Thursday, February 1, 2024

திருக்குறள் வாழ்வியல் - வான் சிறப்பு - பகுதி 3 // சிவ.கதிரவன்

                                                     வான் சிறப்பு

www.swasthammadurai.com


மூன்றாவது பாடலை நீங்கள் வாசிக்கிற போது மழை இல்லாது போனால்   விண் இன்று பொய்ப்பின் என்று குறளை துவங்குகிறார். மழை இல்லாது போனால் இந்த உலகத்தில் எல்லா பக்கமும் கடல் சூழந்திருந்தாலும் கூட (ஏனென்றால் கடல் சூழ்த்திருக்கிற இந்த உலகத்தில் எல்லா பக்கமும் கடல் என்றால் நீர் என்று பொருள்.) நீர் சூழ்ந்திருக்கிற உலகில் நாம் நீரோடு வாழ்ந்து உணவை தேடிக்கொள்ளலாம் என்றால் கடல் நீரில் குடிப்பதற்கு, உணவு அருந்துவதற்கு வாய்ப்பில்லை என்று நாம் உணர்த்திருப்போம். அப்படி உலகம் முழுவதும் நீர் இருக்கிறதே அதை குடித்து கொள்ளலாம் என்று நாம் கற்பனை செய்யலாம் என்றால் கடல் நீரை குடிக்க முடியாது.

உலகமெல்லாம் நீர் சூழ்ந்திருந்தாலும் கூட மழை நீர் வரவில்லை என்றால் உயிர்கள் பசியால் வாடும் என்று விண் இன்று பொய்ப்பின் என்ற குறளில் வள்ளுவர் விளக்குகிறார். ஆக முதல் பாடலில் மழை நீரை அமிழ்தம் என்கிறார். இரண்டாவது பாடலில் மழை நீரே குடிநீராகவும் எல்லா உயிர்களுக்கு உணவாகவும் இருக்கிறது என்கிறார்.

மூன்றாவது பாடலில் உலகம் முழுவதும் நீர் சூழ்ந்த்திருக்கிறது என்று நாம் பார்த்து கொண்டிருந்தாலும் படித்துகொண்டிருந்தாலும் அந்த நீரினால் ஏற்படும் பயனைவிட உணவிற்கு தருகிற மழை நீர் மேன்மையானது என்று பாடுகிறார்.

ஆக, தொடர்ந்து உணவிற்கு நெருக்கமான செய்திகளோடு வானை, மழையை போற்றுகிற வள்ளுவர் ஏன் அவ்வாறு போற்ற வேண்டும் என்ற வினாவை நான் யோசித்து பார்க்கிறேன். உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஏன் மழை நீரை போற்ற வேண்டும் என்று நாம் யோசிக்கிற போது மழை நீர் வழியாகத்தான் நல்லா உணவு கிடைக்கிறது என்பதை நாம் பார்க்க முடியும். மழை நீர் சுத்தமான உணவு.  நிலத்தில் வெறும் நீரை நீங்கள் ஊற்றுகிறீர்கள்.  உங்கள் வீட்டில் சேமிக்கப்பட்டிருக்கிற நீரை, நிலத்தடி நீரை ஊற்றுகிறீர்கள் என்றால் தினமும் ஊற்றுகிற போது அது எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை நிலத்தின் மீது. ஒருவேளை நீங்கள் மழை நீர் பொழிகிற நிலத்தை பார்ப்பீர்கள் என்றால் மழை நீர் பொழிந்து முடித்தவுடன் மறுநாள் விடியலில் அந்த நிலம் முழுவதும் பசுமையாக மாறியிருப்பதைப் பார்க்க முடியும்.

நிலத்திற்குள் இருக்கிற சின்ன சின்ன பசுந்தளிர்களினுடைய  விதைகளையும் செழிப்பாக வளர வைக்கிற ஒரு ஆற்றல் மழை நீருக்கு இருக்கிறது என்பதை நாம் இயற்கையியல் சான்றுகளோடு பார்க்க முடியும். நம் கண் முன்னே பார்க்க முடியும். ஆக, அத்தகைய உயிர்ப்பு நிலை மழை நீருக்குள் ஒளிந்திருகிறது என்ற காரணத்தினாலேயே வள்ளுவர் இரண்டாவது அதிகாரத்தில் மழை நீரை உணவின் நெருக்கமான ஒன்றாக, உணவின் நெருக்கத்தை மனிதனினுடைய வாழ்வியல் தேவையாக அடிக்கியிருக்கிறார் என்பதை நான் பார்க்கிறேன். இது உணவுக்காக என்று நாம் நினைக்கிற உணவு பழக்கவழக்கதிலிருந்து போற்றுவதற்குரிய தன்மையில் சொல்லப்படுவது இல்லை. ஏனென்றால் நான் முதலிலேயே நான் உங்களுக்கு குறிப்பிட்டேன். உணவு என்றவுடன் நம் நினைவில் வருகிற உணவெல்லாம் உணவே அல்ல.  எந்த உணவு உங்களுக்கு ஆற்றலை தருகிறதோ, எந்த உணவு உங்களுக்கு நோயில் இருந்து விடுதலை செய்கிறதோ - என்கிற எல்லையை தாண்டி இந்த உலகில் இருக்கிற எல்லா உயிர்களுக்கும் பொது உணவாக இருக்கிற உணவு மேன்மையான உணவு. எல்லா உயிர்களுக்கும் பொருந்த வேண்டும். அறநூல் என்று நாம் ஒன்றை படிக்கிறபோது, மறைநூல் என்று நாம் ஒன்றை படிக்கிறபோது, மெய்யியல் நூல் என்று நாம் ஒன்றை படிக்கிறபோது அது படிப்பவருக்கு மட்டும் அல்லாமல் இந்த உலகில் இருக்கிற எல்லோருக்கும் பொதுவான ஒன்றாக அது இருந்தால் மட்டுமே மெய்யியல் நூலாக நாம் கருத்திக்கொள்ள முடியும். இல்லையென்றால் அது ஒரு பிரச்சார நூல் போல் சுருங்கிவிடும். ஒரு மெய்யியல் நூல் என்பது உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொருந்துகிற கருத்துகளோடு எல்லா உயிர்களையும் மேன்மை செய்கிற பார்வையோடு அமையப் பெற்றிருந்தால் மட்டுமே அது ஆகச் சிறந்த மெய்யியல் நூலாக இருக்க முடியும்.

மெய்யியல் கோட்பாடு பேசுகிறவர்களை நீங்கள் பார்த்தீர்கள் என்று சொன்னால் எல்லோருக்கும் அப்படித்தான் வரையறை வைத்திருக்கிறார்கள். மெய்யியல் பேசுகிற எல்லோருமே அப்டியான வரையறை வைத்திருக்கிறார்கள். புத்தராக இருக்கட்டும்; இயேசு கிறிஸ்துவாக இருக்கட்டும்; புராணங்களில் சொல்லப்படுகிற கிருஷ்ண பரமாத்மாவாக இருக்கட்டும் எல்லோரும் உலகில் இருக்கிற எல்லா உயிர்களுக்குமுரிய கோட்பாட்டை பொதுமையில் வைத்து பேசுகிறார்கள். அப்படி பேசுகிற போது வள்ளுவர் மட்டும் எப்படி மனிதனுக்கான ஒன்றை மெய்யியலாக குறிப்பிடுவார் என்று நாம் சிந்தித்து முடிவு செய்ய முடியும். அந்த வகையில் உலகில் இருக்கிற எல்லா உயிர்களுக்கும் உணவாக அமைவது மழை. எனவே ‘வான் சிறப்பானது’ என்று வள்ளுவர் நம் முன் சொல்கிறார் என்று நான் புரிந்து கொள்கிறேன். இப்போது மூன்றாவது பாடலில் உள்ளது போல மழை இல்லாது போனால் எல்லா பக்கமும் நீர் சூழ்ந்திருந்தாலும் கூட உலக  உயிர்கள் பசியால் வாடும் என்று மூன்றாவது பாடலை வள்ளுவர் சொல்கிறார்.

...தொடர்ந்து பேசுவோம்...

 

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...