Thursday, June 25, 2020

பசுமைக் காலங்களே பண்டிகை காலங்கள்

    பசுமைக் காலங்களே பண்டிகை காலங்கள்

    பண்டிகைகள், திருவிழாக்கள் போன்ற எல்லாக் கொண்டாட்டங்களும் மனிதனுக்கு நூற்றாண்டு காலங்களாக மகிழ்ச்சியைக் கொடுத்துக் கொண்டு வருகின்றன. ஒவ்வொரு திருவிழாவும் பண்டிகை வருகின்றன. ஒவ்வொரு திருவிழாவும் பண்டிகையையும் கொண்டாடப்படுவதற்கு முன்பு அந்த கொண்டாட்டத்திற்கு பின்புலமாக இருக்கும் அவர்களது உழைப்பும் உணர்வும் பிரதானமானது.

ALSO READ:குழந்தை


                                நீண்ட நெடிய காலங்களாக உழைத்து உழைப்பின் பலனுக்காக காத்திருந்து பின் அதை அனுபவிக்கும் அனுபவங்களே கொண்டாட்டமாக மாறி வருகிறது. இன்று ஒரு வருடம் காத்திருந்து தேர்வெழுதி கிடைக்கும் வெற்றி உணர்வு கொண்டாட்டமாக மாறுவதும் நிறைய தேர்வுகளுக்குப் பின்பு கிடைக்கும் வேலையின் போது மகிழ்ச்சி ஏற்படுவதும் பண்டிகையின் அடையாளங்கள் தான்.

                                கண்முன்னே காணக் கிடைக்கிற உழைப்பையும் காத்திருப்பையும் வெற்றியாக காண்கிறபோது கொண்டாடி மகிழ்வதைப் போல் பண்டிகைகளுக்கும் திருவிழாக்களுக்கும் பின்னால் ஒரு கதை இருக்கிறது.திருவிழாக்களும் பண்டிகைகளும் உழைப்பின் வெற்றிக்கான கொண்டாட்டமாக மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக வாழ்க்கையை வளமையாக்கிக் கொள்ளும் திட்டமிடலுமாகும்.

ALSO READ:நீங்கள் முழுவதும் படித்தவுடன் யோசிப்பீர்கள்

                                நிலத்தின் மண்ணெடுத்து அதில் நீர்விட்டு கையில் வைத்திருக்கிற தானிய வகைகளை பெண்கள் நட்டு வைப்பர். இரண்டொரு நாட்களில் விதைக்கப்பட்ட தானியங்கள் முளைக்க ஆரம்பிக்கும். தொடர்ந்து பராமரிப்பர். இந்த விதைப்பில் நடப்பட்ட தானியங்களில் எந்த தானியம் நன்றாக வளர்ந்திருக்கிறதோ அந்த தானியத்தை நிலத்தில் விதைப்பர். ஒவ்வொரு ஆண்டும் இந்த பரிசோதனை நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் வேறு வேறு தானியங்கள் நடப்படும். இவ்வாறு பயிரிடுவதற்கு முன்பு எது நன்றாக விளையும் என்பதை கணிக்கிற முயற்சியே பின்னாளில்முளைப்பாரிதிருவிழாவாக மாறியது என்று மனிதகுல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

                                ஒவ்வொரு திருவிழாவிற்கும் மனித சமுதாயத்தின் உழைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. விளைந்த பொருட்களை பெற்றுக் கொண்டு விளை நிலத்திற்கு, உடன் உழைத்த மாடுகளுக்கு, நிலத்திற்கு, சூரியனுக்கு, நீருக்கு என்று நன்றி சொல்லும் நிகழ்வு பொங்கல் பண்டிகையாக மாறியிருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு திருவிழாவும் ஒவ்வொரு பண்டிகையும் தனக்குள் உழைப்பையும் விவசாயத்தையும் இயற்கை வளங்களையும் இணைத்துக் கொண்ட தன்மையோடு கொண்டாடப்பட்டன. இந்தக் கொண்டாட்டங்கள் முழுவதும் இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் உறவை உணர்வு பூர்வமாக பார்த்துக் கொள்ளும் செய்முறைகள் அடங்கியதாக இருந்தது.

ALSO READ:குழந்தையின் மொழி

                                இன்றைய நாட்களில் கொண்டாட்டங்களில் தெரிகிற சடங்குகளை மட்டும் பின்பற்றிக் கொண்டு காரணங்கள் இல்லாத செயற்கையான மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்பவர்களாக நாம் மாறி வருகிறோம். நவீன தொழில்நுட்பத்தின் விளைவாக இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு உணர்வுபூர்வமான பிடிமானம் தளர்ந்து இயந்திரத்தன்மையோடு இருக்கிறது. திருவிழாக் காலங்களை, பண்டிகை காலங்களை விடுமுறை நாட்கள் என்கிற கணக்கில் பார்க்கிற நமக்கு இயற்கையை பற்றிய உணர்வை, புரிதலை, யாரும் சொல்லித் தரவில்லை.

                                தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள், ஜவுளிக்கடை தள்ளுபடி விற்பனைகள் போன்றவை மட்டுமே பண்டிகை காலங்களின் அடையாளமாக மாறிக் கொண்டிருக்கின்றன. கடந்த நூற்றாண்டு வரை மழையும்,காற்றும், மண்ணும் விதையும் கூட திருவிழாவிற்கு காரணமாக இருந்தன. திருவிழாக்களில் பண்டிகைகளில் வரலாற்றை ஆய்வு செய்து பார்க்கையில் இயற்கையைத் தவிர்த்து கொண்டாட்டங்கள் இல்லை. கொண்டாட்டங்களுக்கு அடிப்படை இயற்கையை சார்ந்திருப்பதும் உழைத்து வெற்றி பெறுவதுமே ஆகும். இயற்கையை தொலைத்துவிட்டு பண்டிகைஇ திருவிழாக்களை கொண்டாடுவது அவசியமற்றது மட்டுமின்றி தொந்தரவாகவும் மாறுகிறது.

                                கொளுத்தப்படும் பட்டாசுகளும், வெட்டப்படும் ஆடுகளும், கோழிகளும், உலகையும், உடலையும், மாசுபடுத்தத் தொடங்கிவிட்டன. இயற்கைத் தொழில்களையே வாழ்க்கையாக வைத்திருந்த சமுதாயம், வாழ்க்கை வாழ்வதைக் கூட தொழில் செய்வது போது பார்க்கத் துவங்கிவிட்டது. இந்தியா போன்ற பெரியதொரு விவசாய நாட்டில் பெருநகர பள்ளிக் கூட பிள்ளைகளுக்கு பாலும், அரிசியும் சூப்பர் மார்க்கெட்டில் செய்யப்படுகின்றன என்று சொல்லித் தரப்படுகின்றது. கத்தரிக்காயும், கடுகும் மரத்தில் பழுக்கின்றன என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். மிச்சமிருக்கிற கிராமங்கள் வயல்வெளிகள் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் விளைந்து கொண்டிருக்கின்றன.

                                இத்தகைய சூழலில் இயற்கையென்பது என்னவென்றே ஒருவருக்கு தெரிந்து கொள்ள முடியாமல் போகும். இயற்கையைத் தெரியாத ஒருவரால் பண்டிகையின்  உன்னதம், திருவிழாக்கள் கொண்டாட்டம் எல்லாமும் சடங்குகளாகவும், முட்டாள்தனமாகவும் தொழில் சட்டம் பற்றிய அறிவும், தொழில் நுட்பத்தின் வழியாக கிடைத்த வசதி வாய்ப்புகளும் தவிர்க்க முடியாது. நவீன மனிதர்கள் பின்னோக்கிச் சென்று பண்டிகை காலங்களை பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளலாமே தவிர உணர்ந்து அனுபவிக்க முடியாது. தொழிற்நுட்பத்தையும் தவிர்க்காமல் பண்டிகையின் மகத்துவத்தையும் போற்றவேண்டுவென்றால் நாம் பண்டிகைக் காலங்களைமறு உருவாக்கம்செய்தல் வேண்டும்.

ALSO READ:உடலோடு பரிவாக இருங்கள்

                                எதிர் வரும் தலைமுறைக்கு இன்றைய மக்களாகிய நாம் கொடுக்கும் பரிசு பண்டிகை காலத்தன்று புவியைப் பசுமையாக்கும் வேலைகளை செய்து வைப்பது. இது பசுமையான பூமியில் பண்டிகைகள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டதை விடவும் உயர்ந்தது. பண்டிகை நாட்களில் பட்டாசுகளோடு சேர்த்து மரக்கன்றுகளை நட்டுவைக்கலாம், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஏரிகளுக்குள் கொண்டாடலாம். கிருஷ்ண ஜெயந்தியன்று மக்களிடம் மழைநீர் சேமிப்பை வலியுறுத்தலாம். ஏனென்றால் இப்போதும் எப்போதும் பசுமைக்காலங்களே பண்டிகைக் காலங்கள்.

                                                                                                                               ----தொடரும்...


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...