திடீரென
நிகழ்ந்தால்-2
நான் மருத்துவ ஆய்வில், மருத்துவ துறை சார்ந்த தேடலில், பணியில் பயணிக்கிற போது மக்களோடு, நண்பர்களோடு நான் எதிர்கொண்ட, மிக அதிகமாக எதிர்கொண்ட ஒரு கேள்வி, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டால், திடீரென மயக்கம் ஏற்பட்டால், திடீரென விபத்து ஏற்பட்டால் என்கிற திடீரென்ற உள்ளடக்கம் சார்ந்த கேள்விகள்தான். மருத்துவம் என்கிற துறைக்கு அப்பாற்பட்டு அல்லது மருத்துவம் என்கிற துறையினுடைய ஆழமான பகுதிகளுக்கு உட்பட்டு பார்க்கிறபோது இந்த பிரபஞ்சத்திற்கும் மருத்துவத்திற்கும் மிக நெருக்கமான இயங்குமுறை உறவு இருப்பதாக நான் காண்கிறேன். இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒன்றும் திடீரென்றோ அல்லது முன்னமே திட்டமிட்டோ என்று வகைப்படுத்த முடியாத அளவிற்கு இயக்கமாகவே இயங்கிக்கொண்டு இருக்கிறது. ஒரு மனிதனின் உடல் அமைப்பு பிரபஞ்சத்திற்கு நெருக்கமானதாக அல்லது மறு உருவமாகவே இருக்கிறது.
ALSO READ:உணவு சொல்லும் வாழ்க்கை முறை
நீங்கள் பிரபஞ்ச செயல்பாடுகளை, பஞ்சபூதங்களின் செயல்பாடுகளை திடீரென புரிந்து கொண்டால் உங்கள் உடலும் திடீரென திடீரென என்றே இயங்குகிறது. திடீரென மழை பெய்கிறது என நீங்கள் புரிந்துகொண்டால் நீங்கள் திடீரென்று தான் மூச்சு விடுகிறீர்கள். திடீரென இடி இடிக்கிறது என்று நீங்கள் புரிந்துகொண்டால் நீங்கள் திடீரென்று தான் ஏப்பம் விடுகிறீர்கள். திடீரென காற்று வீசுகிறது என்று நீங்கள் முடிவு செய்தால் நீங்கள் திடீரென்று தான் கண் இமைக்கிறீர்கள். பிரபஞ்சம் செய்யும், பிரபஞ்சத்தில் நிகழ்கிற ஒவ்வொன்றும் திடீர் சார்ந்ததாக இருக்கும் என்றால் உங்கள் உடலில் நடக்கிற ஒவ்வொன்றும் திடீர் சார்ந்ததே. அல்லது பிரபஞ்சம் ஒரு விதிப்படி இயங்குகிறது, பிரபஞ்சம் இறைவனின் கட்டளைப்படி இயங்குகிறது அல்லது பிரபஞ்சம் இருத்தலின் சார்பில் இயங்குகிறது, பிரபஞ்சம் ஏதோ ஒரு அப்பாற்பட்ட சக்தியில் இயங்குகிறது என நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்கள் உடலுக்கும் அது பொருந்தும் . மழை வருவது போல உங்கள் கண்களும் இமைகளும் இயங்குகின்றன. பருவம் தாண்டி, பருவத்திற்கு உட்பட்டு பூக்கள் பூப்பதுபோல வெகு மலர்ச்சியாக உங்கள் விரல்கள் விரிகின்றன. ஒரு தேனீ ஒரு பூவில் மது அருந்துவது போல இலயிப்பாக இயற்கை இயங்குகிறது என்று நீங்கள் புரிந்து கொண்டால் உங்கள் உணவு மிக இலகுவாக மிக லயிப்பாக சுவைக்கப் பட்டு செரிமானம் அடைகிறது. ஆக, பிரபஞ்சத்திற்கும் உங்கள் உடலுக்கும் இருக்கிற நெருக்கமான இணக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ளும்போது பிரபஞ்சம் திடீரென இயங்குவதாக இருந்தால் உங்கள் உடலும் திடீரெனவே இயங்குகிறது. பிரபஞ்சம் இலகுவாக மலர்ச்சியாக திட்டமிட்டு இயங்குவதாக நீங்கள் ஏற்றுக்கொண்டால் உங்கள் உடலும் லயிப்பாக இணக்கமாக திட்டமிட்டே இயங்குகிறது. ஆக, பிரபஞ்சத்திற்கும் உங்கள் உடலுக்குமாக இருக்கிற உங்கள் புரிதல் மட்டுமே உங்கள் திடீர் கேள்விகளுக்கு பதிலாக இருக்கக்கூடும். பிரபஞ்சத்திற்கும் உங்கள் உடலுக்குமாக இருக்கிற இடைவெளியை உங்கள் மன அசைவின்படி உங்கள் பழைய கோட்பாடுகளின்படி பார்க்காமல் இலகுவாக காத்திருப்போடு முழு புரிதலோடு அணுகுகிற நுட்பம் உங்களுக்கு வாய்க்கப் பெற்றால், அந்தப் அந்தப் பார்வை உங்களுக்கு கிடைக்கும் என சொன்னால் உங்கள் உடலும் இந்த பிரபஞ்சமும் வேறு வேறானவை இல்லை என்கிற புரிதல் உங்களுக்குள் நிலவும் என்றால் மிக எளிமையாக புரிந்து கொள்ள முடியும் திடீரென்று கேள்வி மிகவும் மலிவானது, மிகவும் அபத்தமானது, மிகவும் பலமில்லாதது.
ALSO READ:ஐவகை உணவு
No comments:
Post a Comment