நீத்தார் பெருமை
நிறைவாக நீங்கள் ஒரு உணவை உண்ட பின்பு, நிறைவாக நீங்கள் ஒரு உணவை நீங்கள் எடுத்துக்கொண்ட பின்பு அந்த உணவின்
மீது நாம் நிறைவாக உண்டோம் என்று உணர்வு ஏற்படுகிற போது மீண்டும் மீண்டும் அந்த உணவை
கட்டாயப்படுத்தி உங்களுக்கு ஒருவர் ஊட்டி விட முடியாது. நீங்கள் அதன் மீது போதுமான
நிறைவுத் தன்மையோடு இருக்கிறபோது
அதன் மீது உங்களுக்கு இருக்கிற பற்று மெது மெதுவாக விலகிச் செல்வதை நீங்கள் பார்க்க
முடியும். அதுதான் துறவு. உங்கள் அனுபவம்
நிரம்பி இருக்கிற போது எல்லாவற்றின் மீதும் எல்லா
பொருள்களின் மீதும் உங்களை சுற்றி இருக்கிற எல்லா உறவுகளின் மீதும் உங்கள் அனுபவத்தினுடைய
அறிவின் பொருட்டு,
உங்கள் அனுபவத்தினுடைய நிதானத்தின் பொருட்டு நீங்கள் வைத்திருக்கிற பற்றான செயல்பாடுகள், நீங்கள் வைத்திருக்கிற பற்றுக்கொண்ட வினையாற்றும் முறை எல்லாமும் மெதுமெதுவாக நகர்ந்து
அமைதி நிலைக்கு செல்வதை நீங்கள் பார்ப்பீர்கள்.
அதற்கு பெயர் துறவு. துறவு என்பது அப்படியானது தான்.
நன்றாக ஒருவர் வாழ்வை நிறைவாக வாழ்ந்திருக்கிறார். இந்த வாழ்வில் தமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் தவறவிடாமல் எல்லாவற்றையும் நிறைவாக பயன்படுத்தி
வாழ்ந்திருக்கிறார் என்றால் அந்த வாழ்க்கை முறையில் அவர் பெற்றிருக்கிற அனுபவம் அந்த
வாழ்க்கைக்கு ஊடே இருக்கிற எல்லாவற்றின்
மீதும் எல்லா செயல்பாடுகளின் மீதும் ஒரு நிறைவை அவருக்கு கொடுத்திருக்கும். ஒரு அறிவை அவருக்கு கொடுத்திருக்கும்.
இது அவரை துறவியாக மாற்றி இருக்கும். ஆக,
துறவு என்பது நீங்கள் முயற்சிப்பது அல்ல.
உங்களுக்குள் நிகழ்வது.
சிறிய குழந்தையாக இருக்கிற ஒருவர் ஒரு வேலையை
செய்கிறார்.
உதாரணமாக வீட்டில் இருக்கிற ஒரு குழந்தை ஒரு விளையாட்டு பொருளை உருட்டிக் கொண்டிருக்கிறது. அதோடு விளையாடுகிறது. தொடர்ந்து
விளையாடி அந்த பொருளுக்கும் அதற்குமாக இருக்கிற உறவை பலப்படுத்திக் கொள்கிறது. அந்த
பொருளில் அந்த குழந்தை நிறைவு கொள்கிறது. அந்த குழந்தை பின்னாளில் வளர்ந்து நிற்கிற
போது அந்த பொருளோடு விளையாடுகிற இன்னொரு குழந்தையை பார்க்கிற போது அந்த குழந்தை விளையாடுகிற
விளையாட்டுக்களை அது உருட்டி எழுப்புகிற சத்தங்களை தாம் குழந்தையாக இருந்த போது முழுமையாக
நிறைவாக விளையாடிய ஒருவரால் மிகச் சரியான புரிதலோடு பார்க்க முடியும். இப்போது அவர்
வளர்ந்திருக்கிறார். நிறைவான விளையாட்டிலிருந்து விடுபட்டு இருக்கிறார். வேறொரு அதை பயன்படுத்தி
விளையாடுகிறார் என்கிற நிலையில் அதை பார்க்கிறபோது இந்தக் குழந்தையும் நிறைவாக விளையாடுகிற
போது சத்தங்களை நிறுத்திக் கொள்ளும் என்கிற புரிதலோடு அவர்
அந்த குழந்தை மீது அன்பாகவும் அருளாகவும் காத்திருப்பார். இந்த குழந்தை எழுப்புகிற
சத்தத்தின் பொருட்டு அந்த குழந்தை மீது எதிர்வினை செய்யமாட்டார்.
எந்த ஒன்றையும் நீங்கள் தலையிடாமல், நிதானதோடு, கவனத்தோடு அது அதன் போக்கில்
சென்று சரியான திசைக்கு வந்து சேரும் என்று உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்பதற்கு
அடிப்படை நீங்கள் அனுபவத்தில் அறிவு பெற்றவராக இருக்க வேண்டும். நீங்கள் ஒன்றில் தலையிட்டு அதை சரி செய்து கொள்ள முடியும்
என்று வேகமாக வருவீர்கள் என்றால்,
தாவலாக வருவீர்கள் என்றால் உங்களுக்கு அனுபவம் இல்லை. அனுபவம் தந்த அறிவினுடைய பகுதி பூர்த்தியாகவில்லை என்று பொருள்.
ஒரு துறவிக்கு அப்படி நிகழாது. ஒரு துறவி தன் அனுபவத்தின்
வழியாக அறிவைப் பெற்றுக் கொண்டவர். அடுத்த நிகழ்வு என்ன என்று
அவரால் துல்லியமாக பார்க்க முடியும். இந்த கல் வானத்தைத் தாண்டி வீசக்கூடிய வல்லமை
வீசுபவருக்கு கிடையாது.
ஒருவேளை வீசினால் என்றாலும்கூட கல் வானத்தை தாண்டி சென்று விட முடியாது என்று வானம் - கல் - வீசுபவர் என்று முப்பொருளையும்
புரிந்து வைத்திருக்கிற நிதானம் துறவிக்கு அவர் அனுபவத்தின் பாற்பட்டு அறிவாக வாய்த்திருக்கிறது. இந்த அனுபவத்தின் வழியாக அறிவின் வழியாக துறவி முழுக்க
நிதானமாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும். இந்த புரிதலை நீங்கள் பார்ப்பீர்கள்
என்றால் அதற்க்கு பெயர் துறவு.
துறவு
என்பது ஒன்றை புறக்கணிப்பதோ,
ஒன்றை தள்ளிவிடுவதோ ஒன்றோடு மாறுபட்டு நிற்பதோ அல்ல. அத்தகைய இலக்கணம் கூட அதற்கு பொருத்தமான ஒப்பிடும்
அல்ல. துறவு
என்பது உங்களை விட்டு நீங்கி சென்ற ஒன்று அதன் மீது உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற புரிதல். எனக்கு இந்த
பொருள் மீது நாட்டம் இல்லை.
ஏனென்றால் இந்த பொருளை முழுவதுமாக நான் அனுபவப்பூர்வமாக
பார்த்திருக்கிறேன் என்று உங்களால் உணர முடிந்தால் அதற்க்கு பெயர் நீங்கள் அந்த பொருளில்
துறவு நிலையில் இருக்கிறீர்கள் என்று பொருள். இந்த வாகனத்தை நான் நிறைவாக பயணித்து
முடித்திருக்கிறேன்.
இந்த வாகனத்தின் வழியாக எனக்கு ஏற்பட்ட பயண அனுபவங்கள் அலாதியானது. இதற்குள் என்ன என்று எல்லாமும்
எனக்கு அறிந்திருக்கிறது என்று நீங்கள் உணர்த்திருந்தால் அந்த வாகனத்தின் மீதான நாட்டம்
உங்களை விட்டு சென்றிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். இதற்க்கு பெயர் துறவு. துறவு என்பது இப்படியானதாக
இருக்கிறது. இந்த அறிவின்
பாற்பட்டு ஏற்படுகிற அனுபவத்தின்
பாற்பட்டு ஏற்படுகிற பற்று நீக்கம்
என்பது துறவாக அமைகிறது. இந்த துறவு அதற்கே உரிய ஒழுங்கோடு இருக்கிறது. அதற்கே உரிய ஒழுக்கதோடு
இருக்கிறது. இந்த துறவை கைகொண்டவர்களே இந்த உலகில் மெய்யான துறவிகளாக இருந்திருக்கிறார்கள். அந்த வகையிலேயே புத்தர் துறவியாக
போற்றப்படுகிறார்.
அந்த வகையிலேயே இயேசு கிறிஸ்து துறவியாக போற்றப்படுகிறார். அந்த வகையிலேயே மகாவீரர்
துறவியாக போற்றப்படுகிறார். அந்த வகையிலேயே
இன்னும் பிற மார்க்கங்களை உருவாக்கிய,
தத்துவங்களை உருவாக்கிய தத்துவவாதிகள் துறவிகளாக போற்றப்படுகிறார்கள். அந்த வகையிலேயே
தான் சித்தர்களும் மகாமுனிகளும் துறவிகளாக போற்றப்படுகிறார்கள்.
அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஏற்பட்ட அனுபவத்தின்
வழியாக, அந்த அனுபவத்தில் பெற்றுக்
கொண்ட அறிவின் வழியாக தன்னைச் சுற்றி இருக்கிற மனிதர்கள் மீது அவசரம் இல்லாமல், தலையிடாமல் காத்திருக்கிறார்கள்.
தன்னை சுற்றி இருக்கிற பொருள்கள் மீது நிதானத்தோடு, அபகரிப்பு செய்யாமல் பொருத்திருக்கிறார்கள். இந்த அபகரிப்பின்மையும்
தலையிடாமல் காத்திருக்கிற காத்திருப்பு நிலையும் துறவிகளின் பயிற்சியின் காரணமாக வந்ததல்ல. அவர்களின் புரிதலிருந்து
வந்தது. அந்த புரிதலுக்கு அடிப்படையாக
அவர்களது அறிவு இருக்கிறது அந்த அறிவிற்கு அடிப்படையாக அவர்களது அனுபவம் இருக்கிறது. இந்த
அனுபவமும் அறிவும் அறிவு தருகிற புரிதலும் புரிதலின் விளைவாக வந்து நிற்கிற நிதானமும் காத்திருப்பும் உங்களை துறவியாக தரம் உயர்த்தும்
என்று வள்ளுவரின் வாக்கில் வள்ளுவரின் வாழ்வியல் வழிகாட்டலின் வழியாக நான் புரிந்து
கொள்கிறேன். அப்படியான துறவை வள்ளுவர் நமக்கு முன் அறிமுகம் செய்கிறார்.
...தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment