Monday, August 17, 2020

Will practice give happiness?( பயிற்சியால் மகிழ்ச்சி வருமா? )

            பயிற்சியால் மகிழ்ச்சி வருமா? 

Will practice give happiness?
Will practice give happiness?
மகிழ்ச்சியாக இருப்பதற்கு நிறைய நடைமுறைகளும் பயிற்சி முறைகளும் காலங்காலமாக  பரிந்துரைக்கப்பட்டுக்  கொண்டே இருக்கிறது. எத்தனை பரிந்துரைகள் வந்தாலும் எத்தனை பரிந்துரைகளை இந்த மனித சமூகம் பின்பற்றினாலும் கூட மகிழ்ச்சி என்ற இலக்கிற்கு அல்லது அன்பு என்ற இலக்கிற்கு வந்து சேர்ந்திருக்கிறார்களா? என்று உறுதியாக சொல்லமுடியவில்லை. அன்பை பற்றி பேசுகிற அன்பை பற்றி போதிக்கிற  நபர்களிடம் கூட விகாரமான கோபங்களை பார்க்கமுடிகிறது, பார்த்திருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று சொல்பவர்கள் கூட அவர்களது மகிழ்ச்சி இழந்து போவதையும் கடந்து போவதையும் பார்க்க முடிகிறது. என்னை பொருத்தவரை நடைமுறைகள் வழியாக, பரிந்துரைகள் வழியாக, பயிற்சிகளின் வழியாக மகிழ்ச்சி என்னும் இலக்கை இந்த மனித சமூகம் எப்போதும் அடையாது. எந்த பரிந்துரைகளும் எந்த நடைமுறைகளும் வலியுறுத்தப்படுவதால் சேமிக்கப்படுவதால் அது அந்த மனிதனை மாற்றும் என்பது சாத்தியமில்லாதது.


   
     மேலும் மனிதனுக்கு அது தேவையில்லாததும் கூட. பரிந்துரைகளும் பயிற்சி முறைகளும் நடைமுறைகளும் மனிதனுக்கு அன்பையோ மகிழ்ச்சியையோ கொண்டாட்டத்தையோ உருவாக்குவதற்கு துவங்கும் இடமாக இருக்கலாம். ஆனால் துவக்கத்தில் நின்றுகொண்டே ஒரு மனிதன் மகிழ்ச்சி அடைந்து விட்டதாக கற்பனை செய்யலாமே ஒழிய மகிழ்ச்சியை அடைந்து விட்டதாகவோ கொண்டாட்டத்தை எட்டி விட்டதாகவோ அன்பை பெற்றுக் கொண்டதாகவோ கூறிவிடமுடியாது. அவ்வாறு கூறுவது என்பது மனித அளவில் கற்பனையானது. நடைமுறைகள் பற்றாக்குறையானவையா? செயல்பாடுகளும் பயிற்சி முறைகளும் குறைபாடுடன் காணப்படுகின்றனவா? என்றால் நடைமுறைகளிலும் செயல்பாடுகளிலும் பயிற்சிமுறைகளிலும் குறைகள் இல்லை.  நடைமுறைகளும் செயல்முறைகளும் பயிற்சி முறைகளும் கூட துவக்கத்திற்கும் துவங்கியவுடன்  சீரான நகர்விற்கும் பயன்படக் கூடியதாக உள்ளது

ALSO READ:CELEBRATIONS(கொண்டாட்டம் )

    ஒரு மனிதன் அன்பை நோக்கி பயிற்சி செய்கிறார் என்றால் அவர் அன்பை நோக்கி பயிற்சிக்கு தன்னை ஒரு பயிற்சி முறையில், யோகாசனத்தில், பிராணயாமத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார் என்றால் அவருடைய ஈடுபாடு துவங்குகிற இடத்தில் மிகச் சரியாகவே துவங்கும். நீண்டகாலம் அவர் யோகாவும் ஆசனங்களும் மூச்சுப் பயிற்சிகளும் செய்த பிறகும்கூட எரிச்சல் நிறைந்த முகத்தோடு வாடிய முகத்தோடு வறண்ட முகத்தோடு அவர் இருப்பதை பார்க்க முடிகிறது. யோகா செய்து ஆசனங்கள் செய்து பயிற்சிகள் செய்து விதவிதமான தியான முறைகளை மேற்கொண்டு ஒரு மனிதன் மகிழ்ச்சியை எட்ட முடியும் என்கிற கோட்பாடுகளில் இருந்து பார்க்கிறபோது அவர் மேற்கொள்கிற துவங்குகிற எல்லா பயிற்சி முறைகளும் அந்த இடத்தை நோக்கி செல்கிற திசையில் தான் இருக்கின்றன. செய்கிற முயற்சியில்தான் இருக்கின்றன என்றாலும் கூட தனி ஒரு மனிதரால் மகிழ்ச்சியை நோக்கி கொண்டாட்டத்தை நோக்கி நகர்வதற்கு அந்த பயிற்சி உதவ முடியவில்லை. உடனே மனிதர்கள் அந்த பயிற்சியின் மீது குறைபட்டுக் கொள்ளவும் அந்த பயிற்சி தமக்கு சரியானதல்ல என்று பேசிக் கொள்ளவும் முயற்சிக்கின்றனர்

ALSO READ:SUICIDE(தற்கொலை)

    உண்மையிலேயே இந்த பயிற்சி மனிதர்களுக்கு உதவி செய்யாதா? என்றால் மனிதனுக்கும் பயிற்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் இடையே இருக்கிற உறவை நீங்கள் புரிந்து கொள்வதன் வழியாக மட்டுமே உங்கள் அன்பை பெற்றுக்கொள்வதில் நீங்கள் ஏதாவது செய்ய முடியும். உங்களது மகிழ்ச்சியை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஏதாவது செய்ய முடியும்.உங்களது வாழ்க்கையை கொண்டாட்டமாக மாற்றிக் கொள்வதற்கு இந்தப் புரிதல்தான் மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன். ஒரு தொடர்ந்த பயிற்சி முறையை நீண்டகாலம் செய்து முடித்தால் வாழ்வை கொண்டாட்டமாக மாற்ற முடியும் என்று அந்த பயிற்சி முறைகள் பரிந்துரை செய்கின்றன. அவை இவ்வாறு துவங்க வேண்டும் அவ்வாறு நகர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அந்த வலியுறுத்தல் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி குறித்தும் கொண்டாட்டம் குறித்தும் எந்த வேலையும் செய்வதில்லை என்றால் சிக்கல் பயிற்சியுடன் இருக்கிறது என்று பார்வைக்கு தோன்றும். ஏனென்றால் பயிற்சி மீது மனிதனுக்கு இருக்கிற தன்முனைப்பு சார்ந்த எரிச்சல்

ALSO READ:MONEY(பணம்)

    ஒரு பயிற்சியை முறையாகச் செய்யாமல் பயிற்சி குறித்து எந்த கவனமும் இல்லாமல் பயிற்சியை தன் வசதிக்கு செய்து கொண்டு ஒரு மனிதன் பயிற்சியின் மீது இலகுவாக குறை சொல்லிக் கொள்ள முடியும்.  எதிர்த்து பேசுவதற்கு பயிற்சியின் சார்பாக யாரும் இருக்கப்போவது இல்லை. அது இன்னும் கூடுதல் வசதியானது. பயிற்சி எந்தவிதத்திலும் மனிதர்களுக்கு இப்படியான  உதவிகளையத் தான் செய்கிறது.இப்படியான அவப் பெயர்களையும் பெற்றுக் கொள்கிறது. ஒரு மனிதன் விழிப்படைவதற்கும் கொண்டாட்டமாக மாறுவதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் பயிற்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது என் பார்வை. நீங்கள் தியானிக்கலாம், நீங்கள் ஆசனம் செய்யலாம், நீங்கள் ஜென் முறையை பின்பற்றலாம், நீங்கள் புத்தரின் சீடராகலாம், நீங்கள் அறிவுசார்ந்து தத்துவங்களை விவாதிக்கலாம், எவ்வாறு இருந்தாலும் நீங்கள் பின்பற்றுகிற ஏதோ ஒரு பயிற்சி முறையை நீங்கள் பின் பற்றினாலும் நீங்கள் கொண்டாட்டம் அடைவ,து நீங்கள் மகிழ்ச்சி அடைவது என்பது உத்தரவாதம் இல்லாதது. இந்த பயிற்சியை செய்து கொண்டு இருக்கிறேன், ஜென்முறையை பின்பற்றி கொண்டு இருக்கிறேன். புத்தர் தான் எனது குரு என்று நீங்கள் ஒரு பயிற்சி முறையைப் பின்பற்றி நடந்து கொண்டிருந்தால் அந்த பயிற்சி முறை உங்களுக்கு மகிழ்வைக் கொடுக்கும் என்பதில் எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது. அது பயிற்சி முறை சார்ந்த குற்றமல்ல. மகிழ்வாக இருக்க வேண்டும் என்று உங்கள் தாகம் சார்ந்தது. மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற உங்கள் உள்ளுணர்வு சார்ந்தது. அன்பையும் மகிழ்வையும் தேடுகிற உங்கள் தேடல் சார்ந்தது

ALSO READ:MEDITATION(தியானம்)

    ஒரு பயிற்சியானது எத்தனை விதமான அசைவுகளையும் உடல் இயக்கங்களையும் மூச்சு முறைகளையும் உங்களுக்கு பரிந்துரைத்தாலும் கூட அந்த மூச்சு முறைகளையும் அசைவுகளையும் செயல்முறைகளையும் பயிற்சி முறைகளையும் நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? நீங்கள் எவ்வாறு பெற்றுக் கொள்கிறீர்கள்? என்பதில் இருந்தே உங்களுடைய கொண்டாட்டம் முடிவாகியுள்ளது. மிகப் பிரகாசமான ஒளி மிகுந்த ஒரு விளக்கின் கீழ் பார்வைத்திறன் குறைந்த ஒருவரால் மிக அதிகமான ஒளிக்கீற்றை உணர முடியாது. அது பிரகாசத்தின் குற்றமல்ல, ஒளிக்கீற்றின் குற்றமல்ல. ஒரு பார்வை திறன் குறைந்தவரின்  இயலாமை. இந்த உதாரணம் பயிற்சி முறைகளுக்கும் பொருந்தும். பயிற்சி செய்வதால் மகிழ்ச்சி அடைய முடியும் என்பது அல்ல இந்த விவாதம்

    நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு, பிறரை நேசிப்பதற்கு, பிறரிடம் அன்பை பெற்றுக்கொள்வதற்கு உங்களது முயற்சியும் முனைப்பும் எவ்வாறு இருக்கிறது? என்பதும் எவ்வளவு அடர்த்தியாக இருக்கிறது? என்பதும் உங்களது விழிப்புணர்வையும் அன்பையும் கொண்டாட்டத்தையும் தீர்மானிக்குமே ஒழிய உங்களது பயிற்சிகளும் உங்களது முயற்சிகளும் உங்களது தியான யுக்திகளும் அதற்கு பலனளிக்காது. அது உங்களது தேடல் சார்ந்தது. உங்களது முயற்சி சார்ந்தது. உங்களது அடர்த்தியான தாகம் சார்ந்தது.


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...