Tuesday, August 18, 2020

Will Practice Give Happiness - 2 பயிற்சியால் மகிழ்ச்சி வருமா?

will practice give happiness?

 

                 பயிற்சியால் மகிழ்ச்சி வருமா?

     மகிழ்ச்சியாய் இருப்பதற்கும் கொண்டாட்டமாய் இருப்பதற்கும் பயிற்சிகள் வழியாக, முயற்சிகள் வழியாக கரையேற முடியும் என்கிற மனநிலை மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் விரோதமானது. ஒரு பயிற்சியின் பரிந்துரையை நீங்கள் வேறொன்றாக புரிந்து கொள்வீர்கள் என்றால் உங்களால் அந்தப் பயிற்சியின் வழியாக மகிழ்ச்சியையோ அன்பையோ பெற்றுக்கொள்ள முடியாது. பகிர்ந்தளிக்க முடியாது. மிகப் புனிதமான ஒருவர், புனிதரின் ஒருவருடைய பயிற்சி முறையை நீங்கள் மேற்கொள்வதாக வைத்துக்கொள்வோம். அந்த புனிதர் முழுவதும் அன்பை பற்றி போதிக்கிறவராக இருக்கிறார்.  அவர் முழு வாழ்வும் அன்பாகவே இருந்திருக்கிறது. அவருடைய முழு பிரசங்கமும் அன்பை சுற்றியே இருந்திருக்கிறது.

ALSO READ:நம்பிக்கையற்ற துயரர்(HOPELESS PATIENT)


                ஆனால் அன்பு என்பது உங்களுக்கு வாங்குகிற கடனை விட்டுக் கொடுப்பதாக மட்டும் புரிந்து வைத்துக் கொண்டிருந்தால் உங்களது அன்பு எல்லை கடனுக்குள்ளேயே சிக்கி இருக்கும். அந்தப் புனிதரின் பிரசங்கம் எந்த வகையிலும் உங்களுக்கு உதவி செய்யாது. அந்த புனிதர் வலியுறுத்துகிற அன்பு பற்றிய பயிற்சி முறைகள் எல்லாமும் மகிழ்ச்சி பற்றிய பயிற்சி முறைகள் எல்லாமும் உங்கள் கடனை வசூலிப்பது குறித்தே நீங்கள் பயணிப்பதாக மாற்றி அமைத்து விடும். இந்த பயிற்சிக்கும் நீங்கள் வெற்றி பெறுவதற்கும் இருக்கிற இலக்கு என்பது அந்த புனிதரை பொருத்தவரை அன்பை பற்றியதாகவும் உங்களைப் பொருத்தவரை அன்புக்கு நீங்கள் வைத்திருக்கிற பொருள் பற்றியதாகவும் இருக்கும். அந்த புனிதர் உலக அன்பை பற்றி போதித்து கொண்டிருக்கிற போது உங்கள் அன்பு எல்லையாக இருக்கிற கடன் வசூலிப்பதிலேயே நீங்கள் சுற்றிக்கொண்டு இருப்பீர்கள். இப்படித்தான் இன்று ஏராளமான பயிற்சி முறைகளும் பயிற்சிக் கூடங்களும் பரிந்துரைகளும் செயல்பாட்டு முறைகளும் கூட தத்துவங்களை அவரவர் புரிதலுக்கு ஏற்றார்போல மாற்றி வைத்து மனிதனின் மன உணர்வை சிக்கலாக்கிக் கொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது.

ALSO READ:குணமளிப்பவர்(HEALER)

                ஒரு மனிதன் கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்பதை மறுப்பதற்கு ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் கொண்டாட்டமாகவே மனிதன் பிறக்கிறான், கொண்டாட்டமாகவே மனிதன் பயணிக்கிறான் என்று தத்துவவாதிகளும் முன்னோர்களும் ஆன்மீகமாக வாழ்ந்து காட்டிய மகான்களும் சொல்லிய கோட்பாடில் நான் முழுவதுமாக உடன்படுகிறேன். மனிதன் அப்படித்தான் இருக்க முடியும். மனிதன் அப்படித்தான் இயங்க முடியும். கொண்டாட்டமாக இருப்பதைத் தவிர மனிதனுக்கு வேறு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்பது எனது பார்வை. கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் மனிதனைத் தவிர வேறு  ஜீவராசிகளுக்கு வரலாம், வராமல் இருக்கலாம். ஆனால் மனிதனுக்கு அத்தகைய எண்ணம் வந்திருப்பது என்பது மனிதன் கொண்டாட்டத்தை எவ்வளவு மறந்து போய் இருக்கிறான் என்பதன் குறியீடாக நான் பார்க்கிறேன். அந்தக் குறியீடை புரிந்துகொண்டு வழங்கப்படுகிற ஒவ்வொரு பயிற்சி முறைகளையும் தத்துவ முறைகளையும் மனிதன் புரிந்து கொள்வதற்கு ஒரு இடைவெளி இருப்பதை நான் பார்க்கிறேன்.

ALSO READ:நோயற்ற வாழ்வு

                மனிதன் தான் கொண்டாட்டமாகவே இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளாத நிலையிலேயே இருப்பதை பார்க்க முடிகிறது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை என்னால் ஒத்துக் கொள்வதற்கு மிகுந்த சிரமத்தை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது என்று மனிதர்கள் புலம்புவதை காணமுடிகிறது. மனிதர்களுக்கு எப்போதும்  துயரத்தில் இருப்பதற்கு ஒரு விருப்பம் இருக்கும் என்று ஒரு உளவியல் கோட்பாடு ஒன்று இருக்கிறது. மனிதர்கள் துயரத்தை விரும்புவதற்கு ஆசைப்படுவார்கள் என்று அந்த கோட்பாடு விரிவாகச் சொல்கிறது. அப்படித்தான் இன்றைய சமூகத்தில் மேற்கத்திய மனிதர்களாக இருந்தாலும் சரி கீழைநாட்டு மனிதர்களாக இருந்தாலும் சரி நவீன காலத்தில் இரு பிரிவு மனிதர்களும் தமக்கான வாழ்வினுடைய சுவாரசியத்தை வாழ்வினுடைய மகிழ்ச்சியை தேடுவதை தவறாகப் புரிந்துகொண்டு மன உணர்வுகளை சிக்கலாக ஆக்கிக்கொண்டு தவிப்பில் திரிவதை பார்க்க முடிகிறது. இவற்றில் இருந்து விடுபடுவதற்கு அவர்கள் பயிற்சியை நாடுகிறார்கள். பயிற்சியை நாடுவதன் மூலம் அவர்கள் விடுபட முடியும் என்று நம்புகிறார்கள்.

ALSO READ: உயிர்ப்பு நிலை பிறழ்வு

                பயிற்சியின் வழியாக விடுபட முடியும் என்றால் அந்தப் பயிற்சியை அவர்கள் எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள்? என்பதில்தான் அந்த ரகசியம் ஒளிந்து இருக்கிறது. ஒரு தனி மனிதன் நேரடியாக ஒரு பயிற்சியில் குதித்து தான் மகிழ்வாக அன்பாக மாறிக்கொள்ள முடியும் என்கிற சமன்பாடு போல எந்த பயிற்சியும் இருப்பதில்லை. மிகுந்த ஆழமான தத்துவ பின்புலத்தில் பயிற்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பிரபஞ்சத்தை இருத்தலை உள்வாங்கிக் கொண்ட பிதாமகன்கள் பயிற்சி முறைகளை வடிவமைத்திருக்கிறார்கள். ஆதி பிரபஞ்ச இருப்பை பார்த்தவர்களும் ருசிகண்டவர்களும் பயிற்சி முறைகளை பரிந்துரைக்கின்றனர். இப்படித்தான் பயிற்சி முறைகள் காலகாலத்திற்கு முன்பிருந்தே உருவாகியிருக்கின்றன, நகர்ந்து வந்திருக்கின்றன, பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு காலத்திலும் பரிந்துரைக்கப்படுகிற உருவாக்கப்பட்டிருக்க வடிவமைத்து தரப்பட்டிருக்கிற எந்த ஒரு பயிற்சி முறையும் அந்தப் பயிற்சியில் ஈடுபடுகிறவர்களை எவ்வாறாக பார்க்க வைக்கிறது அந்த பயிற்சியில் ஈடுபடுகிறவர் பயிற்சியை எவ்வாறு புரிந்து கொள்கிறார் என்பதில் இருந்துதான் அந்த பயிற்சி அவருக்கு உதவுமா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வேண்டியுள்ளது.

ALSO READ: உயிர்ப்பு நிலை

                அதிகபட்சமான ஆற்றலுள்ள ஒரு மகானுக்கு அவர் அருகிலே செல்கிற ஒரு சாதாரண மனப் பிறழ்வான நோயாளியை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் எந்த வரையறையும் இல்லாமல் குணப்படுத்தும் ஆற்றல் இருக்கும் என்று நான் படித்திருக்கிறேன். பழைய புத்த  கதைகளில் புத்தர் வருகிறபோது அவரைச் சுற்றி இருக்கிற காடுகளுக்குள் ஒரு விலங்கு இன்னொரு விலங்கை தாக்கி தன் உணவாக மாற்றிக் கொள்ளாது. அத்தகைய ஆற்றல், பேரன்பு புத்தரைச் சுற்றி நிலவுவதால் ஒரு உணவுச் சங்கிலி கூட கட்டுப்படும் என்கிற உருவகக் கதைகளை நான் படித்திருக்கிறேன். இப்படி பேராற்றல் இருக்கிற ஒரு மனிதன் சில நூறு பேர்களை கடந்து செல்கிற போது எந்த பயிற்சி வரையறையும் இல்லாமல் அந்த நூறு பேருக்கு அன்பைப் பற்றி மகிழ்ச்சியைப் பற்றி கொண்டாட்டத்தைப் பற்றி ஏதாவது ஒன்றை கொடுத்து விட்டுச் செல்ல முடியும். அத்தகைய மகான்கள் இன்று எங்கு இருக்கிறார்கள் என்பது நமக்கு பெரும் கேள்வியாக இருக்கிறது. அத்தகைய மகான்களை சந்திப்பதும் அத்தகைய பயிற்சி முறைகளை பார்ப்பதும் பெற்றுக் கொள்வதும் அவர்களிடம் இருந்து நேரடியாக விடுதலையாகிக் கொள்வதும் கொண்டாட்டமாக மாறிக் கொள்வதும் சாத்தியம் என்றால் மனித சமூகம் நூறு நூறு பேராக விடுதலை அடைய முடியும், மகிழ்ச்சியை காணமுடியும், கொண்டாட்டத்தை பெற்றுக்கொள்ளமுடியும்

     அப்படி இல்லாத சூழலில் ஒரு பெரிய தத்துவ பின்புலத்தில் ஆன்மீகப் பார்வையில் தரப்பட்டிருக்கிற அழுத்தந் திருத்தமான பயிற்சி முறைகளை மேற்கொள்ள வேண்டுமென்று மனித சமூகம் கருதுகிறது. மனித சமூகம் கருதுகிற அடிப்படையில் பயிற்சி முறைகளையும் தத்துவ முறைகளையும் அது எவ்வாறு கூறப்பட்டிருக்கிறதோ அவ்வாறே புரிந்துகொண்டால் ஒருவேளை மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் பின்பற்றுகிற அனைவருக்கும் சாத்தியம். ஆனால் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் பின்பற்றுகிற ஒவ்வொருவருக்குள்ளும் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் வேறு வேறு அர்த்தங்கள் இருக்கிற நிலையில் அவர்கள் தத்துவத்தில் இருந்தும் பயிற்சி முறைகளில் இருந்தும் நீண்ட இடைவெளியில் மிக நீளமான தூரத்தில் காத்துக் கிடக்கின்றனர். நகர முடியாமல் இருக்கின்றனர். இத்தகைய இடைவெளியும் நகர்வின்மையும் அவர்களது மகிழ்ச்சியை கொண்டாட்டத்தை பயிற்சி முறைகள் வழியாக ஒரு போதும் உத்தரவாதப்படுத்தாது. ஒருபோதும் அடைய வைக்காது. அது பயிற்சிகளின் குற்றமல்ல; இவர்களது புரிதல் குற்றம்.

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...