Tuesday, August 25, 2020

FOR WHOM I AM HAPPY? (யாருக்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன்?)

 

யாருக்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன்?

FOR WHOM I AM HAPPY?
FOR WHOM I AM HAPPY

     நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை, கொண்டாட்டமாக இருப்பதை பிறருக்கு காட்டிக் கொள்வதற்காக, பிறருக்கு வெளிப்படுத்திக் கொள்வதற்காக இருக்கிறது என்பதை நான் பார்க்கிறேன். இன்றைக்கு  கொண்டாடுவதற்கும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் நிறைய தத்துவங்களும் பயிற்சி முறைகளும் இருப்பதற்கு காரணம் ஒரு தனி மனிதனின் மன அளவில் மகிழ்ச்சி என்பது அவனுக்குள் இருப்பதைவிட மற்றவருக்கு காட்டப்பட வேண்டும் என்கிற நிலையிலிருந்து புறப்படுகிறது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தவுடன் நான் மகிழ்ச்சியாக இருப்பதை என் பக்கத்தில் உள்ளவர் பார்க்கவேண்டும் என்று சேர்ந்தே முளைத்து விடுகிறது உங்களது மன சிந்தனை.

ALSO READ:HOW TO BE HAPPY(மகிழ்ச்சி)


                இப்படியான மகிழ்ச்சி, இப்படியான கொண்டாட்டம் உங்களைச் சுற்றி நடப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கடந்த திருவிழாவிற்கு அணிந்திருந்த ஆடை என்பது உங்கள் கொண்டாட்டத்தின் வெளிப்பாடு. கடந்த திருவிழாவிற்கு நீங்கள் அணிந்த புத்தாடையை விடவும் அதிக விலையுள்ள புத்தாடையை இந்த திருவிழாவிற்கு வாங்கி அணிந்து விடவேண்டும் என்று எண்ணுகிற மனோபாவம் மகிழ்ச்சியை மற்றவருக்கு காட்ட வேண்டும் என்கிற தன்மையோடு இருப்பதை நீங்கள் பார்க்க வேண்டும். கடந்த நிகழ்விற்கு நீங்கள் அணிந்திருந்த ஆபரணங்களை விடவும் இந்த நிகழ்விற்கு அடுத்த நிகழ்விற்கு சற்று கூடுதல் விலை உள்ள ஆபரணங்களை கூடுதல் எடையுள்ள ஆபரணங்களை நீங்கள் அணிந்து செல்ல வேண்டும் என்று உங்கள் கொண்டாட்டத்தை ஆபரணங்களோடு இணைத்தால் அந்த இணைப்பு நிச்சயமாக உங்கள் கொண்டாட்டத்தை சொல்வதாக இருக்காது. நீங்கள் கொண்டாடுவதை பிறர் பார்க்க வேண்டும் என்பதை குறிப்பிடுவதாக  இருக்கிறது.

ALSO READ:SUICIDE(தற்கொலை)

                 ஒவ்வொரு மனிதனுக்கும் கொண்டாட்டம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மகிழ்ச்சி என்பது தொடர்ந்து தனக்கானதாகவும் தனக்குள் வளர்ச்சி  அடைவதாகவும் இருக்க வேண்டியதாக அமைவதே சிறந்தது. அதுவே முழுமையானது. நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது பிறர் பார்ப்பதற்கானது அல்ல என்கிற மனநிலை இருத்தல் அவசியம். நீங்கள் பிறர் பார்க்க வேண்டும், பிறர் போற்ற வேண்டும் என்று ஒருவேளை கருதிக் கொண்டு இருப்பீர்கள்  என்றால் நீங்கள் பெற்றுக் கொள்கிற நீங்கள் முயற்சி செய்கிற தாகமாய் தவிக்கிற உங்களது மகிழ்ச்சி தேடல் அற்பமானதாகவே முடிந்து போகும். உங்களது தேடல் என்பது உங்கள் நிம்மதியை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். உங்கள் தேடல் என்பது உங்களது கொண்டாட்டத்தை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். உங்களது மகிழ்ச்சிக்கான தவிப்பு என்பது உங்களுக்கானதாக இருக்க வேண்டும். பிறருக்காக நீங்கள் ஆடை அணிவது போல பிறருக்காக நீங்கள் ஆபரணங்கள் அணிவது போல பிறருக்காக நீங்கள் உணவு உண்பது போல பிறருக்காக மகிழ்ச்சி அடைய வேண்டும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதையாவது ஒன்றை மேற்கொண்டால் அது எத்தனை புனிதமானதாக இருந்தாலும் கூட அது அர்ப்பமானதை நோக்கியே நகரும். உங்களை அற்பமான நபராக  மாற்றிவிடும். மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்குமான அடிப்படைக்காரணம் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கான அடிப்படை தேவை,பிறர் என்னவாக அதைப் பார்க்கிறார்கள் என்பதிலிருந்து நகர்ந்து உங்களுக்கு அது என்னவாக மலர்ந்திருக்கிறது என்கிற திசையில் பயணிக்கும் என்றால் அது உங்களது தாகத்தை, உங்களது தேடலை  புனிதமானதாகவும்  ஆசீர்வாதமாகவும் மாற்றியமைக்கும் என்பதில் இரட்டை கருத்து இல்லை.

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...