திடீரென நிகழ்ந்தால்
மருத்துவம் என்பது ஒரு மனிதனுடைய புறவயமான முயற்சிகளில் வெற்றி பெறுவதாக இன்று நம் கண்முன் காட்டப்படுகிறது. ஒரு மனிதனுக்கு திடீர் விபத்து ஏற்பட்டால் அவனை எவ்வாறு குணப்படுத்துவது?, ஒரு மனிதனுக்கு திடீர் அசவுகரியம் ஏற்பட்டால் அவனை எவ்வாறு குணப்படுத்துவது?, ஒரு மனிதன் திடீரென வேகமாக ஓட வேண்டும் என்றால் அவனை எவ்வாறு ஓட வைப்பது?, ஒரு மனிதன் திடீரென நீண்ட நேரம் தூங்க வேண்டும் என்றால் அவனை எவ்வாறு தூங்க வைப்பது? இப்படியான ஒரு மருத்துவ வரையறைகள் இன்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்றன. இது உண்மையிலேயே நிஜமான மருத்துவமாகுமா என்பது எனக்கு இருக்கிற கேள்வி. இந்த கேள்வி நீண்ட காலம் மருத்துவத்தோடு வேலை செய்கிற, மருத்துவத்தோடு உறவாடடுகிற நபர் என்பதால் அதிக முக்கியத்துவம் உடைய கேள்வியாக நான் கருதுகிறேன்.
ALSO READ:உணவில் உயர்வு தாழ்வு
திடீரென ஒரு மனிதனுக்கு அவனுடைய இயல்பிலிருந்து பெரிய மாற்றத்தை செய்யமுடியுமா? என்பது நம்முன் இருக்கிற சவாலாக இந்த சமூகம் மீண்டும் மீண்டும் நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறது. திடீரென விபத்து ஏற்பட்டால் ஒரு மனிதனை எவ்வாறு காப்பாற்றுவது? என்பது மாற்று மருத்துவங்கள் மீது நவீனகால மனிதர்கள் எழுப்புகிற கேள்வியாக இருக்கிறது. ஆக, ஒரு மருத்துவம் என்பது முதன் முதலில் உருவாக்கப்பட்டதோ ,முதன் முதலில் ஆய்வு செய்யப்பட்டதோ, திடீரென ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கு தீர்வு காண்பதாக இருக்கிறதா? என்று பார்த்தோம் என்றால், அவ்வாறு இல்லை. முதல் மருத்துவம் எந்த வகையான மருத்துவ முறையாக இருந்தாலும், அது மரபுசார்ந்த மருத்துவமாக இருந்தாலும் அல்லது நவீனமான மருத்துவமாக இருந்தாலும் அல்லது இயற்கை வாழ்வியல் சார்ந்த மருத்துவ முறையாக இருந்தாலும் அல்லது மேற்கத்திய அறிவு சார்ந்த மருத்துவ முறையாக இருந்தாலும் கூட எந்த ஒரு மருத்துவ முறையும் ஒரு மனிதனுக்கு திடீரென ஏற்படுகின்ற உபாதைகளை எவ்வாறு சீர் செய்வது என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. ஒரு மனிதனுக்குள் திடீரென ஏதாவது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான உத்திகளை, நுட்பங்களை எந்த மருத்துவமும் கொண்டிருக்கவில்லை. ஆனால் சமகாலத்தில் நம் கூடவே இருக்கிற மருத்துவமனைகளும் மருத்துவ நிபுணர்களும் முன்வைக்கிற மருத்துவம் சார்ந்த கேள்வி, சந்தேகம் என்பது அந்த மருத்துவத்திற்கு பொருந்தாத, மருத்துவ தத்துவத்திற்கு பொருந்தாத, மருத்துவ ஆய்வு முறைகளுக்கு பொருந்தாத வகையில் திடீரென ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்கிற கோணத்தில் முன்வைக்கப்படுவது அபத்தமானதாகவே எனக்குப்படுகிறது. திடீரென வந்தால் என்ன செய்வது என்பது அல்ல கேள்வி. ஒரு மருத்துவமானது, ஒரு மருத்துவ ஆய்வானது எப்பொழுதும் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து திடீரென உருவாக்குவதற்காக, திடீரென தள்ளிப் போடுவதற்காக, திடீரென தூங்க வைப்பதற்காக, திடீரென சிகிச்சை கொடுப்பதற்காக என்கிற வகையில் எப்போதும் இருந்ததில்லை. எப்போதும் இருக்கப் போவதுமில்லை. ஆக, ஒரு மருத்துவத்தினுடைய ஆய்வு என்பது, ஒரு மருத்துவத்தின் உடைய பார்வை என்பது ஒரு மனிதனுக்கு ஒரு துயரம் ஏற்பட்டவனுக்கு ஆழமாக, இணக்கமாக, உதவி செய்வதாக இருக்க வேண்டுமே ஒழிய, திடீரென ஏற்படக்கூடிய அவனுடைய வாழ்க்கை முறைக்கு மாற்றத்தை, அவன் வாழ்க்கை முறைக்கான புதிய செய்திகளை, புதிய வழிமுறைகளை வற்புறுத்துவதாக இருக்க கூடாது என்பது என்னுடைய பார்வை.
ALSO READ:உணர்வும் உணவும்
No comments:
Post a Comment