Thursday, June 25, 2020

பசுமைக் காலங்களே பண்டிகை காலங்கள்

   100.3

    100.3 என்பது வானொலியில் கேட்கும் பண்பலை அலைவரிசை எண் அல்ல. இது சமீபமாக தமிழகத்தில் நிலவி வரும் வெப்பநிலையின் சராசரி அளவு. இந்த வெப்பநிலை காணாதவர்களுக்கு செய்தி போலவும் அனுபவித்தவர்களுக்கு விபத்து போலவும் மாறியிருக்கிறது.புவியில் இருக்கிற ஒவ்வொரு உயிரும் தான் வாழ தன் உடல் குறிப்பிட்ட வெப்பத்தை பராமரித்துக் கொள்ளும் அந்த உயிரின் வெப்பமானது குறிப்பிட்ட அளவில் இருந்தால் மட்டும் தான் அதன் இயக்கம்,வாழ்க்கை என இயல்பாக இருக்கும்.

ALSO READ:உயிர்ப்பு நிலை


                                வெப்பநிலையில் எழுச்சியோ வீழ்ச்சியோ ஏற்பட்டால் அந்த உயிரினம் உயிர்விடவும் வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட வெப்பநிலை மனிதனுக்கு 98.4F என்பதை நீங்கள் அறிவியல் பாடத்தில் படித்திருப்பீர்கள். 98.4F என்ற அளவானது அதிகரித்து 103, 104 என்று மாறும்போது பெருங்காய்ச்சலாக உடலை சிதைவுக்குள்ளாக்கும். இப்போது பூமிக்கு வெப்ப எழுச்சி ஏற்பட்டு காய்ச்சல் அடித்துக் கொண்டிருக்கிறது. அதன் குறியீடே இந்த 100.3. பூமியின் வெப்பநிலையை இவ்வளவு உயர்த்தியது யாரென்று கேட்டால் நீங்கள் ஆச்சிரியப்பட்டு போவீர்கள். தேயிலை, காபி, மிளகு,ஏலக்காய், கோகோ உள்ளிட்ட பணப்பயிர்கள் தான் பூமியின் வெப்பநிலையை உயர்த்தியது.

ALSO READ:நோயிலிருந்து விடுபட

                                பூமியின் வெப்பநிலையை பராமரித்துக் கொள்ளும் பெரும் பொறுப்பு மழையைச் சார்ந்தது. கடல்,ஆறு,ஏரிகள்,கண்மாய்கள் மற்ற நீர்நிலைகளில் இருந்து ஆவியாகும். நீர் மேகமாக வானில் மிதக்கின்றன. அப்படி வருகின்ற மேகங்களை பல நூறு அடிகள் உயரமுள்ள மலை,மலையின் மேலிருக்கிற மரங்களும் தடுத்து பருவமழையை பெய்யச் செய்கின்றன. பருவமழையின் பலனால் ஒரு புறம் ஆறுகளும், ஏரிகளும், நிரம்புகின்றன. மலைக் காடுகளுக்குள் விழுந்து மழை நீரானது பூமிக்குள் இறங்கி ஊற்றாகப் பெருக்கெடுத்து அருவியாகவும் ஆறாகவும் பாய்ந்து பூமியைக் குளிரச் செய்கிறது. இவ்வாறான நீர்நிலைகளிலிருந்து மீண்டும் ஆவியாதலும் மீண்டும் பருவமழை பெய்வதும் சுழற்சியாக நிகழ்கிறது.

                                இந்த சுழல் நிகழ்வில் நீர் நிலைகளில் ஆவியாக்கும் வெப்பம், பின் உருவாகும் மேகம்,அவற்றைத் தடுக்கும் மரங்கள்,பெய்யும் மழை, உறிஞ்சும் நிலம், ஊற்றெடுக்கும் நீர் இவையெல்லாம் இணைந்தது நீர்ச் சங்கிலியாகும்.


                                இந்தச் சங்கிலியில் ஒவ்வொன்றும் முக்கியமானதே. ஏதாவதொன்றின் செயல்பாடு தடைப்பட்டாலும் பருவமழை தவறி விடுகிறது. நவீன தொழிற்நுட்பத்தின் விளைவாக நமது உணவு பழக்கவழக்கங்கள் மலைப் பயிர்களைச் செய்தன. இந்தக் கண்டுபிடிப்பினால் மழைகளிலிருந்த மரங்கள் வெட்டப்பட்டு குள்ளமான செடி வகைகள் பயிர் செய்யப்படுகின்றன. இந்த குள்ளமான செடி வகைகள் ஆகாயத்தில் மிதந்து வரும் மேகங்களை தடுப்பதில்லை. அதனால் மழையாகப் பொழிய வேண்டிய மேகங்கள் மழை பொழியாது நகர்ந்து வருகின்றன.

                                பருவமழை மாறி ஏரிகள், குளங்கள்,நீர்நிலைகள் வற்றிப் போகின்றன. இவ்வாறாக ஏற்படுகிற பருவநிலை மாற்றம் நம் பூமியை சூடாக்கிக் கொண்டிருக்கிறது. மலைப் பயிர்களின் வருகை மட்டுமல்லாமல் காடுகள் அழிப்பு,வாகன உபயோகம், தொழிற்சாலைகள் என பூமி வெப்பமாக நிறைய காரணங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. காரணங்களை விடவும் பூமியை பாதுகாக்கும் பொறுப்பு நம் முன்னே இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த புரிதலை நம்மோடு வாழ்பவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இந்த ஏற்பாடே பூமி வெப்பமாவதை உடனடியாக தடுக்கும் பூமி வெப்பத்தை சீர் செய்ய உதவிடும்.                                  தொடரும்.........


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...