நலம்(health)

உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளை விடவும் நலம் எனப்படுவது மனிதர்களுக்கு முதன்மையானதாக இருக்கிறது. உலகில் எல்லா ஜீவராசிகளும் பிறப்பதும் இறப்பதும் நிகழ்வதைப் போல அவை நலமாய் இருப்பதும் நலமற்று இருப்பதும் கூட எந்த கவனமும் இல்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கிறது, நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அவ்வாறு நடக்கிறது, நிகழ்கிறது என்று கூட மனிதரைத் தவிர வேறு எந்த ஜீவராசிக்கும் கண்டுபிடிக்கும் கவனம் கூட கிடையாது. உலக ஜீவராசிகளை ஒப்பிடும்போது மனிதர்களுக்கு நலம் என்பதும் நலக் குறைவாக இருக்கிறோம் என்பதும் நாம் நலமாகி கொள்ள வேண்டும் என்பதும் இலக்காகவும் அவசியமானதாகவும் சில நேரங்களில் அவசரமானதாகவும் மாறி இருக்கிறது. உண்மையிலேயே மனிதனுக்கு நலக்குறைபாடு என்பது அவனது வளர்ச்சிக்கும் உதவி இருக்கிறது. அதே நேரத்தில் அது புதிய குறைபாடுகளையும் உருவாக்கி இருக்கிறது.
ALSO READ:குழந்தையின் மொழி(CHILD LANGUAGE)
ஒரு மனிதன் ஒரு புதிய பொருளை கண்டுபிடிப்பதற்கு அடிப்படையாக இருக்கிற ஆர்வம் முயற்சி என்பது பழைய முறையில் அவனுக்கு ஏற்பட்டிருக்கிற நலக் குறைபாடுதான். உலக அளவில் மிக எளிமையாக பயணிப்பதற்கு ஒரு சக்கரம் வடிவமைக்கப்பட்ட போது சக்கரம் உருவாக்கிக் கொடுத்த நல குறைபாடுகள் தான் இரண்டு மூன்று சக்கரங்களை பொருத்தி பயணிக்கும் புதிய இயந்திரத்தை உருவாக்கியது. விளக்கு எரியும் எரிப்பு முறையை நெருப்பை கையாளும் முறையை மனிதன் கண்டுபிடித்த போது கூட நெருப்பும் விளக்கும் வெளிச்சமும் ஏற்படுத்தியிருக்கிற பலகீனங்களையும் நலக்குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து கொள்வதற்காகத்தான் மனிதனுக்கு விளக்கினுடைய புதிய வடிவம் தேவைப்பட்டது. அதுதான் விளக்கினுடைய புதிய வடிவத்தை உருவாக்க வழி செய்தது. ஒரு நாற்காலி கண்டுபிடித்த பிறகு அந்த நாற்காலி உருவாக்கி கொடுக்கிற நல குறைபாடுதான் பின்னாளில் வசதியான இன்னொரு நாற்காலியை கண்டுபிடிக்கும் தூண்டுதலை உருவாக்குகிறது. மனிதனுடைய எல்லா கண்டுபிடிப்புகளும் எல்லா கண்டுபிடிப்புகளுக்குறிய காரணங்களும் மனிதன் நலக் குறைபாடாக இருந்ததன் விளைவே இத்தனை கண்டுபிடிப்புகள்.
ALSO READ:குழந்தை(CHILD)
ஆக,
மற்ற ஜீவராசிகளை
ஒப்பிடும்போது அந்த ஜீவராசிகளுக்கு ஏற்பட்டிருக்கிற
நலமும் நலக் குறைபாடும் ஒரு
இயந்திர தன்மை சார்ந்தது. மனிதனுக்கு
நலக் குறைபாடு என்பது வரலாற்றில் பார்க்கிறபோது
புதிய தேவையை பூர்த்தி செய்து
கொள்வதற்கும் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துக்
கொள்வதற்கும் தனக்குள் ஏற்பட்டிருக்கிற நலக்குறைபாடின் காரணத்திலேயே மனிதன் பயணப்பட்டிருக்கிறான் என்பதை
பார்க்க முடிகிறது. இந்த நலக்குறைபாடில் இருந்து
விடுதலை செய்வதற்கு தன்னைத்தானே விடுவித்துக் கொள்வதற்கு நலமாக்கி கொள்வதற்கு எடுக்கப்படுகிற முயற்சிகள் மனிதனுக்கு நலமானதாகவும் இருக்கிறது. புதியதொரு குறைபாடை உருவாக்குவதாகவும் இருக்கிறது. இந்த இருவேறு வாய்ப்புகளை
மனிதன் எவ்வாறு புரிந்து கொள்கிறான்,
எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறான் என்கிற தன்மையில் இருந்தே
நலமும் நலக் குறைபாடும் விவாதப்
பொருளாக மாறுகிறது.ALSO READ:(நோய் தோற்றம்)The origin of the disease
அதிகபட்சமாக மனிதனினுடைய பயன்பாட்டு வாழ்வியலில் பயன்பாட்டை ஒட்டி வாழ வேண்டிய வாழ்க்கைச் சூழலில் நலமும் நலக் குறைபாடும் கலந்தே இருக்கிறது. எல்லாவிதமான நலமும் அல்லது நலக் குறைபாடும் மனிதனுடைய முந்தைய ,அது ஒரு நிமிடத்திற்கு முந்தைய, அல்லது ஓர் ஆண்டிற்கு முந்தைய என்கிற ரீதியில் கூட நாம் வரையறுத்துக் கொள்ள முடியும். ஏதாவது ஒரு வகையில் முந்தைய செயல்பாட்டினுடைய தொடர் நிகழ்வாக இருப்பதை பார்க்க முடிகிறது. ஆக நலத்தை தக்கவைத்துக் கொள்வது என்பது நலத்தை உருவாக்கிக் கொள்வது என்பது நலத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது, என்கிற எல்லாவகையான நலம் பற்றிய உரையாடலும் பரிவர்த்தனைகளும் மனிதனைப் பொறுத்தவரை ஒரு சங்கிலி போல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. மற்ற ஜீவராசிகளுக்கு இது சுற்றுவதும் தெரியாது சுற்றிக் கொண்டிருக்கிற வகைக்குள் அவைகளால் பொருந்தவும் முடியாது. அவை வெறுமனே பிறக்கின்றன, இருக்கின்றன, இறந்து போகின்றன. மனிதனைப் பொறுத்தவரை இந்த காட்சி இவ்வாறு இருப்பதில்லை. மனிதனுக்கு வசதி குறைபாடு நலக் குறைபாடு தொந்தரவுகள் என்றவுடன் மனிதன் புதிய ஒன்றை நோக்கி நகரும் தன்மையோடு இருப்பதால் மனிதனுக்கு நலம் நோக்கிய முயற்சி எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.
ALSO READ:உடலோடு பரிவாக இருங்கள்(Be compassionate with the body)
உண்மையிலேயே மனிதனுக்கு நலம் தருவது எது? நலம் பற்றி இயங்குவதற்கு மனிதன் எவற்றில் பயணப்பட வேண்டி உள்ளது? எவற்றிற்கான செயல்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது? எந்த பரிந்துரைகள் மனிதனுக்குரிய நலம் பற்றிய பரிந்துரைகள்? என்று ஒரு நீண்ட உரையாடல் மருத்துவத்தை ஒட்டி, மனநலத்தை ஒட்டி, வாழ்வியல் முறைகளை ஒட்டி நிகழ்த்தப்பட வேண்டியுள்ளது. எல்லாவற்றின் மீதும் அவற்றிற்கும் நலத்திற்குமாக இருக்கிற தத்துவ உறவை ஒருமுறை பேசி பார்க்க வேண்டி உள்ளது. அப்படியான ஒரு உரையாடலும் பேச்சுவார்த்தையும் நலத்தை இந்த மனித சமூகம் ஆழமாக புரிந்து கொள்ளவும் வாழ்ந்து பார்க்கவும் உதவி செய்யும் என்று நான் நம்புகிறேன்.
நலம் என்பது ஒரு மனிதனுக்கு இயல்பாக இருப்பதன் குறியீடு. ஒரு மனிதன் இயல்பாகவும் இலகுவாகவும் வசதியாகவும் உடல் அளவிலும் மன அளவிலும் உணருகிறார் என்றால் அவர் நலமாக இருக்கிறார் என்று மருத்துவக் கோட்பாடுகள் வரையறுக்கின்றன. மனிதனைப் பொருத்தவரை நலம் என்பது அவரது மன ஓட்டத்தின் பாற்பட்டு அவரது மனம் இயங்குமுறையின் தன்மைக்கு உட்பட்டு வசதியாகவும், விருப்பமாகவும் இருக்கிறது என்றால் அது நலமானது என்று அந்த தனிமனிதர் முடிவு செய்து கொள்ள முடியும். இவ்வாறு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நலம் என்பது அல்லது நலமற்ற தன்மை என்பது வேறு வேறு வகைப்படுத்துதலின் கீழ் இருக்கத்தான் செய்கின்றன.
ஒரு மனிதன் தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ளவும், தன்னைத்தானே நலப்படுத்திக்கொள்ளவும் உருவாக்கிக் கொள்ளவும் உதவுகிற ஏதாவதொன்று இருக்குமென்றால் அது அவருக்கு மிக உயர்வான, தன்னை புரிந்து கொள்ளும் தன் நலத்தை மேம்படுத்திக் கொள்ளும் ரகசியத்தை அவருக்கு வழங்கும் சாத்தியம் உள்ளதாக இருக்கக்கூடும். மருத்துவங்கள் பொதுவாக நலத்தை உடலில் இருந்தே ஆரம்பிக்கின்றன. மருத்துவத்தின் சில நுட்பமான பகுதிகள் உடலை தாண்டி உளவியலில் அந்த மனிதனை அணுகுவதற்கு முயற்சிகள் மேற்கொள்கின்றன. சித்தமருத்துவம் உடலை, உடலில் ஏற்படுகின்ற மாற்றங்களை நேரடியாக மருத்துவ தத்துவங்களுக்கு உட்பட்டு வரையறைகளுக்கு உட்பட்டு நலம் பெறுவதற்கு உதவி செய்கிற எல்லா யுக்திகளையும் கையாள்கிறது. ஆயுர்வேத மருத்துவமும் ஹோமியோபதி மருத்துவமும் நவீன மருத்துவமும் கூட இத்தகைய யுக்திகளை கையாளுகிறது. இந்த யுக்திகள் கடந்து ஒரு மனிதனினுடைய நோயானது தீர்க்கப்படாமல் இருக்கிறது, நலமானது பெறப்படாமல் இருக்கிறது என்று மருத்துவத்தினுடைய மருத்துவ பயிற்சியாளர் கண்டுபிடிக்கிறார் என்றால் அவர் அந்த மருத்துவத்தின் வழியாக சற்று ஆழமாக அந்த மனிதரை காண முற்படுகிறார். அவரது முயற்சி அந்த மனிதனுடைய உடல் கடந்து உளவியல் சார்ந்த தன்மையோடு அந்த மனிதரை அணுகுவதற்கும் அந்த மனிதனுக்குள் இருக்கிற நோய் தன்மையை தீர்க்க முயற்சிப்பதற்குமான இயக்கமாக பயணிக்க தொடங்குகிறது.
ALSO READ:உணவு
ஒரு மனிதனை மற்ற ஜீவராசிகளை விடவும், ஒரு மனிதனை மனிதனுக்கான, மனிதன் மேற்கொள்கின்ற, மனிதன் கண்டுபிடித்து வைத்திருக்கிற சிகிச்சை முறையில் நலப்படுத்தும் முயற்சியை மேற்கொள்கிற போது வெறுமனே அவரை உடலாக மட்டும் பாராமல் உடல் கடந்து அவருக்குள் வேறு ஏதாவது நோய் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் நோய்களை உருவாக்குவதற்கான காரணிகள் இருக்கிறதா என்று காண்பதும் விவாதிப்பதும் ஆலோசனை செய்வதும் அவரை நலப்படுத்துகிற முயற்சியில் மிக முதன்மையானதாகவும் மரியாதைக்குரியதாகவும் நான் பார்க்கிறேன்.
நலக் குறைபாடுகளில் ஏற்படுகிற ஒவ்வொரு செயல்பாடுகளும் உடலளவில் ஏதோ ஒரு காரணத்தையோ உளவியலில் ஏதோ ஒரு காரணத்தையோ கொண்டிருப்பதாக மருத்துவம் குறித்து மருத்துவ பயிற்சியாளர்களினுடைய குறிப்புகளில் இருந்து நாம் பெற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் மருத்துவம் பயிற்சி மேற்கொள்கிற பயிற்சியாளரிடம் உரையாடுகிற போதோ சற்று நெருக்கமாக ஆலோசிக்கிற போதோ நாம் கண்டுகொள்கிற உண்மையானது வெறுமனே உடல்நலக் குறைபாடு என்பது உடல் நலக்குறைவிலிருந்து மற்றும் உருவாவது இல்லை. ஒருவருக்கு கண் தொந்தரவாக இருக்கிறது என்று ஒரு மருத்துவ தேவை இருக்கிறது என்றால் அந்த கண்ணில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனை மட்டும் அது கண் தொந்தரவாக மாறுவதற்கு காரணமாக இருப்பதில்லை. ஒருவருக்கு கண்ணில் ஏற்படுகிற வலிக்கு காரணம் கண்ணினுடைய பலகீனமாகவும் இருக்கலாம் அல்லது கண்ணில்லாது உடலில் இருக்கிற வேறு உறுப்புகளின் பலவீனமாகவும் இருக்கலாம். இன்னும் ஆழமாக உரையாடி பார்த்தோமென்றால் கண், கண்ணுக்கு காரணமாக இருக்கிற வேறு உறுப்புக்கள் அல்லது இந்த இரண்டு உறுப்புகளையும் ஒருங்கிணைக்கிற உடல் உள் இயக்கம், இன்னும் ஆழமாக இந்த உடல் ஒழுங்கு இயக்கத்தை ஒத்திசைவாக பயன்படுத்திக் கொள்கிற, பயணிக்கிற, மனநிலை என்று மருத்துவத்தில் நலத்தை கண்டுபிடிக்கும் நோய்க் காரணியை கண்டுபிடிக்கும் பயண முறை சென்று கொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது. இவை எல்லாமும் அறிவியல் பாற்பட்டதாக விஞ்ஞான அணுகுமுறையோடு இருப்பதால் இவ்வாறு இந்த ஆய்வுகள் தொடர்கிறது.
ALSO READ:ஐவகை உணவு
ஒருவருக்கு உடல் ரீதியான தொந்தரவு ஏற்படுகிறது என்றால் தோல் பகுதி நிறம் மாறுகிறது என்றால் அந்த நிற மாற்றத்திற்கு காரணம் அந்த தோல் பகுதியை இயற்றுகின்ற உள்ளுறுப்பு காரணமாக இருக்கக்கூடும் என்று மருத்துவ பயிற்சியாளர்கள், குறிப்புகள் கூறுகின்றனர். இன்னும் கூடுதலாக உள்ளுறுப்பு தாண்டி உள் உறுப்பிலும் தொந்தரவு இல்லை இப்போது என்ன செய்யலாம் என்று கேள்விகள் எழும்புகிற போது இன்னும் ஆழமான வேறுசில உடல்கூறுகள் காரணமாக இருக்கிறதா என்று ஆய்வு செய்கின்றனர். இந்த ஆய்வு முறை எப்போதெல்லாம் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த ஆய்வு முறை இன்னொரு தளத்திற்கு இந்த ஆய்வு தன்மையை இன்னொரு தளத்தில் இருந்து ஆய்வு செய்து பார்க்கிற முறையை மேற்கொள்கிறது. ஆய்வு முறையினுடைய அணுகுமுறை எப்போதும் இப்படித்தான் இருக்கிறது. இது இன்றைக்கு மனிதனுக்கு ஏற்பட்டிருக்கிற எல்லா நோய்களுக்கும் நோய்க்கான காரணங்களுக்கும் ஆழமான துல்லியமான விளக்கங்களையும் வரையறைகளையும் நோய் தீர்க்கும் பரிந்துரைகளையும் பெற்றுக் கொள்ள உதவி இருக்கிறது. அவை உண்மையிலேயே நோயைத் தீர்ப்பதற்கு முழுமூச்சாக உதவி செய்கின்றனவா என்றால் எத்தனை பலம் கொடுப்பதாக இருக்கின்றனவோ அவற்றிற்கு சமமாக அவை வேறு சில பலவீனங்களையும் உருவாக்கி கொடுத்திருக்கின்றன என்று நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.
நலம் என்பது சமமான பலமும் சமமான பலகீனமும் இருப்பதாக கொள்வது என்பது முழுமையானதாக இருக்காது. நலம் என்பது எந்த விதமான பலவீனமும் இல்லாத முயற்சியில் இருந்து எந்தவித பலகீனமும் உருவாக்கப்படாத முயற்சியில் இருந்து விளைவதாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்படி இருக்கும் என்றும் நான் பார்க்கிறேன்.
No comments:
Post a Comment