குணமளிப்பவர்
![]() |
healer(குணமளிப்பவர்) |
மனிதனுக்கு நோயைத் தீர்த்துக் கொள்வதில் அதிகமான, முதன்மையான பொறுப்பும் அக்கறையும் மற்ற மனிதர்களை விடவும், மருத்துவத்துறை சார்ந்த நபருக்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு மனிதனுக்குள் நோயின் கூறு எவ்வாறு வருகிறது? என்று தத்துவ நூல்கள் வழியாக, மருத்துவ குறிப்புகள் வழியாக, ஒரு மருத்துவர் தெரிந்து வைத்திருந்தாலும் கூட ஒரு மனிதனின் நோயை களைவதற்கு அது போதுமானதாக இருக்கும் என்பது தெரியாது. நீண்ட ஆண்டுகளுக்கு, முன்பு நீண்ட காலங்களுக்கு முன்பு எழுதப்பட்ட, சேகரிக்கப்பட்ட குறிப்புகளும் தத்துவங்களும் இன்றைய மனிதனுக்கு ஒரு வரைபடம் போல் நோய் களைவதற்கு உதவி செய்யக்கூடும். ஆனால் ஒரு மருத்துவரின் கடமை தன் முன்னால் இருக்கிற மனிதனை, தன் கையில் இருக்கிற வரை படத்தை மட்டும் வைத்துக்கொண்டு அணுகுவதும் நோய்களை களைவதற்கு முயற்சி செய்வதும் போதுமானதல்ல.
ALSO READ:நரிகள் வடைசாப்பிடுவதில்லை
ஒரு மனிதனுக்குள் இருக்கிற நோய்க்கான காரணிகளை நோய் கூறுகளை மனிதன் எழுப்புகிற எதிர்வினைகளை, மருத்துவரினுடைய பழைய தகவல்கள் ஏதும் இன்றி, ஆய்வு குறிப்புகளின் சங்கதிகள் ஏதுமின்றி, அந்த துயரினுடைய துயரத்தை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்கிற ஒரு பார்வை மருத்துவருக்கு அவசியமாகிறது. அந்தப் பார்வையை பெற்றுக்கொள்வது என்பது மருத்துவரினுடைய தனிப்பட்ட விருப்பம் தேடலும் முயற்சியும் சார்ந்தது. ஒரு மருத்துவர், மருத்துவ நூல்கள், மருத்துவ பல்கலைக் கழகங்கள், மருத்துவ ஆய்வுக் குறிப்புகள், பரிந்துரைக்கிற செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு மருத்துவம் செய்வது என்பது போதுமானது அல்ல. ஒரு மனிதனை கண்டுபிடிப்பதற்கு அவை சில நேரங்களில் தடையாகவும் இருக்கக்கூடும். கண் முன்னால் இருக்கிற ஒரு துயரரினுடைய துயரம் என்பது இதுவரை ஒரு மருத்துவர் படித்து வைத்திருக்கிற எந்த மருத்துவ குறிப்புக்குள்ளும் இல்லாத ஒன்றாகவும் இருக்கக்கூடும். அந்த புதிய மனிதனின் புதிய எதிர்வினையை புதிய துயரத்தை பழைய குறிப்புகளில் தேடி ஆய்வுகளை பொருத்திப் பார்த்து சிகிச்சை அளிப்பதும் குணமாகும் சாத்தியம் இல்லாதது.
ALSO READ:ஐவகை உணவு
பழைய ஆய்வுகளை, குறிப்புகளை ஒரு வரைபடம் போல் பயன்படுத்திக் கொண்டாலும் கூட உடனிருக்கிற துயரரின் துயரத்தை புரிந்துகொள்வதற்கு அந்த மருத்துவத்தினுடைய தத்துவங்கள் கடந்து அந்த மருத்துவர் தன்னை வெறுமனாக்கிக் கொள்கிற, காத்திருக்கிற, பொறுமையாக அணுகுகிற ஒரு புதிய பன்பு தேவைப்படுகிறது. அதுதான் அந்த மருத்துவரின் மருத்துவ கூர்மையை மருத்துவ புத்திசாலித்தனத்தை, முழுவதுமாக அந்த மனிதனுக்கு நோயிலிருந்து விடுதலை பெறுவதற்கு பயன்படுத்தும் தன்மையை உருவாக்க முடியும்.
ALSO READ:குழந்தை
குணமளிக்கும் நபர் ஒருவருக்கு நோய் பற்றியும் நோய்க்கான காரணங்கள் பற்றியும் நோய் உருவாகிற அடிப்படைகள் பற்றியும் தெளிந்த அறிவு அவசியம். இந்த அறிவை பெற்றுக் கொள்வதற்கு அவரது பாடத்திட்டங்களும் பல்கலைக்கழக நூல்களும் ஆய்வு நூல்களும் மருத்துவம் சார்ந்த குறிப்புகளும் கூட உதவி செய்யும். இவை உதவி மட்டும் தான் செய்யும். இவற்றை கடந்து ஒரு மருத்துவத்தில் குணமளிக்கும் வேலையை தேர்வு செய்கிற ஒருவர் வேறு சில பகுதிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவும் தயார்படுத்திக் கொள்ளவும் வேண்டும். அவருக்கு தன்னைப்பற்றிய தன் மன உணர்வு பற்றிய தனது மன ஓட்டம் பற்றிய தெளிவு அவசியமானது. அவர் தன் உடலளவில் தன் மன அளவில் ஏற்படுகிற ஒவ்வொரு வினையையும் அதற்கு தன் உடலும் மனமும் செயல்படுகிற எதிர்வினை செயல்பாடுகளையும் கண்காணிக்கிறவராக பார்ப்பவராக இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதன் வழியாக ஒரு மருத்துவர் தன்னை நாடி வருகிற துயரருக்கு துயரரின் உடலளவில் மனதளவில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ளவும் அவற்றை சீர் செய்து கொள்ளவும் ஏதாவது செய்ய முடியும். இல்லை என்றால், அந்த மருத்துவருக்கு கிடைக்கப்பெற்ற நிறைய தகவல்கள் போல ஒரு மனிதனுடைய தகவலும் நோய் குறிப்புகளும் கூட மலினமாகவும் எளிமையானதாகவும் இருக்கும்.
ALSO READ:உடலோடு பரிவாக இருங்கள்
ஒரு மனிதனின் நோய்க்குறிகளை வைத்துக்கொண்டு ஒரு இயந்திரத்தை பழுது பார்ப்பது போல இயங்க முடியாது. ஒரு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால் அந்த இயந்திரம் பற்றிய குறிப்புகளை கையில் வைத்து கொண்டு அந்தப் பொறியாளர் அந்த இயந்திரத்தை சரி செய்வது போல பழைய மருத்துவ குறிப்புகளையும் பழைய தத்துவ நூல்களையும் மருத்துவம் சார்ந்த ஆய்வுகளையும் கையில் வைத்துக்கொண்டு ஒரு துயரரின் உடல் மாற்றத்தை உயிர்ப்பு பிறழ்வை அனுகவோ சீராக்கவோ முடியாது. ஒரு இயந்திரத்திற்கும் ஒரு மனிதனுக்கும் ஏற்படுகிற பிறழ்வு என்பது தர அளவில் வேறுபட்டது. ஒரு பொறியாளர் போல ஒரு மருத்துவர் ஒரு துயரரை சீர் செய்து விட முடியாது. மிகுந்த அக்கறையும் தன்னை கவனித்துக் கொள்கிற தான் எவ்வாறு எதிர்வினையாற்றும் என்று கண்காணித்துக் கொள்கிற விழிப்பை நோக்கி நகர்கிற ஒரு மனிதனால் மட்டுமே ஒரு துயரினுடைய துயரத்தை மிக எளிமையாக புரிந்து கொள்ளவும் சீர்செய்வதற்கு உதவவும் முடியும். அந்த வகையில் ஒரு குணமளிப்பவர் ஒரு சிகிச்சையாளரினுடைய பார்வை என்பது துயரரினுடைய துயரத்தை போக்க வேண்டுமென்கிற இலக்காக மட்டுமில்லாமல் ஒரு துயரருக்கு எவ்வாறு இருப்பதன் வழியாக தான் எவ்வாறு பலம் கொண்டவராக மாற வேண்டும் என்கிற பயிற்சியின் வழியாக எளிமையாகவும் துல்லியமாகவும் நலம் பெறுவதற்கு உதவி செய்ய முடியும் என்பதே எனது பார்வை.
No comments:
Post a Comment