
உடலோடு பரிவாக இருங்கள்
இன்றைய நவின மருத்துவங்கள் உட்பட நவின உலகத்திற்க்கான வாழ்க்கை முறையைப் பற்றி பேசும் பலரும் உடலை நலமாக வைத்துக்கொள்வது எப்படி என்று தொடர்ந்து கற்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். உடலை நலமாக பேணும் முன் உடலைப்பற்றிய போதுமான புரிதல் அல்லது முழுமையான புரிதல் எனும் இரண்டில் ஒன்று அவசியம். உடல் நலம் என்பது காய்ச்சல் இல்லாமல் பார்த்துக்கொள்வது, சளிப்பிடிக்காமல் பார்த்துக்கொள்வது, இருமல் வந்தால் என்னசெய்ய வேண்டும், சர்க்கரை நோயுடன் வாழ்வது, மூட்டு வலியுடன் வாழ்வது, கண்குறைபாடுகளை தீர்க்கும் உணவு –----------food in current lifestyle
இதன் விளைவாக உடலை நலப்படுத்திக் கொள்ள என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று முயலும் அனைவரும் உடலைக்கூட வருத்திக்கொள்ளாம் என்று தயாராகிறார்கள். நோயுடன் உள்ளவர்களும்
நோய் வராமல் தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் கூட உடல் நலத்தை காக்க எடுக்கும் முயற்சி எல்லாம் உடலை புரிந்து கொள்ளாமல் உடலை வருத்துவதில் முடிகிறது. உடலை வருத்துவதுகூட நலம் பெற நடக்கும் முயற்சி என்றே மீண்டும் மீண்டும் கற்ப்பிக்கப்
படுகின்றன.
ALSO READ:மருத்துவர்களுக்கான பரிந்துரை
ஒருவர் சுவாசிக்கிறார்,
உணவு உண்கிறார், உறங்குகிறார், கலவி கொள்கிறார், சிந்தனை செய்கிறார். இவற்றின் வழியாக உடல் இயங்குகிறது,
இப்படியாகத்தான் எல்லா உடலும் இயங்குகிறது. உங்கள் உடலும் இயங்குகிறது. என் உடல் இவ்வாறகத்தான் இயங்குகிறது
என்ற புரிதல் தான் ஒவ்வொரு உடலையும் நலப்படுத்த தேவையான புரிதல். உடல் இயங்குகிறது அதன் சொந்த நிலையில் இருந்தே தனது நலத்தைப் பராமரித்து கொள்கிறது. தனக்குத் தேவையான யாவற்றையும் பெற்றுக்கொள்ள முழுவதுமாக வேலை செய்கிறது என்பது நலம் பற்றிய கூடுதல் அறிவு.
உடல் நலத்தை நவின வாழ்க்கைக்கான வாய்ப்பாக பயன்படுத்த முனைவோருக்கு வெறும் இயந்திரத்தை அணுகுவதுமாதிரி உடலை அணுகுவது எளிமையானதாகத் தெரிகிறது. அதுவே வசதியகவும் இருக்கிறது. உடல் உங்களுக்காக வேலை செய்கிறது, உங்களின் உணவை ரத்தமாக மாற்றுகிறது, மூச்சுக்காற்றை
கொண்டு மொத்த இயக்கத்தையும் ஒழுங்கு படுத்துகிறது.
ஆனால் நவின வாழ்க்கை உடலைப் பற்றிய எந்தப் புரிதலையும் பார்க்கவிடுவதில்லை. நலமாக வைக்க உடலை வருத்திக்கொள்ளவே பரிந்துரைக்கிறது.
உங்கள் உடலை வருத்திக் கொண்டு நீங்கள் உங்களின் உடல் நலத்தை உயர்த்திக் கொள்ளவே முடியாது.
ALSO READ:உயிர்ப்பு நிலை
இன்றைய வாழ்க்கைக்கு
சம்மாதிப்பது மட்டுமின்றி
முழு உலக இயங்கு ரகசியத்தையும் புரிந்து கொள்ள நம்மிடம் உள்ள திறவுகோல் இந்த உடல் தான். இது மட்டும் தான் ஒரே திறவுகோலும்
கூட. ப்ரபஞ்சத்தில்
கோடிக்கணக்கான உயிரியக்கம்
இருப்பது போல உடலினுள்ளும் இயக்கம் இருக்கிறது. இந்த அதிசயத்தை பார்ப்பதும்
வியப்பதும் வணிக அறிவிற்கு தெரியாது. அதற்குத் தேவையும் இல்லை. வணிகப்பார்வை
மட்டும் வாழ்க்கை அன்று. நலம் தேடும் யாவரும் உடலைப் பாருங்கள். உடலாய் பயணியுங்கள். அதிசயங்களில்
வியப்பு காட்டுங்கள்.
நலம் பெறுவதை உடலே பார்த்துக்கொள்ளும்.
உடலோடு இணையுங்கள். அது உலகத்தோடு இணைத்து வைக்கும். உலகத்திற்கு பரிவு காட்ட விரும்பினால் அதனை உடலில் இருந்தே துவங்கலாம். எனவே உடலோடு பரிவாக இருங்கள்…
ALSO READ:நரிகள் வடை சாப்பிடுவதில்லை
·
No comments:
Post a Comment