Saturday, August 1, 2020

நம்பிக்கையற்ற துயரர்(HOPELESS PATIENT)

            நம்பிக்கையற்ற துயரர்   

Hopeless patient
Hopeless patient

    மருத்துவத்தில் விதவிதமான அணுகுமுறைகள் காணப்படுகின்றன. மருத்துவத்தை பயன்படுத்துகிற, மருத்துவத்தை தன் உடல் ஆரோக்கியத்திற்காக பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற மனோநிலை நபருக்கு நபர் மாறிக்கொண்டே இருக்கிறது. முதன்முதலில் மருத்துவம் ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்ட காலந்தொட்டு இன்றுவரை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தனக்கு வேண்டிய மருத்துவம், தனக்கு வேண்டாத மருத்துவம் என்கிற பல்வேறு மருத்துவ வாய்ப்புகள் முன் இருக்கின்றன. ஒரு மனிதன் ஒரு மருத்துவத்தை தேர்வு செய்வதும், ஒரு மருத்துவத்தை மறுப்பதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதற்கு இரண்டு காரணங்களை நான் பார்க்கிறேன். குறிப்பாக, ஒரு மனிதன் நிறைய மருத்துவங்களை தனக்கு ஏற்பட்டிருக்கிற நோய்களுக்கு மேற்கொண்ட பிறகு ஒரு புதிய மருத்துவம் தேவைப்படுவதாக உணர்கிறான். அவருக்கு தெரிந்த மருத்துவமாக கூட இருக்க முடியும். உதாரணமாக, இந்தியச் சூழலில் அவர் தனக்கு ஏற்பட்டிருக்கிற துயரத்திற்கு நவீன மருத்துவத்தை மேற்கொள்வார் என்றால் நீண்ட மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவரது துயரம் அதிகமாக இருந்தாலோ அல்லது அந்த துயரத்திலிருந்து அவர் விடுதலை ஆகவில்லை என்றாலோ அவர் இன்ன பிற மருத்துவங்களை தேர்வு செய்கிறார். அல்லது ஒரு மருத்துவம் குறித்த தேடலும் புரிதலும் அவருக்கு இருக்கிற பட்சத்தில் ஒரு மருத்துவத்தை தேர்வு செய்கிறார். தேர்வு செய்கிறவர் என்கிற அடிப்படையில் இந்த இரண்டு காரணங்கள் மட்டும் அவருக்குப் போதுமானதாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு மருத்துவத்திற்குள்ளும் மருத்துவத்தை மறுக்கிற நபர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்று பார்க்க முடிகிறது.

ALSO READ:திடீரெனெ நிகழ்ந்தால்


               ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு மருத்துவமும் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கருதுகிறார்களோ அவ்வாறு அவர்களது பயிற்சி அளவில் இருந்தாலும் கூட ஒரு மருத்துவம் என்பது துயரரின் உடைய தேர்வுக்கு உட்பட்டதாக இருக்கிறது. நோயுற்றவரே மருத்துவத்தை தேர்வுசெய்யும் முடிவில் இறுதியானவர். அவருக்கு உதவ வேண்டும், அவர் சரியான மருத்துவத்தை தேர்வு செய்ய வேண்டும் என்கிற ஒரு உரையாடல் தனியாக நிகழ்த்தப் பட்டாலும் கூட அவரது அனுபவங்களிலிருந்து அவர் தனக்கு வேண்டிய அல்லது தான் மறுக்கிற மருத்துவத்தை முடிவு செய்யமுடியும் என்று நான் பார்க்கிறேன். அவரது உடல் அவரது உளவியல் சிக்கல் காரணமாக அவருக்கு எந்த மருத்துவம் பயன்படும் என்று மருத்துவங்கள் அவருக்கு உதவி செய்வது நேர்மையானது. மருத்துவங்கள் அவருக்கு பரிந்துரைக்கப்படுவது அவசியமானது. ஆனாலும் கூட அவருக்குள் மருத்துவம் என்பது என்னவாக இருக்கிறது என்னவாக இருக்கவேண்டும் என்கிற விருப்பங்களே அவரது மருத்துவத்தை தீர்மானிக்கிற செயல்பாடாக அமைந்துவிடுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மருத்துவத்திற்குள்ளும் மருத்துவத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதும் மருத்துவத்தை மறுத்தாலும் பரவாயில்லை என்பதும் இருந்துகொண்டே இருக்கிறது.

ALSO READ:திடீரென நிகழ்ந்தால் 2

                ஆக ஒரு மருத்துவம் என்பது வருகிறவருக்கு துயரத்தைத் தீர்ப்பதாகவும் தம்மை மறுப்பவற்கு என்ன செய்வது என்று விவாதிக்கப்படாத ஒரு பகுதி மருத்துவத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. நேரடியாக ஒரு மருத்துவத்தை மறுக்கிறவருக்கு அந்த மருத்துவம் எந்த வகையில் உதவி செய்ய முடியும் என்பது தான் இந்த உரையாடலினுடைய மையப்புள்ளி. ஒருவருக்கு நவீன மருத்துவம் பரிந்துரைக்கப்படுவதாக இருக்கிற பொழுது அவர் நவீன மருத்துவத்தில் நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார் என்றால் என்ன செய்வது? நீண்ட காலமாக ஒரு ஆதி மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிற ஒருவர் ஆதி மருத்துவத்தையே முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிற ஒருவர் அவருக்கு நலம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிற இன்னொருவரால் வேற ஒரு மருத்துவம் பரிந்துரைக்கப்படும் பொழுது அவருக்கு புதிய மருத்துவத்தின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை எனில் அவர் எவ்வாறு தன் நோயைத் தீர்த்துக் கொள்வது என்பதுதான் இன்று நம்முன் இருக்கிற மிக முக்கியமான விவாதப் பொருளாக இருக்கிறது. ஏனென்றால் நிறைய மருத்துவங்கள் அனைவருக்கும் கிடைக்கிற வகையில் இருப்பதால் நல்ல மருத்துவங்கள் கூட நம்பிக்கை பெறுவதில் சிக்கல் இருக்கிறது.

ALSO READ:HEALTH(நலம்)

                ஒருவருக்கு இந்திய மருத்துவ சூழலில் நவீன மருத்துவம் பொருந்தாத போது அவருக்கு ஹோமியோபதி மருத்துவம் மிக எளிமையாக உதவி செய்யக்கூடும். ஹோமியோபதியில் நீண்ட பலன் கிடைக்கவில்லை என்று கருதுகிற  ஒரு நோயாளி சித்த மருத்துவத்தில் உடல் உபாதையை எளிமையாக தீர்த்துக்கொள்ள முடியும். சித்த மருத்துவத்தில் அவரால் உடல் நோயிலிருந்து விடுபடுவதற்கு காலம் தாமதிக்கிறது என்று கருதுவார் என்றால் அவர் அக்குபஞ்சர் மருத்துவத்தில் தனது நோயை எளிமையாக குணப்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறு ஒவ்வொரு மருத்துவமும் இன்னொரு நபருக்கு, இன்னொரு  துறை சார்ந்து, இன்னொரு நுட்பம்  சார்ந்து சிறப்புமிக்கதாக இருக்கிற தன்மையிலிருந்து பார்க்கிறபோது எல்லா நோய்களுக்கும் எல்லா மனிதர்களுக்கும் மருத்துவம் ஏதாவது ஒருவகையில் தீர்வு சொல்வதாகவே இருக்கிறது. ஆனால் மருத்துவத்தை நம்புவதில் துயரருக்கு சிக்கல் இருக்கிறது. அப்படி என்றால் ஒரு துயரர் எந்த மருத்துவத்தை தேர்வு செய்வது. ஒரு துயரருக்கு மருத்துவத்தின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்றால் அவருக்கு அந்த மருத்துவம் எவ்வாறு உதவி செய்ய முடியும் என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

ALSO READ:WHAT IS FOOD? IN TAMIL

                ஒரு மருத்துவத்தினுடைய பயிற்சியாளர் என்ற அடிப்படையில் ஒரு நோயுற்றவரை இந்த மருத்துவம் தான் நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவருக்கு நிர்பந்தத்தை உருவாக்க முடியாது, உருவாக்கக் கூடாது.ஆனால் மருத்துவத்தைப் பொறுத்த வரையில் ஒருவருக்கு நோய் ஏற்படுகிறது என்றால் அவர் ஒருவேளை அந்த மருத்துவத்தை நம்பவில்லை என்றால் அந்த  மீது அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்றால் அவர் நம்பிக்கைக்கு உள்ளாகும் வரை அந்த மருத்துவத்தின்மீது நல்ல கருத்துக்கு வந்து சேரும்வரை அந்த மருத்துவம் அந்த மருத்துவர் அவருக்காக காத்திருக்க வேண்டும் என்பது அவருக்கு செய்கிற மருத்துவம் சார்ந்த சிறந்த பணி.

                மருத்துவத் துறையில் பணியாற்றுகிற ஒவ்வொரு மருத்துவரும் பின்வரும் முடிவிற்கு வந்து சேர்ந்திருப்பார்கள். அவர்களது அனுபவத்தைப் பொறுத்து அவர்கள் இந்த முடிவிற்கு வெகு இலகுவாக, வெகு விரைவாக வந்து சேரவும் முடியும். அந்த முடிவு என்னவென்றால், ஒரு மருத்துவர் தன் பணியாற்றிய போது தன்னை நம்பாத தன் மருத்துவத்தை நம்பாத ஒரு நோயாளிக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது பற்றிய முடிவு. ஒரு மருத்துவத்தை ஒருவர் நம்பவில்லை என்றால் அவருக்காக நாம் காத்திருக்க வேண்டும் என்பதுதான் அந்த முடிவு. ஏன் அவ்வாறு காத்திருக்க வேண்டும்? என்று அந்த மருத்துவர் தன் துறை சார்ந்து யோசிக்கிற போது ஒரு துயரர் தன் துயரத்தில் இருந்து விடுபடுவதற்கு பெரும் முயற்சி மேற்கொள்கிறார். அவர் வெவ்வேறு விதமான முயற்சிகளுக்குள் தன்னை பரிசோதிக்க முற்படுகிறார். அந்த பரிசோதனையின் விளைவாக அவருக்கு முழு உடல் நலமும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது அல்லது துயரத்தின் அளவு அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.             எல்லா மருத்துவங்களும் பயன்பாடு என்கிற தளத்தில் இருந்து பார்க்கும்போது சற்று முரண்பட்டு பின் விளைவுகள் ஏற்படக் கூடியவையாக  இருந்தாலும் கூட ஒவ்வொரு மருத்துவத்திற்குள்ளும் ஒரு மனிதனின் நோய் எவ்வாறு உருவாகிறது? ஒரு மனிதனுக்கு நோயைத் தீர்க்க வேண்டிய மிக முக்கியமான ஆதாரம் என்ன? என்பதை அறிந்து வைத்திருக்கின்றன என்ற செய்தி அத்தகைய மருத்துவ நூல்களில் காண முடிகிறது. ஒவ்வொரு மருத்துவமும் வெறுமனே நோயாளியை நோய் தீர்க்கும் சமூக நிலைப்பாட்டோடு பார்ப்பதில்லை.

ALSO READ:ஐவகை உணவு

                ஒவ்வொரு மருத்துவமும் தனது தத்துவ நூல்கள் வழியாகவும் தனது தேக சாஸ்திர நூல்கள் வழியாகவும் மருந்துகளின் குறிப்புகள் வழியாகவும் தெரிவிப்பதும் பதிவு செய்து வைத்திருப்பதுமாக வரும் செய்திகள் வெறுமனே நோயாளி என்பவரை சமூக அளவுகோலில் பார்ப்பது மட்டுமல்ல. அந்த மருத்துவங்கள் ஆழமாக நோயாளிக்குள் பார்க்க பரிந்துரை செய்கின்றன. ஒரு நோயிலிருந்து ஒருவர் விடுதலை செய்வதற்கு எங்கெல்லாம் தடைகள் இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மருத்துவமும் தனக்கு தன்னை நம்புகிற ஒரு நோயாளிக்கு தன்னை நம்ப மறுக்கின்ற ஒரு நோயாளிக்கு என்கிற எந்த பேதமும் இல்லாமல் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டிருக்கிற துயரத்தை எவ்வாறு களைவது என்பதில் தெளிவாக இருக்கின்றன. அந்தத் தெளிவின் வழியாக பார்க்கிறபோது எல்லா மருத்துவமும் சமூக அளவில் ஏற்ற இறக்கமாக காணப்பட்டாலும் கூட மிக நுட்பமாக மனிதனின் நோய் தீர்க்கும் ஆதாரப்புள்ளியை தொட்டு சுழல்வதாக இருக்கிறது.

                ஒவ்வொரு மருத்துவமும் தனக்குள்ளே இருக்கிற தத்துவ மையத்திலிருந்து எல்லா மனிதனுக்கும் ஏற்படுகிற எல்லா நோய்களுக்கும் தீர்வு சொல்வதாக இருக்கின்றன. இத்தகைய ஆதார புள்ளியிலிருந்து பயணிக்கிற நோய்களைக் களைகிற மருத்துவம் ஒரு மனிதனுக்கு எல்லா நோய்களையும் தீர்க்க முடியும் என்பது ஒரு மருத்துவத்தில் பயிற்சி செய்கிற பயிற்சியாளருக்கு ஏற்படுகிற இறுதி முடிவாக இருக்கிறது. அந்தவகையில் ஒரு நோயாளி,ஒரு துயரர் தன்னையோ தனது மருத்துவத்தையோ நம்பகமாக  காணவில்லை என்றால் நம்பிக்கையோடு பார்க்கவில்லை என்றால் காத்திருக்க துவங்கி விடுகிறது அந்த மருத்துவமும் அந்த பயிற்சியாளரின் பயிற்சி முறையும். அந்தவகையில் அந்த துயரர் வெவ்வேறு மருத்துவங்களை சமூக அளவில் பார்க்கிறார். சமூக அளவில் பார்க்கிறபோது அவருக்கு சமூகம் கொடுக்கிற சாதக பாதக எல்லா விளைவுகளும் அவர் அனுபவிக்கிறார். அந்த அனுபவத்தின் விளைவாக பாதகங்கள் அதிகமாக இருக்கிற போது அவர் ஒரு மருத்துவத்தினுள் காணப்படுகிற ஒரு நோயாளியினுடைய நோய் தீர்க்கும் ஆதாரப் புள்ளியை தொட்டு சிகிச்சை அளிக்கும் மருத்துவத்தை தேடுகிறார். அப்போது எந்த மருத்துவமும் அந்த தளத்தில் இயங்குகிற பயிற்சியாளருக்கு அவரைக் கொண்டு வந்து சேர்க்கிறது. ஆக ஒவ்வொரு மருத்துவத்துக்குள்ளும் காணப்படுகிற நோயினுடைய ஆதாரத்தைக் களைகிற சிந்தனை ஓட்டமும் தத்துவ சாரமும் அந்த நோயாளிக்கு முழு நோயையும் தீர்ப்பதற்கு உதவி செய்கிறது. இந்த உதவியை கண்டு கொள்வதற்கு   ஒரு கால அவகாசம் தேவைப்படுகிறது. அது மருத்துவத்திற்கான கால அவகாசம். மருத்துவருக்கான கால அவகாசம். நோயாளி ஒரு துயரர் தனக்கு சிறந்த உதவியை செய்யக் கூடிய மருத்துவத்தை கண்டுபிடிப்பதற்கான கால அவகாசம்.


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...