Sunday, August 16, 2020

HOW TO BE HAPPY(மகிழ்ச்சி)

 மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

HOW TO BE HAPPY
HOW TO BE HAPPY

     மனிதர்களுக்கு வாழ்வில்  மகிழ்ச்சியாக இருப்பது, சந்தோசமாக இருப்பது இந்த வாழ்வை கொண்டாட்டமாக மாற்றிக்கொள்வது ஒட்டுமொத்த இலக்காக இருக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியாக(happy) இருக்க வேண்டும், நீங்கள் கொண்டாட்டமாக இந்த வாழ்வை கொண்டாட வேண்டும், நீங்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே இந்த வாழ்க்கையை வாழவேண்டும் என்று நிறைய ஆலோசனைகளும்  பரிந்துரைகளும் சொற்பொழிவுகளும் கூட நடந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் முழு கவனத்தோடு இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மேற்கொள்கிற நடவடிக்கைகளும் முயற்சிகளும் அவர்களை மகிழ்ச்சியாக வாழ விடுவதில்லை என்பது எதார்த்தமாக இருக்கிறது.

ALSO READ:CELEBRATIONS(கொண்டாட்டம் )

                ஒரு மனிதன் காலையில் எழுந்தவுடன் கடவுள் வழிபாட்டை செய்வது வழக்கமாக வைத்திருக்கிறான். கடவுள் வழிபாடு செய்வதன் வழியாக மகிழ்வாக இருக்க முடியுமென்று நம்புகிறான். சில நாட்களில் கடவுள் வழிபாடு செய்வதன் வழியாக அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக(happy) கடந்ததை அனுபவமாக பெற்றிருக்கிறான் என்கிற வகையில் அவன் தொடர்ந்து கடவுள் வழிபாடு செய்ய வேண்டுமென்று முயற்சி செய்கிறான். காலை எழுந்தவுடன் அவன் செய்கிற கடவுள் வழிபாடு ஏதாவது ஒருநாள் தடைப்பட்டுப் போனால் அவனது மகிழ்ச்சி கேள்விக்குள்ளாகிறது. மகிழ்ச்சி இல்லாமல் போகிறது. அவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக கடவுள் வழிபாடு செய்வதும், கடவுள் வழிபாடு செய்வதால் மகிழ்ச்சியாக(happy) இருப்பதும் ஒன்றையொன்று நெருங்கிய தொடர்புள்ள நிகழ்வு என்பதை அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. எந்த ஒரு மனிதனும் தான் செய்கிற வேலைக்கும் தனது மகிழ்ச்சிக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பதை பார்ப்பதில்லை. குறைந்தபட்சம் அந்த நெருக்கத்தை பார்க்கிற மனிதர்களால் மகிழ்ச்சிக்கும் அவர்கள் பார்க்குற வேலைக்கும் இருக்கிற உறவை கண்டுபிடிக்கிற மனிதர்களால் தம்மை மகிழ்ச்சியாக(happy) வைத்துக் கொள்வதற்கு ஏதாவது செய்ய முடியும்.

ALSO READ:SUICIDE(தற்கொலை)

                எப்படியாக இருந்தாலும் எல்லா மனிதர்களின் மனநிலையிலும் அடிப்படையாக இருக்கிற எண்ணம் என்பது நான் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான். நான் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று எல்லோர் மனதிலும் இருப்பதை பார்க்க முடிகிறது. நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று ஒவ்வொரு மனிதனும் தேடுவதும் கேட்பதும் நடந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியாக(happy) இருப்பதற்கு இதனை செய்யுங்கள், இவ்வாறு செய்யுங்கள் என்று அறிவுரைகள் வழங்குவது அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஆக, மகிழ்ச்சியாக இருப்பது என்பதும் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்பதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதுமாக இருக்கிற குழப்பமான மனநிலையில் மகிழ்ச்சி(happy) என்பது விற்பனைப் பொருளாக மாறிவிடுகிறது. அது சந்தையில் சொற்பொழிவுகளின் வழியாக மகிழ்ச்சிக்குரிய வழிமுறைகள் வழிகாட்டுதல்கள் தரப்படுவதன் வழியாக பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்பப்படுகிறது.

                ஆனால் மகிழ்ச்சியானது என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இயல்பாகவே ஒவ்வொருவரும் மகிழ்ச்சியானவர்கள்தான் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை பிறந்த காலத்திலிருந்து ஒவ்வொரு தருணத்திலும் அது மகிழ்ச்சியாக(happy) வாழ்வதற்கு எல்லா வாய்ப்புகளையும் வைத்திருக்கிறது என்பதை நாம் பார்ப்பதில்லை. இது ஒவ்வொருவருக்கும் பொருந்துகிறது. எல்லா குழந்தைகளுக்கும் எல்லா பெரியவர்களுக்கும் எந்த வயதினருக்கும் கூட மகிழ்ச்சிக்கான வரையறை மிகப் பொருத்தமாகவே இருக்கிறது. ஒரு உண்மையை வாழ்க்கையின் ரகசியத்தை இதுவரை இந்த சமூகத்திற்கு கற்றுக் கொடுப்பதாக சொல்லிக் கொண்ட ஒவ்வொரு தத்துவங்களும் துவங்கிய இடத்திலிருந்து வேறு இடத்தில் நகர்ந்த நிற்பதை பார்க்க முடிகிறது. எல்லா தத்துவங்களும் எல்லா தத்துவ நூல்களும் தத்துவ ஆசான்களும் கூட அன்பாகவும் மகிழ்ச்சியாகவும்(happy) இருப்பதற்குத்தான் தமது தத்துவம் என்று துவங்கியிருக்கிறார்கள், முயற்சி செய்து இருக்கிறார்கள்.

ALSO READ:MONEY(பணம்)

                ஆனால் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அவர்கள் மேற்கொண்ட எல்லா நடைமுறைகளும் சம்பிரதாயங்களாக புரிதல் இல்லாத செயல்பாடுகளாக மாறி மனிதகுலத்தை தொடர்ந்து மகிழ்ச்சியற்ற நிலையிலேயே நிறுத்தி வைத்திருக்கிறது. ஆர்வமாக மத வழிபாடு செய்பவர் வேறு ஒரு மனிதரிடம் மதம் குறித்து முரண்பாடு கொள்கிறார். அவர் மத வழிபாடை மகிழ்ச்சியை(happy) நோக்கி அன்பை நோக்கியே செய்தவர். ஆர்வமாக தமது சமூக நடைமுறைகளை பண்பாடாக பிடித்துக் கொண்டு வாழ்ந்த மனிதர்கள் பண்பாடு குறித்து வேறு ஒரு சமூகத்திடம் முரண்பாடு கொள்கிறார்கள், சண்டையிட்டுக் கொள்கிறார்கள். எமது பண்பாடு மகிழ்ச்சியையும் அன்பையும் கொடுக்கவல்லது என்று அவர்கள் தீர்க்கமான முடிவில் இருந்தவர்கள், நம்பிக்கையில் இருந்தவர்கள். இவ்வாறு மனிதர்களுடைய வழிபாடுகளோ பண்பாடு சார்ந்த நிகழ்வுகளோ கூட மனிதனுக்கு அன்பையும் மகிழ்ச்சியையும் தரவில்லை என்பதை பார்க்க முடிகிறது. நிச்சயமாக மனிதனுக்கு இலக்காக இருப்பது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற முடிவு.

                வேலை பார்ப்பது, கல்வி கற்பது, பிறரோடு உரையாடுவது, உறவாடுவது, எங்கிற எல்லா வகையான செயல்பாடுகளும் மனிதனின் மகிழ்ச்சியை நோக்கியே இருக்கிறது என்பதை எல்லா மனிதர்களும் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையின் வழியாக அந்த செயல்பாடுகளை தீர்மானிக்கின்றனர். இயல்பிலேயே மனிதர்கள் மகிழ்ச்சியை நோக்கி நகர்கிறார்களா என்றால் அது இல்லை. அவர்களுக்கு அடிப்படை புரிதல் மகிழ்ச்சிக்கும் அவர்களுக்கும் இடையே இருக்கிற தூரத்தை, மகிழ்ச்சி(happy) என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை, அவர்கள் செய்கிற சம்பிரதாயங்கள் தடை செய்து விடுகின்றன என்பதை நான் பார்க்கிறேன். ஒரு மனிதன் சம்பிரதாயங்கள் வழியாக மகிழ்ச்சியை அடைய முடியாது என்பது எனது பார்வை. ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட வகையான செயல்பாடுகளை தொடர்ந்து செய்வதன் மூலமாக எந்த விதமான புனிதத் தன்மையுடைய காரியங்களை அவர் வலியுறுத்துவதன் மூலமாக, புனிதமான பிரசாதங்களை அவர் பெற்றுக் கொண்டு உண்பதன் மூலமாக அவர் அன்பையும் மகிழ்ச்சியையும்(happy) அடைந்துவிட முடியாது என்பது எனது பார்வை.

ALSO READ:MEDITATION(தியானம்)

                ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அந்த மனிதனின் மகிழ்ச்சி (happy) குறித்த தாகம் அவசியமாகிறது. ஒரு மனிதன் படிப்பதன் வழியாக மகிழ்ச்சியை அடைய முடியுமென்று நம்பலாம். விளையாடுவதன் மூலமாக இந்த நம்பிக்கையை பெற்றிருக்கலாம். தூங்குவதன் மூலமாக, உணவு உண்பதன் மூலமாக, கலவி கொள்வதன் மூலமாக மகிழ்ச்சியை பெற்றுக்கொள்ள முடியும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை கொண்டிருக்கலாம் விருப்பம் கொண்டிருக்கலாம் அல்லது கற்பனை கூட செய்து வைத்திருக்கலாம். எந்தவிதமான செயல்பாடு அவர்கள் மேற்கொண்டாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற தீராத தாகம் அவர்களுக்கு முக்கியமானது. அன்பாக இருக்க வேண்டும் என்கிற தீராத தேடல் அவர்களுக்கு முக்கியமானது. அன்பிற்கும் மகிழ்ச்சிக்கும் பெரிய வேறுபாடு இல்லை. அன்பாக இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும். மகிழ்ச்சியாக  இருப்பபவர்களால் தான் இருக்க முடியும். அன்பும் மகிழ்ச்சியும்(happy) ஏறத்தாழ ஒற்றை நிலைப்பாடு கொண்டவைதான்.

ALSO READ:புத்தர்களுக்கு அடையாளம் தேவைப்படாது

                ஒரு மனிதன் அன்பாக இருக்கவும் மகிழ்ச்சியாக இருக்கவும் வேண்டும் என்கிற தாகமும் தேடலும் மட்டுமே அவர்களுக்கு மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கிறதே ஒழிய அவர்கள் பின்பற்றுகிற எந்த  கோட்பாடுகளும் சம்பிரதாயங்களும் அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவல்ல தன்மை உடையது அல்ல. அந்த மகிழ்ச்சியானது சம்பிரதாயங்கள் வழியாக வரப்போவது இல்லை. சம்பிரதாயங்கள் தொடர்ந்து செய்து முடித்த பிறகு அந்த மனிதனுக்கு மகிழ்ச்சி(happy) ஏற்பட்டிருக்கிறது என்றால் அப்படிப்பட்ட சம்பிரதாயங்களை கடந்த சம்பிரதாயங்களில் ஈடுபட்ட மனிதர்கள் மகிழ்ச்சியை  கண்டடைந்ததாக காண முடியவில்லை.

                ஆக, மகிழ்ச்சிக்கு மிகுந்த அவசியம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற உங்களது தாகத்தை பொருத்தது ,தேடலை பொருத்தது. நீங்கள் என்ன வேலையில் ஈடுபடுகிறீர்கள் என்பது முக்கியமானது அல்ல. நீங்கள் எந்த வகையான சம்பிரதாயங்களை வழிபாட்டு முறைகளை பின்பற்றுகிறீர்கள் என்பது முக்கியமானது அல்ல. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் நீங்கள் பிறரிடம் அன்பாக இருக்க வேண்டும் என்றும் நீங்கள் கொள்கிற தாகமும் உங்களது தேடலுமே உங்களது மகிழ்ச்சியையும் அன்பையும் தீர்மானிக்கக் கூடியது. உங்களது தேடல் இல்லாத எந்த முயற்சியும் ஆர்வமில்லாத எந்த பகுதியும் உங்கள் இலக்கை உங்கள் மகிழ்ச்சியை உங்களுக்கு நினைவூட்ட போவது இல்லை. நீங்கள் ஆர்வத்தோடு தேடலோடு முழு முனைப்போடு தாகமாக நீங்கள் மகிழ்ச்சியை(happy) கண்டறியவேண்டும், அன்பை கண்டறிய வேண்டும் என்று துவங்கினீர்கள் என்றால் மிக எளிமையாக கண்டுபிடிப்பீர்கள் அதன் மீது தான் நீங்கள் நின்று கொண்டு இருக்கிறீர்கள் என்பதை. உங்களது தொளதொளப்பான தேடலும் ஆர்வமில்லாத தாகமும் அந்த மகிழ்ச்சி வேறு எங்கோ இருப்பதான கற்பனையாக உங்கள் முன் இருந்துகொண்டே இருக்கிறது. உங்களது தேடல் அதிகமாகும் போது உங்களது தாகம் தீவிரமாகும் போது நீங்கள் மகிழ்ச்சியாக(happy) இருப்பதும் மகிழ்ச்சியின் மீது நிற்பதுமான ஒரு அழகு உங்களைச் சுற்றி இருப்பதை உங்களால் காண முடியும். உணர முடியும்.

.

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...