வர்ம மருத்துவம் - பகுதி - 3
வர்ம மருத்துவம்
பற்றி நாம் பேசுவதற்கு நிறைய பேசும் தளங்கள் இருக்கின்றன.
மருத்துவத்தினுடைய
வர்ம மருத்துவப் புள்ளிகள், புள்ளிகளை தூண்டும் முறைகள், புள்ளிகள் இயங்கும் முறைகள்,
ஒரு புள்ளிக்கும் இரண்டு புள்ளிக்கும் மூன்று புள்ளிக்கும் ஐந்து புள்ளிக்கும் பத்து
புள்ளிக்குமாக இருக்கிற தொடர்பு. மருத்துவத்தின் சாராம்சமாக விளங்குகிற வர்ம ஆற்றல்
சுழல்கிற இடம், வர்ம ஆற்றல் சிதறுகிற இடம், வர்ம ஆற்றல் பயணிக்கிற இடம் என்று வெவ்வேறு
தூண்டல் முறைகளில் நாம் பேசுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
மேலும் மருத்துவத்தினுடைய இயங்கு தளங்கள், சக்தி மையங்கள் என்று நாம் பார்ப்பதற்குரிய இடங்கள் இருக்கின்றன. ஒரு வர்ம மருத்துவத்தினுடைய தத்துவத்தில், வர்ம மருத்துவத்தினுடைய தத்துவ வரிசையில் சக்தி மையங்கள், ஆதார மையங்கள் ஆறு என்று மருத்துவம் ஓரிடத்தில் குறிப்பிடுகிறது. சித்த மருத்துவத்திற்கும் யோக மருத்துவத்திற்கும் ஆயுர்வேத மருத்துவத்திற்கு கூட இத்தகைய ஆதாரங்கள் உண்டு. ஆதார மையங்கள் என்று குறிப்பிடுகிற ஆறு மையங்கள் எல்லா தத்துவங்களிலும் இருக்கின்றன.

