கல்வி – இலக்கும் இலக்கணமும்
உளவியல் மருத்துவத்தில்
மாபெரும் சேவையாற்றி
இருக்கிறது. நவீன
மருத்துவம் குணம்
செய்ய முடியாத
பல்வேறு சிக்கல்களை
உளவியல் மருத்துவம்
குணமாக்கி இருக்கிறது.
ஒரு மனிதன்
மகிழ்வாக வாழ்வதற்கு
மருத்துவத்தில் உளவியல்
மருத்துவம் செய்த
பணி பெரும்
விளைவை ஏற்படுத்தியவை.
நவீன மருத்துவம்
எப்போதெல்லாம் தேங்கி
நிற்கின்றனவோ, நவீன
மருத்துவத்தினுடைய மருந்துகள்
எப்போதெல்லாம் வேலை
செய்யவில்லையோ அப்போதெல்லாம்
மனிதனுக்கு நல்ல
நலத்தை, உடல்
ஆரோக்கியத்தை கொண்டு
வந்து சேர்ப்பதில்
உளவியல் மருத்துவத்தின்
பங்கு அளப்பரியது.
உளவியலை மருத்துவமாக
பார்ப்பதில் மிகுந்த
பெருமிதத்தோடு நாம்
பார்க்க வேண்டும்
என்று பார்க்கிறவேளையில்
உளவியல் கல்விக்கு
எதிராக வேறொரு
வேலையை ஆபத்தாக
செய்திருக்கிறது என்பதை
மறுப்பதற்கு இல்லை
அவற்றை நாம்
அப்படித்தான் பார்த்தாக
வேண்டிய குறிப்புகளை
காண்கிறேன் நான்.
மருத்துவமாக பார்க்கிறபோது
உளவியல் பெரும்
மாமேதைகளினுடைய கொடை
அது. மருத்துவத்தில்
சிக்மன் ப்ராய்ட்
ஆற்றிய பணி
சாதாரணமானதல்ல. மருத்துவத்திற்குள்
சிக்மன் ப்ராய்ட்
ஒருவேளை வரலாற்றில்
வரவில்லை என்றால்
இன்று மனித
சமூகம் பைத்தியக்காரர்களின்
கூடாரமாக மாறி
இருக்கும். மனித
சமூகத்தினுடைய எல்லா
பைத்தியக்காரத்தனங்களையும் எல்லா
பிற்போக்குத்தனங்களையும் நேர்மையாக
ஆய்வு செய்வதற்கான
துவக்கப் புள்ளியை
உருவாக்கியவர் சிக்மன்
ப்ராய்ட். அவருக்கு
முன்பும் சில
உளவியலாளர்கள் இருக்கிறார்கள்.
அவருக்கு பின்பும்
சில உளவியல்
பேசுபவர்கள் இருக்கிறார்கள்.
எல்லோருக்குள்ளும் இருக்கிற
பெரும் பணி
ஒரு மனிதனினுடைய
நலம் குறித்து,
ஆரோக்கியம் குறித்து
உருவாக்கிய கோட்பாடுகளும் நியாயமான
நேர்மையான விவாத
பொருட்களும் என்று
மனித சமூகத்தை
நலப்படுத்துவதற்கு தொடர்ந்து
முயற்சி செய்து
கொண்டே இருக்கின்றன.ஒரு வேலையை
செய்து கொண்டே
இருக்கின்றன. ஆனால்
அவர்களது பணியில்
கல்வியை ஒரு
குறிப்பிட்ட துறைக்குள்
பொருத்தி, கல்வி
போன்ற ஒரு
குறிப்பிட்ட துறைக்குள்
பொருத்தி அதற்கான
உட்குறியீட்டுகளை உருவாக்குவது
என்பது ஆபத்தான
அபத்தமான வேலை.
இரண்டையும் நாம்
நேர்கோட்டில் வைத்து
பேசித்தான் ஆக
வேண்டி இருக்கிறது.
இப்படியான தன்மையோடு
நாம் உளவியல்
ஆய்வுகளை குழந்தைகள்
மீது பார்க்கிற
போது மிக
கடுமையான வலியோடு
கடந்து போக
வேண்டியிருக்கிறது. பல
உளவியல் ஆய்வாளர்கள்
குழந்தைகளை கல்வி
கூடத்திற்குள் எப்படியாவது
பொருத்திவிட வேண்டும்
என்று முயற்சித்துக்
கொண்டே இருக்கிறார்கள்.
அவர்கள் பேசுகிற
ஆரம்பப் பள்ளி
படி நிலை,
ஏழு வயது,
எட்டு வயதில்
செல்கிற பள்ளிக்கூடங்களில்
துவங்கி அவர்கள் மேல்நிலைப்பள்ளி,
உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி
என்று வெவ்வேறு காலகட்டங்களில்
எப்படி எல்லாம்
குழந்தைகளை நகர்த்துவது
என்கிற திட்டத்தை
வகுத்திருக்கிறார்கள்.
மூன்றாம் வகுப்பு
குழந்தை எவ்வாறு
படிக்க வேண்டும்
என்று ஒன்றை
கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
அவை என்னவென்றால்
வண்ணமயமான குறிப்புகளை
வைத்து குழந்தைகளை
கற்றுக் கொள்ள
வைக்க முடியும்
என்று மூன்றாம்
வகுப்பு குழந்தைக்கான
முன் தயாரிப்பு.
நான் இப்போது
சிந்தித்துப் பார்க்கிற
போது, நினைவூட்டி
பார்க்கிறபோது நான்
வண்ணமயமான புத்தகங்களை
ஏன் படித்தேன்
என்றால் எனக்கு
பின்னால் இப்படி
ஒரு கூட்டம்
இயங்கி இருக்கிறது
என்று எனக்கு
பெரும் கோபத்தை
கிளப்புகிறது. நான்
ஏதோ ஒரு
கிராமத்தில் மூன்றாம்
வகுப்பில் உட்கார்ந்து
படிக்கிற போது
நான் இப்படித்தான்
படிக்க வேண்டும்
என்று அட்டைகளை
என் ஆசிரியர்
கையில் கொடுத்துவிட்டு
வேடிக்கை பார்த்த
ஒரு பரிசோதனை
எலி போல
என்னை மாற்றி
இருக்கிறார்கள் என்று
நான் பார்க்கிறபோது
எனக்கு கோபமாக
வருகிறது.
அனேகமாக இந்த செய்தி நீங்கள் கேள்விப்படும்போதும் உணர்வுப் பூர்வமாக நீங்கள் கோவமடைய வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன், அடைவீர்கள் என்று நம்புகிறேன். இது எப்படியான அணுகுமுறை. உளவியலில் பார்க்கிற அணுகுமுறை எப்படியான அணுகுமுறை. மூன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு வண்ண அட்டைகளை கொடுத்து விடு. ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு குச்சிகளை கொடுத்து விடு, பன்னிரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு பரிசோதனை குழாய்கள் கொடுத்து விடு என்று குழந்தைகளிடம் இவற்றையெல்லாம் கொடுத்து வேடிக்கை பார்க்கிற பரிசோதனை முயற்சியை என்னவென்று சொல்வது. இது குழந்தைகளுக்கு எதிரானது மட்டுமல்ல. மனித குலத்திற்கே எதிரானது என்று நான் கூற விரும்புகிறேன். அப்படியான ஆபத்தான செயல்பாடு இது. இப்படித்தான் கல்விக்குள் நிகழ்ந்திருக்கிறது என்பதை தான் நாம் மீண்டும் மீண்டும் அழுத்தமாக பார்க்க வேண்டி இருக்கிறது. பார்த்து வருகிறோம். இவை எல்லாமும் குழந்தைகள் மீது குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறையாக நான் பார்க்கிறேன் நண்பர்களே.

