Sunday, July 12, 2020

எது மருத்துவம்? - இயற்கைகு திரும்புவது,நோய்களிலிருந்து விடுபட

 

                              இயற்கைகு திரும்புவது

return to nature
return to nature

     மனிதனுக்கு நோயைத் தீர்த்துக் கொள்வதில், மனிதன் நோயிலிருந்து விடுபடுவதில் நிறைய பரிந்துரைகள் இருக்கின்றன. எல்லா  மருத்துவங்களிலும் மனிதன் நோயில் இருந்து விடுபடுவதற்கு, இயற்கைக்கு திரும்புவது சிறந்த வழி என்று சொல்லப்படுவதாக ஒரு கருத்து நிலவி வருகிறது. உண்மையிலேயே எல்லா மருத்துவங்களும் மனிதனை நோயிலிருந்து தீர்த்துக் கொள்வதற்காக இயற்கையை நோக்கி திரும்ப வேண்டுமென்று வலியுறுத்துகின்றனவா என்றால் அவ்வாறு இல்லை. இன்றைய காலகட்டத்தில் இயற்கையை நோக்கி திரும்பி விடலாம் என்று மனிதனினுடைய ஆர்வத்தில் இருந்து விருப்பதிலிருந்து மருத்துவத்தையும் மருத்துவத்தின் கருத்துக்களையும் இவ்வாறாக பார்க்கிற மனோபாவம் அதிகரித்திருக்கிறது. உண்மையிலேயே மனிதன் இயற்கையை நோக்கி திரும்புகிற போது நோயில் இருந்து விடுபடுவதற்கு அதிக சாத்தியம் இருப்பதாக மருத்துவ நூல்கள் கூறுவதாக தோன்றுகிறதே தவிர அவ்வாறு மருத்துவ நூல்கள் கூறவும் இல்லை, அதேநேரத்தில் அவ்வாறான நோய் விடுதலைக்கான சாத்தியங்களும் இல்லை

also read:உணவு சொல்லும் வாழ்க்கை முறை

    இயற்கையை நேசிக்கிற அல்லது இயற்கைக்கு இணக்கமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிற இயற்கையை பரிந்துரை செய்கிற நபர்கள் கூட இவற்றில் இன்னும் கூடுதலாக உரையாட வேண்டிய தேவை இருக்கிறது. ஏனென்றால் இயற்கைக்கு திரும்புவது என்பது நோயிலிருந்து விடுபடுவதற்கான சரியான வழியாக எனக்கு தோன்றவில்லை. இயற்கைக்கு திரும்புவது என்பது நோயில் இருந்து விடுதலையாவதற்கு துவக்கமாக இருக்கக்கூடும். இயற்கைக்கு திரும்புவது என்பது நோயினுடைய தீவிர தன்மையை குறைத்துக் கொள்வதற்கான வாய்ப்பாக இருக்கக்கூடும். ஆனால் நோயிலிருந்து விடுதலையாவதற்கு மனிதனுடைய சிந்தனை ஓட்டத்தில், அவனுடைய விழிப்பு நிலையில், அவனுடைய உயிர்ப்பு தன்மையில், ஓர் ஆழமான மாற்றம் ஏற்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. இயற்கைக்கு திரும்ப வேண்டுமென்று வலியுறுத்திபவர்கள் விலங்குகளையும் தாவரங்களையும் உதாரணமாக முன்வைத்து உரையாடுவதை பார்க்கமுடிகிறது. விலங்குகள், பெரும் உயரம் கொண்ட பெரும் எடை கொண்ட விலங்குகள் கூட நோய்வாய் படுவதில்லை என்று உதாரணங்களை முன்வைக்கின்றனர். எந்த வறட்சியிலும் ஒரு மழை கொண்டவுடன் புற்கள் பசுமையாக வளர்கின்றன என்று உதாரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த உதாரணங்களை இயற்கையோடு திரும்ப வேண்டுமென்று வலியுறுத்துவதற்கு போதுமான அளவாக எடுத்துக்கொள்ள முடியாது

வாசிக்க:புத்தர்களுக்கு அடையாளம் தேவைப்படாது

    எந்த விலங்கும் என்ற தாவர இனமும் மனிதன் அல்லாத எந்த ஒரு இயற்கை சார்பு ஜீவராசிகளும் அதன் அளவில் அவை சிந்திப்பதில்லை. அவைகளுக்கு ஒரு இயங்கு தன்மை இருக்கிறது. ஒரு இயந்திர முறையில் அவை இயங்குகின்றன. உணவு உட்கொள்கின்றன. கழிவுகளை வெளியேற்றுகின்றன. கலவி கொள்கின்றன. மறு உற்பத்தி செய்கின்றன. தேவையானவற்றை தேர்வு செய்கின்றன தேவையானவற்றை தேர்வு செய்கின்றன என்று உரையாடுகிற போது சிக்கல் வருகிறது. அவற்றிற்கு தேவையானது, தேவையற்றது என்ற பாகுபாடு தெரியாது. ஒரு விலங்கிற்கு தான் என்ன உண்ண வேண்டும் என்று இயல்பிலேயே ஒரு இயந்திர தன்மை இருக்கிறது. ஒரு தாவரத்திற்கு தான் எப்போது பூக்க வேண்டும் என்று இயல்பிலேயே ஒரு இயங்கும் இயந்திர தன்மை இருக்கிறது. இரண்டு ஆண் பெண் வகைப்பட்ட ஜீவராசிகளுக்கு எப்போது கலவி கொள்ள வேண்டுமென்று இயற்கையிலேயே ஒரு இயங்கு தன்மை, இயந்திர தன்மை இருக்கிறது

வாசிக்க:நரிகள் வடைகள் சாப்பிடுவதில்லை

    ஆனால் மனிதர்களுக்கு அப்படி எந்த இயந்திர தன்மையும் உடல் சார்ந்து இருப்பதில்லை. அனைத்தும் சிந்தனை சார்ந்தது. ஒரு மனிதன் விரும்புகிற போது உணவு உட்கொள்ளக் கூடிய சிந்தனை ஓட்டம் மனிதன் பெற்றிருக்கிறான். விரும்புகிற போது உறங்குகிற சிந்தனை ஓட்டம் மனிதனுக்கு வாய்க்கப் பெற்றிருக்கிறது. தேவையானபோது கலவி மேற்கொள்ளும் உடல்வாகு உடல் உழைப்பு உடல் முயற்சி மனிதனால் உருவாக்க முடியும். இத்தகைய எந்த வடிவமும் இயற்கையில் இருக்கிற எந்த ஜீவராசிகளுக்கும் கிடையாது. இத்தகைய சுயமாக இயங்க கூடிய சுயசார்பில் இயங்கக்கூடிய தன்னளவில் முடிவு செய்யக்கூடிய தன்மையிலிருந்து தான் மனிதனுடைய ஆரோக்கியமும்  ஆரோக்கிய குறைவும் ஏற்பட துவங்குகிறது. விலங்குகளுக்கு அவ்வாறு இல்லை. எந்த ஜீவராசிகளுக்கும் அவ்வாறு இல்லை. எல்லா ஜீவராசிகளும் அதற்கேயுரிய இயங்கும் தன்மையில் இயந்திரத்தன்மையில் இயங்குவதால் அவைகளுக்கு ஆரோக்கியம் பற்றிய கவலையும் கிடையாது ;ஆரோக்கியமின்மை பற்றிய கவலையும் கிடையாது. மனிதனுக்கு அவ்வாறு இல்லாமல் ஒவ்வொன்றின் மீதும் சிந்தனைத் திறனும் சிந்திக்கிற மனோபாவமும் சிந்தனை ஓட்டமும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருப்பதால் மனிதனைப் பொறுத்த அளவில் ஒவ்வொன்றும் ஆரோக்கியம் சார்ந்தது, ஆரோக்கிய கேடு சார்ந்தது.

                           நோய்களிலிருந்து விடுபட

     மருத்துவத்தில் மருத்துவம் மேற்கொள்கிற மனிதனினுடைய இயல்பு நிலையில் விதவிதமான ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகளும் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளும் இருப்பதை காணமுடிகிறது. எப்போது ஒரு மனிதனுக்கு நோய் வருவதில்லை என்கிற கேள்வி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. மனிதன் தனக்கு ஏற்பட்டிருக்கிற நோயிலிருந்தே இந்த கேள்வியை கேட்க கூடும். எப்போது ஒரு மனிதனுக்கு நோய் எதுவும் வருவதில்லை. எப்போது ஒரு மனிதன் முழுமையான நலத்துடன் வாழ முடியும் என்கிற தன்மையில் இந்த கேள்வி உருவாகிறது. இந்த கேள்விக்கு உட்பொருளாக மனிதன் எப்போது என்கிற நிகழ்காலம் அல்லாத வேறொரு தளத்தில் பயணிக்கிற தன்மையோடு இருப்பதை பார்க்க முடிகிறது. நிகழ்காலத்தில் இருக்கிற ஒரு மனிதனுக்கு நோய் என்பதே இருக்காது என்பது எனது பார்வை. நிகழ்காலத்தில் தன்னை நிறுத்தி வைத்துக் கொள்கிற திடமான நிலை பெறும் தன்மை ஒருவருக்கு இருக்கும் என்றால் அவருக்கு நோய் எப்போதும் இருக்காது. நிகழ்காலத்தில் இருக்கிற ஒரு மனிதனுக்கு தம்மைச் சுற்றி நடக்கிற எந்த ஒரு அசௌகரியமும் எந்த ஒரு நிகழ்வு பிறழ்வும்கூட நோயாக பார்க்க முடியாது. அது அவருக்கும் நிகழ்காலத்துக்குமாக இருக்கிற ஒரு அனுபவம்.     

ALSO READ:நலம் எனப்படுவது

    ஒரு மனிதன் மருத்துவம் கடந்து தன் நோயிலிருந்து விடுதலை ஆக வேண்டும் என்று கருதுவார் என்றால் அதற்காக முயற்சி செய்வார் என்றால் அவர் மேற்கொள்ள வேண்டிய மிக உன்னதமான பணி, மிக உன்னதமான முயற்சி அவர் தன்னை நிகழ்காலத்தில் நிறுத்திக் கொள்வதற்கு முயற்சி செய்வதுதான். முயற்சி செய்வது என்பது கூட மேலோட்டமான பார்வை தான். அவர் நிகழ்காலத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஏதாவது ஒன்று செய்தாக வேண்டும். நிகழ்காலத்தில் இருக்கிற ஒரு மனிதனுக்கு நோய் வருவதில்லை. விலங்குகளைப் போல, தாவரங்களைப் , இன்ன பிற ஜீவராசிகளை போல மனிதன் ஒப்பிட்டு இயற்கைக்கு திரும்புவதை விடவும் முன்னோர்களின் உடைய வாழ்க்கை முறையை ஒப்பிட்டு பார்த்து அவர்களைப் போல வாழ வேண்டும் என்று தன்னை தயார் செய்து கொள்வதை விடவும் எதிர்கால மனிதனினுடைய விரிந்த அறிவை கணக்கில் கொண்டு புதிய மருத்துவ நுட்பங்களை கண்டுபிடிப்பதை விடவும் மிகச் சிறந்த நோய் தீர்க்கும் முறை ஒரு மனிதன் நிகழ் காலத்தில் தன்னை நிறுத்திக் கொள்வது. ஒரு மனிதன் நிகழ்காலத்தோடு தன்னை இணைத்துக் கொள்வது. எந்த ஒரு மனிதன் ஒரு விலங்குகளைப் போல தாவரத்தை போல இன்னபிற ஜீவராசிகளை போல என்று ஒப்பீடுகள் இல்லாமல் நிகழ்காலத்தோடு தன்னை இணைக்க தயாராக இருக்கிறாரா பிணைத்துக் கொள்ள தயாராக இருக்கிறாரோ அவருக்கு நோய்கள் வருவதில்லை. தாவரங்களும் விலங்குகளும் இன்னபிற ஜீவராசிகளும் அறிவின் பாற்பட்டு அனேக கண்டுபிடிப்புகளை எட்டாமல் இருக்கலாம். புதிய கருவிகளை பயன்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் அவற்றிற்கு நோயில் சிக்காமல் இருப்பதற்கு ஒரே காரணம், அவை அனைத்தும் எதிர்காலத்திற்கோ கடந்த காலத்திற்கோ பயணிப்பது இல்லை. எந்த காகமும் நிகழ்காலத்தை விட்டு நகர்வதில்லை. எந்த சந்தன மரமும் நிகழ்காலத்தை தவறவிடுவதில்லை. எந்த மீன்குஞ்சு நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்கின்றன. இவை மட்டும்தான் விலங்குகளினுடைய நோய் இல்லாமைக்கு விலங்குகளினுடைய நோயற்ற தன்மைக்கு அடிப்படையாக இருக்கின்றன என்பது எனது பார்வை. மனிதனுக்கும் இது சாத்தியம். விலங்குகளை விடவும் இன்னும் விழிப்பாக பறவையை விடவும் இன்னும் புத்திசாலித்தனமாக ஒரு மனிதன் தான் தன்னை நிகழ்காலத்தில் நிறுத்திக் கொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கையும் விருப்பமும். அவ்வாறு நிறுத்திக் கொள்கிறபோது ஒரு மனிதன் முழுமையாக நோய்களிலிருந்து விடுபடுவதற்கு சாத்தியம் உள்ளவனாக ஆகிறான். அது மட்டுமே அவனை நோய்களிலிருந்து மட்டுமல்லாமல் இன்ன பிற எல்லா சமூக  அசவுகரியங்களில் இருந்தும்கூட விடுதலை செய்யும் என்பது எனது யூகம்.


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...