ரானின் கவிதை நூலிலிருந்து...

மேலும் தன் மார்பில் குழந்தையை ஏந்திய பெண்ணொருத்தி கேட்டாள், குழந்தை பற்றி எங்களுக்காக பேசுங்கள் என்று. அவர் சொன்னார்,

 உன் குழந்தைகள் உன் குழந்தைகள் அல்ல.

வாழ்வு தன் நீட்சியின் பொருட்டு தன் மகன்களையும் மகள்களையும் பெற்றுக்கொள்கிறது, அதற்காகவே.

வாழ்வு தன் நீட்சியின் பொருட்டு தன் மகன்களையும் மகள்களையும் பெற்றுக்கொள்கிறது, அதற்காகவே.

அவர்கள் உன் வழியாக வந்தாலும் உன்னிடமிருந்து வரவில்லை. மேலும் அவர்கள் உன்னோடு இருக்கிறார்கள், நீ சொந்தம் கொள்ள முடியாமல்.

நீ ஒருவேளை உன் அன்பை தரலாம்.

 நீ ஒருவேளை உன் அன்பை தரலாம்.

ஆனாலும் எண்ணங்களால் அல்ல. எண்ணங்களாக அல்ல.

அவர்கள் அவர்களுக்காக சொந்த எண்ணங்கள் பெற்றிருக்கிறார்கள்.

அவர்கள் அவர்களுக்காக சொந்த எண்ணம் பெற்றிருக்கிறார்கள்.

நீ ஒருவேளை அவர்களின் உடலுக்கு வீடாகலாம். அது அவர்களின் உள்ளொளிக்கு பொருந்தாது.

நீ ஒருவேளை அவர்களின் உடலுக்கு வீடாகலாம். அது அவர்களின் உள்ளொளிக்கு பொருந்தாது.

 அவர்களின் உள்ளொளி குடியிருப்பது நாளைக்கான வீட்டில். அங்கு நீ வருவதற்கு இல்லை. உன் கனவுகளிலும் கூட.

அவர்கள் போல் ஆவதற்கு பாடுபடு. உங்களைப்போல், உன்னைப்போல் அவர்களை மாற்ற ஆர்வம் காட்டாதே.

நேற்றைய தொடர்ச்சியை பற்றிக் கொள்ளாமலும் பின்னால் செல்லாமலும் இருப்பதற்காக வாழ்வு நகர்கிறது.

வாழ்வதற்கான அம்புகளாக உங்கள் குழந்தைகள். அவர்களுக்கான விற்கள் நீங்கள்.

வாழ்வதற்காக அம்புகளாக உங்கள் குழந்தைகள். அவர்களுக்கான விற்கள் நீங்கள்.

விசாலத்தின் மீது வலசையினால்  வில்லாளி இலக்கு குறிக்கிறார்.

பேராற்றல் கொண்டு உங்களை வளைக்கிறார். அது அம்பின் பாய்ச்சலுக்கும் தூரத்திற்கும்.

வில்லாளரின் கைகள் வில்லை வளைப்பது உங்களின் மகிழ்ச்சிக்காக. வில்லாளரின் கைகளில் வில்லை வளைப்பது உங்களின் மகிழ்ச்சிக்காக.

அவன் அம்பை நேசிக்கிறான் பாய்கிறது. மேலும் வில்லையும் நேசிக்கிறான்.நிலைக்கிறது.

வணக்கம்.

கலீல் ஜிப்ரான் நான் மதிக்கிற, நான் நேசிக்கிற ஒரு மனிதனை உயர்த்துவதற்கு தமது உள்ளொளியை வைத்து கவி படைத்த கவியாக இருக்கிற மாபெரும் ஆற்றல் மிகுந்த கவிஞர். ஒரு தத்துவ ஆய்வாளர், தத்துவ ஞானி. ஆன்மீக குறிப்புகளை சமூகத்திற்கு வழங்கியவர். நல்ல கவிஞர். அவர் படைப்புகளில் புகழ்பெற்ற தீர்க்கதரிசியில் ஒரு கவிதை.

தீர்க்கதரிசி என்கிற சொல் மிகத் தரமான எதிர்காலம் குறித்த நிறைந்த அறிவோடு ஞானத்தோடு இருக்கிற ஒரு மனிதனை முக்காலமும் உணர்ந்தவனாக, முக்காலம் குறித்தும் ஞானம் பெற்றவனாக மாற்றிக் கொள்கிற மாற்றிக் கொண்டிருக்கிற ஒரு குறியீட்டுச் சொல்.

தீர்க்கம் என்பது தெளிந்த முடிவு. தரிசனம் என்பது களங்கமில்லாத தெளிவான பார்வை என்பது தீர்க்கதரிசனம் என்பதற்காக அருஞ்சொற்பொருள்.

தீர்க்கதரிசி என்பவர் தெளிவான தீர்க்கமான பார்வை உடையவர் என்கிற ஒரு பொருளில் வழங்கப்படுகிற சொல். தமிழிலக்கியத்தில், மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் தீர்க்கதரிசி என்பது மிக முக்கியமான தொகுப்பு. ஆன்மிகம் பேசுகிற இருத்தலியல் பேசுகிற உலகத் தத்துவங்கள் பேசுகிற, மாபெரும் மேதைகள் பரிந்துரைக்கிற முதல் 50 புத்தகங்களில் கலீல் ஜிப்ரான் எழுதியிருக்கிற தீர்க்கதரிசியை குறிப்பிடப்பட்டே இருக்கும் என்கிற அளவிற்கு ஆன்மீகத்திலும் தத்துவத்திலும் கலீல் ஜிப்ரானினுடைய தீர்க்கதரிசி மிக முக்கியமான நூல்.

தீர்க்கதரிசியில் ஒரு ஆன்மீக சாதகர், ஆன்மிக பயிற்சியாளர் தன் ஞானத்தை இந்த உலகிற்கு போதிப்பதாக அந்த கவி வடிவமைக்கப்பட்டிருக்கும். அவரைச்சுற்றி சமகாலத்தில் வாழ்கிற மனிதர்கள் தமக்கு ஏற்பட்டிருக்கிற லௌகீக கேள்விகளை அவருக்கு எழுப்புவார்கள், கேட்பார்கள். அந்த ஞானி தன் இறுதிப் பயணத்திற்கு செல்வதற்கு முன் அவரைச் சுற்றி இருக்கிற மனிதர்களுக்கு உரிய விளக்கங்களை சமாதானங்களை அறிவிப்புகளை தன் உயிரின் பாற்பட்டு தன் அனுபவத்தின் பாற்பட்டு பகிர்ந்து அளிக்கும் முகமாக அந்த செய்யுள் பகுதி வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த செய்யுள் பகுதிக்குள் அந்த கவிக்குள் குழந்தை பற்றி பெண்ணொருத்தி கேட்பதாக வடிவமைக்கப்பட்டிருக்கிற கவிதை இது.

குழந்தைகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று சிந்திக்கிற எல்லோருக்கும் இந்த கவிதை ஒருவரியேனும் தெரிந்திருக்க அளவிற்கு மிக செல்வாக்கு மிக்க கவிதை இது. உங்கள் குழந்தைகள், குழந்தைகள் மீதான உங்களது கவனம், குழந்தைகளின் மீதான உங்கள் அக்கறை, குழந்தைகளுக்கு நீங்கள் ஏதாவது செய்துவிட வேண்டும், குழந்தைகளுக்காக நீங்கள் எதுவும் செய்துவிட வேண்டாம், குழந்தைகளை காப்பாற்றுவோம், குழந்தைகளை அப்படியே விட்டுவிடுவோம் என்று குழந்தைகளை பற்றி சுற்றி எவ்வகையில் நீங்கள் உரையாடலை சமூகத்திற்குள் கேட்டாலும் கலீல் ஜிப்ரானின் உங்கள் குழந்தை எப்படி வந்திருக்கிறது? எங்கு வந்திருக்கிறது? என்று கூறுகிற கவிதையை தவிர்க்காமல், பார்க்காமல், கடக்காமல் உங்களால் செல்ல முடியாது. இது குழந்தைகள் பற்றி ஒரு மறைஞானி மறுக்க முடியாத உண்மையை, நிதர்சனமாக நிலைத்திருக்கிற பேருண்மையை சொல்வதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்கிற தன்மையில் இருப்பதால் என்னவோ எவர் ஒருவருக்கும் தவிர்க்கமுடியாத குழந்தை கவிதையாக இந்த கவிதை இருக்கிறது என்று நான் பார்க்கிறேன்.

கலீல் ஜிப்ரான் மாபெரும் கவிஞர். இருத்தலின் மௌனத்தை மொழியாக்கியவர். இந்த பிரபஞ்சத்தின் விசாலதன்மையை மொழியாக்கியவர். நிறைய கலீல் ஜிப்ரானின் கவிதைகள் தத்துவார்த்த கவிதைகளாக அதிர்வளிக்கக் கூடியவை. இந்தக் கவிதையும் அப்படியானது தான். மேலும் தன் மார்பில் குழந்தையை ஏந்திய பெண் ஒருத்தி கேட்டாள், குழந்தை பற்றி எங்களுக்காக பேசுங்கள் என்று.

ஒரு தாய் மார்பில் கைக்குழந்தையோடு இந்த சமூகத்தில் நாளைய நாளை எதிர்கொள்ளும் தயக்கத்தோடு இந்தக் குழந்தையை எவ்வாறு வளர்க்கப் போகிறோம் என்கிற பதற்றத்தோடு சமூக மனநிலையோடு ஒரு தாய் கேட்கிறார். ஒரு தாய்க்கு குழந்தை வளர்க்க வேண்டும். குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். குழந்தை பெற்றுக்கொள்வதற்கான உயிரியல் சாத்தியம் இருக்கிறது. உடலியல் சாத்தியம் இருக்கிறது என்று அனுபவமாகவும் இயங்குமுறையாகவும் ஒரு சமூகம் ஒரு தாய்க்கு சொல்லித்தர முடியும். சமூகம் சொல்லித் தரவில்லை என்றாலும் கூட சமூகத்தினுடைய தலையீடு ஏதுமில்லை என்றாலும் கூட ஒரு குழந்தையை உருவாக்குவதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் ஒரு முழு உயிர் பிண்டத்தை இந்த உலகத்திற்கு வெளிக்கொண்டு வருவதற்கும் உடலில் ஒரு இயங்கு முறை இருக்கிறது என்பது மறுக்க முடியாதது. அவளுக்கு குழந்தையைப் பற்றி குழந்தை பெறுவது பற்றி, குழந்தையை பெற்றது பற்றி எந்த குழப்பமும் இல்லை. எல்லா தாய்மார்களுக்கும் குழப்பம் இருந்தாலும் கூட உயரியல் சமன்பாடுகளில் இயங்குமுறையில் குழந்தை பெறுவது குழப்பத்திற்கு அப்பாற்பட்டது. அது நிகழ்கிற இயங்கும் இயந்திர முறை. ஆனால் குழந்தையைப் பற்றி பேசுங்கள் என்று ஒரு தாய் கேட்பதற்குள் மிக நுட்பமான வேறொரு சமூக மனநிலை இருக்கிறது. ஒரு சமூக மனநிலையே அந்த குழந்தையை பற்றி பேச வேண்டும் என்கிற சமூக பொது மனநிலையை அந்த தாய் கேட்கிறாள்.

குழந்தை என்றவுடன் ஒரு துளி ரத்தமானது உயிரணுவானது கர்ப்பப்பையில் விழுந்து உடலாக, கண்ணாக, காதாக, உறுப்புகளாக, அவையங்களாக வளர்ச்சிபெற குழந்தை உருவாக்கத்தைப் பற்றி தாயின் கேள்வி அல்ல. தாயின் கேள்வி அப்படிப்பட்ட கேள்வியாக இருக்கவில்லை.

சிறு குழந்தையை கையில் தாங்கி வைத்திருக்கிற தாய்க்கு தெரியும் குழந்தை உருவாவது என்பது குழந்தை பற்றிய கேள்வி அல்ல. குழந்தையின் உடல் அமைப்பு என்பது குழந்தை பற்றிய கேள்வி அல்ல. குழந்தையின் செயல்பாடு என்பது இயங்குமுறை என்பது குழந்தை பற்றிய கேள்வி அல்ல. குழந்தை பற்றி பேசுங்கள் என்று மறைஞானியை நோக்கி ஒரு தாய் கேட்பதற்கு மிக அடிப்படையான காரணம் குழந்தை இந்த உலகத்தை எவ்வாறு பார்க்கப் போகிறது. இந்த உலகம் குழந்தையை எவ்வாறு பார்க்கப் போகிறது என்கிற உட்பொருளோடு தாய் கேட்கிறாள் குழந்தை பற்றி எங்களுக்காக ஏதாவது பேசுங்கள் என்று.

அந்த வரி இவ்வாறு துவங்குகிறது, மேலும் தன் மார்பில் குழந்தையை ஏந்திய பெண் ஒருத்தி கேட்டாள் குழந்தை பற்றி எங்களுக்காக பேசுங்கள் என்று. அப்போது மறைஞானி சொல்கிறார், மிக அழகாக கவிதை துவங்குகிறது.

                                                    ...தொடர்ந்து பேசுவோம்...

 

 


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...