Saturday, June 20, 2020

ஐவகை உணவு

food
Food

.                                           ஐவகை உணவு

மருத்துவங்கள் பேசுகிற உணவு வகைகள் சுவையின் அடிப்படையில் ஆறு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. இனிப்பு, கசப்பு, உவார்ப்பு, கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு என அறுசுவையாக பிரிக்கப்படுகின்றன.food in current life style

ALSO READ:நரிகள் வடை சாப்பிடுவதில்லை

  பழைய மருத்துவங்கள் உணவின் அடிப்படையில் உடல்நலம் பேண முடியும் என்று முறைப்படுத்தி வைத்துள்ளனர். அவ்வாறு முறைப்படுத்தப்பட்ட உணவு முறையானது உடலின் தன்மைக்கேற்ப சுவையின் வழி சீரமைத்துக் கொள்ளும் முறையாகும். நோய்வாய்ப்பட்ட காலங்களில் ஒருவருக்கு உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பை அவரின் உணவின் சுவையின் வழியே குணப்படுத்தும் மருத்துவங்கள் இருந்துள்ளன.காலங் காலமாக சுவை உடல்நலத்தை பேணிக் கொள்ளும் என்பது இருந்தாலும், இன்று சுவை பற்றிய நுட்பமான அறிவும், உணவு பற்றிய தெளிவும் தேவைப்படுகிறது. உணவு என்பது வெறுமனே உடல் வளர்க்கும் வேலையல்ல. உட்கொள்ளும் உணவானது நம்மை வளர்க்கிறது என்கிற நமது பழைய புரிதலை மீண்டும் சீர்ததூக்கிப் பார்த்தல் அவசியம்.வாய்வழி உணவு தவிர இன்னும் வேறுவகைகளில் உணவை உட்கொள்ளுகிறோமா என்றும் யோசிக்கலாம். பொதுவாக உண்பது மட்டுமே உணவு என்கிற பழைய புரிதல் மாற வேண்டும்.

ALSO READ:நம்பிக்கையற்ற துயரர்

                பலம் தருவதெல்லாம் உணவு என்கிற தெளிவைப் பெற்றுக் கொள்ளுதல் நலம்.உணவை பற்றிய மூடநம்பிக்கைகளில் வாய்வழி உண்பது மட்டுமே உணவு என்பது மிகப்பொp தவறான நம்பிக்கை. வாய்வழியும் உண்கிறோம்.உண்கிற உணவு பலம் தருகிற பொருளாக மாறுகிறது.

                இத்தகைய உடல் நடவடிக்கைகள் மட்டுமே உணவிற்கும் உடலிற்குமான தொடர்பாக கருதுவது முழுமையானதல்ல.பலம் தருவதற்காக உணவு உண்கிறோம்.உணவு உண்ணும்போது பலம் கிடைக்கிறது.நல்ல காட்சியைப் பாh;க்கிற போது பலம் கிடைப்பதை உணர முடியும்.நல்ல இசை கேட்கிற போது சோர்வு களைவதை உணர முடியும்.துர்நாற்றத்தை சுவாசிக்கும் போது சக்தி இழப்பை உணர முடியும்.இவ்வாறு வாய்வழியாக மட்டுமல்லாமல் உடலுக்குள் பலம் கொடுக்கிற அல்லது பலம் குறைக்கிற உணவுப் பொருட்கள் போய் வருவதை நீங்கள் உணார்ந்திருக்கக் கூடும்.

ALSO READ:குணமளிப்பவர்(HEALER)

                கண்கள் உணவை உட்கொள்கின்றன.காண்கிற காட்சியின் வழியாக நீங்கள் பலம் பெற்றவராகவோ அல்லது பலம் குறைந்தவராகவோ மாறுவதை நீங்கள் உணர முடியும்.தவறான உணவை உண்டதனால் தலை சுற்று ஏற்படுவதைப் போல, தவறான காட்சியைக் கண்டாலும் மயக்கம் ஏற்படும்.நல்ல உணவை உண்டால் சக்தி பெறுவதைப் போல நல்ல காட்சிகளைக் காணும் போது சக்தி பெறுவதை உணர முடியும்.நவீன மருத்துவங்கள் கர்ப்ப காலங்களில் கர்ப்பிணி பெண்கள் பார்வையில் படும்படி நல்ல படங்களை வீட்டிற்குள் மாட்டிக் கொள்ளுமாறு பரிந்துரைப்பது காட்சி உணவின் அடிப்படையில் தான்.காட்சியைப் போலவே ஒலி உணவும், உணவு வகையைச் சார்ந்ததே.கேட்கிற சப்தங்கள் உங்களின் உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்த முடியும்.நல்ல இசை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்யும். நீங்கள் சோர்ந்திருக்கிற வேளையில் நீங்கள் மதிக்கிற ஒருவர் உங்களை ஆறுதல் படுத்தும்போது அவரின் வார்த்தைகள் சக்தி கொடுக்கும் உணவாக உள்ளிறங்குவதை உணர முடியும்.உற்சாகத்தோடு நீங்கள் செய்கிற ஒரு செயலை குறித்து வரும் கருத்துக்கள் எதிர்மறையாக இருக்குமாயின் உங்கள் உற்சாகம் உறிஞ்சப்படும்.இவை ஒலி உணவு. உடலுக்குள் இருக்கிற ஒவ்வொரு பாகங்களும் இந்த இயக்கவியலுக்குட்பட்டே உணவு உட்கொள்ளுகின்றன. ஒரு பாடலோ, இசையோ, வசை மொழியோ உங்களுக்கு உற்சாகத்தையோ, சோர்வையோ தர முடியும் என்பதே ஒலி உணவாகும் என்பதன் அடிப்படை.

ALSO READ:நோயற்ற வாழ்வு

                சுவாசம் கூட உணவுதான். இந்திய மொழிகளில்ப்ராணம்என்ற சொல் உயிர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாசிக்கும் காற்றை இந்திய மருத்துவங்கள் ஆக்சிஜன் என்று சொல்லுவதில்லை, பிராண வாயு என்று சொல்கின்றன. எந்த வகை உடல்நிலையிலும் பிராண வாயு உடலுக்கு உயிரைக் கொண்டு சேர்க்கிறது. உடலின் ஒட்டு மொத்த இயக்கமும் சுவாச உணவின் வழியே சீரமைக்க முடியும் என்கின்றன பண்டைய மருத்துவங்கள். சீரான சுவாசம் நல்ல உணவு என்பதோடு மட்டுமல்லாமல் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்பது நவீன ஆய்வு. இன்னும்  ஆழமாக கிழக்கத்திய தத்துவங்கள் கூறுவது, சீரான பிராண வழி உணவு ஒருவரை ஞானியாகவோ கடவுளாகவோ உயர்த்தும் என்பதே.இது மூக்கின் வழி உணவு.

                உட்கொள்ளும் உணவு பலம் தருவதைப்போல சோர்வையும் தருகிறது. மெய்வழி செல்லும் தென்றல் நம் உடலை உற்சாகமாக்கும்.மெய்வழி பூசும் அலங்காரப் பூச்சுக்கள் உங்கள் சக்தியை உறிஞ்சிக் கொள்ளும்.மெய் முழுவதும் போர்த்தியிருக்கிற தோல் ஒரு பெரிய உணவு வாசல் என்பதை அக்குபங்சர் மருத்துவம் 8000 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டேயிருக்கிறது. உடல் உள்ளுருப்புகள் நலமாக இருந்து மெய்வழி உணவு வாசலாகிய தோல் மட்டும் தீக்காயம் பெற்றிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லையென நவீன மருத்துவம் நிரூபிக்கிறது. எனவே மெய்யும் உணவுக்கான வாசல்தான்.

ALSO READ:உயிர்ப்பு நிலை பிறழ்வு

                அடுத்தது நாம் அறிந்தது வாய்வழி உணவு.நாம் உட்கொள்ளுகிற உணவு வழக்கமான உணவுக் குழல் வழியாக சென்று வருவதைப் பற்றி நாம் நிறைய கற்று வைத்திருக்கிறோம். இந்த உணவு வகைகள் ஐந்தாக இருப்பது நம் உடல் நலத்தைப்; பேணிக் கொள்ள பெரிதாக உதவும்.எல்லா மனிதர்களும் ஐந்து வகை வழி உணவு உட்கொள்ளுகிறார்கள் என்பது பற்றி எதிர்கால மருத்துவம் நுட்பமாக ஆய்வு செய்யும். அந்த ஆய்விற்கு துவக்கமாகக் கூட இப்பதிவு இருக்கட்டும்.

 

 

 

 

 


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...