நோய் எங்கு ஆரம்பமாகிறது?
ஒரு மனிதனுக்கு உடல் சார்ந்தும் அதன் பொருட்டு மனம் சார்ந்தும், மனம் சார்ந்தும் அதன்பொருட்டும் உடல் சார்ந்தும் நோய்கள் ஏற்படக்கூடும். இன்னும் சரியாக சொல்லவேண்டும் என்றால் உடல் சார்ந்தோ மனம் சார்ந்தோ உள்ளுக்குள் ஏற்பட்டிருக்கிற நோய் என்பது அவ்வாறு வெளிப்படுவதாக இல்லை. உள்ளுக்குள் ஏற்பட்டிருக்கிற நோய் என்பது ஒரு மனிதனுடைய உடல் சார்ந்தோ அல்லது மனம் சார்ந்தோ வெளிப்படக்கூடும் என்பதே சரி. இவ்வாறு இருப்பதாகவே நான் பார்க்கிறேன். ஒரு மனிதனுக்குள் ஏதோ ஒரு மையப்புள்ளியில் சமநிலை தவறுகிறது. எந்த மையப்புள்ளி என்பதை நாம் கண்டுபிடிக்க முடியும். அந்த மையப்புள்ளி குறித்து எனக்கு புரிதல் இருக்கிறது. அது மருத்துவத்திற்குள் இருக்கிற எனக்கு ஏற்பட்ட அனுபவங்களில் கிடைத்த நம்பிக்கை.VIDEO OF THIS ARTICLE
இப்போது பேசிக் கொண்டிருக்கிற உரையாடலில் நான் உங்களுக்கு அழுத்தமாக சொல்லவேண்டும் என்று கருதுவது உங்களுக்குள் உங்கள் மையத்திற்குள் ஏற்பட்டிருக்கிற ஒரு சமநிலை தவறுதலின் காரணமே உங்கள் மனதிலோ உங்கள் உடலிலோ நோயாக வெளிப்படுகிறது என்று நான் கருதுகிறேன். மற்ற மருத்துவங்கள், சமகாலத்தில் இருக்கிற மருத்துவங்கள் உங்களுக்குள் ஒரு மனிதனுக்குள் ஏற்பட்டிருக்கிற மையமான சமநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்வதாக கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனாலும் ஒரு மனிதனுக்குள் ஏற்பட்டிருக்கக் கூடிய சமநிலை மாற்றமே அவரது உடலிலோ மனதிலோ அசவுகரியமாக, நோயாக வெளிப்படுவதாக நான் பார்க்கிறேன். இதுவரை வேறு வேறு உடல் உபாதைகளுக்காக நாம் சந்தித்திருக்கிறோம். உங்கள் மன அழுத்தமாக இருக்கக்கூடும், உங்களது உடல் சோர்வாக இருக்கக்கூடும். புறவயமாக ஏற்பட்டிருக்கக் கூடிய காயங்களாக இருக்கக் கூடும். புறவயமாக ஏற்பட்டிருக்கக் கூடிய போராட்ட மனோபாவமாக இருக்கக்கூடும். இப்படி வேறு வேறு காரணங்களுக்காக நாம் வெவ்வேறு தருணங்களில் சந்தித்திருக்கிறோம். இந்த எல்லா காரணங்களுக்கும் பின்னால் இருப்பதாக நான் கண்டுகொண்டது உங்களது மையமான உயிர்ப்பு நிலையில் ஏற்பட்டிருக்கக் கூடிய சமநிலை மாறுபாடு தான். நீங்கள் உடல் சார்ந்த தொந்தரவுகளை என்னிடம் கூறினாலும் மனம் சார்ந்த தொந்தரவுகளுக்காக என்னிடம் பேசினாலும் எல்லாவற்றிற்கும் நான் கண்ட நோயறிதல் நோய்க்கூறு என்பது உங்கள் உயிர்ப்பு நிலையில், உடலுக்கும் மனதுக்கும் அப்பாற்பட்ட ஆழமான பகுதியில் ஒரு சமநிலை தவறியதன் காரணமாக ஏற்பட்ட விளைவே உங்கள் உடலிலோ அல்லது மனதிலோ வெளிப்பட்டுள்ளதாக நான் உணர்ந்திருக்கிறேன். அந்த வகையில் உங்கள் சமநிலை நேர்படுவதற்காக உங்கள் உயிர்ப்பு நிலை மேம்படுவதற்கான எனது முயற்சி எனக்கு முன்னால் இருக்கிற எனக்கு முன்னோர்களாக இருக்கிற தத்துவ ஆய்வாளர்களும் மருத்துவ நிபுணர்களும் கற்றுக்கொடுத்த செய்திகளிலிருந்து நான் மேற்கொண்ட முயற்சி உங்களது உடல் நிலையையும் மன நிலையையும் அதன்மீது வெளிப்பட்டு கொண்டிருக்கிற நோய்களையும் களைந்து உங்கள் உயிர்ப்பு நிலையில் சமத்துவத்தை சமநிலையை உருவாக்க முயற்சி செய்திருக்கிறது. அது வெற்றி பெற்ற நிலையில் மட்டும் தான் நீங்கள் உடலளவிலும் மனதளவிலும் சமநிலை கொண்டவர்களாக ஆரோக்கியம் நிறைந்தவர்களாக மாறி இருக்கிறீர்கள் என்பது எனது அனுபவம்.
ALSO READ:உணவு சொல்லும் வாழ்க்கை முறை
No comments:
Post a Comment