Showing posts with label Thirukkural. Show all posts
Showing posts with label Thirukkural. Show all posts

Monday, June 24, 2024

நீத்தார் பெருமை - பகுதி 5 - சிவ.கதிரவன்

                                             நீத்தார் பெருமை



துறந்தார் இந்திரனாக இருக்கிறரே ஒருவர் அவர் தான் துறந்தாருக்கு சான்று என்று இந்திரனை குறிப்பிடுகிறார். இந்திரன் கதை குறித்து நாம் வேறொரு பகுதியில் விரிவாக பேசலாம். ஐந்தும் அடக்கியவன், ஆற்றலுக்கு தலைவன் என்று இந்திரனை சொல்கிற போது சொல்கிறார். ஐந்து என்பது என்ன? ஐந்தையும் அடக்குவது என்பது என்ன? என்பது ஒரு தனி விவாதம். அவற்றை நாம் பின்னால் பேசுகிற போது விரிவாக பேசலாம்.

துறவிகள் பற்றி அவர் சொல்கிற போது, "செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர் செயற்கரிய செய்கலா கார்"  என்று சொல்கிறார். அரிய செயல்களை துறவியர் செய்வர். அத்தகைய அரிய செயல்களை எளிமையானவர், சாதாரணமானவர் செய்ய மாட்டார். ஏனென்றால் அரிய செயல்களை ஏன் துறவியால் செய்ய முடிகிறது என்று பார்க்கிற போது துறவிகள் எதுவும் செய்வதில்லை.  உண்மையிலேயே துறவிகள் எதுவும் செய்வதில்லை. வெறுமனே காத்திருப்பதும் பண்பாக, அருளாக ஒன்றை அணுகுவது மட்டுமே துறவிகளினுடைய செயல்பாட்டு நிலை. ஆக இவர்களை சொல்கிறபோது அரிய செயல்களை செயல்களை செய்பவர் என்று வள்ளுவர் கூறுவது கவனத்திற்குரியது.

துறவிகள் அமைதியாகவும் வழக்கு மொழியில் சொல்வதென்றால் சும்மா இருப்பது. சும்மா இருப்பது அரிய செயல்களாக சமூகத்திற்கு பார்க்கப்படுகிறது. நீத்தார் பெருமையை நாம் படிக்கிற போது சமூகத்தில் இருக்கிற வழக்கத்தை நேர் எதிரான திசையில் வள்ளுவர் அணுகுகிறார் என்கிற புரிதலோடு படிக்க வேண்டி இருக்கிறது. அரிய செயல்களை துறவியர் செய்வர் என்றவுடன் அவர் தண்ணீரில் நடப்பார். தீயில் உள்ளே சென்று வெளியில் வருவார் என்கிற கதைகள் எல்லாம் பொருள் கொள்வதற்கு இல்லை.

Sunday, June 23, 2024

நீத்தார் பெருமை - பகுதி 4 - சிவ.கதிரவன்

                                                                                 நீத்தார் பெருமை



 துறவை மேற்க்கொள்கிற தரமிக்க மனிதர்களை துறவிகள் என்று, நீத்தார் என்று பெருமை செய்கிறார். நூல்கள் எல்லாமும் இப்படிப்பட்ட துறவிகளை பெருமையாக பேசுகின்றன என்று தம் செய்யுளில் சொல்கிறார்.

உலகில் இருக்கிற மனிதர்களினுடைய பெருமை, உலகில் இருக்கிற மனிதர்களினுடைய இறப்பு என்று ஒரு ஆய்வு குறிப்பு அல்லது ஒரு பட்டியல் தயார் செய்தோம் என்றால் இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து எவ்வளவு மனிதர்கள் பிறந்து இறந்திருப்பார்கள் என்று ஒரு பட்டியல் தயார் செய்தோம் என்றால்  அந்த எண்ணிக்கை எவ்வளவு இருக்குமோ அவ்வளவு பெருமைகளை துறவிகள் கொண்டிருப்பர் என்று அதன் மதிப்பை அவ்வளவு உயர்வாக சொல்கிறார். இதில் ஒரு அழகான உவமை இருக்கிறது. துறவிகளினுடைய பெருமையை இறந்தவர்களினுடைய எண்ணிக்கைக்கு ஒப்பாக வள்ளுவர் சொல்கிறார். நீத்தார் பெருமை என்கிற அதிகாரத்தில் "துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று"  என்று ஒரு செய்யுள் இருக்கிறது. இந்த செய்யுளில் வள்ளுவர் கூறுகிற உவமை மிக முக்கியமானது. துறந்தாரின் பெருமையை இறந்தார் கொண்டு வள்ளுவர் கூறுவதற்கு காரணம் இந்த மனம் வாழ்வதிலேயே, கொண்டாட்டமாக கழிவதிலேயே பெருமையாக, உற்சாகமாக வாழ்ந்து கொண்டிருக்கும். இந்த மனம் என்று நான் சொல்கிற பொருள் அவசரம் நிறைந்த காரண காரிய அறிவு இல்லாத பரபரப்பான மேலோட்டமான மனநிலை. இந்த மேலோட்டமான மனநிலைக்கு வாழ்வது என்பது என்ன என்று தெரியாமலேயே வாழ்வது, வாழ்வது என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும் அப்படி ஒரு குணம் உண்டு.

தத்துவவாதிகள் மனதை மனம் என்றும் புத்தி என்றும் பிரித்து சொல்வார்கள். புத்தி என்பது அடிப்படையாக இருப்பது. மனம் என்பது அலைபாய்த்து கொண்டிருப்பது. ஆக, அலைபாய்ந்து கொண்டிருக்கிற மனம் வாழ்வது என்பது என்னவென்று தெரியாமலேயே வாழ்வது வாழ்வது என்று அலை பாய்ந்து கொண்டிருக்கிற சூழலில் மனதிற்கு பதற்றம் தரும் வகையாக மனதினுடைய அறியாமையை அதிர்ச்சிக்குள்ளாக்கும் முறையாக, மன அதிர்ச்சியின் பொருட்டு துறந்தாரினுடைய பெருமையை இறந்தாரின் எண்ணிக்கை கொண்டு வள்ளுவர் முன் வைக்கிறார். இறப்பு என்பதை, மரணம் என்பதை, நிலையாமை என்பதை மனித மனதால் கொள்ள முடியாது. முன்பே சொன்னது போல மேலோட்டமான மனம், அவசரமான மனம் மரணம் குறித்து ஒன்று சந்திக்க நேர்ந்தால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகும். பெரும் பரபரப்பிற்குள்ளாகும். இந்த பரபரப்பின் பொருட்டு, மரணம் குறித்து எந்த ஒன்றையும் பார்க்கவோ, படிக்கவோ, ஆய்வு செய்யவோ இந்த மனதால் முடியாது. மனம் அஞ்சிய ஒரு பேசும் பொருள் மரணம்.  ஆக இந்த வாழ்வு என்றால் என்னவென்று தெரியாத இந்த மேலோட்டமான மனதின் அவசரத்திற்கு இறந்தாரின் எண்ணிக்கையைக் கொண்டு அல்லது அப்படி ஒரு உவமையைக் கொண்டு துறந்தாரின் பெருமையை சொல்வதின் வழியாக வள்ளுவர் பாடம் புகட்டுகிறார். அது என்ன பாடம் என்றால் மரணம் என்றவுடன் மனதிற்கு பதட்டம் வருகிறது. ஆனால் துறந்தாருக்கு, துறவிகளுக்கு அவர்கள் உயிரை பின்பற்றி நடப்பவர்கள். அவர்கள் என்ற ஒன்றையும் பற்றி கொள்ளாதவர்கள். தன் உடல்கள் உட்பட, உடைமைகள் உட்பட, உறவுகள் உட்பட எவற்றையும் பற்றி கொள்ளாத  நிலைப்பாடு உள்ளவர்கள். அவர்களுக்கு உயிர் மட்டுமே கவனத்திற்குரியது. அவர்களது கோட்பாடுகளில் உயிர்களுக்கு மரணம் இல்லை. உயிர்களுக்கு பிறப்பும் இல்லை. உயிர் என்பது நித்தியமானது. மற்ற எல்லாமும் மாறக்கூடியது.

Saturday, June 22, 2024

நீத்தார் பெருமை - பகுதி 3 - சிவ.கதிரவன்

 

நீத்தார் பெருமை 



நிறைவாக நீங்கள் ஒரு உணவை உண்ட பின்பு, நிறைவாக நீங்கள் ஒரு  உணவை நீங்கள் எடுத்துக்கொண்ட பின்பு அந்த உணவின் மீது நாம் நிறைவாக உண்டோம் என்று உணர்வு ஏற்படுகிற போது மீண்டும் மீண்டும் அந்த உணவை கட்டாயப்படுத்தி உங்களுக்கு ஒருவர் ஊட்டி விட முடியாது. நீங்கள் அதன் மீது போதுமான நிறைவுத் தன்மையோடு இருக்கிறபோது அதன் மீது உங்களுக்கு இருக்கிற பற்று மெது மெதுவாக விலகிச் செல்வதை நீங்கள் பார்க்க முடியும். அதுதான் துறவு. உங்கள் அனுபவம் நிரம்பி இருக்கிற போது எல்லாவற்றின் மீதும் எல்லா பொருள்களின் மீதும் உங்களை சுற்றி இருக்கிற எல்லா உறவுகளின் மீதும் உங்கள் அனுபவத்தினுடைய அறிவின் பொருட்டு, உங்கள் அனுபவத்தினுடைய நிதானத்தின் பொருட்டு நீங்கள் வைத்திருக்கிற பற்றான செயல்பாடுகள், நீங்கள் வைத்திருக்கிற பற்றுக்கொண்ட  வினையாற்றும் முறை எல்லாமும் மெதுமெதுவாக நகர்ந்து அமைதி நிலைக்கு செல்வதை நீங்கள் பார்ப்பீர்கள். அதற்கு பெயர் துறவு. துறவு என்பது அப்படியானது தான்.

நன்றாக ஒருவர் வாழ்வை நிறைவாக வாழ்ந்திருக்கிறார்.  இந்த வாழ்வில் தமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில்  தவறவிடாமல் எல்லாவற்றையும் நிறைவாக பயன்படுத்தி வாழ்ந்திருக்கிறார் என்றால் அந்த வாழ்க்கை முறையில் அவர் பெற்றிருக்கிற அனுபவம் அந்த வாழ்க்கைக்கு ஊடே இருக்கிற எல்லாவற்றின் மீதும் எல்லா செயல்பாடுகளின் மீதும் ஒரு நிறைவை அவருக்கு கொடுத்திருக்கும். ஒரு அறிவை அவருக்கு கொடுத்திருக்கும். இது அவரை துறவியாக மாற்றி இருக்கும். ஆக, துறவு என்பது நீங்கள் முயற்சிப்பது அல்ல. உங்களுக்குள் நிகழ்வது.

சிறிய குழந்தையாக இருக்கிற ஒருவர் ஒரு வேலையை செய்கிறார். உதாரணமாக வீட்டில் இருக்கிற ஒரு குழந்தை ஒரு விளையாட்டு பொருளை உருட்டிக் கொண்டிருக்கிறது. அதோடு விளையாடுகிறது. தொடர்ந்து விளையாடி அந்த பொருளுக்கும் அதற்குமாக இருக்கிற உறவை பலப்படுத்திக் கொள்கிறது. அந்த பொருளில் அந்த குழந்தை நிறைவு கொள்கிறது. அந்த குழந்தை பின்னாளில் வளர்ந்து நிற்கிற போது அந்த பொருளோடு விளையாடுகிற இன்னொரு குழந்தையை பார்க்கிற போது அந்த குழந்தை விளையாடுகிற விளையாட்டுக்களை அது உருட்டி எழுப்புகிற சத்தங்களை தாம் குழந்தையாக இருந்த போது முழுமையாக நிறைவாக விளையாடிய ஒருவரால் மிகச் சரியான புரிதலோடு பார்க்க முடியும். இப்போது அவர் வளர்ந்திருக்கிறார்.  நிறைவான விளையாட்டிலிருந்து விடுபட்டு இருக்கிறார். வேறொரு அதை பயன்படுத்தி விளையாடுகிறார் என்கிற நிலையில் அதை பார்க்கிறபோது இந்தக் குழந்தையும் நிறைவாக விளையாடுகிற போது சத்தங்களை நிறுத்திக் கொள்ளும் என்கிற புரிதலோடு அவர் அந்த குழந்தை மீது அன்பாகவும் அருளாகவும் காத்திருப்பார். இந்த குழந்தை எழுப்புகிற சத்தத்தின் பொருட்டு அந்த குழந்தை மீது எதிர்வினை செய்யமாட்டார்.

Friday, June 21, 2024

நீத்தார் பெருமை - பகுதி 2 - சிவ.கதிரவன்

 

                                                     நீத்தார் பெருமை



நான் இன்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட புண்ணிய தளத்திற்கு செல்கிறேன். அங்கு புண்ணிய  நீராடி முடித்தவுடன் நான் இந்த உணவை துறந்து விடுகிறேன். இன்றிலிருந்து இந்த உணவை நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன். இந்த உணவை பார்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்கிற துறவு சொற்கள் சமூகத்தில் உண்டு. குறிப்பாக காசியில், இராமேஸ்வரத்தில் சென்று இன்றிலிருந்து உருளைக்கிழங்கை சாப்பிட மாட்டேன். பாகற்காயை சாப்பிட மாட்டேன். நான் அவற்றைத் துறந்து விட்டேன் என்று துறக்கிற துறவு என்பது துறவாகுமா? இந்த துறவை பற்றி தான் நீத்தார் பெருமையில் வள்ளுவர் பேசுகிறாரா என்றெல்லாம் பேசிp பார்ப்பதற்காக இந்த உரையாடலை செய்து கொண்டிருக்கிறோம்.

இன்னும் சமூகத்தில் நோன்பு நோற்று இருக்கிற இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுகிற நம்பிக்கையாளர்கள் நோன்பு துறப்பு என்கிற ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். நோன்பு காலங்களில் நோன்பு துறக்கிற நேரம் என்று ஒரு நேரத்தை துறப்பு நேரமாக வைத்திருக்கிறார்கள். நோன்பு நோற்று இருக்கிற அந்தக் குறிப்பிட்ட நேரத்தை நிறைவு செய்யும் முகமாக அவர்கள் நோன்பை துறந்து, உணவை எடுத்துக்கொள்கிற நேரமாக குறிப்பிடும் வண்ணம் நோன்பு துறப்பு என்று ஒரு சொல்லை பயன்படுத்துகிறார்கள். இத்தகைய செயல்பாடு துறப்பு ஆகுமா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. அந்த வகையிலேயே துறப்பு, துறவு, துறவி என்கிற சொல்லிற்கு பின்னால் இருக்கிற மெய்யான பொருள் என்ன என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் உங்களுக்கு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஆக, துறவு என்பது நான் மேற்சொன்ன வகையிலேயே அமைந்திருக்கிறதா என்றால் அவ்வளவுதான் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் துறவு என்பது அப்படியானது அல்ல. வள்ளுவரினுடைய அறிமுகத்தில் வள்ளுவர் துறவியர் பற்றி அறிமுகம் செய்கிற போது அவர்களுக்கு வணக்கம் சொல்கிற முகமாகவும் அவர்களுக்கு புகழ் செலுத்தும் முகமாகவும் அவர்களை போற்றும் முகமாகவும் பாடல்களை வடிவமைக்கிறார்.

Thursday, June 20, 2024

நீத்தார் பெருமை - பகுதி 1 - சிவ.கதிரவன்

 

நீத்தார் பெருமை   

www.swasthammadurai.com

       

திருக்குறளினுடைய உரையாடலில் தொடர்ந்து நாம் பேசிக் கொண்டிருக்கிற அதிகார வரிசையில் தற்போது நீத்தார் பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த உரையாடலில் நீத்தார் பெருமைக்காக நாம் எடுத்துக் கொண்ட காலம் கொஞ்சம் கூடுதல் காலம் தான். ஏனென்றால் நீத்தார் பெருமை குறித்து நாம் பேசுவதற்கு ஒரு தயக்கமும் ஒரு அச்சமும்  இருந்தது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அது என்ன காரணம் என்றால் நீத்தார் என்பவர் யார் என்று  உரையாசிரியரினுடைய  உரையைப் படிக்கிற போது மிகுந்த வியப்புக்குரியதாக இருக்கிறது. யாரைக் குறிப்பிட்டு நீத்தார் என்று வள்ளுவர் பெருந்தகை உரை செய்கிறார். அதிகாரம் படைக்கிறார் என்ற வியப்பும் வினாவும் ஒருபுறம். அதேபோலவே இன்று நீத்தார் பெருமைக்கு பொருத்தமாக இருக்கிற மனிதர்களை நாம் எங்கிருந்து காண்பது? எவ்வாறு பொருத்தி பேசுவது? என்றெல்லாம் கூட நமக்கு பெரிய யோசனை, சிந்தனை வந்து கொண்டே இருந்தது. அந்த வகையிலேயே நாம் கொஞ்சம் துல்லியமான செயல்பாடாக இருக்கிற,  வடிவமாக இருக்கிற பெருமைகளை  துறவு பூண்டோரின் பெருமையாக  சுருக்கி விடாமல், நான் துறவு பூண்டோர் என்று அதற்குரிய விரிவான செய்தியை நான் சொல்கிறேன். ஏனென்றால் துறவு, துறவிகள் என்பதற்கு சமூகத்தில் சமகாலத்தில் வேறொரு வடிவம் இருக்கிறது. இந்த வடிவத்தின் பார்பட்டு துறவையும் துறவிகளையும் நாம் குறிப்பிட்டு அவர்களே  நீத்தார் என்று வள்ளுவர் கூறுகிறார் என்று நாம் பேசினோம் என்றால் அந்த உரையாடலில் நமக்கு வேறொரு குழப்பம் வந்துவிடும் என்கிற அச்சமெல்லாம் கூட நீத்தார் பெருமையை பேசுவதற்கு ஒரு காலத்தை எடுத்துக் கொள்ளும்படி செய்து விட்டது.

நண்பர்களே நீத்தார் பெருமை என்கிற அதிகாரத்திற்குள் நாம் செல்கிறபோது அந்த அதிகாரத்தில் நமக்கு நீத்தார் என்பவர் யார்? அவரின் குண நலன்கள், பண்புகள், வெளிப்பாடுகள் எப்படி இருக்கும் என்பது பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம் அவசியமாகிறது.

வள்ளுவரின் வார்த்தையின்படி,  நீத்தார் என்பது அல்லது நீத்தார் என்கிற சொல்லின் பொருள் என்பது துறவியர் என்று உரையாசிரியர்களால், மொழி வல்லுனர்களால் முன்வைக்கப்படுகின்றன. அறிவு மிகுந்த உரையாசிரியர்களினுடைய மூல உரையை, பொழிப்புரையை படிக்கிற போது துறவியரின் பெருமை என்கிற அடிப்படையில் நீத்தார் பெருமையை படிக்கிற போது இன்றைய வாழ்விற்கு இன்னும் நெருக்கமாக பொருத்தி சொல்ல வேண்டுமென்று ஒரு  சிந்தனை இருந்து கொண்டே இருக்கிறது என்னுள். அந்த வகையிலேயே நீத்தார் பெருமை என்கிற அதிகாரத்தில் நாம் படிக்கிற போது நீத்தார் என்பவர் யார் என்பது குறித்து ஒரு தெளிவான புரிதலை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

Sunday, June 16, 2024

திருக்குறள் வாழ்வியல் - பாயிரம் - பகுதி 4 // சிவ.கதிரவன்

                                                                 பாயிரம்

தொடர்ந்து நீத்தார் பெருமை. நீத்தார்  பெருமை என்று சொல்கிற போது தொல்காப்பியம் நீத்தார் என்று குறிப்பிடுவது இந்த வாழ்வை செம்மையாக வாழ்ந்தவர்கள் என்ற குறிப்பை தொல்காப்பியம் இலக்கணமாக வைத்திருக்கிறது.   

கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீர்த்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் இந்த நான்கு அதிகாரங்களை நீங்கள் பின்பற்றுவீர்கள் என்று சொன்னால் நீங்கள் வாழ்வில்  செம்மையான வாழ்வியலை வாழ்வீர்கள் என்பதில் ஐயமில்லை என்பதற்காகத்தான் இந்த திருக்குறளை நாம் தொடர்ந்து  பேசிக் கொண்டிருக்கிறோம். 

அறம் என்றால் இன்றைக்கு என்னவென்று பலருக்கும் தெரிவதில்லை. அதில் ஒரு பாட்டு சொல்கிறார் "அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்" 

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்.

அழுக்காறு என்பது பொறாமை. பொறாமை என்பது என்ன? பொறுத்துக் கொள்ளாமை. என்ன பொறுத்துக் கொள்ளாமை? நமக்கு ஏற்படுகிற நம்மால் தாங்க முடியாத ஒன்று நமக்கு நிகழ்கிறது என்றால் நம்மால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. ஓரிடத்தில் ஒருவர் கிள்ளுகிறார்.  அழுத்துகிறார். உங்களுக்கு காயம் ஏற்படுத்துகிறார். நீங்கள் தாங்கிக் கொள்வதை விடவும் வலியாக ஒன்றை அதிகமாக தருகிறார் என்றால் அந்த நிகழ்வை, அந்த அதிர்வை, அந்த வலியை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. இது உங்களுக்கு நடக்கிறது. இது பொறாமையல்ல.

Saturday, June 15, 2024

திருக்குறள் வாழ்வியல் - பாயிரம் - பகுதி 3 // சிவ.கதிரவன்

                                                  பாயிரம் 

கடவுள் வாழ்த்து என்பது கடவுளை வாழ்த்துவது என்று ஒரு புறம் வைத்துக் கொண்டாலும் கூட மனிதனின் என்னென்ன தேவைகள் இருக்கிறதோ அதற்கு கடவுளினுடைய பங்களிப்பு என்ன?  கடவுளிடம் பேசுகிற போது வருகிற விளைவு என்ன? என்கிற அடிப்படையில் வள்ளுவர் வகைப்படுத்தி இருந்தார்.

துன்பம் வருகிறது. கலக்கம் வருகிறது. இந்தப் பிறவிப் பெருங்கடலை எவ்வாறு நீந்த போகிறோம். அடுத்து ஜென்மத்தில் என்ன செய்யப் போகிறோம்  என்பதெல்லாம் நமக்கு சந்தேகமாக இருக்கிறது. எல்லாவற்றையும் ஒருபுறம் வைத்துவிடுங்கள். கடவுளிடம் உங்களை ஒப்படைத்து விடுங்கள் என்று கடவுள் கொள்கையை எளிமையாக மனிதனினுடைய தேவையைப் பொருட்டு கடவுளுக்கும் மனிதனுக்குமாக இருக்கிற, மனிதன் எங்கெல்லாம் தடுமாறுகிறான் என்பதை நுணுக்கமாக புரிந்து கொண்டு கடவுள் வாழ்த்தை வள்ளுவர் வைத்திருக்கிறார்.

கடவுளினுடைய தேவை இதுதான் என்று  கடவுள் வாழ்த்தில் அமைந்திருக்கும். அது  எனக்கு பிடித்த அமைப்பு முறை. ஏனென்றால் நீட்சே என்கிற தத்துவ அறிஞர், “கடவுள் இறந்துவிட்டார்” என்று சொல்லுவார். அது ஒரு சோர்வு வெளிப்பாடு அல்லது ஒரு புரிதலின் வெளிப்பாடு. அவருக்கு பதில் உரைத்த ஓஷோ வேறொரு இடத்தில் சொல்லுவார். கடவுள் பிறக்கவே இல்லை.  பிறந்தால் தானே இறப்பதற்கு என்று.   இந்த தத்துவவாதிகள் ஒருபுறம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் கூட மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே இருக்கிற தேவை என்ன?  ப்ரடெரிக் ஏங்கல்ஸ் ஒரு இடத்தில் சொல்லுவார், “கடவுளே இத்தனை காலம் மனிதனோடு வாழ்ந்து கொண்டிருப்பதால் கடவுளை நாம் லேசாக  நினைத்து விடக்கூடாது” என்று அவரது புத்தகத்தில், கட்டுரைகளில் சொல்லுவார்  ஏங்கல்ஸ். இப்படி பலரும் கடவுளை பற்றி  பேசுகிறபோது கடவுளினுடைய செயல்பாடு மனிதனிடத்தில் எப்படி இருக்கிறது அல்லது மனிதனுக்கு கடவுள் எங்கெல்லாம்  தேவைப்படுகிறார் என்று குறிப்புணர்ந்து ஒரு அதிகாரத்தை கடவுள் வாழ்த்தில் மனிதனினுடைய மனநிலைக்கு இறங்கி அதுதான் அதற்குள் இருக்கிற ஒரு அழகு. கடவுள் அப்படிப்பட்டவர், இப்படிப்பட்டவர் அப்படி கதையெல்லாம் ஒன்று அதில் சொல்லவில்லை. வள்ளுவர் நேராக, “உனக்கு என்ன பிரச்சனை?, எனக்கு நான் நன்றாக படிக்க வேண்டும். படித்து முடித்தவுடன் படித்த பயனை அடைய வேண்டும் . அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?  சரி அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். நீண்ட காலம் வாழ வேண்டும். என்ன செய்வது? அதற்கும் என்னவென்று பதில் சொல்கிறேன்.  புகழோடு இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? அதுக்கும் பதில் இருக்கிறது. இப்படி ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் கேள்வி வருகிறதோ, ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் யோசனை வருமோ அதை தான் கடவுள் வாழ்த்தில் வள்ளுவர் வகைப்படுத்துகிறார்.

Thursday, June 13, 2024

திருக்குறள் வாழ்வியல் - பாயிரம் - பகுதி 2 // சிவ.கதிரவன்

                                  பாயிரம்

 திருக்குறளினுடைய வரிசைப்படி கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்று தான்  அமையப் பெற்றிருக்கும். இந்த நான்கு பாயிர அதிகாரங்களை நீங்கள் படித்து, அதன்படி மனப்பாடம் செய்ய வேண்டும்  என்பது கூட உங்களது விருப்பம் தான்.

படித்து பொருள் புரிந்து அதன்படி உங்களது வாழ்வில் நகர்த்துவீர்கள் என்றாலும்கூட போதுமானது. அறன் வலியுறுத்தலில் ஒரு பாடல். அறன் வலியுறுத்தல் என்பது வாழ்விற்குரிய வாழ்வை செம்மையாக வாழ்வதற்குரிய பகுதி. அறன் வலியுறுத்தல் என்பதில் ஒரு கருத்தை வைக்கிறார். இந்த மொத்த புத்தகத்தினுடைய சாரமாக இருக்கிறது என்பதை  முன்னமே நாம் பேசி இருக்கிறோம் இந்த முன்னுரையை. பாயிரம் என்பது இந்த மொத்த புத்தகத்தினுடைய ஒரு அறிமுகம் என்பதை நாம் முன்னமே பேசியிருக்கிறோம்.

முன்பே பேசி இருக்கிற அடிப்படையில் அதை மீண்டும் நினைவூட்டி உங்கள் வாழ்வியலை செம்மைப்படுத்திக்  கொள்வதற்கு நான்கு அதிகாரங்களை செய்வீர்கள் என்றால் போதும் என்று நான் மீண்டும் சொல்வதற்கு சில காரணங்களை சொல்கிறேன். சில செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

மனதில்  சோர்வு ஏற்படுகிற போது என்ன செய்வது? மனதில் கலக்கம் ஏற்படுகிற போது என்ன செய்வது? என்று பார்த்தோமென்றால் தமிழ் கூறுவது போல் நீங்கள் வாழ்வீர்கள் என்றால் மனதில் கலக்கம் கிடையாது. பயம் கிடையாது. மேற்கு உலகம் செல்வாக்கு செலுத்திய பிறகு அறிவியல், விஞ்ஞான நூல்களின் வழியாக மனிதர்கள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்ததற்கு பிறகு அதன் வழி அவர்களுடைய உள தத்துவ தேடலும் புறவியல் வளர்ச்சியும் ஒரு இடைவெளியை கண்ட பிறகு மனிதர்களுக்கு குழப்பமும் பயமும் அச்சமும் தொடர்ந்து வேறுவேறு மொழிகளில் சொற்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் ஒரு அறத்தை ஒரு மனிதன் பின்பற்றுகிறபோது அவனுக்கு எப்போதும் கலக்கம் வருவதற்கு வாய்ப்பில்லை.

Wednesday, June 12, 2024

திருக்குறள் வாழ்வியல் - பாயிரம் - பகுதி 1 // சிவ.கதிரவன்

                                              பாயிரம்

வணக்கம்,

     திருக்குறள் தொடர் வகுப்பில் திருக்குறள் வாசிப்பது குறித்து திருக்குறளை வாழ்வியலாக புரிந்து கொள்ள வேண்டும் என்கிற வகையில் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

    தற்போது கூட இந்த வகுப்பை, இந்த உரையாடலை இன்னும் செழுமையாக  இன்னும் செம்மைப்படுத்தி, செழுமைப்படுத்தி கொண்டு செல்ல வேண்டும் என்று எனக்கு பலரும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மீது, வாழ்வியல் மீது, திருக்குறள் மீது அன்பும் மரியாதையும் வாழ்வியல் மீது அக்கறையும் கொண்ட பலரும் இந்த வகுப்பினுடைய சாரம் குன்றாமல், எளிமை குறையாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நாம் மிகக் குறிப்பாக, பெரும் பேராக நான் நினைக்கிற வழிகாட்டல் என் தந்தையரின் வழிகாட்டல். அவர்கள் என் வகுப்பை கேட்பதும் அதன் மீது கருத்து சொல்வதும் அதை நெறிப்படுத்துவதும் மிகப்பெரும் பேராக, மகிழ்வாக நான் கருதுகிறேன். நல்ல தத்துவங்களை கற்றுக்கொடுத்தவர்கள், அறிமுகம் செய்தவர்கள், தமிழ் மீது நாட்டம் உருவாவதற்கு அன்னாரே காரணம். அவர்களின் வழிகாட்டல் என்னை அழைத்து திருக்குறள் வகுப்பு, வார்த்தை பிரயோகம், சொற்களின் கூட்டு எல்லாமும் இன்னும் செம்மைப்பட வேண்டுமடா என்று வலியுறுத்தி சொல்லியது, இந்த வகுப்பிற்கு இந்த தொடர்ந்த பணிக்கு ஒரு பெரிய மதிப்பு மிகுந்த அங்கிகாரமாக நான் நினைக்கிறேன்.

    நான் பலமுறை அவர்களோடு கேட்பதுண்டு. இதை பார்த்தீர்களா? இந்த வகுப்பை நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன் பார்த்தீர்களா என்று நான் பலமுறை கேட்டதுண்டு. பல நேரங்களில் அவர்கள் பார்ப்பார்கள். சில நேரங்களில் கருத்துகள் சொல்லுவார்கள். அதாவது இந்த வகுப்பு குறித்த அவர்களின் கருத்து என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. அது ஒரு சிறந்த விமர்சனமும் கூட. எனக்கு இருக்கிற சிக்கல், ஒரு மொழியை அல்லது ஒரு மொழியில் இருக்கக்கூடிய மிகச் சிறந்த அறநூலை, மறைநூலை துல்லியமாக  சொல்ல வேண்டிய பக்குவம் எனக்கு சிறிதளவே பிடிபட்டிருக்கிறது என்கிற காரணத்தினால் அந்த பக்குவத்தை இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆலோசனையை நான் பெற்றுக் கொள்வது நியாயமானது தான். அந்த வகையில் பலரும் திருக்குறள்  வகுப்பு குறித்து, திருக்குறளை வாழ்வியலாக பார்க்க  என்பது குறித்து நாம் செய்கிற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள், கலந்து கொள்கிறார்கள், நம்மை நெறிப்படுத்துகிறார்கள். இதை பெரும் பேராக, பெருமையாக நாம் கருதுகிறோம். அவர்கள் அனைவருக்கும் நாம் தொடர்ந்து இந்த பணியை செய்வதன் வழியாக அவர்களினுடைய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் இன்னும் மேன்மை செய்வோம் என்று நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

Thursday, February 1, 2024

திருக்குறள் வாழ்வியல் - வான் சிறப்பு - பகுதி 6 // சிவ.கதிரவன்

                                                 வான் சிறப்பு


வான் சிறப்பிற்குள் ஒரு மனிதன் மிகச் சிறந்த உணவை அமிழ்தமாக பார்க்கிற ஒன்றை, அமிழ்தமாக பார்க்க முடியும் என்கிற ஒன்றை வள்ளுவர் வைத்து தொகுக்கிறார். அமிழ்தமாக மழை இருக்கிறது. குடிநீராக இருக்கிறது. மழையே எல்லா உயிர்களுக்கும் பசியை போக்குகிறது. மழையே உழவிற்கு காரணமாக இருக்கிறது. மழையே உழவனை உயர்த்துகிறது; தாழ்த்துகிறது. மேலிருந்து மழை நீர் வரவில்லை என்று சொன்னால் கீழே பசுவிற்கு கூட அல்லது இளமையான பசுமையான எதையும் நாம் பார்க்க முடியாது என்று மேலும் மழை தன் பொழிப்பை  தன்னுடைய பருவத்தை மாற்றிக் கொண்டால் கடல் நீரும் தன்னுடைய வளமையை ஒன்றும் செய்ய முடியாது. இந்த குறளினுடைய நுட்பம் என்னவென்றால் கடல் நீர் பெரியது. கடல் நீர் என்பது பிரமாண்டமனது. அத்தகைய பிரமாண்டம் கொண்ட கடல் நீர் கூட மழை பெய்யாவிட்டால் தன்னுடைய வளமையை குறைத்துக்கொள்ளும் என்கிற பார்வையோடு சொல்கிறார்.

மேலும் இந்த உலகில் இருக்கிற எல்லா வழிபாடுகளும் கடவுள் வழிபாடே மழையை வைத்து தான் என்கிற அளவில் ஒரு பாடலை வைத்திருக்கிறார் என்பது நமக்கு எவ்வளவு உயர்வாக இயற்க்கையினுடைய தன்மைகளை, மழையினுடைய தன்மைகளை, உழவினுடைய தன்மைகளை வள்ளுவர் வழங்குகிறார் என்பதை நாம் மகிழ்வோடு பார்க்க முடிகிறது.

 அடுத்த குறளில் இந்த உலகம் அறமாக வாழ்வதற்கு இரண்டு அம்சங்கள் இருக்கின்றன என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒன்று தானம் செய்வது. தானம் நீங்கள் பிறருக்கு செய்வது. இரண்டாவதாக ஆன்மிக உலகில் பேசுகிற மெய்யியல் உலகில் பேசுகிற தவம் செய்வது. தானமும் தவமும் எப்படி சாத்தியம்? எதன் பொருட்டு சாத்தியமாகிறது என்று வள்ளுவரிடம் கேட்கிற போது இரண்டாவது அதிகாரத்தில் வள்ளுவர் சொல்கிறார், "தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்" இந்த உலகத்தில் நீங்கள் உங்களுக்காக செய்கிற தானமும் உங்களுடைய மன நிறைவிற்காக செய்கிற தானமும் உங்களுடைய ஆன்மிக வளர்ச்சிக்காக தத்துவ வளர்ச்சிக்காக செய்கிற தவமும் மழையை சார்ந்தே இருக்கிறது. ஒருவேளை மழை பொய்க்கும் என்றால் தானமும் செய்ய முடியாது. தவமும் செய்ய முடியாது என்று மழையினுடைய தேவையை, மழையினுடைய முக்கியத்துவத்தை, உணவினுடைய முக்கியத்துவத்தை உங்களுக்கு வழங்கப்படுகிற வளங்களினுடைய முக்கியத்துவத்தை மிக நெருக்கமான, நுட்பமான, அதிர்வான ஒரு உதாரணத்தோடு சொல்கிறார்.

திருக்குறள் வாழ்வியல் - வான் சிறப்பு - பகுதி 5 // சிவ.கதிரவன்

                                    வான் சிறப்பு 

www.swasthammadurai.com

அடுத்த குறட்பா இன்னும் வேறொரு தளத்தில் உணவை பற்றி பேசுகிறது. முதலில் உலக உயிர்கள் அனைத்திற்கும் பேசியாயிற்று. பின்பு மனிதனினுடைய உணவு உற்பத்தி முறையைப் பற்றி பேசியாயிற்று. இப்போது உணவு வேறு யாருக்கு என்று பார்க்கிற போது மனிதனைச் சுற்றி வளர்கிற ஜீவராசிகள், மனிதனை நம்பி வளர்கிற ஜீவராசிகள்  என்ற வகையில் ஒரு குறளை வைக்கிறார்.

மழை மேலிருந்து வருகிறது. மேலிருந்து வருகிற போது மழையினுடைய வருகை பொய்யாகப் போகுமென்றால் இந்த உலகில் ஒரு புல் கூட (அவர் பசும் புல் என்று குறிப்பிடுகிறார்.) இந்த பசும் புல் என்கிற சொல்லை பசுவின் புல் என்று வைத்துக்கொள்ளலாம். அந்த வகையில் தான் நான் மனிதரோடு வளர்கிற ஜீவரசிகள் என்று ஒரு சொல் குறிப்பை நான் உங்களோடு பகிர்ந்து கொண்டேன். பசும் புல் என்பதை வேறொரு பொருளிலும் நாம் இளமையான பசும் புல் என்றால் பசுமையான புல் என்றும் நாம் வைத்துக்கொள்ள முடியும். ஆக பசும் புல்லினுடைய நுனியை கூட நாம் பார்க்க முடியாது என்று அந்த குறளிலே வைக்கிறார். மேலிருந்து மழை நீர் வரவில்லை என்றால் வானிலிருந்து மழை நீர் வரவில்லை என்றால் “துளி வீழின்” என்கிற ஒரு சொல்லை, ஒரு துளி கூட மேலிருந்து வரவில்லை என்றால் கீழே தரையிலேயே பசுவின் புல்லை அல்லது பசுமையான புல்லை நாம் பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பது வள்ளுவரினுடைய இந்தக் குறளினுடைய பொருள்.

ஆக, இந்த அடுக்கு முறையில் அடுத்து நிலப்பரப்பில் இருக்கிற மனிதனைச் சுற்றி இருக்கிற வேறுவேறு அம்சங்களை பற்றி நாம் வள்ளுவரினுடைய பார்வையில் பார்க்க முடிகிறது.

அடுத்த பாடலில் மேகம் நீரைத் தராவிட்டால் இங்கு கடலும் கூட தன் வளமையை குறைத்துக் கொள்ளும். கடல் எவ்வாறு உற்பத்தி செய்கிறது. கடல் எவ்வாறு சுழற்சியை வைத்து இருக்கிறது என்றெல்லாம் கூட நாம் பார்க்க முடியும். என்ன பார்க்க முடியும் என்றால் மழை எவ்வாறு உற்பத்தி ஆகிறது என்று விஞ்ஞானப் பூர்வமான சில அணுகுமுறையை பார்க்கிறபோது சில செய்திகளை பார்க்கிற போது விஞ்ஞானிகள் ஒரு நீர் சுழற்சி முறையை விளக்கமாக கூறுகிறார்கள். 

திருக்குறள் வாழ்வியல் - வான் சிறப்பு - பகுதி 4 // சிவ.கதிரவன்

                                    வான் சிறப்பு 

www.swasthammadurai.com

 நான்காவது பாடல். மிகவும் முக்கியமான பாடல் அது. இது உழவர்களை பற்றி சொல்கிற பாடல். உழவர்களுக்கும் மழைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நாம் பார்க்கிறோம். ஏனென்றால் உழவுத் தொழில் செய்கிறவர்கள் மழையினை நம்பி அவர்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். முதல் மூன்று பாடல்கள் உலக உயிர்களுக்கு பொதுவான பாடல். எல்லோருக்கும் பொதுவான பாடல். நான்காவது பாடலில் மனித சமூகத்திற்கு வள்ளுவர் வந்து விடுகிறார். மழை வரத்து குறையுமென்றால் உழவர்கள் ஏர் பிடிப்பதற்கு வாய்ப்பில்லை.  இதுதான் நான்காவது பாடலில் உள்ள வரி.

 மழை பெய்ய வேண்டும். உழவர்களுக்கு நிச்சயமாக மழை பெய்ய வேண்டும். ஏர் பிடிக்க வேண்டும் என்றால் உணவு உற்பத்தி செய்ய வேண்டும் என்றால்  மனித சமூகம் வரப்பு கட்டி காய்கறிகளையும் தானியங்களையும் விளைவிக்க வேண்டும் என்றால் அதற்கு மழை வேண்டும். மனித சமூகத்தினுடைய உற்பத்தி முறைக்கு, உணவு உற்பத்தி முறைக்கு மழை வேண்டும் என்கிற பொருளில் பார்க்கிறபோதும் கூட வள்ளுவர் மழையினை உழவர்களுக்கு நெருக்கமாக,  உணவு உற்பத்திக்கு நெருக்கமான ஒன்றாக சொல்கிறார். ஆக, முதல் மூன்று பாடல்கள் உலக உயிர்களினுடைய பொதுத் தன்மையோடு நேரடியாக பொருள் கொள்ள முடிகிறது.

 உணவை மையமாகக் கொண்டு மூன்று குறளில் உலக உயிர்களினுடைய உணவை மையமாகக் கொண்டு பேசுகிற மேன்மையோடு இருக்கிறது.

அடுத்த குறட்பாட்கள் உற்பத்தி உணவு சார்ந்த உற்பத்தி முறையை பேசுவதாக இருக்கிறது. மழை வரத்து குறைகிற போது மழை வரத்து இல்லாத போது உழவர்கள் உழுவதற்கு ஏர் பிடிக்க முடியாது. உழவர்களினுடைய உணவு உற்பத்திக்கு மழை  மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. மழை இருந்தால் மட்டுமே உணவு உற்பத்தி சாத்தியம் என்று நான்காவது குறளை சொல்கிறார்.

இந்தக் குறளுக்கு அடுத்த குறளில் சொல்கிற பாடல் இதைப் போலவே உழவர்களினுடைய வாழ்க்கையை மழை எவ்வாறு உறுதி செய்கிறது "கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே” - மழை என்பது கெடுக்கவும் செய்யும். மழை பெய்யாமல் நின்று கெடுக்கும் என்று ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார். 

மனிதனை முதன்மைப்படுத்தி பேசுகிற போது, உழவர்களை முதன்மைப்படுத்தி பேசுகிற போது மழையை குறிப்பிடுகிற போது மழை சில நேரங்களில் பெய்யாமல் கெடுத்து விடும். அப்படி கெடுத்த பின்பு அந்த மழையே உழவனுக்கு துணை நின்று பெரும் விளைச்சலை கொடுக்கும் வல்லமையுடையது என்று மழையை மழையினுடைய இரண்டு வேறு தன்மைகள் வழியாக இந்த உழவு உற்பத்தியை வள்ளுவர் போற்றி அந்த குறளை வைத்திருக்கிறார். ஆக இந்த உற்பத்தி முறையில் வள்ளுவர் அடுக்கி வைத்திருக்கிற குறட்பாக்களை நாம் பார்க்கிறபோது இந்த இரண்டு  குறட்பாக்களும் உழவன் - உணவு உற்பத்தி என்கிற வகைமையில் பார்க்க முடிகிறது நண்பர்களே.

 ...தொடர்ந்து பேசுவோம்...

 


திருக்குறள் வாழ்வியல் - வான் சிறப்பு - பகுதி 3 // சிவ.கதிரவன்

                                                     வான் சிறப்பு

www.swasthammadurai.com


மூன்றாவது பாடலை நீங்கள் வாசிக்கிற போது மழை இல்லாது போனால்   விண் இன்று பொய்ப்பின் என்று குறளை துவங்குகிறார். மழை இல்லாது போனால் இந்த உலகத்தில் எல்லா பக்கமும் கடல் சூழந்திருந்தாலும் கூட (ஏனென்றால் கடல் சூழ்த்திருக்கிற இந்த உலகத்தில் எல்லா பக்கமும் கடல் என்றால் நீர் என்று பொருள்.) நீர் சூழ்ந்திருக்கிற உலகில் நாம் நீரோடு வாழ்ந்து உணவை தேடிக்கொள்ளலாம் என்றால் கடல் நீரில் குடிப்பதற்கு, உணவு அருந்துவதற்கு வாய்ப்பில்லை என்று நாம் உணர்த்திருப்போம். அப்படி உலகம் முழுவதும் நீர் இருக்கிறதே அதை குடித்து கொள்ளலாம் என்று நாம் கற்பனை செய்யலாம் என்றால் கடல் நீரை குடிக்க முடியாது.

உலகமெல்லாம் நீர் சூழ்ந்திருந்தாலும் கூட மழை நீர் வரவில்லை என்றால் உயிர்கள் பசியால் வாடும் என்று விண் இன்று பொய்ப்பின் என்ற குறளில் வள்ளுவர் விளக்குகிறார். ஆக முதல் பாடலில் மழை நீரை அமிழ்தம் என்கிறார். இரண்டாவது பாடலில் மழை நீரே குடிநீராகவும் எல்லா உயிர்களுக்கு உணவாகவும் இருக்கிறது என்கிறார்.

மூன்றாவது பாடலில் உலகம் முழுவதும் நீர் சூழ்ந்த்திருக்கிறது என்று நாம் பார்த்து கொண்டிருந்தாலும் படித்துகொண்டிருந்தாலும் அந்த நீரினால் ஏற்படும் பயனைவிட உணவிற்கு தருகிற மழை நீர் மேன்மையானது என்று பாடுகிறார்.

ஆக, தொடர்ந்து உணவிற்கு நெருக்கமான செய்திகளோடு வானை, மழையை போற்றுகிற வள்ளுவர் ஏன் அவ்வாறு போற்ற வேண்டும் என்ற வினாவை நான் யோசித்து பார்க்கிறேன். உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஏன் மழை நீரை போற்ற வேண்டும் என்று நாம் யோசிக்கிற போது மழை நீர் வழியாகத்தான் நல்லா உணவு கிடைக்கிறது என்பதை நாம் பார்க்க முடியும். மழை நீர் சுத்தமான உணவு.  நிலத்தில் வெறும் நீரை நீங்கள் ஊற்றுகிறீர்கள்.  உங்கள் வீட்டில் சேமிக்கப்பட்டிருக்கிற நீரை, நிலத்தடி நீரை ஊற்றுகிறீர்கள் என்றால் தினமும் ஊற்றுகிற போது அது எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை நிலத்தின் மீது. ஒருவேளை நீங்கள் மழை நீர் பொழிகிற நிலத்தை பார்ப்பீர்கள் என்றால் மழை நீர் பொழிந்து முடித்தவுடன் மறுநாள் விடியலில் அந்த நிலம் முழுவதும் பசுமையாக மாறியிருப்பதைப் பார்க்க முடியும்.

Tuesday, January 30, 2024

திருக்குறள் வாழ்வியல் - வான் சிறப்பு - பகுதி 2 // சிவ.கதிரவன்

                                                 வான் சிறப்பு

www.swasthammadurai.com


இரண்டாவது அதிகாரம் வான் சிறப்பு என்று பெயர் வைத்திருக்கிறார். வான் சிறப்பு என்றால் அது ஒரு செய்தி போல நாம் எடுத்துக் கொள்ளலாம். வானம் சிறப்பானது என்று புரிந்து கொள்ளலாம். வானம் தான் சிறப்பானது என்று புரிந்து கொள்ளலாம் அல்லது வானத்தின் சிறப்புகள் என்று புரிந்து கொள்ளலாம். என்றாலும் வானம் சிறப்பாக இருப்பதோ வானம் சிறப்பில்லாமல் இருப்பதோ எப்படிப்பட்டது என்று நமக்கு முக்கியமானது இல்லை. ஏனென்றால் நாம் கருதுகிற அடிப்படையில் வானம் தன் சிறப்பை வைத்துக்கொள்ளப் போவதில்லை அல்லது நாம் கருதுகிற அடிப்படிடையில் வானத்தின் சிறப்புகளை பற்றி வானத்திற்கு கவலை ஒன்றும் இல்லை.

ஆனால் வள்ளுவர் வான் சிறப்பு என்று வைத்திருப்பதற்கு என்ன அடிப்படை காரணம் என்று நாம் சிந்திக்கிற போது வானம் உணவை வழங்குகிற சிறப்போடு இருக்கிறது. வானம் தொடர்ந்து உணவை வழங்குகிற சிறப்போடு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் நாம் இந்த அதிகாரத்தை ஒருமுறை வசித்து பார்க்க வேண்டிருக்கிறது.

ஆக, வானம் சிறப்பாக இருப்பதற்கு என்ன காரணம்  என்று நாம் பேசுகிற போது வானம் உணவு வழங்குகிறது என்று அதிகாரம் முழுவதும் சொல்கிறார். அந்த அதிகாரத்தில் உள்ள பாடல்களை நீங்கள் வாசித்து பார்க்கிற போது அதிகாரத்திற்குள் இருக்கிற குறட்பாக்களை நாம் பொருள் தேடுகிற போது அது உணவிற்கு மிக நெருக்கமான குறிப்புகளை வைத்திருக்கிறது என்று நீங்கள் பார்க்க முடியும்.

Monday, January 29, 2024

திருக்குறள் வாழ்வியல் - வான் சிறப்பு - பகுதி 1 // சிவ.கதிரவன்


திருக்குறள் வாழ்வியல் - வான் சிறப்பு


www.swasthammadurai.com


  திருக்குறள் போல ஒரு நல்ல நூலை நாம் பேசுவது என்பது ஒரு இலக்கிய தளத்தில் ஆரோக்கியமானது என்பது  மட்டுமல்லாமல் நம்முடைய அறிவு வளர்ச்சியில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அது நமக்கு ஒரு பெரும் உயர்வை தரும் வல்லமையுடையது என்பதாகவும் எனக்கு ஒரு கருத்து உண்டு எப்போதும்.

 கடவுள் வாழ்த்து என்று முதல் பகுதியை நாம் சென்ற உரையாடலில் பாத்திருந்தோம். அதாவது திருக்குறளினுடைய முன்னுரையில் நான்கு அதிகாரங்களை வள்ளுவர் வைத்திருக்கிறார். அதில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. இரண்டாவது அதிகாரம் வான் சிறப்பு. இன்று நாம் வான் சிறப்பு பற்றி பேச வேண்டும் என்பது நாம் வகுத்து வைத்திருக்கிற முடிவு. வான் சிறப்பை பேசுவதற்கு முன்பு சில செய்திகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

திருக்குறளை ஒரு வாழ்வியல் நோக்கில் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். உரையாடிக் கொண்டிருக்கிறோம். நாம் வாழ்வை செம்மையாக வாழ்வதற்கு திருக்குறள் நல்ல வழிகாட்டும் நூலாக இருந்து கொண்டிருக்கிறது என்ற புரிதலில் நாம் திருக்குறளை படித்துக் கொண்டிருக்கிறோம். இலக்கிய பெருமகனார்கள், பெரும் பெரும் சிந்தனையாளர்கள் திருக்குறளின் மீது தனிப்பட்டு கவனம் செலுத்தி அவற்றிற்குள் இருக்கிற நுட்பங்களை விரிவாக பேசியவர்கள் என்று பலரும் திருக்குறள் மீது பெரிய நேசத்தோடு, மதிப்போடு பதிவு செய்திருக்கிறார்கள். எல்லாமும் நீங்கள் அறிந்தது தான்.

ஆனால் வாழ்வியல் நோக்கில்  திருக்குறளைப் பற்றி நாம் பேசுவது என்பது சற்று புதிய கோணத்தில் நாம் திருக்குறளை வாழ்வியல் நோக்கில் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்கிற பாணியில் அவற்றை நாம் தொடர்ந்து செய்கிறோம். முதல் அதிகாரத்திலேயே வள்ளுவர் வாழ்வதற்கு ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் வேண்டும் என்று பார்க்கிறபோது வாழ்வினுடைய அர்த்தமாக சொல்லப்படுகிற புகழ், பெயர், செல்வம், துன்பமில்லாமை, நெருக்கடியிலிருந்து விடுதலை, பிறவிப் பெருங்கடல் இவ்வாறு ஒரு மனிதன் வாழ்வதற்கு என்னென்ன சிக்கல்களை பட்டியலில் வைத்திருக்கிறாரோ அந்த பட்டியலின் அடிப்படையில் என்ன செய்ய வேண்டும் என்பதை முதல் அதிகாரத்திலேயே திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார்.

திருக்குறள் வாழ்வியல் // கடவுள் – கடவுள் தன்மை // பகுதி 4 // சிவ.கதிரவன்

                                 கடவுள் – கடவுள் தன்மை 

www.swasthammadurai.com


வேண்டுதல் வேண்டாமை இலான் - வேண்டுதலும் இலான்; வேண்டாமையும் இலான். இது யாரை குறிப்பிடுவது. அப்படி ஒரு நபரை நீங்கள் சந்தித்திருக்கவே மாட்டீர்கள். அது அனேகமாக உங்கள் கற்பனையில், நீங்கள் கற்பனையினுடைய எல்லையை விரிப்பீர்கள் என்று சொன்னால் இது பிரபஞ்சத்தில் ஆதியை நோக்கி நகர்ந்து விடுவது. வேண்டுதல் இலான்; வேண்டாமை இலான்.அப்படி எப்படி ஒரு மனிதன் இருக்க முடியும்? இருக்க முடியும் என்கிறார் வள்ளுவர்.

அவரை இறைவன் என்று நீங்கள் கருதி கொள்ளலாம் அல்லது இருத்தல் என்று கருதிக் கொள்ளலாம் இயற்கை என்று கருதிக் கொள்ளலாம்.  அந்த கருதுகோல் இப்போது நம் கவனத்திற்கு ஒரு செய்திதான். ஆனால் வாழ்வை துன்பமில்லாமல் வாழ்வதற்கு என்ன செய்வது என்றால் வேண்டுதல் இல்லாமலும் வேண்டாமை இல்லாமலும் இருக்கிற ஒருவனுடைய பாதத்தை நீங்கள் சேர்வீர்கள் என்று சொன்னால், அடியை நீங்கள் சேர்வீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் துன்பமில்லை. இது உங்கள் பட்டியலில் இருக்கக்கூடிய இரண்டாவது டிக். ஆக முதல் டிக் நீண்ட காலம் வாழ்வதற்கு என்ன செய்வது? மலர்மிசை ஏகினானினுடைய அடி சேர்வது. சரி நீண்ட காலம் வாழ்வதற்கு வழி சொன்னீர்கள். இரண்டாவது துன்பமில்லாமல் வாழ்வதற்கு என்ன செய்வது? துன்பமில்லாமல் வாழ்வதற்கு வேண்டுதாலும் இல்லாமல் வேண்டாமையும் இல்லாமல் இருக்கிற நிதானமான ஒரு நபர். அப்படி ஒரு நபரை தேடி கண்டுபிடிக்க வேண்டும். அப்படி தேடி கண்டுபிடிப்பீர்கள் என்று சொன்னால் அவரது பாதத்தை நீங்கள் வணங்குகிற போது உங்கள் வாழ்நாள் முழுவதும் துன்பமில்லை. இது இரண்டாவது பாயிண்ட். சரி ரெண்டும் ஓகே. ரெண்டுக்கும் நான் நீங்கள் சொன்ன மாதிரி செஞ்சிட்டேன். இப்போது நான் புகழோடு வாழனும் சாமி. நான் என்ன செய்றது? இதெல்லாம்  வாழ்க்கையில் நமக்கு பட்டியலில் இருக்கும். நான் ஏன் இவ்வளவு பெரிய வீடு கட்டி இருக்கேன். ஊர்ல உள்ளவங்க எல்லாம் என்னை பார்த்து சிறப்பா சொல்லணும். ஏன் எல்லாருக்கும் நான் நல்ல நாள், பெருநாளுக்கு துணிமணி எடுத்து கொடுக்கிறேன். ஐயாவை பத்தி பெருமையா சொல்லணும். அப்படிங்கிற எண்ணமெல்லாம் நமக்கு இருக்கும். இதுல என்ன காரணம்னா புகழ் சேரணுங்கறதுக்காக. புகழுங்கறதுக்கு தனியா ஒரு இடத்துல திருவள்ளுவர் நமக்கு வேறொரு பாடத்தை நடத்துறாங்க. ஆனா அடிப்படையா ஒரு மனிதனினுடைய உள்ளத்துல ஒரு மனிதனினுடைய மன ஓட்டம்  வாழ்க்கையில வந்தவுடனே என்ன எல்லாம் நமக்கு மனசுக்குள்ள எழும்புது  அப்படிங்கிறத திருவள்ளுவர் நமக்கு சொல்றாங்க.

பொறுத்தல் எனும் சீர்நிலைச் சாரம் - பகுதி 1 - சிவ கதிரவன்

பொறுத்தல் எனும் சீர்நிலைச் சாரம்             நா ம் இன்றைக்கு சீர்குலைவான ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சீர்குலைவு என்பது பரவிக் கொ...