Friday, July 3, 2020

எது மருத்துவம்?-மருத்துவரின் பண்பு

                        மருத்துவரின் பண்பு

 

    ஒரு மருத்துவம் என்பது, ஒரு மனிதனுக்குள், மனிதனின் மனதிற்குள் ஏற்பட்டிருக்கக் கூடிய சிறு தொந்தரவை, சிறு துயரத்தை மாற்றவல்ல இயங்கு முறையாக நாம் பார்க்கிறோம். என்னைப்பொருத்தவரை மருத்துவம் என்பது அப்படியானது மட்டுமல்ல. அது ஒரு மேலோட்டமான பார்வை. ஒரு மனிதனுக்குள், ஒரு மனிதனின் மனதிற்குள், மனிதனின் உடலுக்குள் ஏற்பட்டிருக்கக் கூடிய துயரத்தை, மாற்றத்தை, அசவுகரியத்தை நீக்குவது என்பதும் சரிசெய்து கொள்வது என்பதும் மேலோட்டமானது. அதைத்தாண்டி இந்த மனிதன், மனிதனின் உடல், மனிதனின் மனம் என்கிற இரண்டு அம்சங்கள் தாண்டி மனிதனுக்குள் இயங்குகிற இன்னும் ஆழமான பகுதிகள் நிறையவே இருக்கின்றன. உயிர்ப்பான பகுதிகள் நிறையவே இருக்கின்றன.video of this article


                மனிதனின் ஆழத்தில், மனிதனின் உயிர்ப்பு நிலையில் ஏற்பட்டிருக்கக் கூடிய சமநிலை தவறுதலே ஒரு மனிதனுக்கான நோயாக அவன் உடலிலோ மனதிலோ வெளிப்படுகிறது. இந்த வெளிப்பாட்டின் விளைவாகவே அவன் நோயாளியாக கருதப்படுகிறான். அவன் மனதளவில் வெளிப்படும் என்று சொன்னால் அது மன நோயாக கருதப்படுகிறது. உடல் அளவில் வெளிப்படும் என்று சொன்னால் அது உடல் நோயாக கருதப்படுகிறது. இந்த இரண்டு அம்சங்களிலும் வெளிப்படுகிற, நோய்களை இந்த இரண்டு அம்சங்களில் மட்டும் சிகிச்சை கொடுப்பது  நவீன காலத்தில் இருக்கிற, சமகாலத்தில் இருக்கிற மருத்துவ முறைகளாக இருக்கின்றன. ஆனால் இதைத் தாண்டி, ஒரு மனிதனின் உடல் மற்றும் மனம் இந்த இரண்டு தளங்களிலும் நோயை உருவாக்குகிற, நோயை அளிக்கிற, நோயாக வெளிப்படுகிற எந்த ஒன்றையும் சீர் செய்யும் வல்லமை நோய் உருவான இடத்தை காண்பதும், அங்கு ஏற்பட்டிருக்கக் கூடிய உயிர்ப்பு நிலையை  நேர் செய்வதுமாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அந்த வகையில், ஒரு சிறந்த மருத்துவம் என்பது ஒரு மனிதனுடைய உடல் கடந்து மனம் கடந்து அவனது உயிர்ப்பு நிலையில் ஏற்பட்டிருக்கக் கூடிய சமநிலை தவறி இருக்கக்கூடிய நிலையை நேர் செய்வதன் மூலமாக மட்டுமே முழுமை பெற முடியும். அதுவே நல்ல மருத்துவமாக இருக்க முடியும்.

ALSO READ:உணவு என்பது என்ன?

                 ஒரு மருத்துவத்தினுடைய உண்மையான பணி, ஒரு மருத்துவத்தினுடைய தூய்மையான பணி, ஒரு மருத்துவத்தினுடைய சரியான பணி எதுவென்றால் ஒரு மனிதனுடைய உயிர்ப்பு நிலையில் ஏற்பட்டிருக்கக் கூடிய தடுமாற்றத்தை, உயிர்ப்பு நிலையில் ஏற்பட்டிருக்கக் கூடிய நிகழ்வு மாற்றத்தை, சமநிலை தவறிய செயல்பாட்டை, சீர் செய்வதும் நேர் செய்வதுமாக இருந்தால் மட்டுமே அது ஒரு முழுமையான மருத்துவமாக இருக்க முடியும். அதை நோக்கி பயணிக்கிற அதை நோக்கி பயிற்சி செய்கிற மருத்துவர்களே முழுமையான நலம் தர முயற்சிக்கிற மருத்துவர்களாக  கருதிக் கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன். நான் நம்புகிறேன்.

                பொதுவாக, மருத்துவ துறை சார்ந்து மருத்துவப் பணி புரிபவர்களுக்கு மருத்துவத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு மருத்துவத்தை தேர்வு செய்யும் முன் அந்த மருத்துவத்தினுடைய அனுபவங்களோ, அந்த மருத்துவம் மேற்கொண்டவர்களுடைய பரிந்துரைகளோ, அந்த மருத்துவத்தின் மீது விருப்பமோ நம்பிக்கையோ கூட இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது மருத்துவத்தைப் பற்றி, மருத்துவத்தை பயன்படுத்துபவர், மருத்துவத்தை பயிற்சி செய்பவர் என்ற வகைகளில் பேசமுடியும். ஒரு மருத்துவத்தை பயிற்சி செய்கிற ஒரு நபர்  மருத்துவத்திற்குள் ஆழமான புரிதலும், ஆழமான பார்வையும், விரிவான தேடலும் இருப்பவராக இருக்க வேண்டும். அதுதான் அந்த மருத்துவத்தினுடைய உண்மைத்தன்மையை, நிலைத்தன்மையை விளங்கிக் கொள்வதற்கு உதவியாக இருக்கும். எந்த வகையான மருத்துவம் பயிற்சி செய்கிற பயிற்சியாளரும் கூட அது மேற்கத்திய மருத்துவமாக இருந்தாலும், ஆதி மருத்துவங்களாக இருந்தாலும், வாழ்க்கைமுறை சார்ந்த மருத்துவராக இருந்தாலும் அந்த மருத்துவ முறையினுடைய மையப்புள்ளி அந்த மருத்துவம் எவ்வாறு இயங்குகிறது அந்த மருத்துவத்தினுடைய தத்துவ சாராம்சம் என்ன? அந்த மருத்துவத்தினுடைய குணமாக்கும் தனித்தன்மை என்ன? என்பது பற்றி ஒரு தீர்க்கமான தெளிவான பார்வை, மருத்துவம் பயிற்சி செய்பவர்களுக்கு தேவைப்படுகிறது. இது மருத்துவர் அல்லது மருத்துவ பயிற்சியாளருக்கு இருக்கிற, தேவைப்படுகிற மிக முதன்மையான பண்பு. இன்றும் கூட மருத்துவம் பயிற்சி மேற்கொள்கிற பயிற்சியாளர்களுக்கு எந்த வகையான பயிற்சி மேற்கொள்கிற பயிற்சியாளருக்கும் கூட தன் மருத்துவத்தோடு இன்னொரு மருத்துவத்தை பரிந்துரைக்கிற சேர்த்து இணைத்து கோட்பாடுகளை அறிவுறுத்துகிற பயிற்சி முறைகளை காணமுடிகிறது. இந்த எண்ணிக்கை இன்னும் கூட நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருவதற்கும் வாய்ப்புள்ளதாகவே எனக்கு தோன்றுகிறது. இதற்கு மிக முக்கியமான காரணமாக நான் கருதுவது, ஒருவர் ஒரு மருத்துவத்தை, ஒரு மருத்துவ முறையை தேர்வு செய்கிற போது அந்த மருத்துவ முறைக்குள் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிற போது அந்த மருத்துவத்தினுடைய மையம் என்ன? அந்த மருத்துவம் எவ்வாறெல்லாம் ஒரு துயருற்றவரை விடுதலை செய்கிறது? எவ்வாறெல்லாம் ஒரு நோயாளியை குணப்படுத்துகிறது? என்கிற தெளிவான பார்வையும் அனுபவத்தின் மீதான நம்பிக்கையும் உள்ளவராக இருத்தல் அவசியம்.

ALSO READ:நலம்(HEALTH)

                இத்தகைய பார்வையும் நம்பிக்கையும் இல்லாத போது ஒரு மருத்துவர், மருத்துவ பயிற்சியாளர் தன் மருத்துவம் மட்டுமல்லாமல் வேறொரு மருத்துவத்தை தனக்குள் இருக்கிற பயத்தின் பாற்பட்டு, சந்தேகத்தின் பாற்பட்டு பரிந்துரைக்கிற நிலை என்பது இருக்கிறது, இருக்கக்கூடும். இப்படியான மருத்துவம் பற்றிய ஒரு தொளதொளப்பான,, பிடிமானம் இல்லாத மனோபாவம் தற்காலத்தில் மருத்துவ பயிற்சியாளர்கள் மத்தியில் காண முடிகிறது. ஒரு மேற்கத்திய மருத்துவம் செய்கிற ஒரு மருத்துவ பயிற்சியாளர் இன்னொரு மருத்துவ முறையினுடைய உணவுப்பழக்கத்தை  பரிந்துரைப்பதை பார்க்க முடிகிறது. ஒரு நவீன மருத்துவம் பயிற்சி  மேற்கொள்கிற பயிற்சியாளர், மருத்துவ நிபுணர் கூட இன்னொரு மருத்துவத்தினுடைய வாழ்வியல் முறையை பரிந்துரைக்கிற பரிந்துரையை காண முடிகிறது. பாரம்பரிய மருத்துவம் சிறந்தது என நம்பக்கூடிய, அனுபவத்தை பெற்றிருக்கக் கூடிய பாரம்பரிய மருத்துவ  நிபுணர்கள், இன்னொரு மருத்துவ முறையை இன்னொரு மருத்துவ ஆலோசனைகளை சேர்த்து பரிந்துரைக்கிற பரிந்துரையை காண முடிகிறது. இது அவர்களது மருத்துவ  பரிந்துரை என்பது மட்டுமல்லாமல் அவர்களுக்குள் இருக்கிற தன் மருத்துவம் மீதான புரிதலின்மை என்று எனக்கு தோன்றுகிறது.

ALSO READ:உடலோடு பரிவாக இருங்கள்

                 மிகவும் அடிப்படையாக ஒரு மருத்துவம் மேற்கொள்கிற மருத்துவ பயிற்சியாளர் தன் மருத்துவம் எந்த அளவிற்கு திடமானது, என் மருத்துவத்தினுடைய, தன் மருத்துவத்தின் உடைய திடத்தன்மை எவ்வாறு அனுகப்படுகிறது என்று தெரிந்து தெளிந்து இருப்பது அவசியமாக இருக்கிறது. அந்த வகையில், பயிற்சி செய்கிற  ஒருவர் மட்டும்தான் தன் மருத்துவத்திற்குள் இருக்கிற அணுகுமுறையை புரிந்து கொண்ட ஒருவர் மட்டும்தான் தன் மருத்துவத்திற்குள் இருக்கிற ஆழமான குணப்படுத்தும் நிபுணத்துவத்தை கற்றுக் கொண்ட ஒருவர் மட்டும்தான் தன் மருத்துவத்தின் மீது முழுக்க நம்பிக்கையும், விருப்பமும் உடையவராக இருக்க முடியும் என்று நான் கருதுகிறேன. ஆக ஒரு மருத்துவத்தினுடைய பயிற்சி முறை என்பது அந்த பயிற்சியாளருடைய விரிவான தேடலும் ஆழமான புரிதலும் தன் மருத்துவத்தின் பாற்பட்டு பெற்றிருக்கக் கூடிய அனுபவமும் அந்த அனுபவத்தில் இருந்து அவர் வைக்கக்கூடிய நம்பிக்கையுமாக இருக்கிறது. எத்தனை வகையான மருத்துவங்கள் இருந்தாலும் எல்லா மருத்துவங்களும் அதனளவில் மிகுந்த மதிப்பிற்குரியதே. உலக சுகாதார நிறுவனம் நூற்றுக்கணக்கான மருத்துவங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. சமகாலத்தில் இருப்பதாக உலகம் முழுவதும் அறிவித்திருக்கிறது. ஆனால், இத்தகைய அறிவிப்பு என்பது சமகால சூழலில் இருக்கிற ஒரு நிறுவனம், உலக நிறுவனம் அறிவித்திருக்கிற ஒரு செய்தி. ஆனால் நூற்றுக்கணக்கான மருத்துவங்களை பயிற்சி செய்கிற பயிற்சியாளர்கள், நிபுணர்களுக்கு அவர்கள் முன் இருக்கிற பெரிய பொறுப்பு அவரவர் மருத்துவம் பற்றி அவரவர்களுக்கு போதுமான ஞானமும் நம்பிக்கையும் இருக்க வேண்டும் என்பதே. ஒரு மருத்துவம் எந்த வகையான மருத்துவம் பயிற்சி செய்கிற மருத்துவரும் கூட, நிபுணரும் கூட அவர் சார்ந்திருக்கிற மருத்துவத்தில் நீண்ட அனுபவம் பெற்றிருந்தாலும் கூட முழுமையான புரிதலோடு நகர்கிற போது மட்டும்தான் அவர்களுடைய நிபுணத்துவம் என்பது பரிசீலினைக்குரியது, மதிப்பிற்குரியது. ஆக, ஒரு மருத்துவத்தினுடைய பயிற்சி மிகுந்த பயிற்சியாளர் என்பவர் அவர் சார்ந்திருக்கிற மருத்துவத்தின் ஆழமான பகுதிகளை, அந்த மருத்துவம் எவ்வாறு குணப்படுத்துகிறது என்ற அணுகுமுறையை, அங்க மருத்துவத்திற்கும் உடல்நலத்திற்கும் இருக்கிற தத்துவ தொடர்பை கொண்டவராக அதை போற்றுகிறவராக, அதை மதிக்கிறவராக, அதைத் தன் வாழ்வில் பொருத்தி நடைமுறை படுத்துபவராக இருத்தல் என்பது அவசியமாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...