புத்தர்களுக்கு அடையாளம் தேவைப்படாது
நாம் ஒவ்வொருவரும் ஒரு பெயரை கொண்டிருக்கிறோம். ஒரே பெயரை பலர் பெற்றிருப்போம்.வீட்டில் ஒரு பெயர்,நண்பர்கள் மத்தியில் ஒரு பெயர்,கல்விக் கூடங்களில் ஒரு பெயர்,குலசாமி வேண்டுதலுக்காக ஒரு பெயர்,நிஜமான பெயர் ஒன்று என பல பெயர்களும் ஒருவருக்கு இருக்கும்.பெயர்களைக் கொண்டு குறிப்பிட வேண்டும் என்ற வரையறை சமூகத்தில் பொதுவானது.சமூகம் வைத்திருக்கிற பல்வேறு தளங்களில் பெயர்களைப் போல வெவ்வேறு விதமான அடையாளங்களும் குறியீடுகளும் இருக்கின்றன. இத்தகைய அடையாளங்கள் நமது பெயர்களைப் போலவே நம் விருப்பத்திற்கும் முடிவிற்கும் அப்பாற்பட்டது.நீங்கள் விரும்பக் கூடுமெனில் உங்களது படைப்புக் களத்தில் பெயர் குறித்த அடையாளங்களை மட்டும் மாற்றிக் கொள்ள சாத்தியமுண்டு.மற்ற அடையாளங்கள் குறித்து உங்களுக்கு முற்போக்கு கருத்துக்கள் இருந்தாலும் செயல்பாட்டு வடிவத்தில் அடையாளங்களை மாற்றுவது என்பது சிக்கல்தான்.மனிதன் தன்னைப் பற்றி எந்த விளிப்பும் இல்லாத காலத்தில் கூட்டமாக இருந்த நேரங்களில் அடையாளம் என்பது முக்கியமானதாக இருந்திருக்க முடியாது.ஏனெனில் விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொகுத்து பார்க்கின்ற பொழுது வளர்ச்சி மனோபாவங்களில் தான் அடையாளம் ஒளிந்திருப்பதை தர்க்கபூர்வமாக பார்க்க முடிகிறது.
ALSO READ:உணவு என்பது என்ன?
இவ்வாறாக அடையாளம் என்பது வாழ்வியல் வளர்ச்சிப் போக்கில் தீர்மானிக்கப்படுகிற சமூக, விஞ்ஞான, பொருளாதார வரையறைகளால் கட்டமைக்கப்படுகின்றன.கூட்டமாக வாழ்வது குறைந்து நிறைய தனிமனிதர் நிலை உருவாக்கிய விஞ்ஞான வாழ்வியல் அதிக அடையாளங்கள் சுமக்கிற ஒரு சமூகம் வளர்ச்சிக்கான திறனே ஒருவரது அடையாளம் என்றும் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டும் போக்கை காண்கிறோம். ஒரு சமூகத்தில் திறனில்லாதவன்,திறமையில்லாதவன், போட்டியிட முடியாத மனுஷி, சவால்களை எதிர்கொள்ள முடியாத நபர் போன்றோரெல்லாம் அடையாளம் இழந்தவர்களாக அடையாளம் இல்லாதவர்களாக மாறிப்போகின்றனர்.ஆக விஞ்ஞான வளர்ச்சியென்பது அடையாளத்தை உருவாக்கித் தருவதோடு அடையாளத்திற்கான வரையறையையும் சேர்ந்தே தருகின்றது. இந்த வரையறை கொடுத்த மன தர்க்கங்கள் ஏற்படும் போதெல்லாம் அடையாளம் இழந்த மனிதன் சலிப்பை சந்திக்கிறான். அவனைச் சுற்றியிருக்கிற எல்லா வளர்ச்சியையும் அவன் உணர்ந்திருக்கிற அனைத்து விஞ்ஞானக் கூறுகளையும் தன் உணர்வின் அடிப்படையில் தர்க்க, எதிர்தர்க்கமாக ஆய்வு செய்கிறான். இந்த ஆய்வு விஞ்ஞானத்தின் மீது நடத்தப்படுகிற தமது அடையாளம் குறித்த ஆய்வு.இவ்வாய்வில் விஞ்ஞானம், வளர்ச்சியின் பெயரால் பேசுகிற தர்க்கங்களில் மனிதனுக்கு தாம் புறக்கணிக்கப்பட்டதும் அடையாள இழப்பும் சலிப்பும் முன் வருகிறது.மேலும் தொடர்ந்து மனிதனுக்கு கூட்டம் சாராத, அடையாளம் கடக்கிற நிலை நோக்கி யோசிக்கிற பண்பு உருவாகிறது.இந்தப் பண்பானது அனுபவத்திலிருந்து உருவானது. அனுபவம் இல்லாத ஒருவரால் இந்தப் பண்பை பெற்றுக்கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியாது. கூட்ட மனநிலையின் காரணமாக விஞ்ஞானம் வெளிப்பட்டது.விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த நிலையில் சலிப்பு உருவானது. கூட்ட மனநிலை கடந்து, விஞ்ஞான வளர்ச்சி கடந்து அனுபவத்தின் தொடர்ச்சியாக தம் உணர்வுகளின் நகர்கிற அடுத்த நிலை - தமக்கேற்பட்டிருக்கற சலிப்பிலிருந்து விடுதலையாவது. கூட்டமும் அடையாளமும் இல்லாத சமூகம் என்பது மந்தத்தன்மையும், அடையாளம் இன்மையும் இருக்கிற தனி மனித வாழ்வாக தவிக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியை தவிர்க்க முடியாமல் திறமைகளை தூக்கிப் பிடிக்கும் வரை திறமைகள் உறிஞ்சப்பட்ட திறமைசாலிகள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள். திறமைகளே அடையாளமாகக் கற்பிக்கப்படும். இந்த திறமைசாலிகள் சலிப்பிலிருந்து தங்களை விடுதலை செய்து கொள்ள யுக்திகளைக் காண்பார்கள். அந்த யுக்திகள் கும்பலிலிருந்தும் அடையாள சோர்வுகளிலிருந்தும் அவர்களை விடுதலை செய்யும். தம்மை தாமே அனுபவித்து சலித்து, சோர்ந்து, அனுபவித்திலிருந்து யுக்தி கண்டு விடுதலையடையும் ஒருவர் தன்பால் முழுவிழிப்புணர்வு பெற்றவராக இருப்பர். இந்தக் கருத்தை சிந்திக்கிற போது கிழக்கிந்திய தத்துவ வாக்கியம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அந்த தத்துவ வாக்கயம் பின்வருமாறு கூறுகிறது.
ALSO READ:ஐவகை உணவு
“தன்னிலிருந்து தன்னைத் தேடி காண்கிறவர் விழிப்பு பெற்றவர், விழிப்பு பெற்றவர் புத்தர், புத்தர்களுக்கு அடையாளம் தேவைப்படாது.”
No comments:
Post a Comment