உயிர்ப்பு நிலை பிறழ்வு
ஒரு மனிதனுக்கு நோய் உருவாவதற்கு உயிர்ப்பு நிலை பிறழ்வே காரணமாகிறது. உயிர்ப்பு நிலை பிறழ்வு என்பது, இயல்பாக இருக்கிற உயிர்ப்பு நிலை என்பது அதன் இயல்பிலிருந்து பிறழ்வதாக புரிந்து கொள்ள முடியும். இன்னும் கூடுதலாக உயிர்ப்பு நிலை பிறழ்வைப் பற்றி மருத்துவ பார்வையில் பார்க்கிறபோது நாம் காண்கிற நமக்கு தெரிகிற இன்னொரு அனுபவம் உயிர்ப்பு நிலை பிறழ்வு என்பது உயிர்ப்பு நிலையை பற்றிக்கொண்டிருக்கிற உடலில் ஏற்படக்கூடிய பிறழ்வு. என் பார்வையில் ஒரு உடல் அந்த உடலுக்குள் இருக்கிற உயிர்ப்பு தன்மையோடு தொடர்பில் இருக்கிறது. இந்த உயிர்ப்பு தன்மை உடல் இவற்றிற்கு இடையே இருக்கிற இணக்கம் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. அதுவே ஆரோக்கியமான நிலையும் கூட .
ALSO READ:தியானக் கதைகள்
இந்த உயிர்ப்பு நிலைக்கும் உடலுக்கும் இடையே இருக்கிற இணக்கத்தில் ஏற்படுகிற பிறழ்வே நாம் உயிர்ப்பு நிலையில் ஏற்படுகிற பிறழ்வாக, அதாவது உயிர்ப்பு நிலையை தொடர்பு கொண்டிருக்கிற உடலில் ஏற்படுகிற பிறழ்வாக குறிப்பிடுகிறேன். உயிர்ப்பு நிலையைப் பற்றிக்கொண்டிருக்கிற உயிர்ப்பு நிலையோடு மையம் கொண்டு இருக்கிற, இணக்கத்தில் இருக்கிற ஒரு உடலின் செயல்பாடு என்பது தன்னளவில் இருந்து இயல்பு பிறழ்கிற உயிர்ப்பு நிலையோடு இருக்கிற இணக்கம் துண்டிக்கப்படுகிற நிகழ்வு அந்த உடலைப் பொறுத்தவரை நோயாக துவங்குகிறது. ஒவ்வொரு உடலும் இந்த பிரபஞ்சத்தில் தோன்றுவதாகவும் மறைவதாகவும் இருக்கிறது. ஒவ்வொரு உடலுக்கும் தோற்றத்திற்கு, உருவாவதற்கு, உற்பத்தியாவதற்கு, இன்னொரு உடல் தேவைப்படுகிறது. ஒரு உடலின் உற்பத்தி பிரபஞ்சத்தில் தோற்றம் சார்ந்ததாக இருக்கிறது. ஒரு உடலின் உற்பத்தி தோற்றத்தில் இருந்து உருவாகிறது. ஆனால் தோற்றத்தை பயன்படுத்தி உயிர்ப்பு நிலை இருக்கிறது என்று ஆன்மீகவாதிகள் குறிப்பிடுகின்றனர். உடல் கடந்து பேசுபவர்கள் குறிப்பிடுகின்றனர். அவை அனுபவத்தின் பாற்பட்டதே தவிர நிரூபணத்திற்கு உட்பட்டது அல்ல.
ALSO READ:புத்தர்களுக்கு அடையாளம் தேவைப்படாது
ஆனால் மருத்துவத்தைப் பொறுத்தவரை உயர்நிலை என்பது ஒரு உடலுக்குள் எப்போதும் இருக்கிறது. ஒரு உடல் உருவாகிற காலத்திலிருந்து இறுதி நாள் வரை உயிர்ப்பு நிலையிலிருந்து துண்டிக்கப்படுகின்ற நாள்வரை அந்த உடலோடு அந்த உயிர்ப்பு நிலை தொடர்பிலேயே இருக்கிறது. இந்தப் பகுதியை இன்னும் நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அந்த உயிர்ப்பு நிலையோடு இந்த உடல் தொடர்பிலேயே இருக்கிறது என்று கூற வேண்டும். இந்த உடல் என்பது தோன்றிய காலத்திலிருந்து, ஒரு துளி கருவாக உருவான காலத்திலிருந்து, முழு உடலாக முழு வாழ்வையும் வாழ்ந்து முடிக்கிற நாள்வரை உயிர்ப்பு நிலையை பற்றிக் கொண்டே இருக்கிறது. இந்தப் பற்றுதல்களில் ஏற்படுகிற உடல்சார்ந்த பிறழ்வே அந்த உடலைப் பொறுத்தவரை அதனளவில் நோயாக கருதப்படுகிறது. அதுவே உயிர்ப்பு நிலையில் ஏற்படுகிற பற்றுதல் பிறழ்வாக கொள்ளலாம்.
ALSO READ:உணவு சொல்லும் வாழ்க்கை முறை
மருத்துவர்களுக்கான பரிந்துரை
உயிர்ப்பு நிலை பற்றி இருக்கிற, உயிர்ப்பு நிலையை பற்றி இருக்கிற - இந்த இரண்டு வேறு தளங்களில் நோய் பற்றி பேச வேண்டி இருக்கிறது. உயிர்ப்பு நிலையை பற்றி இருக்கிற - என்கிறபோது அது உடலின் இயல்பு சார்ந்தது. உயிர்ப்பு பற்றி இருக்கிற என்பது - கூடுதலான உயிராற்றல் தேடல் சார்ந்தது. உயிர் ஆற்றலை பொருத்தவரை உயிராற்றலைப் பற்றிய தேடுதலைப் பொருத்தவரை அது தனி மனிதனின் அனுபவமாக இருக்கிறது. ஒரு பொது நிரூபணத்திற்குள் வரையறுக்க முடியவில்லை. ஆனால் உயிர்ப்புநிலையை சார்ந்திருக்கிற உடல்நிலையை பொருத்தவரை மருத்துவத்தில் அது கூடுதல் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. இந்த உடல் சௌகரியமாகவும் இயல்பாகவும் இணக்கமாகவும் இயங்க வேண்டும் என்றால் அந்த உடல் முழுவதும் உயிர்ப்பு நிலை எவ்வாறு பரவி இருக்கிறது என்பதைப் பொறுத்து அந்த உடலின் இயக்கம் இருக்கும் என்பது மருத்துவத்தினுடைய பொதுவான பார்வை. இந்த பொதுவான பார்வை மருத்துவத்தினுடைய மேலோட்டமான விமர்சன தளத்திலிருந்து இருக்கிறது.
ALSO READ:குழந்தை
இந்திய சமூகத்தில் எந்த ஒன்றையும் வேதாந்த பார்வையோடு அணுகுகிற தன்மை இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். எந்த ஒன்றுக்கும் வேதாந்த சாயம் பூசுகிற உரையாடல் வடிவம் இந்திய சமூக மொழியாடல் வழக்கில் இருக்கிறது. அந்தவகையில் உடல் ஆரோக்கியம் பற்றி உரையாடுகிற போது மருத்துவத்திற்கு உட்பட்டு உரையாடுகிற போது கூட உயிப்பு நிலைக்கும் உடலுக்கும் இருக்கிற தொடர்பை வேதாந்த அடிப்படையில் ஆன்மீக அடிப்படையில் முடித்துவைக்கிற உரையாடல்கள்தான் உடல் நலத்திற்கும் சேர்ந்து உரையாடப்படுகிறது. ஒரு முழுமையான மருத்துவ பார்வையில் பார்க்கிறபோது உடல் நலம் என்பது வேதாந்த சாயத்தில் உரையாடப்படுவது அல்ல. உடல் நலம் என்பது அதற்கே உரிய தனித்துவமான தத்துவார்த்த தன்மையில் உரையாடி பார்க்கமுடியும் என்று மருத்துவ பதிவுகள் நமக்கு நினைவூட்டுகின்றன. வேதாந்த அடிப்படையில் ஆன்மீக அடிப்படையில் உடல்நலத்தை பேச வேண்டுமென்று முயற்சிக்கிற எத்தனிப்பு, முயற்சிக்கிற செயல்பாட்டு வடிவம் என்பது உடல்நலத்தைப் பற்றி உடலுக்குள் ஏற்படுகிற இயல்புகளைப் பற்றி அக்கறை இல்லாததாக எனக்கு படுகிறது. ஒருவை தமது உடல்நலத்தை ஆன்மீக சிந்தனையோடு வேதாந்த சிந்தனையோடு பொருத்திப் பார்க்க முடியும் என்பது அவரது தனிப்பட்ட பார்வை. எந்த உடலையும் மற்றொருவர் ஆன்மீக சிந்தனையோடு வேதாந்த சிந்தனையோடு பார்க்கிற தேவையும் அவசரமும் இப்போது இல்லை. ஒவ்வொரு உடலுக்குமாக இருக்கிற தனித்துவத்தை தன்மையை இயங்கு முறையை குறிப்பிடுகிற விரிவாக பேசுகிற விளக்கமளிக்கிற மருத்துவ பார்வை என்பது எல்லா மருத்துவங்களுக்குள்ளும் இருக்கிறது. ஒரு மருத்துவரினுடைய தீர்க்கமான பார்வை சிறந்த அணுகுமுறை என்பது மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிற மருத்துவ ஆய்வில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவ தத்துவங்களில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிற தனி மனிதனுடைய தனி உடலினுடைய சிறப்புத் தன்மைகளை மையப்படுத்தி பார்க்கிற ஆய்வு செய்கிற நோய் அறிகிற முறையை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய பரிந்துரை. ஒரு மருத்துவர் ஒரு நோயாளியினுடைய நோயை கண்டறியும் முன் அந்த மருத்துவருக்கு உடல் பற்றிய வேதாந்த சிந்தனையோ ஆன்மிக கற்பனையோ இருக்குமென்றால் அந்த மருத்துவரால் அந்த உடலை நேர்மையாக ஆய்வு செய்ய முடியாது. அந்த உடலினுடைய தனித்தன்மையை அந்த மருத்துவரால் கண்டுபிடிக்க முடியாது என்பது எனது பார்வை. ஒரு மருத்துவரினுடைய பொறுப்பு ஒரு உடலுக்குள் இருக்கிற இயக்கத்தை அதன் இயல்பில் புரிந்து கொள்ள வேண்டியதாக இருக்க வேண்டும் என்பது மருத்துவரினுடைய மருத்துவ நூலினுடைய பரிந்துரையாக இருக்கிறது. அது எனது வலியுறுத்தலாகவும் இருக்கிறது.
.
No comments:
Post a Comment