Thursday, June 25, 2020

பசுமைக் காலங்களே பண்டிகை காலங்கள்

                        நலம் எனப்படுவது

    நலமாய் இருப்பது என்றால் என்ன என்று ஒரு மருத்துவரிடம் கேட்டால்நோயற்ற நிலைதான் நலம் என்பார். ‘நோயில்லாத நிலைஎன்பது வேறு, நலமாக இருப்பது என்பது வேறு. நலமாக இருப்பது என்பது வேறு. நுலமாக இருக்கிறபோது நோய்கள் இருக்காது. நோய் என்பது உடலில் தோன்றி மறைகிற தொந்தரவுகளும் அறிகுறிகளும் என்றாலும் தொந்தரவுகளும் அறிகுறிகளும் இல்லாத ஒருவர் ஆரோக்கியமானவர் என்று கருதிக் கொள்ள முடியாது. ஆரோக்கியம் என்பது தொந்தரவுகள், அறிகுறிகளுக்கு அப்பாற்பட்டது. நலமாக இருக்கிறோம் என்று நாம் கருதும் போது உடல் நலமாக இருப்பது மட்டுமல்லாமல் உங்கள் உள்ளத்திலும் உற்சாகம் இருக்க வேண்டும். உள்ளத்தில் ஏற்படுகின்ற உற்சாகம் மட்டுமே உடல் மாற்றங்களை கடந்து நலம் என்பதை பிரதிபலிக்கிறது. உள்ளத்தில் உற்சாகமாக இருக்கும் ஒருவர் உடல் தொந்தரவுகளோடு காணப்பட்டாலும் அவரும் பரிபூரணமானவர் அல்ல. எனவே உள்ள நலமும் உடல் நலமும் இணைந்த கலவையில்தான் முழுமையான நலன் வெளிப்படும்.

ALSO READ:நம்பிக்கையற்ற துயரர்


                                நவீன மருத்துவம் உடலை சுவாசமண்டலம், செரிமான மண்டலம், நரம்பு மண்டலம், இனப் பெருக்க மண்டலம் போன்ற மண்டலங்களாக வகைப்படுத்தப்படுகிறது. பாரம்பரிய மருத்துவங்கள் உடலை நிலம்,நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களாக வகைப்படுத்தப்படுகிறது. உளவியல் சார்ந்த மருத்துவங்கள் மனிதனை விலங்கின் கூறு, தாவரத்தின் கூறு, கனிமத்தின் கூறு எனக் கூறுகளாக வரிசைப்படுத்தப்படுகின்றன. கிழக்கத்திய மருத்துவங்கள் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரம் (துரியம்) என்ற சக்கரங்களாக வகைப்படுத்தப்படுகின்றது. இன்னும் இது போன்ற ஏராளமான மருத்துவ வகைப்பாடுகளும் வாழ்வியல் வகைப்பாடுகளும் ஆய்வுசெய்து கொண்டும் இருக்கின்றன. இவை எல்லாவற்றின் ஒட்டு மொத்த இலக்கும் மனித சமூகத்தின் உடல் நலமும் மன அமைதியும் ஆகும்.

                                இத்தனை முயற்சிகள் நடந்தாலும் மனிதனின் ஆரோக்கியமென்பது இலக்கை அடைந்ததாக தெரியவில்லை. மனிதனின் ஆரோக்கியம் இலக்கை நோக்கி நகர ஆரோக்கியத்தை அனுபவித்துக் கொள்ள, மகிழ்ச்சியைக் கொண்டாட செய்ய வேண்டிய எல்லாம் செய்தாகி விட்டது. ஆரோக்கியம் மட்டும் வந்தபாடில்லை.பூமியில் மற்ற ஜீவராசிகளை ஒப்பிடும் போது ஒற்றைத் தலைவலி இருக்கிற மரக்கன்றுகளை பார்க்க முடியாது. எவ்வளவு எடை இருந்தாலும் யானைகளுக்கு மூட்டுவலி வருவதில்லை. தூசுகளிலே வாழ்க்கை நடத்துகிற சிலந்தி பூச்சிகள் சுவாசத் தொந்தரவுக்கு மருத்துவம் பார்ப்பதில்லை. ஆனால் வசதியாக வாழ்ந்து பழகுகிற மனிதனுக்கு மட்டும்தான் அவ்வளவு நோய்களும். மற்ற உயிரினங்களுக்கும் மனிதனுக்குமுள்ள ஒரே வேறுபாடு வசதி வாய்ப்புகளை அனுபவிக்காத உயிரினங்கள் நோய்கள் இல்லாமல் இருப்பதும், வசதி வாய்ப்புகளை முழுமையாக அனுபவிக்கும் மனிதன் நோய்களை மட்டுமே பெற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ள முடியாத உண்மை. ஏனென்றால் நாமெல்லாம் வசதியாக இருந்தால் நலமாக இருப்போம் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள். வசதியாக இருப்போம் என்று எவ்வளவு வேகமாக முயற்சி செய்கிறீர்களோ அவ்வளவு வேகமாக நோய்களை வாங்கிக் கொள்வீர்கள்.

ALSO READ:குணமளிப்பவர்(HEALER)

                                வுசதிகளை புறக்கணிக்கத் தேவையில்லை. அதே நேரத்தில் நோய்களை வாங்கிக் கொள்ளவும் தேவையில்லை. வசதிகளோடும், நோய்களற்றும் வாழும் கலைதான் நீங்கள் நலமாக இருக்கும் கலை. உங்கள் தேவைக்குரிய வசதிகள் என்ன என்பது பற்றி தெளிவான புரிதலைப் பெற்றுக் கொண்டால் நோய்கள் வருவதில்லை. இப்போது உங்கள் தேவை என்பதில் உங்களைப் பற்றி உங்களுக்கு தொpந்திருக்க வேண்டும். உங்கள் உடலின் பணிகளை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். உங்கள் சுவாசப் பையில் இரத்தம் சுத்திகரிப்பது கண்டு நீங்கள் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். இனிய இசை உங்களை உற்சாகப்படுத்துவதைக் கண்டு நீங்கள் ஆய்வு செய்திருக்க வேண்டும். இப்படியான உடல் பற்றிய அறிவு மட்டுமே உங்களுக்குத தெரிந்த உங்களைப் பற்றிய அறிவு.

                                உங்களைப் பற்றி உங்கள் உடலைப் பற்றி, தேவைகள் பற்றி உங்களுக்குத் தெரியவில்லையென்றால் பிறரைப் பார்த்து ஒப்பிட்டு உங்கள் தேவையை கற்பனை செய்து கொள்கிறீர்கள். கற்பனை செய்து உருவான தேவை உடனடியாகவோ. எதிர்காலத்திலோ நோய்களை உண்டாக்குவது நிச்சயம்.

ALSO READ:நோயற்ற வாழ்வு

                                முழுமையான உடல் அறிவே உடல் நலத்தைப் பேணி கொள்ள உதவுகிற துவக்கப்பள்ளி, உடல் நலத்தைப் பேணிக் கொள்ளும் முயற்சியில் உங்கள் துவக்கம் சரியானதாக இருந்தால் கற்பனைத் தேவைகளும் அவை உண்டாக்கும் நோய்களும் காணாமல் போகும். நீங்கள் வாழ்கிற சூழலுக்குத் தகுந்தாற்போல் உங்கள் உடல் உங்களுக்குத் தேவைகளை அறிவிக்கும். அந்த தேவையின் அடிப்படையில் நீங்கள் உருவாக்கிக் கொள்ளும் வசதி வாய்ப்புகள் எளிமையானதாகவும், நலம் தருவதாகவும் இருந்து உங்கள் வாழ்வை வளப்படுத்தும். ஏனென்றால் நலமெனப்படுவது யாதெனில் தேவையை உணர்ந்து பெற்றுக் கொள்வதே.


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...