உணவு சொல்லும் வாழ்க்கை முறை

மேலும் பிற சூழலில் வாழ்வோருக்கு நல்ல உணவு என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டிய அவசியம் அவ்வுணவுக்கு இல்லை. உங்கள் சூழல், உங்கள் வாழ்க்கை முறை, உங்கள் உணவு என்கிற தொடர்பின் அடிப்படையில் உணவு பற்றிய புரிதல் வரும்போது உணவு பற்றிய ஆலோசனைகளுக்கும் பயத்திற்கும் அவசியம் இல்லாமல் போகிறது. ஒருவேளை உடல்நலம் குன்றியுள்ள காலத்தில் இப்புரிதல் ஏற்படும் எனில் உங்கள் சூழல் சார்ந்த வாழ்க்கை முறை, உணவு உங்கள் உடல் நலத்தை மீட்டுக் கொடுப்பதோடு நிரந்தர வளமைக்கு துணை புரியும். இவ்வாறாக உணவு சார்ந்த வாழ்க்கை முறை என்பது காணக் கிடைக்கின்றது. உணவு சார்ந்த வாழ்க்கை முறை பெற்றவர்கள் நலம் குறைவதில்லை. அவர்களுக்கு உளவியல் சிக்கல் ஏற்படுவதில்லை. உடலையும் உணர்வையும் நலம் குன்றாமல் பேணிக் கொள்ள அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. உங்களின் வாழ்க்கை முறையும் உணவு சார்ந்து வடிவமைக்கப்படுமெனில் இயற்கையோடு நீங்கள் வாழும் சூழலோடு, இயற்கை சார்ந்த தன்மையோடு உங்களை வலிமையாக்கிக் கொள்ளவும் வளமாக்கிக் கொள்ளவும் முடியும்.
ALSO READ:மருத்துவத்தின் நோக்கம்
நவீன அறிவோடு ஆராய்ந்து பார்த்தால் உணவு சார்ந்த வாழ்க்கை முறை இயற்கை சூழல் எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறே வாழ்வது என்று புரிந்து கொள்வோம். இந்தப் புரிதல் கிடைத்தவுடன் அறிவு பேசத் தொடங்கி விடும். அது சொல்லும் மனிதன் ஆறறிவு படைத்தவன். தான் சார்ந்த சூழலில் இருந்து உணவை இன்னும் மேன்மை செய்து கொள்ள முடியும்.கிடைக்கும் உணவுப் பொருளை அப்படியே உட்கொள்ள நாமென்ன காட்டுமிராண்டிகளா அல்லது விலங்குகளா-என்றெல்லாம் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கும். அறிவும் அதன் வேலையும் சூழலின் மீது ஏற்படுகிற சலிப்புணர்வே என்ற தன்மையோடு இதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.உங்கள் அறிவு இயற்கையிலிருந்து புதிய பயன்பாட்டுப் பொருட்களை கண்டுபிடித்தது போல புதிய உணவுப் பொருட்களை சமைக்க சொல்லித் தரும். ஒரு சூழலில் உருவாக்கப்பட்ட பொருளை உலகம் முழுவதும் பரவலாக்கியது போல உணவுப் பொருட்களையும் பரவலாக்கும். புதிய கண்டுபிடிப்புகளுக்கும் பயன்பாட்டு பொருட்களுக்கும் சமைப்பதும் மேன்மை படுத்துவதும் பரவலாக்குவதும் அவசியம் ஆகலாம். இது உணவுப் பொருட்களுக்கு அவசியமில்லாதது மட்டுமின்றி பொருத்தமில்லாததும் கூட. இன்றைய வாழ்க்கை சூழலில் இயற்கை உணவு சார்ந்த உட்கொள்ளும் முறையை பின்பற்றுவது நடைமுறைக்கு கடினமானது என்று வாதிடக் கூடும்.
ALSO READ:நோய் எங்கு ஆரம்பமாகிறது?
ஆனால் பரவலாக்கப்பட்ட உணவும் சூழல் சாராத உணவும் உங்கள் உடல் நலத்தை சிதைத்த பிறகு இயற்கையான உணவுப் பண்டங்களை பெரும் விலை கொடுத்து வாங்கி உண்பதை பார்க்க முடிகிறது. இன்று வாழ்க்கை முறையை மையமாக வைத்து உணவைப் புறக்கணிப்பவர்கள் உடல்நலம் கெட்டுப் போன காலத்தில் உணவிற்காக மட்டும் பெரும் செலவு செய்வதை பார்க்கிறோம். பெரும் செலவு செய்து உண்ணும் உணவுப் பொருட்கள் சூழல் சார்ந்த உணவுப் பொருட்களாக இருக்கின்றன. உடல் நலம் கருதி பெரும் செலவு செய்யும் சூழல் சார்ந்த உணவுப் பொருட்கள் நவீன வாழ்க்கை முறைக்குள் பொருந்தும் போது உங்கள் அறிவு எழுப்புகிற காட்டு மிராண்டி நினைவுகளும், விலங்கின் கேலிகளும் காணாமல் போகின்றன. வாழ்க்கை சார்ந்த உணவும் உணவு சார்ந்த வாழ்க்கை முறையும் மிக நுட்பமான தன்மையில் உடல் ஆரோக்கியத்தை பராமரித்துக் கொண்டே வருகின்றன. இந்த பராமரிப்பு போட்டியில் வாழ்க்கை சார்ந்த உணவு முறையை விடவும் உணவு சார்ந்த வாழ்க்கை முறை வெற்றி பெறும் என்பதை அனுபவித்தவர்கள் புரிந்து கொள்வதும் பறை சாற்றுவதும் நடக்கிறது.
ALSO READ:திடீரென நிகழ்ந்தால்
உணவு சார்ந்த வாழ்க்கை முறை என்பதும் வாழ்க்கை சார்ந்த உணவு முறை என்பதும் நலம் பெறுவதற்கு தொடர்புடையது என்று பொதுவாக அணுகாமல் நலக் குறைபாடு உள்ள காலங்களில் எந்த வகையான உணவு முறை சாலச்சிறந்தது எனவும் பொருத்தமானது எனவும் ஆராய்ந்து பார்க்க வேண்டியது உணவைப் பற்றி பேசுவோருக்கும், உணவுப் பொருட்களை பயன்படுத்துவோருக்கும் முன் நிற்கிற பொறுப்பாகும். எவ்வகையான உணவுமுறை மனிதனின் உடல் நலத்தை பாதுகாக்கவும் பலப்படுத்தவும் துணை நிற்கிறதோ அந்த உணவு முறையை பின்பற்றுவதை வலியுறுத்துவது எதிர் வரும் தலைமுறைக்கு நாம் கடத்தும் நலம் பற்றிய புரிதலாகும். கடத்தும் என்ற வார்த்தை கவனிக்கப்பட வேண்டியது. நலம் பெற்ற ஒருவர் நலம் என்கிற அனுபவத்தை எவ்வகையான உணவு முறையின் துணை கொண்டு பெற்றுக் கொண்டார் என்கிற அடிப்படையில் தன் தலைமுறைக்கு சாட்சியாக இருந்து நிரூபிப்பதே கடத்தப்படுவது என்பதன் சொற்பொருள். நல்ல உணவு முறையும் நல்ல வாழ்க்கை முறையும் மனிதன் நலமாகவும், வளமாகவும் வாழச்செய்கிற உதவியைப் பெற்றுக் கொண்ட அனுபவத்தின் வாயிலாக நலம் பற்றி பறை சாற்ற வேண்டும். உணவுப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எது நல்ல உணவு, எது நல்ல வாழ்க்கை முறை என்பது பற்றிக் கூட ஆலோசிக்கலாம். எந்த வகை உணவாக இருந்தாலும் அதனை உற்பத்தி செய்யவும் உண்ணவும் சாத்தியம் இருக்கிறதா என்கிற ஆராய்ச்சியை விடவும் எந்த உணவு நலம் தர வல்லது என்று முடிவெடுப்பதே இன்றைய சூழலில் அறிவுப்பூர்வமானது.
No comments:
Post a Comment