Monday, June 29, 2020

எது மருத்துவம்? - மருத்துவத்தின் நோக்கம்

மருத்துவத்தின் நோக்கம்

     ஒரு தனிமனிதனுக்கு உடல்சார்ந்த,மனம் சார்ந்த முழுமையான நலம் கொடுக்கவல்ல செயல்முறையே முழுமையான நல்ல மருத்துவமாக நாம் கருதிக் கொள்ள முடியும். இன்று நடப்பில் இருக்கிற தகவல்களின் அடிப்படையில், நாம் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகளின் அடிப்படையில் ஒரு மருத்துவத்தை ஆய்வு செய்தோம் என்றால் மருத்துவத்தை பரிசீலித்தோம் என்றால் மனிதனுடைய உடல்சார்ந்த கவனம் கொண்டுள்ள மருத்துவங்களே அதிகமாக தென்படுகின்றன.

ALSO READ:நோய்களிலிருந்து விடுபட


ஆழ்ந்த தத்துவார்த்த பின்புலங்கள் கொண்ட மனித தேகசாஸ்திரம் நூல்களைக் கொண்ட மருத்துவங்கள் கூட, ஆதி மருத்துவங்கள் கூட, மாற்று மருத்துவங்கள் கூட இன்றைய சம காலத்தில் மனிதனுடைய புறம் சார்ந்த, உடல்சார்ந்த  துயரங்களில் இருந்து மட்டுமே விடுதலை செய்வதற்கான நோக்கில் இயங்குவதாகவே பார்க்க முடிகிறது. மனிதனுடைய உடல்சார்ந்த நோய்களிலிருந்து, இன்னும் ஆழமாக மனிதனுடைய மனம் சார்ந்த நோய்களிலிருந்து விடுதலை செய்வது. உடல் மனம் இந்த இரண்டு அம்சங்களில் மட்டும் நோய்வாய்ப்பட்டிருக்கிற பகுதிகளை மட்டும் கலைந்து சரி செய்து கொள்ளக்கூடிய மருத்துவங்களை இன்று நாம் காண்கிறோம். இந்த  இரண்டு அம்சங்கள் மட்டும்தான் மனிதனுடைய நோய்க்கான தலங்களாக இருக்கின்றனவா என்பது நம்முன் இருக்கிற எனக்கு இருக்கிற கேள்வி. ஒரு மனிதன் தன்னளவில் தன் மன அளவில் நோய்க்கூறுகளோடு துயரங்களோடு இருக்கிறான் என்றால் இருக்கிறான். ஒரு மருத்துவத்தினுடைய பணி என்பது அவன் உடல் சார்ந்தும் மனம் சார்ந்தும் ஏற்பட்டிருக்கக் கூடிய நோய்களை மட்டும் நீக்கினால் போதுமானதா என்றால் தேவையிலிருந்து போதுமானது. ஆனால் இன்னும் ஆழமாக மனிதனுடைய மனதிற்கும் உடலிற்கும் நோயை உருவாக்கக்கூடிய காரணிகள் வேறு ஏதேனும் இருக்கின்றனவா என்று  ஆய்வு செய்ய வேண்டியது ஒரு மருத்துவத்தின் அல்லது மருத்துவம் பயிற்சி செய்கின்ற மருத்துவரின் தனிப்பட்ட பொறுப்பாகவே நான் கருதுகிறேன். ஒரு மனிதனுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய உடல் அல்லது மனம் சார்ந்த தொந்தரவுகளை, துயரங்களை நீக்குவது மட்டும் மருத்துவத்தின் பொறுப்பாக இருக்க முடியாது, இருக்கக்கூடாது. இரண்டு தளங்களிலும் மனம் மற்றும் உடல் உள்ளிட்ட இரண்டு தளங்களிலும் நோய் ஏற்படுவதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா, வேறு ஏதாவது ஆழமான பகுதிகள் இருக்கின்றனவா என்று கூர்ந்து பார்க்கிற ஆய்வு செய்து பார்க்கிற தேவையை ஒரு மருத்துவனும்  மருத்துவ நூல்களும் கொண்டிருக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன். அந்த வகையில் ஒரு முழுமையான மருத்துவம் என்பது ஒரு மனிதனுடைய உடல் மற்றும் மனம் சார்ந்த துயரங்களிலிருந்து விடுதலை செய்வதோடு மட்டுமல்லாமல், உடலிற்கும் மனதிற்கும் துயரங்களை உருவாக்குகிற ஆழமான தளம் குறித்தும் அதில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கிற ஆய்வு செய்கிற தன்மையோடு இருக்கிற தேவை இருக்கிறது .அந்த வகையில் பார்க்கிற ,ஆய்வு செய்கிற மருத்துவமே ஆகச் சிறந்த மருத்துவமாக இருக்க முடியும் என்று நான் கருதுகிறேன்.

ALSO READ:நோய் தீரும் வழிமுறை


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...