நலம் எனப்படுவது
ALSO READ:GET RID OF MISERY - துயரங்களிலிருந்து விடுபட
இருமல், தும்மல் என்கிற அளவில் ஒருவர் நலத்தை
பார்ப்பதற்கு தவிக்கிறார் என்றால் அவருக்கு கிடைக்கிற எளிய மருந்துகளும் மருத்துவ குறிப்புகளும்
கூட முக்கியமானது. என்னுடைய ஆற்றல் சார்ந்து நலம் தீர்மானிக்கப்படுகிறது என்று ஒருவர்
தீர்மானித்தால், ஒருவர் தேடினால் அவருக்கு எளிய இலைகளும் கொடிகளும் சூரணங்களும் நலத்தைத்
தருவதற்கு பயன்படாது. என் மனம்தான் என் நலத்தை தீர்மானிக்கிறது என்று ஒருவர் கருதுவார்
என்றால் அவருக்கு ஆற்றல் சார்ந்த உதவிகளும் பொருள் சார்ந்த சூரணங்களும் உதவி செய்யாது.
ஒரு மனிதனின் நலம் அவர் நலத்தை எவ்வாறு புரிந்து
வைத்திருக்கிறார்? என்று துவங்குகிறது என்று நான் பார்க்கிறேன். ஆனால் ஒவ்வொரு மனிதர்களும்
நலம் என்கிற உணர்வில் இருந்து நலத்தை பார்ப்பதை விடவும் நலம் என்கிற கருத்திலிருந்தே
பார்க்க முற்படுகின்றனர். நலம் என்ற கருத்து அல்லது நலம் என்ற உணர்வு என்ற இரண்டு பெரும்
திசைகளை நாம் சற்று கவனமாக பார்க்க வேண்டியிருக்கிறது. நலம் என்பது நலத்தைப் பற்றிய
கருத்தாகவும் நலத்தைப் பற்றிய செய்தியாகவும் கேள்விப்பட்டிருக்கிற குறிப்புகளாகவும்
கூட இருக்கலாம்.
ALSO READ:FOR WHOM I AM HAPPY? (யாருக்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன்?)
இன்னொரு பக்கம் நலம் என்பது நலம் குறித்த உங்களது
உணர்வாகவும் இருக்கலாம். நலம் பற்றிய கருத்தில் இருந்து நீங்கள் பயணிப்பீர்கள் என்றால்
ஒரு உடலில் ஏற்பட்டிருக்கிற, மன அளவில் ஏற்பட்டிருக்கிற, ஆற்றல் அளவில் ஏற்பட்டிருக்கிற
எந்த ஒரு பலக் குறைபாடையும் நலக் குறைபாடையும் நீங்கள் தீர்த்துக் கொள்வதற்கு எடுக்கிற
முயற்சியில், நீங்கள் தேர்வு செய்கிற மருத்துவமும் அதில் தொடர்ந்து பயணிக்கிற உறுதிப்பாடும்
காட்டிக் கொடுத்துவிடும். நீங்கள் ஒருவேளை நலத்தை உணர்வோடு இணைத்திருந்தீர்கள் என்றால்
உங்கள் உணர்வில் நலம் உணரப்படும் வரை நீங்கள் மருத்துவத்தில் உறுதியாக பயணித்துக் கொண்டே
இருப்பீர்கள்
மருத்துவம் அதற்கு உதவி செய்யவில்லை என்றால்
பகிரங்கமாக அந்த மருத்துவத்தை புறக்கணிப்பீர்கள். நலம் என்பது உணர்வாகவும் இருக்கலாம்
உங்களது கருத்தாகவும் இருக்கலாம் கருத்துக்கள் பெரும்பாலும் நலத்திற்குரிய வாய்ப்புகளை
குறைந்த அளவிலேயே காட்டிக் கொடுக்கின்றன. உணர்வுகள் நலத்தை பெறுவது வரை சும்மா இருப்பதில்லை.
No comments:
Post a Comment