Tuesday, July 14, 2020

எது மருத்துவம்? - உயிர்ப்பு நிலை

                     உயிர்ப்பு நிலை

     உயிர்ப்பு நிலை பற்றி நாம் பேச வேண்டுமென்றால் இதுவரை நமக்கு பழக்கம் இல்லாத நாம் அனுபவித்து உணராத நமது பழைய அனுபவங்களுக்கு பொருந்தாத, அப்பாற்பட்ட ஒரு உணர்வாக, உயிர் சம்பந்தமான உணர்வுகள் இருக்கின்றன. ஒரு ஜீவனுக்கு, ஒரு ஜீவராசிக்கு, ஒரு விலங்கிற்கு, மனிதனிற்கு, தாவரத்திற்கு இந்த பிரபஞ்சத்தில் இயங்குகிற எல்லா இயக்க  பொருட்களுக்கும் உயிர் தொடர்பு இருக்கிறது. அவை இயங்குவதன் வழியாக அவற்றின் இயக்கத்தின் பாற்பட்டு இயங்குகிற தோற்றத்தின் காரணமாக அவை உயிரோடு இருப்பதாக நாம் கருதிக் கொள்கிறோம். இயங்குகிற பொருள் உயிரோடு இருப்பதாக நாம் எண்ணும் போது ஒரு இயந்திரம், ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு அச்சு இயந்திரம், ஒரு வாகனம் இயங்குவதும் நாம் காண்கிறோம். அந்த இயந்திரங்களும் கூட உயிர் உள்ளவையா என்று நமக்கு வினா எழும். ஒரு இயந்திரத்தின் இயங்கு தன்மையும் ஒரு உயிருள்ள ஜீவராசியின் இயங்கு தன்மையும் தோற்றத்தில் ஒன்றாக இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் நுட்பமாக ஒரு உயிர் உள்ள ஜீவராசியினுடைய இயக்கத்தை இயந்திரத்தின் இயக்கத்தோடு ஒப்பிட முடியாத வேறு ஒரு சிறப்புத்தன்மை இருப்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஒரு இயந்திரத்தின் இயக்கம் போல ஒரு ஜீவராசியின் இயக்கம் அடிப்படையில் தோற்றத்தில் வேறுபட்டே இருக்கின்றன என்பதை உங்களால் காண முடியும். இது மிக முதன்மையான வேறுபாட்டு உணர்வு. இந்த வேறுபாடை புரிந்து கொள்கிற புத்திசாலித்தனம் உயிர் பற்றி உயிரின் இயக்கம் பற்றி உயிர்பெற்று இயங்குகிற ஒரு தோற்றம் பற்றி நீங்கள் தேடுகிற போது இயங்குகிற எல்லாவற்றையும் உயிருள்ளதாக உங்களால் புரிந்து கொள்ள முடியாது. பார்க்க முடியாது

    ஒரு இயக்கத்தை பார்த்தவுடன் அது உயிர் பெற்று இயங்குகிறதா அல்லது இயந்திர தன்மையிலிருந்து இயங்குகிறதா என்பதை வேறுபடுத்திப் பார்க்கிற புத்திசாலித்தனத்திலிருந்தே உயிரைப்பற்றி தேடுவதற்கு நாம் துவங்க முடியும். இந்தத் துவக்கம் உயிர் பற்றி தேடுவதற்காக மட்டுமன்று. உங்களுடைய மருத்துவம் சார்ந்த பயிற்சிக்கு, மருத்துவம் சார்ந்த தேடலுக்கு இன்னும் பலம் சேர்ப்பதாக இருக்கும். முதலில் உயிருள்ள ஒரு இயக்கத்திற்கும் உயிர்பற்றி இயங்குகிற ஒரு இயக்கத்திற்கும் இயந்திர தன்மையோடு உயிர் அம்சங்கள் ஏதுமில்லாத இயக்கத்திற்கும் இருக்கிற வேறுபாடை  நீங்கள் கவனித்து புரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கை என்பது உங்களுக்கு மட்டுமின்றி எல்லா உயிர் உள்ள ஜீவராசிகளுக்கும் பொருந்தும். எல்லா உயிர் உள்ள ஜீவராசிகளாலும் உயிருள்ள ஒரு பொருளை உயிருள்ளதாகவும் உயிரற்ற ஒரு பொருளை வெறுமனே இயந்திர தன்மையில் இயங்குவதாகவும் பார்க்க முடியும் என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அந்த வகையில் முதலில் இயக்கத்தில் இருக்கிற வேறுபாடு, தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் இடையே இருக்கிற தொடர்பு, இதற்குள் இருக்கிற நுட்பத்தை பார்க்கிற புத்திசாலித்தனம், இதுவரை தெரிந்திருக்கிற தெரிந்து இயங்குகிற நம் கண் முன்னால் நாம் காண்கிற எந்த ஒரு இயக்கமும் உயிர் உள்ளதா வெறுமனே இயந்திரத்தன்மை கொண்டதா என்பதை வேறுபடுத்திப் புரிந்து கொள்வது உயிர்ப்புத் தன்மையை எளிமையாக அணுகுவதற்கான சிறந்த வழி.

ALSO READ:குழந்தை(CHILD)

 

      உயிர் பற்றி இதுவரை சமூகம் கற்பித்து கொடுத்திருக்கிற சமூகவியல் கோட்பாடுகளே சமூகவியல் கருத்துகளே நமக்குள்ளும் பதிவு செய்திருப்பதை பார்க்கிறேன். ஒரு உயிர் பற்றி சமூகம் என்ன கருதிக் கொள்கிறதோ அது தான் ஒவ்வொரு தனி மனிதனுடைய கருத்தாகவும் இருக்கிறது. உயிர் பற்றிய உணர்வை குறிப்பிடும்போது கூட அவர்கள் தன்னளவில் இருக்கிற அனுபவங்களை பார்க்காமல், தன்னளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கிற பயிற்சி முறைகளை கணக்கெடுக்காமல் சமூகம் கருதி வைத்திருக்கிற, சமூகம் குறித்து வைத்திருக்கிற, சமூகம் வரையறுத்து வைத்திருக்கிற ஏதோ ஒரு உணர்வை ஏதோ ஒரு தன்மையை கருத்தாக வெளிப்படுகிற உயிர் கருத்தை நாம் பார்க்கிறோம். இந்தவகையில் உயிர் என்பது இன்னும் நுட்பமானதாகவே நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த பிரபஞ்சம் முழுவதும் பார்க்கையில் உயிர் இல்லாத எந்த பொருளும் எந்த இடமும் இல்லை என்பது எனது முடிவு. எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிற ஒரு தன்மை உயிர்த்தன்மை. ஒரு விலங்கினை நாம் காண்கிறோம். ஒரு பறவையை நாம் காண்கிறோம் . ஒரு தாவரம் வளர்வதை நம்மால் பார்க்க முடிகிறது. ஒரு மனிதன் இயங்குவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இவற்றிற்கும் அப்பாற்பட்டு, இந்த பிரபஞ்சம் முழுவதும் உயிரின் விரிந்த தன்மையை காணமுடிகிறது, காணக்கிடைக்கிறது

ALSO READ:100.3

    அந்தவகையில் பிரபஞ்சம் என்பது உயிர். உயிர் என்பது பிரபஞ்சம் என்ற அளவில் பிண்னி விரிந்திருக்கிற பரவலாக இருக்கிறது. ஒரு பல்லி அடிபடுகிறது. ஒரு பல்லியின் மீது ஒரு விபத்து நிகழ்கிறது. அந்த விபத்தில் பல்லியினுடைய வால் பகுதி உண்டாக்கப்படுகிறது. பல்லியினுடைய உயிர் தன்மையிலிருந்து அந்த வால் பகுதியும் பல்லியோடு இணைந்து இருக்கிற போது அந்த வால்பகுதி பல்லியினுடைய உயிர் தன்மையிலிருந்தே இயங்குவதாக நம்மால் எளிமையாக புரிந்து கொள்ள முடியும். ஆனால் அந்த விபத்திற்குப் பிறகு, அந்தப் பல்லி நகர்ந்ததற்குப் பிறகு சிறிது நேரம் கழித்தும் கூட அந்த வால் பகுதியானது அசைந்து கொண்டிருப்பதை துடித்துக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடியும்.இப்போது அந்த பல்லியினுடைய வால் பகுதியில் உயிர் இருக்கிறதா இல்லையா என்பது நமக்கு கேள்வியாக எழவேண்டும். கேள்வியாக எழக்கூடும். அந்தவகையில் நாம் தர்க்கமாக காரணகாரியமாக யோசிக்கிற போது பள்ளியினுடைய உயிர் அம்சத்திலிருந்து துண்டாக்கப்பட்ட வால் என்பதும்கூட துண்டான பிறகு துடித்துக் கொண்டு இருப்பதற்கு எது காரணம்?. எவ்வாறு அது துடித்துக்கொண்டே இருக்கிறது?  என்பதை நாம் ஆழமாக காண வேண்டியுள்ளது. மேலோட்டமாக புரிந்து கொள்ள வேண்டுமென்று இந்த உதாரணத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். பல்லியினுடைய வால்பகுதி புற உயிர் சார்ந்து புறச் சூழல் சார்ந்து இயங்குகிற இயங்கு தன்மையில் தொடர்ந்து உயிர் பெற்றே இருக்கிறது. அது உயிர்பெற்ற நிலையிலிருந்து தொடர்ந்து தான் இயங்குவதற்கு தேவையான தன்மையை பல்லியினுடைய நரம்பியல் தலைமையிலிருந்து பெற வேண்டி இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தினுடைய உயிர் தன்மையை பிரபஞ்சத்தினுடைய உயிராற்றலை வாலுக்கு கடத்துகிற நரம்பியல் தலைமைச் செயலகம் துண்டாடப்பட்டதறகு பிறகு அந்த இயக்கமானது நின்று போய்விடுகிறது. ஆக ஒரு தோற்றம் என்பது இயங்குவதற்கு மிக முக்கியமானது அந்தத் தோற்றம் பிரபஞ்சத்தோடு எவ்வாறு தொடர்பு கொண்டிருக்கிறது? அந்த பிரபஞ்சத்தோடு எவ்வாறு தனக்கான உயிர்சக்தியை பெற்றுக் கொள்கிறது? அந்த இயங்கு தன்மை எவ்வாறு இருக்கிறது? என்பதிலிருந்து அந்த தோற்றத்தை இயக்கம் தீர்மானிக்கப்படுகிறது

ALSO READ:பசுமைக் காலங்களே பண்டிகை காலங்கள்

    ஆக, ஒரு பல்லியினுடைய விபத்துக்குள்ளான வால் பகுதியானது துண்டாடப்பட்ட பின்பு அது தொடர்ந்து இயங்குவதற்கு உயிர் என்பதும் உயிரே பெற்றுக்கொள்கிற பெற்றுக்கொண்டு இயங்குகிற இயந்திர தன்மையும் முதன்மையாக இருக்கிறது. அந்த இயந்திரத் தன்மை துண்டாகும்போது அந்த இயந்திர தன்மையில் இடைவெளி ஏற்படுகிற போது அந்த உயிரானது அந்த வாலினுள் தொடர்ந்து இயங்குவதற்கு போதுமான வாய்ப்பு அளிப்பதில்லை. இப்போது அந்த வால் அந்த இயந்திர தன்மையிலிருந்து நரம்பினுடைய தலைமைச் செயலகத்தில் இருந்து துண்டாடப்படுகிறது. மீண்டும் அது பிரபஞ்சத்தோடு நேரடி தொடர்புக்கு உள்ளாகிறது. அப்போது அந்த  வால் குறிப்பிட்ட கால இடைவெளியில் கருத்துப் போகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் அழுகிப் போகிறது .குறிப்பிட்ட கால இடைவெளியில் காற்றோடு காற்றாக அந்த வால், விபத்துக்குள்ளான அந்த வால் தொகுதி முழுவதும் இல்லாமல் போகும் அளவிற்கு கரைந்தும் போகிறது. அந்த விபத்திற்குப் பிறகு அந்த வாலின் மீது நிகழ்கிற ஒவ்வொரு மாற்றமும் அந்த வால் இருக்கும் அதைச்சுற்றி வியாபித்திருக்கிற உயிர் தன்மைக்கும் இருக்கிற நெருக்கமான தொடர்பு. ஒரு விபத்துக்கு உள்ளாகும் முன் அந்த வால் பகுதியானது ஒரு தோற்றத்தினுடைய தலைமைச் செயலகத்தில் இருந்து உயிர் பெற்றுக் கொள்ளும், பெறும் முறையிலிருந்து அது இயங்கி வந்தது. அந்த விபத்திற்கு பிறகு அது நேரடியான உயிர் தன்மையோடு இணைந்துகொண்டு தன்னை புதுப்பித்துக் கொள்கிற அல்லது உயிரோடு கரைத்துக் கொள்கிற வேறொரு தளத்தில் தான் இயங்கத் துவங்குகிறது.

    ஆக, உயிர் என்பது தோற்றத்தின் வழியாகவும் தோற்றத்தில் இருக்கக்கூடிய தலைமைச் செயலகத்தின் வழியாகவும் இயங்குகிற தன்மையோடு இருக்கற ஒன்றாகவும் இருக்கிறது. துண்டாடப்பட்ட பிறகு இந்த பிரபஞ்சத்தோடு உயிர் தன்மையோடு நேரடியாக தம்மை கரைத்து கொள்கிற தன்மையோடும் இருக்கிறது. இது தோற்றம் சார்ந்தும் தோற்றத்திற்கு அப்பாற்பட்டும் இயங்குகிற உயிரின் தன்மை, உயிரியல் தன்மை.

 ALSO READ:நீங்கள் முழுவதும் படித்தவுடன் யோசிப்பீர்கள்

     உயிர்த் தன்மை என்பது எளிமையாக குறிப்பிட வேண்டுமென்றால் நமக்கு வாய்க்கப்பட்டிருக்கிற தோற்றத்தின் வழியாக எளிதாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு உணர்வு. நம் தோற்றத்திற்கு அப்பாற்பட்டு நம் உணர்வின் பாற்பட்டு கிடைக்கிற அனுபவத்திலிருந்து பார்க்கிறபோது, வெளியில் இருக்கிற எல்லா தோற்ற மற்ற நிலைகளிலும் கூட உயிரின் தன்மையை புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு இரண்டு முறைகளில் நாம் புரிந்து கொள்ள துவங்கினாலும் கூட எப்போதும் இருப்பது தோற்றங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கிற இயங்குகிற பிரபஞ்சத்தினுடைய உயிர் சக்தி உயிர் தன்மை. இது இலக்கியமாக, இலக்கியங்களில் ஆன்மீக வரையறைகளில் குறிப்பிடப்படுவது போல புனிதமானதாகவும் விளக்கமானதாகவும் விரிவாநதாகவும் இருக்கிறதா என்றால் அனுபவப்பூர்வமாக பார்க்கிறபோது மட்டுமே அவற்றை புரிந்து கொள்ள முடியும். ஏற்றுக்கொள்ள முடியும். எந்த விதத்திலும் உங்கள் பழைய கருத்துக்களோடு உயிரின் தன்மையை புரிந்து கொள்வது சாத்தியமில்லாதது. உயிரின் தன்மையை முதன் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று முயற்சி செய்கிற ஒருவர் தமது உடல் சார்ந்த இயக்கத்தில் இருந்து உயிரின் இயக்கத்தை உயிருக்கும் உடலுக்கும் நெருக்கமாக இருக்கிற பெற்றுக்கொள்ளும் தரத்தை உயர்த்தி கொள்வதன் மூலம், பெற்றுக் கொள்ளும் முயற்சியை விரிவுபடுத்திக் கொள்வதன் மூலம் அடைய முடியும் என்பது எனது பார்வை

    உயிர் என்பது வெறுமனே பயணிக்கிற விரவிக் கிடக்கிற விரிவாக விரிந்து இருக்கிற தன்மையாக இருக்கிறது பிரபஞ்சம் முழுவதுமே. பிரபஞ்சம் முழுவதும் இருக்கிற உயிரினுடைய தன்மையை ஒரு தனி மனிதன் ஒரு தாவரம் போல வெறுமனே காத்திருந்து கவனிப்பதன் மூலம் உள்வாங்கி கொள்ள முடியும், உணர்ந்து கொள்ள முடியும், புரிந்து கொள்ள முடியும் என்பது எனது பார்வை. அந்த வகையில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற  உயிரை பெற்றுக்கொள்ளும் உயிர் தன்மையை பிரபஞ்சத்திலிருந்து உள்வாங்கிக்கொள்ளும் பிரத்யேக வாய்ப்பு அமையப்  பெற்றவராகவே இருக்கிறான். அந்த பிரத்யேக வாய்ப்பின் வழியாக பிரபஞ்சம் வழங்குகிற பிரபஞ்சத்தோடு தொடர்பில் இருக்கிற உயிர்பெறும் தன்மையை தொடர்ந்து அவர் காத்திருப்பின் மூலம் வாங்கிக் கொள்வதும் அதில் பாற்பட்டு அவர் தன்னை உயர்த்திக் கொள்வதும் நோயிலிருந்து விடுபட்டு கொள்வதும் பிறருக்கு உதவி செய்வதும் சாத்தியமாகிறது. அந்த வகையில் பிரபஞ்சம் எப்போதும் வழங்கி கொண்டு இருக்கிற பிரபஞ்சம் எப்போதும் தந்து கொண்டிருக்கிற அந்த உயிர் பெறும் தன்மையிலிருந்து உயிர்ப்பு நிலையிலிருந்து தள்ளிப் போகிற பெற்றுக்கொள்ளாமல் தள்ளிவைக்கிற அவசரம் காட்டுகிற ஒருவருக்கு ஏற்படுகிற நிலைதான் உயிர்ப்பு நிலை தவறுவதாக உயிர்ப்பு நிலையில் ஏற்படுகிற தளர்வாக நாம் புரிந்து கொள்கிறோம்

ALSO READ:நலம்(HEALTH)

    அந்த வகையில் ஒரு மனிதனினுடைய வாய்ப்பு என்பது அவர் பெற்றிருக்கிற உடலிலிருந்து அந்த உடலுக்குள் இருக்கிற பிரபஞ்ச உயிர் ஆற்றலை பெற்றுக் கொள்ளும் பெறும் நிலையில் இருந்து பெற்றுக் கொள்கிற நிலையிலிருந்து இயங்குகிற தன்மையோடு அமையப் பெற்றிருக்கிறது. இது கடந்து இதற்கு அப்பாற்பட்டு தனது உயிர் பெற்றுக் கொள்ளும் அனுபவத்திலிருந்து பார்க்கிற இன்னும் கூர்மையாக பார்க்கிற புத்திசாலித்தனத்தோடு பார்க்கிற ஒரு மனிதனுக்கு உலகம் முழுவதும் தோற்றத்திற்கும்  அப்பாற்பட்டு இயங்குகிற  பிரபஞ்ச உயிர்ப்பு நிலையை காண முடியும். அனுபவிக்க முடியும். பெற்றுக்கொள்ள முடியும்.


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...